உணவு முறை

எனது பெண்குழந்தைக்கு ஆறு மாதம் துவங்கி உள்ளது. இதுவரை தாய்பால் மட்டுமே கொடுத்து வந்தேன். இப்பொழுது வேறு உணவு கொடுக்க நினைக்கிறேன். என்ன உணவு கொடுப்பது மற்றும் அதை எவ்வாறு தயாரிப்பது என்று யாரவது கூற முடியுமா. நான் தற்பொழுது சிங்கபூரில் வசிக்கிறேன்.

ஹாய் கோமதி ...இந்த மன்றத்தில் பார்த்தாலே நிறைய தலைப்பின் கீழ் என்னென கொடுக்கலாம்னு சொல்லியிருக்காங்க.
ஆனால் குறிப்பா சொல்லனும்னா சாதத்தை நல்ல கூழ் போல் அடித்து கொடுங்கள்,ராகி கூழ் கொடுங்கள்,நங்கு பழுத்த பழவகைகள்..காய்கறி,பருப்பு இட்டு வேற்க வைத்து மசித்த சாதம் அப்படி கொடுக்கலாம்...ஆனால் 1 உணவைக் கொடுத்து நங்கு வயிற்றுக்கு சேர்ந்த பின்னே 4 நாட்கள் கழித்து வேறு புதிய உணவு கொடுங்க..அப்ப தான் எது ஒத்துக்கலை எதனால் ப்ரச்சனை என்று தெரியும்.
இப்ப ஒரு 1.5 மாசத்துக்கு அரைத்து கொடுத்து மெல்ல பிசைந்து கொடுங்கள்.பிறகு 8 மாதம் ஆனவுடன் முழு நல்ல வெந்த சாதம் என கொடுத்து 1 வயதிற்குள் அரைக்காம்ல் பிசையாமல் கொடுக்க பழக்கி விடுங்கள்.

ஹாய் கோமதி.
1. ராகி ஒரு டம்ளருக்கு ஒரு ஸ்பூன் போதுமானது, ஒரு சிட்டிக்கை உப்பு,ஒரு சிட்டிக்கை சர்க்கரை சேர்த்து காய்ச்சுங்கள்.
அதன் மேலே ஆடை படிந்து இருந்தால் வடிகட்டி பால் பாட்டிலில் ஊற்றி கொடுங்கள்.
2.புழுங்கல்ரிசியை லேசா வருத்து மிக்சியில் பொடித்து கொள்ளுங்கள்.
கொஞ்சமா சாம்பாருக்கு வேகவைக்கும் பருப்பு போது மசித்து எடுத்து ,
பொடித்த அரிசியிலிருந்து ஒரு ஸ்பூன் எடுத்து ஒரு டம்ளர் தண்ணீர் சேர்த்து காய்ச்சுங்கள் நல்ல வெந்து வரும்போது பருப்பு சிறிது ஒரு பின்ச் உப்பு, போட்டுக்லக்கி ஸ்பூனால் கொஞ்சம் கொஞ்சமா கொடுக்கவும்.
3. ஆப்பில் வேகவைத்து கொட்டை தோலை நீக்கி விட்டு மிக்சியில் அரைத்து ஊட்டி விடுங்கள்.

நான்கு மாததிலிருந்தே ராகி கொடுக்கலாம்.
ராகி சாப்பிட ஆரம்பித்ததும் அதி கோதுமை மாவு, அரிசிமாவு, பொட்டு கடலை மாவு எல்லாம் சேர்த்து காய்ச்சி கொடுக்கலாம்.
ஜலீல

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்