உணவு பொருத்தம்

தோழிகளே!
நம் வீட்டில் சாதாரணமாக உணவு தாயாரிக்கும் போது இதுக்கு இது தான் காம்பினேஷன் என்று நாம் வைத்திருப்போம்....
சில சமயம் அதை சாப்பிட்டு சாப்பிட்டு போர் அடித்திருக்கும்..
அவர் அவர் காம்பினேஷனை முதலில் எழுதுவோம்..
பின் மாற்ற முடிந்தவற்றை மாற்றிப் பார்ப்போம்.......

அதில் அவர் அவர் கொடுத்த குறிப்புகளின் லிங்க்கையும் கொடுத்தால் இன்னும் பயனுள்ளதாக இருக்கும்.....

ஹலோ ஜெயந்தி மேடம்! என்ன ரொம்ப பிசியா? வேலை அதிகமா? இந்த காம்பினேஷன் மெனு என்றதலைப்பில் தோழிகள் எல்லோரும் அசத்திக்கொண்டு இருகிறார்களே படித்தீர்களா? நீங்கள் எழுதுவீர்கள், எழுதுவீர்கள் என்று ஆவலோடு காத்திருந்தால் நீங்கள் எழுதவே இல்லை. உங்கள் மெனுவை படிப்பதற்குதான் ரொம்ப ஆசையாக இருக்கிறேன். எப்ப எழுதப்போகிறீர்கள்? உங்க டாட்டர் ஏதோ ப்ரோக்ராம் பண்ணப்போவதாக சொன்ன ஞாபகம். நல்லபடியாக நடந்ததா?

எனக்குப் பிடித்த சில உணவுப் பொருத்தம்.
புளியோதரை - அவியல்.
அடை - அவியல், வெண்ணெயும், நாட்டு சர்க்கரையும்.
உளுந்து வடை (சூடாக) - சர்க்கரை.
ஹைதராபாத் பிரியாணி, பாதாம் புதினா சிக்கன், பள்ளி பாளையம் சிக்கன், ஆனியன் மசாலா ரெய்தா.
முருங்கைக்காய் சாம்பார், உருளைக்கிழங்கு பொடிமாஸ், தேங்காய், வெங்காய தயிர் பச்சடி.
வத்தக்குழம்பு, மிளகு ரசம், கீரை கூட்டு, சுட்ட அப்பளம்.
லெமன் ரைஸ், காரட் வறுவல்.
தயிர் சாதம், வடு மாங்காய்.
பழைய சாதம், சுண்ட குழம்பு.
தோசை - வெங்காய சட்னி.
வெள்ளைப் பணியாரம் - வெங்காய சட்னி.
குழிப் பணியாரம் (காரம்) - தேங்காய் சட்னி.
சந்தவை - வெல்லப்பாகு.
குஷ்பூ இட்லி - தக்காளி சாம்பார்.
உப்புமா - வெங்காய தொக்கு.
இன்னும் நிறைய ஞாபகம் வரும் போது.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்