கர்ப்பிணி பெண்கள் வாந்தி, அருவருப்பிற்கு (nausea)தொடர்ந்து மாத்திரை போடலாமா?

கர்ப்பிணி பெண்கள் வாந்தி, அருவருப்பிற்கு (nausea)தொடர்ந்து மாத்திரை போடலாமா?

இந்த கேள்வியை வேற எங்கேயோ கேட்டேன். யாரும் பதிலளிக்கவில்லை. வானதி தவிர.:) அதான் புதுசா கேட்கிறேன். ob/gynபோடலாம் என்கிறார். எனது தம்பி(Dr.) உட்பட அம்மா, நண்பர்கள் அதிகம் போட வேண்டாம் என்கின்றனர். என்ன செய்யலாம். தெரிந்தவர்கள் கூறுங்கள்.

வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி வானதி. உங்களைப் போல்தான் எனக்கும். மருந்து போடாவிட்டால் சாப்பாடு இறங்குதில்லை. முதல் குழந்தை என்பதால் எதுவும் தெரியவில்லை :) உணவின் படமோ பெயரோ பார்த்தாலே வாந்தி வருகிறது :)

செல்வி அக்கா, நிஜம்தான். வாழ்த்துக்கு நன்றி:)

நர்மதா வாழ்த்துக்கள். இது எத்தனையாவது மாதம். நானும் நிறைய மாத்திரை சாப்பிட வேண்டாம் என்று சொல்லி கேள்வி பட்டிருக்கிறேன்.

ஜானகி

ஹாய் நர்மதா,தங்களுக்கு என் மனமார்ந்த வாழ்த்துக்கள். இந்த சமயத்தில் எனக்கும் அப்படித்தான் இருந்தது. ஆனாலும் மாத்திரை சாப்பிடவில்லை. நாம் சாப்பிடுவது குழந்தைக்கும் போவதால் எது சாப்பிட்டாலும் யோசித்துப் பார்த்து கவனமாகத்தான் உட்கொள்ள வேண்டும். மருந்து இல்லாமல் வாந்தியை எப்படி கட்டுப்படுத்துவது என்று பார்ப்போம். தினமும் ஒரு வெற்றிலை சாப்பிடுவது நல்லது. முடிந்தால் குல்கந்து( ரோஜா இதழ்களை தேனில் போட்டுத் தயாரிப்பது) சேர்த்து வெற்றிலை சாப்பிடுங்கள். இது அஜீர்ணம், வாந்திக்கு நல்லது. ஆரஞ்ச், மொசாம்பிக் ஜூஸ் நல்லது. தலை குளிக்கும் அன்று இந்த ஜூஸ்களை குடிக்காதீர்கள்.

குமட்டல் தோன்றும் பொருட்களைத் தவிர்த்து விடுங்கள். என்ன பிடிக்கிறதோ அதில் சத்தான சாப்பாடாக சாப்பிடுங்கள். எனக்கு பழங்களென்றால் மிகவும் பிடிக்கும். ஆனால் குழந்தை உண்டான சமயம் எந்த பழத்தை பார்த்தாலும் வாமிட் தான். தினமுமே தயிர்சாதம், மாவடுதான். அது மட்டுமே பிடித்தது. கீரை, மீன் போன்றவை மிகவும் நல்லது. வாமிட் வரும்போல இருந்தால் ஒரு எலுமிச்சை பழத்தை நன்றாக கசக்கி முகருங்கள். சாப்பிட்டவுடன் மெதுவாக நடங்கள். ஜூஸ் மட்டும் குடிக்க பிடித்தால் காய்கறி கலந்த V8 ஜூஸ் குடியுங்கள். என்னென்ன சத்து எந்தெந்த காய்கறியில் உள்ளது என்பதை அடுத்த பதிவில் எழுதுகிறேன். உடல் சூட்டை அதிகரிக்கும் உணவு பொருட்களைத் தவிருங்கள். பைனாப்பிள், மாம்பழம், பப்பாளி போன்றவை கொஞ்ச நாட்களுக்கு வேண்டாம். மாத்திரை வேண்டவே வேண்டாம் என்பதே என் அட்டைஸ். இரண்டு பேருக்கு என்று நிறைய சாப்பிட வேண்டுமென்று அர்த்தமில்லை. எது சாப்பிட்டாலும் சத்தாக சாப்பிட வேண்டியதே அவசியம். சிலருக்கு பிரெட், பாரிட்ஜ் போன்றவை மட்டுமே பிடிக்கும். பொரியல் போன்றவை பிடிக்காவிட்டால் எல்லா காய்கறியும் போட்டு சாம்பார், சூப் என்று சாப்பிடுங்கள். தக்காளி சூப் குடிப்பதுக்கூட வாந்தியை கட்டுப்படுத்தும். வாந்தி நிற்க வேண்டி லெமன் சோடா போன்றவற்றை குடிக்காதீர்கள். அதுவும் உடலுக்கு நல்லதல்ல.

வாழ்த்துக்கள். பொதுவாக நிறைய பெண்களுக்கு அப்படித்தான் இருக்கும். எனக்கு சாம்பார் வைத்தால் குமட்டும். அடுப்பை சிம்மில் வைத்து விட்டு ஓடிவிடுவேன். காப்பி வாசனை குமட்டும். என் கணவரோ காப்பி பிரியர். கெரோசின், பெட்ரோல் வாசனை பிடிக்கும். அதை குடிக்கவும் முடியாது. சமைக்கவும் முடியாது.
இரண்டாவது கர்ப்பத்தின்போது என் முழு நேர உணவு ரோஸ்மில்க். இதெல்லாம் இயற்கை. இதற்காக மாத்திரை சாப்பிடுவது தேவை இல்லை என்பது என் கருத்து. முடிந்தவரை மருந்து மாத்திரைகளை அவாய்ட் செய்துவிடுங்கள்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

ஹாய் தோழிகளே,
நான் இப்பொது தான் கர்ப்பிணி பெண்கள் பகுதியை பார்த்து பல விஷயங்களை தெரிஞ்சுக்கரென். எனக்கு இப்போது 5வது மாதம் நடந்து கொண்டு இருக்கு.
கர்ப்பம் என தெரிந்து 40வது நாள் முதல் கடுமையான வாந்தி, தலைச்சுற்றல், மயக்கம் என தொடர்ந்து படுக்கையிலெயெ கிடந்து விட்டென். ஹாஸ்பிட்டலில் 2முறை அட்மிட் செய்து ட்ரிப்ஸ் போட்டும் வாமிட் எனக்கு குறையவில்லை. அதனால் மருத்துவரின் ஆலோசனையின் படி தொடர்ந்து ஒன்றரை மாதங்கள் வாமிட் மாத்திரைகளை சாப்பிட்டென்.
மற்றபடி குழந்தையின் நலத்திற்கென நான் 15வது வாரம் (4வது மாதம்) வரை எதையும் சரிவர உட்கொள்ள இயலவில்லை.
என் குழந்தைக்கு இதனால் ஏதும் கஷ்டம் இருக்குமானு இப்ப பயமா இருக்கு.
இனி நான் என்ன செய்ய வேண்டும். எத்தகைய உணவு முறைகளை பின்பற்ற வேண்டும் என அறுசுவை தோழிகளிடம் ஆலோசனை எதிர்பார்க்கிறேன். எனக்கு இப்பொது 18வது வாரம் ஆகின்றது.
4வது மாதம் செக் அப் போன போது உடல் எடை குறைவாக இருப்பதாகவும், ஹிமோகுலோபின் அளவு குறைவாக இருப்பதாகவும் doctor கூறினார்கள். நான் போலிக் ஆஸிட் உணவும் சரியாக உட்கொள்ள வில்லை. இது என் குழந்தையை பாதிக்குமா? தயவு செய்து ஆலோசனை தாருங்களேன்.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

வாழ்த்துக்கள் நர்மதா..ரோம்ப சந்தோஷமா இருக்கு...அந்த த்ரெட்டில் வானதியைத் தவிற வேறு யாராலும் உள்நுழைய முடியாததே காரணமாக இருக்கும்(எனக்கு நுழைய முடியவில்லை:-))
எனக்கு இந்த வாமிட்,மருந்து விஷயம் பத்தி சுத்தமா தெரியாது...சீரோ...
எனக்கிருந்த பாக்கியம் இந்த வகை வாந்தி.கொமட்டல் அப்டி ப்ரெக்னன்சி சிம்ப்டம்ஸ்னு ஒனும் இருக்கல..நிஜமா நான் கர்ப்பமா தான் இருக்கேனா எங்க டாக்டர் இல்லன்னு சொல்லிடுவான்களோன்னு ஒவ்வொரு ஸ்கேனுக்கும் பயப்படுவேன்:-D....
ஆனால் சும்மா வாழ்த்திடு போலாம்னு வந்தேன்.
ஃபாத்திமா எனக்கு என்ன நியாபகம் வருது தெரியுமா..என் நெயிபர்க்கு செம்ம வாந்தி ப்ரச்சனை...அவங்க கணக்கில்லாம ட்ரிப்ஸ் போட்டுக்கிட்டாங்க...கடைசி வரை சாப்பிடலை.சொன்னாலும் பேச்சு கேப்பதில்லை..
கடைசி ஸ்கேன்கு டாக்டர் குழந்தைக்கு வெயிட் ரொம்ப கம்மின்னு சொன்னாங்க...அப்பவும் சாப்பிடலை..எல்லோரும் அவளுக்கு லோ வெயிட் பேபி தான் பிறக்கும் என்று நினைத்தோம்..
அவ சொன்னா தான் தெரியும் ப்ரெக்னன்ட்னு..4 மாசம் ஆன அளவு தான் இருக்கும்.
அப்ரம் பாத்தா பிள்ளை பிறந்தது 4 கிலோ..ஹஹஹா.
அதான் சொல்ரது இது மாதிரி விஷயங்கள் எல்லாம் மாயமந்திரம் போல.மனசை சந்தோஷமா வெச்சுக்கிட்டு நம்மால் மேக்சிமம் எவ்வளவு குழந்தைக்கு சத்தா சப்பிட முடியுதோ அதை செய்யுங்க..பழையது குழந்தைக்கு ஒன்னும் பன்னாது...தைரியமா இருங்க.

பாத்திமா அஸ்ஸலாமு அலைக்கும்

இந்த வாமிட் எல்லோருக்கும் உள்ளதுதான்
சில பேருக்கு முன்று மாதத்தோடு எல்லாம் நின்று விடும் நார்மலாகா சாப்பிடுவார்கள்.
சல பேருக்கு பிள்ளை பெற்று முடுந்து நாற்பது நாள் வரை இருக்கும்.
வாந்தி எடுத்தாலும் பரவாயில்லை எதாவது சத்தானா ஆகாரம் சாப்பிட்டு கொண்டே இருக்கவும்.

பீட்ரூட், எல்லா வகையானா கீரைகள், சூப், பாதம் பால் அல்லது நைட் ஊறவைத்து காலையில் தோலெடுத்து விட்டு மென்று சாப்பிடுங்கள்
எனக்கு வெயிட் குறைந்த போது இப்ப்படி தான் சாப்பிட்டேன்,
காய் கறி சாப்ப்டி பிடிக்க வில்லை என்றால் கறி, (அ) சிக்க்ன், (அ) இறாலில் சேர்த்து சமைத்து சாப்பிடுங்கள்.

ஜலிலா

Jaleelakamal

Jansi straveler

Hi, Congradulations on your pregnancy.

I am a nurse/midwife. It is okay to take some medications during pregnancy for nausea/vomiting. Not all medications cross your placenta and go to the baby. Remember being able to eat and gain weight is also important during pregnancy. Your baby needs the nurition for brain growth and body growth. I am sure it is overwhelming when every body tells you to be easy on you medications. At this tome in the world of medicine there are lot of meds that don't harm the baby. Talk to your doctor and keep an eye on your weight. I have 2 little boys of my own. I had the same issue. I did better with the meds and my pregnency was a pleasent experience. I wish you the same!
Jansi Straveler

Jansi straveler

தளிகா அக்கா, ஜலீலா அக்கா, ஜான்சி,

உங்கள் பதில்களுக்கு மிக்க நன்றி. ரொம்ப பயந்துக்கிட்டு இருந்தேன். நல்ல அட்வைஸ் தந்து இருக்கிங்க.

ஜலீலா அக்கா எனக்கு இப்ப நான்வெஜ் தான் பிடிக்க மாட்டேங்குது.

பொறுமையையும் தொழுகையையும் கொண்டு இறைவனிடம் உதவி தேடுவோம். நிச்சயம் அவனே மிகச் சிறந்த‌ கொடையாளன்.

வாழ்த்துக்கும் ஆலோசனைக்கும் நன்றி ஜானகி, தேவா, ஜெயந்தி மாமி, தளிகா & ஜான்ஸி.

அறுசுவை சில காலம் எனக்கு open ஆகாததால் உடனே பதில் தர முடியவில்லை. sorry. இது நான்காம் மாதம். இன்னும் வாந்தி நின்றபாடிலை. ஆனால் முன்பைவிட குறைவாக உள்ளது. பார்க்கலாம். :)
-நர்மதா.

நர்மதா அவர்களுக்கு வாழ்த்துக்கள் :-
வாந்தி, அருவருப்பிற்கு ஏலகயாய் நன்கு வறுத்து தேனில் கலந்து சாப்பிட்டால் வாந்தி அருவருப்பிர்ற்கு நன்றாக இருக்கும் . take care. Let me Know how u r take care......

Pavithra

மேலும் சில பதிவுகள்