உணவு பொருத்தம்

தோழிகளே!
நம் வீட்டில் சாதாரணமாக உணவு தாயாரிக்கும் போது இதுக்கு இது தான் காம்பினேஷன் என்று நாம் வைத்திருப்போம்....
சில சமயம் அதை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்திருக்கும்..
அவர் அவர் காம்பினேஷனை முதலில் எழுதுவோம்..
பின் மாற்ற முடிந்தவற்றை மாற்றிப் பார்ப்போம்.......

அதில் அவர் அவர் கொடுத்த குறிப்புகளின் லிங்க்கையும் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.....

மனோகரி!....வந்துட்டீங்களா... அப்புறம் உங்கவீட்டு பாத்திரங்கள் மட்டும் எப்படி இப்படி பள பளக்குதுன்னு கேட்டிருந்தேனே ( யாரும் சமைக்கலாம் - ல் பார்த்தேன் )அந்த பதிவை பார்க்கலையா? அப்படியே நல்ல ஒரு ரெஸிப்பி செய்து யாரும் சமைக்கலாம் பகுதிக்கு அனுப்புங்களேன். அந்த மைக்ரோவேவ் மஷ்ரூம் பிரியாணியை பார்த்து பார்த்து போரடித்துவிட்டது. எனக்கு எப்படி அனுப்புவது என்று தெரியவில்லை. என் மகளையோ, மகனையோ கேட்டுத்தான் அனுப்பவேண்டும். ( அவர்கள் வரும்போது )
மனோகரி ஏன் வார்த்தைகளில் ஒரு விரக்தி தெரிகிறது. நான் நினைக்கிறேன் உங்களுக்கு ஊர் ஞாபகம் வந்துவிட்டதோ என்று. சமீபத்தில் இந்தியா வரும் ப்ரோக்ராம் ஏதாவது இருக்கிறதா? வந்து உங்கள் உறவினர்களை எல்லாம் பார்த்துவிட்டு . போங்களேன். மனசுக்கு ஒரு சேஞ்சாக இருக்கும். அங்கு யுஸ் -ல் உறவினர்கள் இருக்கிறார்களா? உங்கள் குழந்தைகள் என்ன பண்ணுகிறார்கள் மனோகரி? ஆனால் கணவரையும் குழந்தைகளையும் விட பெரிய, நிலையான உறவு வேறு எதுவும் இல்லைதானே? உங்கள் டைகர் எப்படி இருக்கிறது. உங்கள் கண்வருக்கும் நாய் வளர்ப்பது பிடிக்குமா? உங்களுக்கும் உங்கள் கணவருக்கும் டேஸ்ட் ஒத்து வராது என்று சொல்லிருக்கிறீர்கள். எங்க வீட்டில் கூட அப்படித்தான். ( சாப்பாட்டில் மட்டும் )
மற்றபடி எல்லா விஷயத்திலும் ரொம்ப பேலன்ஸ்டு-ஆக இருப்போம். எல்ல்ல்ல்லா விஷயமும் இருவரும் டிஸ்கஸ் பண்ணித்தான் செய்வோம். இங்கு ஒரு சில முறை ஜோடிபொருத்தம் நிகழ்ச்சியில் பரிசு வாங்கிருக்கிறோம். இதை எதற்காக சொல்கிறேன் என்றால் நம் கையில்தான் நம்முடைய வாழ்க்கை இருக்கிறது. குழந்தைகளை நல்லமுறையில் வளர்ப்பதன்மூலம் எப்படிப்பட்ட கணவர்களையும் மாற்றிவிடலாம்..
இதெல்லாம் என்னுடைய தாழ்மையான கருத்துகள்.

புதுசா என்னன்னு யோசிக்கட்டா..

தோசை கத்திரிக்காய் பாஜி/சட்னி..இதில் உள்ளவைகள் குரிப்பில் சேத்தாச்சு....இது சூப்பராஅக இருக்கும்..வெறும் 5 நிமிடம் எடுக்கும் சமைக்க.நல்ல கத்திரிக்காய் வேண்டும்.

பின்ன அப்பம் ஸ்டியூஅதுவும் சூப்பர்

மரவள்ளி கிழங்கு வேக வைத்ததுடன் பழைய மீன் குழம்பை சேர்த்து சாப்பிட்டு பாருங்க ..ஆஹா

பின்ன சூப்பும்,கார்லிக் ப்ரெட்டும்,சோகொலேட் கேக்கும் ஆஹா மழை வர்ரப்பா ரசிச்சுட்டே சாப்பிட சூப்பர்.

இது தானெ

take life as it comes
ஹாய் அக்கா நல்லா இருக்கீங்களா?
//புதுசா என்னன்னு யோசிக்கட்டா..// இது என்ன புரியல.இந்த கார்லிக் ப்ரட் உங்க குறிப்புல இருக்கா அக்கா?

take life as it comes

இல்லல்ல அது இல்ல supriya..அதுக்கு ஒரு 6 பல் பூன்டை வேக வெச்சு பட்டருடன் அரைச்சு..பார்ஸ்லியை பொடியாய் வெட்டி போஈட்டு ப்ரெட்டில் தடவி டோஸ்ட் பன்றது தான்.

சாதம்,பருப்பு,ரசம்,உருளை வருவல்,வெங்காயம் மிளகாய் பச்சடி,மீன் வறுவல் அல்லது கோழி பொரியல் அல்லது மட்டன் வருவல்

சாம்பார்,வாழைக்காய் தோரன்,வெள்ளரிக்காய் தயிர் பச்சடி,தேங்காய் துவையல்,வாளை அல்லது சாளை(மத்தி)மீன் பொரியல்

நெய் சோறு,தாளிச்சா,மட்டன் வறுவல்,ஆனியன் ராய்த்தா,பால் பாயாசம்

சப்பாத்தி,சிக்கன் அல்லது மட்டன் கிரேவி

இடியாப்பம்,சிக்கன் அல்லது மட்டன் குழம்பு அல்லது புளிசேரி(மோர்குழம்பு)

பொங்கல் சாம்பார் வடை பொட்டுகடலை சட்னி

தோசை,தேங்காய் சட்னி,ரசவடை

சூடான இட்லி,நெய்யில் தாளித்த வெங்காய சாம்பார்,பொட்டுகடலை சட்னி

அப்புறம் ஞாபகம் வரும் போது எழுதறேன்.

தளிகா நான் நேற்று கப்பயும் மீனும்தான் சாப்பிட்டேன்

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

எனக்கு பிடித்த உணவு காம்பினேஷன்

ஹாய் எல்லாரும் அவர் அவர் உணவு பொருத்தத்தையும் கொடுத்து அசத்தீட்டீங்க. நானும் எனக்கு தெரிந்ததை கொடுக்கிறேன்.

துவரம் பருப்பு ஆணம்,மாசி சம்பல் அல்லது முட்டை பொரியல்,அல்லது பிஷ் ஃப்ரை, அல்லது மாசி வடை

நெய் சோறு,அல்லது ப்ளெயின் சாதம் மட்டன் கிரேவி கத்திரிக்காய் மாங்காய் இது எங்கள் ஊரில் எல்லார் வீட்டிலும் செய்யும் காம்பினேஷன் உணவு.

இடியாப்பம்,வட்டலப்பம்,ஜவ்வரிசி பாயாசம் இதுவும் பெரு நாள் அன்று எல்லார் வீட்டிலும் செய்யும் காம்பினேஷன் உணவு இத்துடன் அவர் அவர்களுக்கு தேவையான மற்ற உணவுகளையும் செய்து கொள்வோம்.

மட்டன் பிரியாணி,சிக்கன் 65,வெங்காய தயிர் பச்சடி

நெய்சோறு, சிக்கன் கிரேவி அல்லது எழுமிச்சை ஊறுகாய்,மாசி,பொட்டுக்கடலை சேர்த்து செய்த சம்பல்.

சப்பாத்தி,சன்னா மாசாலா அல்லது துவர் தால்

பரோட்டா, சிக்கன் கேப்ஸிகம் கிரேவி அல்லது மட்டன் குருமா , முள் சால்னா

தோசை வெஜ்டபுள் சாம்பார் ,வெஙகாயசட்னி அல்லது தக்காளி சட்னி

சப்பாத்தி பனீர் கோஃப்தா, அல்லது ஆலு மட்டர்

ஆலு பரோட்டா ரைத்தா

மீன் குழம்பு உருளைகிழங்கு கறி அல்லது கேரட் பொரியல்

கருவாடு முருங்கக்கீரை கூட்டு அவித்த முட்டை

லெமன் ரைஸ் ஹைதராபாத் சிக்கன் 65,

தேங்காய் பால் கஞ்சி , பொட்டுக்கடலை துவையல்

பருப்பு வடை தேங்காய் சட்னி அல்லது உளுந்துவடை

கோழி ஆப்பம்,சிக்கன் கறி அல்லது மீன் கிரேவி

மருந்து சோறு, மீன் மிளகு ஆணம்

பிறகு நியாபகம் வரும் போது எழுதுகிறேன்.

அன்புடன் கதீஜா.

ஜலீலாவின் மெனு

இது அன்றட டிபன் (அ) பிளெயின் சாதம் , ரொட்டிகு தயாரிக்கும் உணவு.

பூரி பாஜி (அ) சென்னா மசாலா

ஆப்பம் தேங்காய் பால், முட்டை ஆப்பம் , பொட்டு கடலை துவையல்.
வெள்ள கஞ்சி பொட்டு கடலை துவையல் (கண்ண்டங்கருவாரு பிரை)
வெள்ளை உப்புமா, நார்த்தங்காய் ஊறுகாய்,வெங்காய முட்டை.
கார கறி சேமியா, புதினா துவையல்.
பாசி பயறு இனிப்பு சுண்டல் ,உளுந்து வடை
அக்கார வ்டிசல், மாசால் வடை
புளிசாதம் , மசால் வடை, சுக்கா சாப்ஸ் கறி
லெமென் சாதம் , கள்ளு கடை முட்டை
தயிர் சாதம், சிகன் லாலிபாப் பிரை, ஊறுகாய்.
மீன் குழம்பு, மீன் பிரை, பாலக் கீரை பிரெட்டல் (அ) எதாவது கீரை பெறட்டல்
கறி உருளை சால்னா,கேரட் பொரியல்.

பிளெயின் தால் , பேபர் சிக்கன் (அ) பெப்பர் மட்டன்.
இட்லி மீன் சால்னா (அ) கால் பாயா
பிரைட் ரைஸ்,கறி குட்டு (அ) பேப்பர் சிக்கன்
சாம்பார் , பீஃப் பிரை
சாம்பார் கறி குட்டு
மிக்ஸ்ட் வெஜ் சாம்பார், அப்பளம், ஊறுகாய்.

சுறா மீன் சால்னா, சுறா மீன் புட்டு

புட்டு, ஆட்டேபார்ம்,தட்டு ரொட்டி,இனிப்பு சுத்திரியா.

கறி தக்குடி
இறால் மக்ரூனி
ரவை கிச்சிடி, ஊறுகாய், புதினா துவையல். ஆஃப் பாயில்

மாலை டிபனுக்கு
பஜ்ஜி, போண்டா, டீ கடை போண்டா, சிக்கன் பகோடா, கடலை மாவு போண்டா
எல்லாம் அது அதுக்கு ஏற்ற துவையலுடன்
பஜ்ஜி என்றல் முட்டை பஜ்ஜி, சிகன் பஜ்ஜி,கொடமிளகாய் பஜ்ஜி, தக்காளி பஜ்ஜி,ஆனியன் பஜ்ஜி, வாழக்காய் பாஜ்ஜி,உர்ளை பஜ்ஜி, அப்பளம் பஜ்ஜி, இதி ஏஅதாவது முன்று வெரைட்டி,

இன்னும் ஏராளம் சொல்லி கொண்டே போகலாம்.

ஜலீலா

Jaleelakamal

உஙகள் எல்லருடைய மெனூவும் படித்து வயிரு நிரைந்துவிட்டது. அப்பாடா

விஜயா மேடம் உங்களுக்கும் நிறைய வருடம் அனுபவம் நீங்களும் விஷேஷ்த்திற்கு செய்வது, தினப்படி சமையல் அள்ளி விடுங்கல்.
ஜலீலா

Jaleelakamal

பருப்பு குழம்பு,உருளை கிழங்கு வறுவல்,கள்ளு கடை முட்டை அல்லது கிறிலில் செய்த மீன் வறுவல்.

தக்காளி குழம்பு_மிளகு கறி வாறுவல்.

பாலக் கீறை கடைசல்_உருலை வறுவல்.

மட்டன் குழம்பு_பிளெயின் சாதம்

கோழீ குருமா_குஷ்கா

மட்டன் முருமா_குஷ்கா

சுண்டல் குழம்பு_சாதம்,மட்டன் வறுவல்.

முட்டை குருமா_பிளெயின் சாதம்

மீண் குழம்பு_சாதம்_மீண் வறுவல்

ரசம்_தந்தூரிசிக்கன்,வெண்டைகாய் பொறியல்

பிரைட் ரைஸ்_சிக்கன் கிரேவி,ரைத்தா

வெந்திய சாதம்,தக்காளி சாதம்,லெமன் சாதம்(இதனுடன் நான் வெஜ் கிரேவி)._

பாவக்காய் குழம்பு_பிளெயின் சாதம் மட்டன் கிரேவி

குஷ்கா _மட்டன் குருமா ,ரைத்தா

பிரியானி ,ரைத்தா,புட்டிங் அல்லது ரசமலாய்(இதனுடன் சில சமயம் தால்ச்சா,அல்லது ஜலிலாவின் கத்திரிக்காய் சட்னி)

(மேலே கொடுத்திருக்கும் மதிய உனவிர்க்கு நான் செய்யும் உணவு பொருத்தம் இப்படித்தான், இதனுடன் எப்போதும் சாலட் வகைகள் இருக்கும்)

இரவு டிபனுக்கு

தோசை_பொட்டு கடலை சட்னி(சில சமயம் ஆட்டுக்கால் பாயா)

இட்லி_தக்காளி சட்னி,மீன் குழம்பு அல்லது மட்டன் குருமா

குழிபனியாரம்_பாசிபருப்பு பாயாசம்

கார சேமியா_ஊறுகாய்

உப்புமா_தேங்காய் சட்னி

வெண் பொங்கள்_சட்னி

செல்வியின் ஆப்பம்_தேங்காய் பால்(கணவருக்கு மட்டும் சட்னி)

பரோட்டா_ மட்டன் குருமா

சப்பாத்தி_கைமா கிரேவி

இடியாப்பம்_தேங்காய் பால்

பூரி _உருளை கிழங்கு மசால்

தேவாவின் நூடுல்ஸ்,சில சமயம் பாஸ்தா

பிரட் வித் கைமா ,எக்.

தூனா பிஸ் வித் பிரட்

நான் மதியம் ஓரளவு சாப்பிட்டுக் கொள்வேன்
காலயிலும் இரவிலும் ஓட்ஸ்,ராகி கூல்,தறி காச்சியது,கோதுமை தோசை இப்படி சாப்பிட்டுகொள்வேன்.

அன்புடன் பர்வீன்

மேலும் சில பதிவுகள்