பருப்பு கொத்தவரங்காய்

தேதி: February 17, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கொத்தவரங்காய் -- 200 கிராம் (நார் நீக்கி ஒரு அங்குலம் அளவு பிச்சி வைத்துக்கொள்ளவும்)
வெங்காயம் -- 1 என்னம் (பொடியாக நருக்கியது)
தக்காளி -- 1 என்னம் (அரைத்தது)
கறிவேப்பிலை -- 1 இனுக்கு
கடுகு, உளுந்து -- 1/2 டீஸ்பூன்
சீரகம் -- 1/2 டீஸ்பூன்
தேங்காய் துருவல் -- 1 டேபிள்ஸ்பூன்
துவரம் பருப்பு -- 1/4 கப் (வேகவைத்தது)


 

முதலில் வாணலியில் கல் உப்பு போட்டு வெடித்ததும் நறுக்கி கழுவிய கொத்தவரங்காயை போடவும்.
இரண்டு நிமிடத்திற்குப் பிறகு கொஞ்சம் தண்ணீர் ஊற்றி வேகவைக்கவும்.
வெந்தபின் வடித்து வைக்கவும்.
வாணலியில் எண்ணைய் ஊற்றி கடுகு,உளுந்து தாளித்து சீரகம், வெங்காயம், கறிவேப்பிலை போட்டு வதக்கி பின் அரைத்த தக்காளி சேர்த்து 4 நிமிடம் வதக்கி பின் வெந்த கொத்தவரங்காயை போட்டு நன்கு வதக்கி தேவை எனில் உப்பு சேர்க்கலாம்.
பின் அதனுடன் பருப்பு சேர்த்து ஒரு கையளவு தண்ணீர் தெளித்து நன்கு கலந்து 2 நிமிடம் கிளறவும்.
இறக்கும் சமயம் தேங்காய் துருவலை தூவி இறக்கி பரிமாறலாம்.

சப்பாத்தி க்கு மிகவும் நன்றாக இருக்கும்.


மேலும் சில குறிப்புகள்