அருசுவை டூர் பாகம்2

எல்லாரும் கற்பனையில் ஒரு டூர் போகலாமா.தேவா கூட்டிட்டு போவாங்கன்னு நினைச்சேன்.நடக்கலை.அதான் நானே கூட்டிட்டு போறேன் போகலாமா.இந்த டூரில் வர முடியாதவங்க எல்லாம் அடுத்த முறை சரியா.

இது முழுக்க முழுக்க கற்பனையே.யாரையும் புண் படுத்த அல்ல.
அருசுவை தோழிகளே நானும் தேவா டூர் கூட்டிட்டு போவாங்க ஜாலியா போகலாம்னு காத்துக்கிட்டு இருந்தா அவங்க எல்லாரையும் கழட்டி விட்டுட்டு தனியா ஆத்துக்காரரோட கிளம்பிட்டாங்க.நாம விட்டுடுவோமா நாம எல்லாரும் அதே கொடைக்கானலுக்கு தேவா போற அதே நாள் போகபோறோம்.போகலாமா.

// ஜலீலாக்கா பெரிய மூட்டை முடிச்சுகளோட வர்றாங்க.
மர்ழியா: என்ன ஜலீலாக்கா மூட்டை ரொம்ப பெரிசா இருக்கு.
ஜலிலா:ஆமா மர்ழியா எல்லாருக்கும் சாப்பாடு வேணாமா அதான் மட்டன் பிரியாணி,இறால் முட்டை,மசாலாகோழி,பஜ்ஜி சொஜ்ஜி எல்லாம் செய்து எடுத்துட்டு வர்றேன்.
தளிகா:மர்ழியா மூட்டையையே முறைச்சு பாக்காதீங்க,என்ன ஜலிலாக்கா கையில் காயம் இன்னும் ஆறலியா?
ஜலிலா:அன்னிக்கு எண்ணெய் பட்டது சரியாயிடுச்சு.இது இன்னிக்கு ஹி..ஹி..
கவிசிவா:ஜலிலாக்கா தளிகாகிட்டயிருந்து கொஞ்சம் விலகியே நில்லுங்க.இல்லேன்ன கைக்கு மருந்து போடறேன்னு பட்டர் தடவி உருளைகிழங்கு தேய்ச்சு சாப்பிட்டுடுவாங்க. ஆமா ஹர்ஷு எங்க காணோம்.
தளிகா:அவங்க ரொம்ப பிசி.அதனால அவங்க நமக்கு முன்னாடி கொடைக்கானலுக்கு வந்து எல்லாருக்கு வாழ்த்து எழுதி வச்சுட்டு போயிட்டாங்க.
(செல்விக்கா அப்போதான் கிளம்பி ரூமிலிருந்து வெளியே வர்றாங்க)
தளிகா:செல்விக்கா எங்க நம்ப அருசுவை மன்னனும் மன்னியும்?
செல்வி:பாபு அருசுவை பிரச்சினையை சரி செய்ய ஊரிலேயே இருந்துட்டார்.தலைவன் இல்லாம தலைவி வருவாங்களா அதான் பாப்பியும் வரலை.
///காட்சி சென்னைக்கு செல்கிறது
பாபு:தப்பிச்சோம்டா சாமி!இந்த வானரங்களோட கொடைக்கானல் போனா என் நிலைமை என்னாகறது.அருசுவையை சொல்லி தப்பிச்சோம்டா.
பாப்பி:ஆமாங்க கல்யாணம் ஆனதிலிருந்து இதுங்க கண்ணுல படாம டபாய்ச்சுகிட்டு இருந்தோம்.எங்கடா இப்ப போய் மாட்டிக்குவொமோன்னு நினைச்சேன்.காப்பாத்திட்டீங்க.
//ரெண்டு பேரும் கிளம்பி ஊட்டிக்கு ஜாலி ட்ரிப் போயிட்டு இருக்காங்க
///காட்சி மீண்டும் கொடைக்கானலுக்கு:
தளிகா:ஆமா.அருசுவைதானே முக்கியம்.
வின்னியும் ஜானகியும் கிளம்பி வெளியில் வருகிறார்கள்.
வின்னி:எங்களை விட்டுட்டு போயிடாதீங்கப்பா.இதோ வந்துட்டோம்.
ஒருவழியாக எல்லாரும் கிளம்பி ஹோட்டலில் இருந்து வெளியே வருகிறார்கள்.
தளிகா:சுபா எங்கேப்பா காணோம்?
கவிசிவா:ரூமில் லேப்டாப்பும் கையுமாக இருப்பதை பார்த்தேன்.ஏதோ குறிப்பும் கவிதையும் ஞாபகம் வந்துச்சாம்.டைப் பண்ணிக்கிட்டு இருந்தாங்க.இன்னும் வரலியா?
தளிகா:இங்க வந்தும் குறிப்பா நான் போய் கூட்டிகிட்டு வர்றேன்.
//தளிகா சென்று சுபாவை கையை பிடித்து இழுத்து கொண்டு வருகிறார்கள்.
சுபா:தளிகா குறிப்பை சேவ் பண்ணலை சேவ் பன்ணிட்டு வந்துடறேன்.டைப் பண்ண 3 மணிநேரம் ஆச்சு தெரியுமா?
தளிகா:வந்து இன்னொருவாட்டி டைப் பண்ணிக்கலாம்.
மர்ழியா:என்னப்பா தேவா கூட இங்கதான இருக்காங்க.
கவிசிவா:ஆமா.ஆனா எந்த ஹோட்டலில் இருக்காங்கன்னு தெரியலியே.
//அப்போ ரெண்டுபேர் தலையில் முக்காடோடு பதுங்கி பதுங்கி ஹோட்டல் ரெசப்ஷனிலிருந்து வெளியே வருகிறார்கள்.
செல்வி:ஹேய் அவங்களை பாரு எங்கேயோ பார்த்த மாதிரி இருக்கு.
//செல்வி நன்றாக உற்று பார்க்கிறார்
செல்வி:ஏய் அது தேவாவும் டாக்டரும்.
வின்னி தளிகா மர்ழியா கவிசிவா நால்வரும் ஓடிப்போய் அவர்கள் முன் நிற்க
தேவா:ஹி…ஹி..ஹி…நீஈஈஈங்க எல்லாரும்… இங்க… எப்படி…..(அசடு வழிய)
மர்ழியா:நாங்க மட்டும் இல்ல அருசுவையே இங்கதான்.அங்கே பாருங்க.உங்க பையனும் அம்மாவும் உங்களை விட்டாலும் நாங்க விடுவோமா?அதான் எல்லாரும் கிளம்பி வந்துட்டோம்.
தேவா:செல்வி,ஜானகி யூ டூ
ஜலீலா:ஐடியா கொடுத்ததே அவங்க தானே
//ஒரு ஆட்டோ வந்து நிற்க அதிலிருந்து ஜெயந்தி மாமி வருகிறார்கள்
ஜெயந்தி:ஆஃபிஸ் முடிஞ்சு கிளம்பற நேரம் பாஸ் ஒரு ஃபைலை கேட்டார் எடுத்து கொடுத்துட்டு வர்றதுக்குள்ள என்னை விட்டுட்டு வந்துட்டீங்கள்ல.ஆனாலும் விடுவேனா வந்துட்டோம்ல.
//எல்லாரும் கிளம்பி சில்வர் ஃபால்ஸ் பார்க்க செல்கிறார்கள்.வேறு வழியில்லாமல் தேவாவும் டாக்டரும் சேர்ந்து கொள்கிறார்கள்
//சில்வர் ஃபாள்ஸில்
எல்லாரும் சில்வர் ஃபால்ஸில் குளிக்க ரெடியாக
தேவா:தண்ணி ரொம்ப சில்லுன்னு இருக்கும்ப்பா.குளிச்சா அப்புறம் ஸ்கின் ட்ரை ஆயிடும்.குளிக்க வேண்டாம் போட்டோ மட்டும் எடுத்துக்கலாம்.
துபாய் சூட்டில் வெந்து போய் குளிர்ந்த தண்ணீரை பார்த்து ஜொள் விட்டு கொண்டிருந்த தளிகா,சுபா,ஜலீலா எல்லாரும் ஏக்கப்பார்வை பார்க்க
ஜெயந்தி:சரி சரி அழுவாதீங்க என்கிட்ட மாய்ச்சரைசிங் லோஷன் இருக்கு.கவலை படாம ஆசை தீர 10 நிமிஷத்துல குளிச்சுட்டு வாங்க.
//அவர்கள் குளிக்க மற்றவர்கள் போட்டோ எடுப்பதில் பிஸியாக செல்விக்கா எல்லாருக்கும் மிளகாய் பஜ்ஜி வாங்கிட்டு வர்றாங்க
செல்வி:எல்லாரும் வாங்க.சூடான மிளகாய் பஜ்ஜி இருக்கு.
கவிசிவா:குளிருக்கு சூப்பரா இருக்கு.இன்னொண்ணு கிடைக்குமா?
செல்வி:எத்தனை வேணும்னாலும் சாப்பிடலாம்.
ஜலீலா:வீடில் செய்யற பஜ்ஜி இன்னும் சுவையா இருக்கும்.அடுப்பும் சட்டியும் எடுத்து வந்திருந்தால் நானே செய்து கொடுத்திருப்பேன்.
சுபா:தேவா எங்கப்பா?
தளிகா,மர்ழியா:ஆகா ரெண்டுபேரும் எஸ்கேப் ஆயிட்டாங்கய்யா எஸ்கேப் ஆயிட்டாங்க.
தளிகா:சரி சரி என்ஜாய் பன்னிட்டு போகட்டும்.
கவிசிவா:திரும்பவும் நம்ம கண்ணுல மாட்டாமயா போவாங்க.முதல்லேயே நம்மள எல்லாம் டூர் கூட்டீட்டு போயிருந்த இப்போ டிஸ்டர்ப் பண்ணியிருப்போமா?
வின்னி:கூல் டவுன் கவி.அவங்க பிஸியாயிருந்திருப்பாங்க
ஜானகி:ஆமா கவி
கவிசிவா:அதுவும் சரிதான்.
//ஒரு குரல் எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
ஜெயந்தி:எங்கேயோ கேட்ட மாதிரி இருக்கே!
ஜானகி:ஹேஏஏஏஏஏய் அதிரா.நீங்க எப்போ இங்கே வந்தீங்க
அதிரா:வீட்டிலுள்ள வாலுகளுக்கு சொக்கா போட்டு வர்றதுக்குள்ள நீங்க என்னை விட்டுட்டு வந்துட்டீங்க.இங்க வந்து என் ட்ரேட் மார்க் வசனத்தை சொல்லிகிட்டு இருந்தா எப்படியும் உங்கள் கண்ணில் நான் படுவேன்னு நினைச்சேன் அதே போல நடந்திடுச்சு. எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்.
மர்ழியா:அப்போ இந்த சினிமாவில் பாடற குடும்ப பாட்டுகள் கூட நிஜம்தான் போல
ஜலீலா:சரி சரி நின்னு பேசிக்கிட்டு இருக்காம எல்லாரும் கிளம்புவோம்.அடுத்து எங்கப்பா?
கவிசிவா:அடுத்தது லேக் போகலாம்
//லேக் அருகில்
ஜலீலா:ரோயிங் போட் எடுக்கலாம்ப்பா.அப்பதான் சேஃபா இருக்கும்.
சுபா:ஆமாம்.போட்டில் போகும் போது கவிதை வந்துச்சுன்னா டைரியில் எழுத வசதியாயிருக்கும்.
தளிகா:இல்லை பெடலிங் போட்டில் போகலாம்.அது கால் தசைகளுக்கு நல்ல எக்சசைஸ்னு www.pedalingboat.com வெப் சைட்டில் போட்டிருக்கு.
செல்வி:ரெண்டு டைப் போட்டும் எடுக்கலாம்.யாருக்கு எது விருப்பமோ அதில் போகலாம்.
//போட்டிங் முடிந்து வெளியே வரும் போது குதிரை சவாரி செய்து கொண்டிருந்த டாக்டரும் தேவாவும் மீண்டும் கண்ணில் மாட்ட தேவா மீண்டும் வழிய
ஜெயந்தி:சொல்லிகிட்டே தனியா போயிருக்கலாம்ல.கவிசிவா கொதிச்சுகிட்டு இருக்காங்க.அவங்க கண்ணுல படாம ஓடிடுங்க பை பை
விட்டால் போதும்னு ரெண்டு பேரும் ஓடியே போயிட்டாங்க.
ஜலீலா:என்னப்பா நான் கொண்டு வந்த சாப்பாடெல்லாம் அப்படியே இருக்கு.வாங்க சாப்பிடலாம்
//எல்லாரும் சாப்பிட்டு முடித்து அடுத்து சூசைட் பாயிண்ட் பார்க்க செல்கிறார்கள்.
மர்ழியா:அப்பா…. எவ்வளவு பெரிய பள்ளம்!
சுபா:எவ்வளவு பெரிய பள்ளம்
கொள்ளை போகுது உள்ளம்
ஹை கவித கவித
வின்னி:சுபா டைரியில் எழுதிக்கோங்க.
தளிகா:ஃப்ரெண்ட்ஸ் அதுதான் பில்லர் ராக்.3தூண் மாதிரி இருக்குல்ல அதான் அந்த பெயர்.
ஜெயந்தி:இதை எந்த வெப்சைட்டில் பார்த்தீங்க
தளிகா: (அப்பாவியாக)www.kodaikanal.com/pillar_rock
கவிசிவா:சரி சரி எல்லாரும் கிளம்புங்க.இப்பொ கிளம்பினாதான் நாளை காலையில் சென்னை போய் சேர முடியும்.என் மாமியார் வர்றாங்க எனக்கு ஊருக்கு போகணும்.
//மறுநாள் காலை சென்னை பேருந்து நிலையத்தில் எல்லாரும் பஸ்ஸிலிருந்து இறங்க ஊட்டியிலிருந்து வந்த பஸ்ஸிலிருந்து பாபுவும் பாப்பியும் இறங்குகிறார்கள்.
தளிகா:என்ன அட்மின் சர்வர் ப்ரச்சினையை சரியாக்க ஊட்டி வரைக்கும் போக வேண்டியிருந்துச்சா?
பாபு,பாப்பி:ஹி..ஹி…
செல்வி:ட்ரிப் நல்லா எந்த தொந்தரவும் இல்லாம ஜாலியா இருந்துச்சா?
மற்ற எல்லாரும்:செல்விக்கா அப்போ உங்களுக்கு முதல்லேயே தெரியுமா?
செல்வி:எந்த பஸ்ஸில் போராங்க எந்த இடத்தில் தங்கறாங்க எல்லாம் தெரியும் பாபு யார்கிட்டயும் சொல்ல வேனாம்னு சொன்னதால சொல்லலை.
மற்ற எல்லாரும்:பயங்கற ஆளுப்பா நீங்க.
எல்லாரும் பிரிய மனமில்லாமல் அவரவர் ஊருக்கு செல்கிறார்கள்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சிவா என்ன ஒரு கற்பனை நயம், என்னை சாப்பாட்டு ராமியா ஆக்கிட்டீங்களே.
எப்படிப்பா இவ்வ்ளோ டைப்பண்ணீங்க
இது நிஜாமவே இருக கூடாதா நான் ஒரு நிமிடம் கண்ணை மூடி கொண்டு அங்கு உங்கள் எல்லோருடனும் போய் வந்து விட்டேன்.
ஹி ஹி ஹி ஹி
ஆபிஸில் ஒருத்தர் வந்து என்ன தனியாக் சிரிகிறீங்க

ஜலீலா

Jaleelakamal

என்ன ஜலீலாக்கா உங்களை போய் சாப்பாட்டு ராமின்னு சொல்லுவேனா.அன்னமிட்ட கையின்னுல்ல சொல்லியிருக்கேன் நல்லா பாருங்க

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சிவா நான் தப்ப எடுத்துக்கல
சும்மா தான் நீங்க ரொம்ப free yaa இருக்கீங்க போல இருக்கு.
பாவம் ரொம்ப போர் அடித்து தனிகாட்டில் மக்களை தீடிரென பார்த்தால் எப்படியோ அப்ப்டி இருக்கு உங்கள் நயம்.
ஜலீலா

Jaleelakamal

ஆமா ஜலீலாக்கா இன்னிக்கு எந்த வேலையும் இல்லை.இன்னிக்கு சமையல் கூட இல்லை.அதான்.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

ஹஹஹஹாஅ..கவீ..சுத்தமா எதிர்பார்க்கல கவிக்கு இப்படி கூட திறமை இருக்குன்னு...நான் முதலில் கெக்கெ கெக்கேனு சிரிச்சுக்கிட்டே படிச்சாலும் கடைசி ரெண்டு வரி படிக்கிரப்பா ஏதோ டூர் முடிஞ்சு வீட்டுக்கு திரும்பி வர்ரப்பா மூஞ்சி வாடியிருக்குமே அது போல் ஆகிவிட்டது..அய்யோ டூர் முடிந்து விட்டதேன்னு....எனக்கு சிரிப்பே தாங்கல..அய்யோ நான் வறேன் அப்ரம்..இப்ப சிரிக்கத் தான் நேரமிருக்கு.நிஜத்தில் டூர் போன ஒரு ஃபீலிங்

என்ன தளிக்கா அம்மணியை காலையில் இருந்து காணும்.
நான் அந்த டூரிலேயே மூழ்கிவிட்டேன் கவி சமையல் வேலை இல்லை என்றால் விரதமா

இல்லை பழசுகள் எல்லம் இன்று அட்ஜஸ்ட் மெண்டா
ஜலீலா

Jaleelakamal

விரதம்லாம் இல்ல ஜலீலாக்கா.இன்னிக்கு அவரோட டின்னெர்க்கு வெளிய போறேன்.அதான்.மற்ற வேலையெல்லாம் மெய்ட் வந்து செஞ்சுட்டு போயாச்சு.

தளிகா ரொம்ப நாளா இப்படி எழுதணும்னு ந்னைச்சுகிட்டு இருந்தேன் ஆனா எதுவுமே எழுத தோனலை.இன்னிக்கு என்னவோ கொஞ்சம் உளறியாவது ஒப்பேத்த முடிஞ்சுது.

நான் கூட கொடைக்கானலில் எல்லாரும் இருப்பது போலவே விஷூவலைஸ் செய்து எழுதினேன்.முடிச்சு பை பை சொன்ன போது கஷ்டமாகதான் இருந்தது.

வாழ்க்கை வாழ்வதற்கே! இல்லாததை, கிடைக்காததை நினைத்து ஏங்கி வீணடிப்பதற்கு அல்ல!

கவி சிவா நீங்க சொன்ன து நெஜம் எங்க போனாலும் சாப்பிட பிள்ளைகளுக்கு இல்லாமல் போகமாட்டேன், ஒரு தன்ணீ பிஸ்கேட்டாவது ,
ஜலீலா

Jaleelakamal

அன்பு கவி,
எப்படி இப்படியெல்லாம்? சூப்பர், போ! ஆனாலும் உனக்கு ரொம்பவே குறும்பு. பாபுவோட திருமணத்தை தெரிஞ்சும் சொல்லலைன்னு இதில வாரியிருக்கே! சரி, உண்மை இருக்கிறதால பிழைச்சுப் போ. ஜலீலா பத்தி எழுதுனதுதான் ரொம்ப சிரிப்பா இருந்துச்சு. தளிகா பின்னாடி குறும்பு பண்ணிகிட்டே இருந்ததை நீ சரியா கவனிக்கலை போல. எல்லாரையயம் அவங்க அவங்க இயல்போட சித்தரிச்சிருந்த விதம் அருமை. மாமியார் சரியில்லை கவி உனக்கு, இல்லைன்னா, இப்படி ஒரு டூர் கூட்டிப் போற அளவு உனக்கு நேரம் இருக்குமா:-))
நல்ல கற்பனை. வளரட்டும். அடுத்த டூர் எப்ப கவி:-))
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மேலும் சில பதிவுகள்