குழந்தைகளின் பிறந்தநாள்விழா

குழந்தைகளின் பிறந்த நாளை சிறப்பாக அதே சமயம் சிக்கனமாக கொண்டாடும் முறைகளை பற்றி எழுதுங்களேன்.
எனக்கு தெரிந்ததை எழுதுகிறேன்.

குழந்தைகள் வந்ததும் ஆளுக்கொரு சாக்லெட் கொடுக்கவேண்டும்
பிறகு கேக் வெட்டியதும் கேக், நூட்ல்ஸ், சப்பாத்தி, மினி இட்லி, தயிர் சாதம். ஐஸ்க்ரீம்.
சாப்பிட்டதும் கேம்ஸ்.
பிறகு எல்லா குழந்தைகளுக்கும் ஒரே மாதிரியான கிஃப்ட்.
முகத்தில் போடும் மாஸ்க் குழந்தைகளுக்கு பிடிக்கும்.
நீங்களும் எழுதுங்க சகோதரிகளே

ஹலோ மாலதி குழந்தைகளின் பிறந்த நாளை எப்போதும் போல் வீட்டில் கொண்டாடுவதைத் தவிர்த்து வெளியில் ஒரு மாறுதலுக்கு பொது இடத்தில்கூட கொண்டாடலாம். குழந்தைகளின் பெற்றோர் ஒரு சிலர் உதவியுடன் குழந்தைகளை பூங்கா, பிளேகிரவுன்ட் போன்ற பொது இடத்திற்க்கு அழைத்துச் சென்று அங்கு கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடலாம்.அல்லது அனைவரையும் சர்க்கஸ், கார்ட்டூன் சினிமா போன்ற கேளிக்கைகளுக்கும் கூட்டிச் சென்று குழந்தைகளை மகிழ்விக்கலாம்.குழந்தைகள் சாப்பாட்டை விட இதுபோன்ற கொண்டாட்டங்களையே விரும்புவதால் இது அவர்களுக்கு மறக்கமுடியாத பிறந்தநாளாகவும் வித்தியாசமான கொண்டாட்டமாகவும் இருக்கும். என்ன சொல்றீங்க, எந்த இடத்திற்க்கு போகலாம்னு பிலான் போட்டாச்சா?

நல்ல ஐடியாவா இருக்கிறது மனோகரி. ஆனால் இங்கு நாங்கள் இருக்கும் ஊரில் அந்த மாதிரி இடங்கள் மிகவும் குறைவு. மற்ற ஊர்களில் வேண்டுமானால் இது சாத்தியப்படலாம். புதுசு புதுசா யோசிக்கிறீங்களே.

குழந்தைகளின் பிறந்த நாளன்று அவர்களை விட்டே வசதி இல்லாத ஏழைக் குழந்தைகளுக்கு அத்தியாவசியப் பொருட்களை (உணவு, பள்ளிக்குத் தேவையான பென்சில், பேனா போன்றவை, முடிந்தால் உடை) கொடுக்கச் சொல்லலாம். பகிர்ந்து கொள்ளும் எண்ணம் வளரும்.
இந்தப் பதிவு என் நினைவுகளை 20 வருடங்கள் பின்னோக்கி அழைத்துச்சென்றுவிட்டது. 1988 மார்ச். அப்பொழுதுதான் சொந்த வீடு கட்டிக்கொண்டு போய் இருந்த சமயம். கையிருப்பு எல்லாம் வீட்டில் போட்டாகிவிட்டது. கடன் வேறு. என் பையனின் பிறந்த நாளுக்கு துணி எடுக்க கடைக்குப் போய் இருந்தோம். 3 வயது அவனுக்கு. நாங்கள் வீட்டில் பேசிக் கொண்டது என்ன புரிந்ததோ, துணிக் கடைக்குச் செல்லாமல் வாசலில் இருந்த நடை பாதை ப்ளாஸ்டிக் கடையில் இருந்து ஒரு குட்டி பக்கெட்டும், குடமும் எடுத்துக் கொண்டு பிறந்த நாளுக்கு ட்ரெஸ் வேண்டாம். என்னிடம் நிறைய ட்ரெஸ் இருக்கு. இது போதும் என்றான். இது எதற்கு என்று கேட்டதற்கு செடிக்குத் தண்ணி ஊற்ற என்றான். அதற்குப் பின் எவ்வளவோ உடை, தங்கச் சங்கிலி, மோதிரம் என்று பிறந்த நாட்களுக்கு வாங்கிக் கொடுத்தோம். ஆனால் அந்தப் பிறந்த நாள் எங்கள் வாழ்விலேயே மறக்க முடியாத நாள்.
நன்றி தோழியே
அன்புடன்
ஜெயந்தி மாமி

மேலும் சில பதிவுகள்