என் சோகக்கதையை கேளு

ஏங்க, இது உங்க எல்லாருக்குமே பாவமா இல்லியா. இப்படி ஓட்டறீங்களே. இன்னும் என் பிளான் ஒர்க் அவுட் ஆகக்கூட இல்லை. அதுக்குள்ள இத்தனை ஜோக்கா? அய்யோ கவி, படிச்சு, படிச்சு சிரிச்சுட்டு இருக்கேன். இதில் பக்கத்தில் நின்னுட்டு என் தம்பி வேற, அட இன்னும் நீ அதெல்லாம் சொல்லலியா, இதெல்லாம் சொல்லலியான்னு கேட்டுட்டு, இரு இரு தேவா சீக்ரெட்ஸ்னு ஒரு ஐடி ஆரம்பிச்சு உன்னைப் பத்தி எல்லா ஜோக்கும் எழுதறேன்னு சொல்லிட்டு இருக்கான். பாபு, அப்படி ஒரு ஐடி யாராவது ஆரம்பிச்சா தயவுசெஞ்சு அனுமதிக்காதீங்க( உங்ககிட்ட சொல்றேன் பாரு). என் தம்பி பத்தாததுக்கு, அப்படி நீ போனாலும் போனில் உன் பையனை பேசவிட்டு நல்லா கிள்ளி அழ வைப்பேன். எப்படியும் நீ உடனே வந்துடுவன்னு மிரட்டிட்டு இருக்கான்.கவி உங்க டூரில் நீங்க இடத்தை மட்டும் கொஞ்சம் மாத்தி சொல்லி இருக்கீங்க ஊட்டின்னு சொல்றது நான். கொடைக்கானல்னு சொல்லிட்டு இருக்கறது பாபு. எனக்கு ஊட்டிதான் ரொம்ப பிடிக்கும். ஊட்டியில் டூரிஸ்ட் ஸ்பாட் தவிர அத்தனை ஸ்பாட்டும்தான் பிடிக்கும். அதனால அத்தனை ஈசியா ட்ரேஸ் அவுட் பண்ண முடியாது( இப்படி சொல்லிக்க வேண்டியதுதான்).

அட, என்னோட ஹனிமூனே ஒரு ஜோக்தான்(அதைப் பத்தி எழுதினா எனக்கு ஜோக்கர்னு பட்டம் கிடைச்சாலும் கிடைக்கும்). இதில் இந்த டைமாவது அப்படி ஜோக்காகிடக்கூடாதுன்னு ரொம்பப் பார்த்து பிளான் போட்டா போறதுக்கு முன்னாடியே அது ஜோக் ஆயிடுச்சே.இதுல போற வழியில் சிங்கப்பூரிலாவது தப்பிக்கலாம்னா என் அக்கா, நீ என்கூட விடிய விடிய கதை பேசணும். அத்தனை கதை இருக்குன்னு இப்பவே சொல்லி ரிசர்வ் பண்ணியாச்சு. ஏய் அக்கா, என் பையனைப் பாக்கத்தானே ஆசைன்னு சொன்ன. வேணா அவனை வெச்சுக்கோ, நான் ஊர் சுத்தறேன்னு சொன்னா, சீ ஜோக் பண்ணாதன்னு சொல்றா. ஆக மொத்தம் ஊருக்கு போயிட்டு வந்து என் ட்ரிப்பைப் பத்தி எழுதினா அது நிஜமாவே அறுசுவை டூர் பாகம் - 3 ஆகத்தான் இருக்கப் போகுது. ஜெயந்தி மேடம், உங்களை சென்னையில் சந்திக்கும்போது நேரிலேயே எல்லா ஜோக்கையும் சொல்றேன். செல்வி அக்கா உங்களுக்கும்தான்.

சரி கவி, எப்படி இப்படிலாம். நான் எழுதினது கொஞ்சம்தான். அதுவும் எனக்கு அதைப் படிச்சு ஜோக்காகக்கூட தோணல. ஆனால் நீங்க எழுதினது படிக்கும்போதே அத்தனை சிரிப்பு வருது. வின்னி, நீங்களுமா. ஜானகி நீங்க இதைப் படிச்சு எத்தனை சிரிச்சிருப்பீங்கன்னு தெரியும். இன்னும் எத்தனை பேர் படிச்சு ஓட்டப் போறாங்களோ. தேவுடா. என்னால அந்தப் பதிவில் நுழைய முடியல. அதான் இங்கே எழுதிட்டேன். அட, அறுசுவையில் இத்தனை பேர் என் நிலைமையில்தான் இருக்காங்கன்னு கவி பதிவைப் படிச்சுதான் புரியுது. முக்காடு ஐடியாவெல்லாம் வருது. ஆனாலும் அதில் ஒரு பஞ்ச் வெச்சிருந்தீங்களே அதுதான் சூப்பர். யார் விஷயம் ஜோக்காப் போனாலும் பாபு தப்பிச்சு போயிடறார் பாருங்க.

ஹஹஹா...காலைலயே தேவாவின் சோகக்கதை..சோகம் வர்ல...ஒரே சிரிப்பு வருது.
எனக்கு எங்க ஹனிமூன் நியாபகம்....அதுக்கு பேரு ஹனிமூன்னு சொல்லமுடியாது...நான் வாழ்னாளில் எங்கயும் போனதில்ல..கேரளா விட்டா கோவை கோவை விட்டா கேரளா..சென்னை கூட பாத்ததில்லை..ஊட்டி போயிருக்கேன் சின்ன வயசில் அவ்வளவு தான்.அப்படியே பழகிடுச்சு.
பின் திருமணம் முடிந்து 3 நாள் கழிஞ்சு சொல்லாம கொள்ளாம போயிடலாம்னு சொல்லி ஊட்டிக்கு கூட்ட்டிட்டு போயிட்டார்(சொன்னா அவர் வீட்டில் திட்டு விழு).
கூட்டிட்டு போய் ஹோட்டெலில் தங்கினோம்...3 நாள் தங்கலாம்னு ப்லேன்....ஆனால் எனக்குத் தான் பழக்கம் இல்லையே எங்கம்மா அப்பாவை விட்டு ஊர் சுத்தி....எனக்கு 5 மனிநேரம் முடின்சதுமே அழுகை வந்துடுட்ச்சு....தூக்கமும் வர்ல ரூம்ல....மூஞ்சி ஒரே சோகமாயிடுச்சு.
அவர்ட்டா போலாம் போலாம்னு சொல்லி கொடஞ்சு உள்ள திட்டு எல்லாம் வாங்கி வீட்டுக்கு போயிட்டோம்....இப்ப நெனச்சா ச்சே அந்த பொன்னான வாய்ப்பை தவற விட்டுட்டோமேன்னு இருக்கு..இப்ப நடக்குமா?

சோகக்கதையில் இன்னொரு இட்லி சந்தேகம் வந்து விட்டது.
வெற்றிகரமாக இப்பொழுது இட்லி மிகவும் மிருதுவாக வருகிறது.எல்லோரும் சொன்ன எல்லா மாதிரியும் செய்தேன்

3:1 என அரிசி உழுந்து சேர்த்து குளிரந்த நீரால் அரைத்து செய்தபொழுது சுவையாக உள்ளது..ஆனால் ஒரு ப்ரச்சனை எனக்கு மேல் தட்டில் இட்லி நல்ல வரும்..கீழ் தட்டில் உள்ள இட்லியில் மேல் தட்டிலிருந்து ஆவி நீர் விழுந்து கீழ் தட்டு இட்லி தன்னீரில் நனைந்தது போல் இருக்கும்...அப்படி இல்லாமல் இருக்க ஏதாவது வழி உண்டா.என்னுடையது ஸ்டீல் 6+6 இட்லி பாத்திரம்

ஆ இன்னும் இந்த இட்லி கதை முடியலையா தளி,,,,, ????/
இட்லி மவை கொஞ்சமா அள்ளி ஊற்றனும்.
கிழே நிறை ரொம்ப ஊற்றி விட்டு மேல் தட்டை வைத்தால் அப்ப்டி தான் ஆகும்.
இன்னும் ஒன்று இட்லி சட்டி அடியில் தண்னீர் நிறைய வைத்து தீயை ஜோராக வைத்திருப்பீர்கள்
தண்னீர் கொதிக்க ஆரம்பிக்கும் போது வைத்து கரெக்டாகா ஏழு நிமிடத்திலி ஆஃப் பண்ணி விட்டு இரண்டு நிமிடம் அகழித்து எடுத்து தண்ணீர் தெளித்து இட்லி கரண்டியால் எடுக்கனும்.
ஜலீலா

Jaleelakamal

இட்ல்ய் தட்டில் அள்வா குட்டி குட்டி இட்லி தான் செய்வேன்..ஜலீலாக்கா நீங்க சொன்னது ஒரு வேளை சரியா இருக்கும்..நல்ல ஜோரா தீயை விடுவேன்.ஆஅன் அப்படி வரட்டும்

ஹாய் ஜான்சி ..முதலில் இந்தியன் இல்லை நீங்கள் என்று நினைத்தேன்..பின் தமிழில் எழுதியதை வாசித்திருக்கிரீர்கள்.நல்ல விவரமா பேசுரீங்களே....உங்களைப் போல் ஒருவர் அறுசுவைக்கு தேவை.

நானும் பலபல சைட்டில் பார்த்து பல மாதிரி ச்செய்து பார்த்து விட்டேன்..ஆனால் சில ரெஸ்டாரன்ட்டில் கிடைக்கும் கோஃப்தாவினுள் க்ரீம் போல வைத்து கடித்தால் க்ரீம் வெளிYஎ வரும்..அது போல் சுவையாக வரமாட்டேன் எஙிறது..யாருக்காவது தெரியுமா

அருசுவை சரியாகிவிட்டது என்று நினைக்கிறேன். நல்ல ஃபாஸ்ட்- ஆக ஓப்பன் ஆகிறது. பதிவுகளை ஈஸியாக போடமுடிகிறது. இது தொடர்ந்து இப்படியே இருக்கவேண்டும் என்று ப்ரார்த்தனை செய்வோம். சந்தோஷமாக இருக்கிறது.

there was a friend by name Jayanthi...Is she there??

ஜெயந்தி என்று ஒரு நண்பி இங்க ஸ்வாரஸ்யமா பதில் சொல்லுவங்க அவங்க எங்கனு யருகவது தெரிஞ்சா சொல்லுங்கொ.

ராஜு

ஜெயந்தி என்று ஒரு நண்பி இங்க ஸ்வாரஸ்யமா பதில் சொல்லுவங்க அவங்க எங்கனு யருக்காவது தெரிஞ்சா சொல்லுங்கொ.

ராஜு

மேலும் சில பதிவுகள்