வெனிலா ஐஸ்கிரீம்

தேதி: February 26, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

5
Average: 4.1 (17 votes)

இலங்கை தமிழரான <a href="experts/2552" target="_blank"> திருமதி. நர்மதா </a> அவர்கள் இலங்கை சமையல் மட்டுமன்றி, மெக்ஸிகன், இத்தாலியன் என்று பல்வேறு நாட்டு உணவு வகைகளையும் தயாரிப்பதில் திறன் மிக்கவர். தெளிவான படங்களுடன் கூடிய இவரது குறிப்புகள் மிகவும் எளிதாகவும் இருக்கும். கோடைக்கு குளுமை தரும் இந்த வெனிலா ஐஸ்கிரீமை அனைவரும் வீட்டிலேயே தயாரிக்க, அதன் தயாரிப்பினை படங்களுடன் விளக்குகின்றார்.
<br /> <br />
இந்த குறிப்பு எனக்கு தெரிந்த ஒருவர் கூறியது. மிகவும் சுலபமாக இருந்ததால் செய்து பார்த்தேன். மிகவும் சுவையாக இருந்தது. - நர்மதா

 

கட்டிப்பால் - 1/4 கப்
பால்மாவு - 1/2 கப்
தண்ணீர் - 3/4 கப்
வனிலா எஸன்ஸ் - 1/4 தேக்கரண்டி


 

மேலே குறிப்பிட்டுள்ள தேவையானப் பொருட்களை கொடுத்துள்ள அளவுகளில் எடுத்துக் கொள்ளவும்.
கட்டிப்பாலினுள் 1/4 கப் தண்ணீர் விட்டு, வனிலா எஸன்ஸ் சேர்த்து நன்றாக கரைத்துக் கொள்ளவும்.
பால்மாவை மீதி 1/2 கப் தண்ணீரில் கட்டி இலாமல் கரைக்கவும். இரண்டையும் தனித்தனியே ஃபிரீஸரினுள் 1/2 மணி நேரம் வைத்து எடுக்கவும்.
ஒரு பெரிய பாத்திரத்தில் குளிர் தண்ணீர் நிரப்பி அதனுள் பால்மாவு கரைசல் பாத்திரத்தை வைத்து, பீட்டரால் அல்லது கரண்டியால் நன்கு பொங்க பொங்க அடிக்கவும்.
பின்னர் இதை கட்டிப்பால் கரைசலினுள் சேர்த்து மெதுவாக கலக்கவும். அடிக்க வேண்டாம்.
பின்னர் ஒரு தட்டையான பாத்திரத்தில் கலவையை ஊற்றி ஃபிரீஸரில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் வைத்து எடுக்கவும்.
மீண்டும் பீட்டரால் அல்லது கரண்டியால் பொங்க பொங்க அடிக்கவும். அதனை மீண்டும் ஃபிரீஸரில் வைத்து இறுகவிடவும்.
நன்கு இறுகி ஐஸ்கிரீம் கெட்டியானவுடன் வெளியில் எடுத்து விருப்பமான நட்ஸ் தூவி, சாக்லேட் கிரீம் ஊற்றி பரிமாறலாம். இப்போது சுவையான வெனிலா ஐஸ்கிரீம் தயார்.


உறுப்பினரது அண்மைக் குறிப்புகள்

இணையான குறிப்புகள்


Comments

வணக்கம் நர்மதா,

மிகவும் எளிய முறையில் செய்யக் கூடிய ஐஸ்கிரீம் செய்முறையை தந்ததற்கு நன்றி. இதில் கட்டிப்பால் என்றால் என்ன?. fat milk தான் கட்டிப்பாலா? நன்றி.

Condensed milk என்பதையே இங்கு கட்டிப்பால் என்று கொடுத்திருக்கின்றார்.

ஆமாம் இதைப் பார்த்தவுடன் எனக்கும் சந்தேகம் கட்டிப்பால் என்றால் என்ன என்று.ஏனெனில் இங்கு எத்தனையோ வகைகளில் பால் விற்கிறதே. இப்போது புரிந்தது. செய்துவிட்டுச் சொல்கிறேன்.

சில குறிப்புகளிற்கு முடிந்தவரை ஆங்கிலப் பெயர்களையும் அடைப்புக் குறிக்குள் போட்டால் என்ன? என்னைப் போல் வெளிநாடுகளில் இருப்பவர்கள் கடைகளில் தமிழ்ப் பெயரை வைத்துத் தேட கஸ்டமாக இருக்கிறது. செல்வியக்காவின் பாதாம்பருப்பு சிக்கின் செய்ய ஆசை. ஆனால் பாதாம் பருப்பு என்றால், எது என்று சரியாகத் தெரியாததால் கேட்கவும் வெட்கத்தில் இருக்கிறேன். அதனால் ஆங்கிலப்பெயர்கள் தெரிந்தால் அதனையும் குறிப்பிட்டால் நல்லதென நான் நினைக்கிறேன்.?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

baadam------- almond

மிக்க நன்றி ஜயந்தி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சந்தேகத்தை தீர்த்து வைத்தமைக்கு நன்றி.

ஹெல்லோ நர்மதா மடம்,
வென்னிலா ஐஸ்க்ரிம் பார்கவே சூபெர். ஈசி வகையை சொன்னதர்கு நன்றி. ஐஸ்க்ரிம்கு சர்கரை வேண்டாமா? நீங்க அதில் சர்கரை பற்றி சொல்லவே இல்லை. தயவு செய்து பதில் சொல்லவும்.

badaam mean almond whole or powder available in stores

good answer weldone

ஹலோ கவி ..கன்டென்ஸ்ட் மில்க்கிலேயே நல்ல இனிப்பு இருக்கும்..அதனால் சர்க்கரை வேண்டாம்

இங்கே பால் மாவு என்று குறிப்பிட்டுள்ளது... ??
பால் மாவு என்பது குழந்தைக்குள்ளதை பயன் படுத்தலாமா?? அல்லது பவுடர் பாலை கூறுகிறார்களா??
உடனே பதில் போடவும் ப்ளீஸ்.. இந்த வீக் என்டில் தயாரிக்கலாம் என்று இருக்கிறேன்...

ரூபி உங்களுக்கு இங்கே உள்ள "Nido" இந்த பிராண்ட் பால் பவுடரா??
ப்ளீஸ் உளருகிறேனா??

ஹாய் சுபா அவங்க சொல்லி இருக்கின்றது அமுல்யா போன்ற பால் மாவு..அதிலும் நெஸ்லே பால் மாவு டேஸ்ட் அதிகமா இருக்கும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி மர்ழியா!!
அமுல்யா ஓகே!! பால் பவுடர் புரிந்து விட்டது..
இங்கே என்ன ப்ராண்ட் என்று தேட வேண்டும்.

மேலும் கடைசியாக ப்ரீஸரில் வைத்து இறுக வைக்கவேண்டும் என்கிறார்களே அது சுமார் எவ்வளவு மணி நேரம் இருக்க வேண்டும்.
தண்ணீர் வெது வெதுப்பானதா? இல்லை சாதாரணதண்ணீரா??
இதும் தெரிய வேண்டும்.

ஃபிரீஸரில் ஒன்று அல்லது ஒன்றரை மணி நேரம் வைத்து எடுக்கவும்ன்னு சொல்லி இருக்காங்களே பாருங்க...அதுதாம்ப்பா நெஸ்லே பால் மாவு அது பாரிங் பிராந்த் தான் குலோப்ஜாமுன் இப்படி பட்ட ஸ்வீட்டுகெல்லாம் அதுதான் நல்லா இருக்கும் அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சுபா நல்ல நேரத்தில் நல்ல குறிப்பை என் கண்ணில் காட்டிவிட்டீர்களே..
நான் வாங்குவது oldenburegrஅல்லது rainbow...அதனை உபயோகிக்கலாம்..அல்லது nidoகூட உபயோகிக்கலாம்...
குழந்தைகளுக்கான பால் பொடியை உபயோகிக்காதீர்கள்..உதாரணமாக similac,progress போன்றவை அவற்றில் நமது பால்(adults
) பவுடரில் உள்ள கொழுப்பு,புரதச்சத்து முதலிய அளவில் வித்யாசம் இருக்கும்..அதனால் சரியாக வராமல் போகலாம்.
முதலில் கன்டென்ஸ்ட் மில்க்குடன் தண்ணீரை கரைக்க சாதா தண்ணீரே போதும்..குளிரும் இல்லாமல் வெதுவெதுப்பாகவும் இல்லாமல்.
கடைசியாக இறுக சுமார் 2 மணிநேரம் தேவைப்படுமென நினைக்கிறேன்.
சுபா அனேகமா நீங்க ஃப்ரெஷ் பால் வாங்குகிர்ரிர்கள் என நினைக்கிறேன் அதான் குழம்புரீங்க இல்லையா

ஹா ஹா சுபாக்கு பதில் சொல்லியதில் எனக்கு இதை பண்ணிடனும்னு ஆசை வந்துட்டு..என் கணவரிடம் வாங்க சொல்லி இருக்கேன்...1 வாரத்திற்க்குள் பண்ணனும்..தளிகா இப்ப உடம்பு தேவைலயஆ?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

உங்களுக்கு மட்டுமா எனக்கும்தான் ஆசை வந்துவிட்டது. பொருட்கள் இல்லை வாங்க வேண்டும். முன்னரும் கேட்டுவிட்டு விட்டுவிட்டேன். இப்போ நீங்கள் எல்லோரும் சாப்பிடும்போது நான் மட்டும் எப்படி... எப்படியும் செய்யவேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ரொம்பதேங்க்ஸ் பதில் அளித்த ரூபி, மர்லியா...
இந்த வீக் இது தான் ஸ்பெஷல்..
நன்றாக வந்தால் எல்லோருக்கும் ஒரு ஓஓ..
இல்லை என்றால் எனக்கு மட்டும் ஓ (சாப்பிட வாய் திறக்கும் அல்லவா அந்த சவுண்ட்)

அன்பு நர்மதா, உங்கள் ஐஸ்கிறீம் செய்ய நீண்ட நாளாக ஆசைப்பட்டு நிறைவேற்றிவிட்டேன். நன்றாக வந்தது. சாப்பிடும்போது கொஞ்சம் பவுடர் மணம் அதிகமாக இருந்தது, ஐஸ்கிறீம் வாசம் இருக்கவில்லை. அதுதான் ஏனென்று தெரியவில்லை. எல்லாம் சரியாகச் செய்தேன், ஆனால் ஒன்று எனக்கு புல் கிறீம் மில்க் பவுடர் கிடைக்கவில்லை. சுப்ப மார்கட்டில் செமி ஸ்கிம் தான் இருந்தது. அதுதான் காரணமோ தெரியவில்லை. பறவாயில்லை நல்ல ஐஸ்கிறீம். படம் அனுப்புகிறேன் போட்டதும் பாருங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா பண்ணியாசா?குட்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ரூபி,
ஒரு கேள்வி
நீங்க ஃப்ரஷ் பால் வாங்காமல் பவுடர் பாலா வாங்கறீங்க?
அத எப்டி யூஸ் பண்றீங்க ?
சுடு தண்ணியில் கலந்து காபி பவுடர் எப்டி போட்டு அப்டியே போட்டு கலக்குவீங்களா??

நான் ஐஸ்கிரிம் செய்ய பால் பவுடர் வாங்கி பாதி செய்யவும் செஞ்சாச்சு.. மீதிய என்ன செய்ய???

இன்று தான் ஐஸ்க்ரீம் செய்து ப்ரீசரில் வைத்துள்ளேன்..
எப்டி இருந்தது என்று நர்மதாவிற்கு சொல்லவேண்டும்...

என் கேள்விக்கு பதில் கொடுங்கள் ரூபி...

சுபா ரூபி தூக்கம் போல...பால் பவுடரை நான் டீக்கு யூஸ் பன்ணிக்கலாம்..பாலோடு இதையும் கலந்து விட்டால் டேஸ்ட் சூப்பவா இருக்கும் டிரை பண்ணிட்டு சொல்லுங்க..அப்புறம் அப்ப்டியே பாலில் போட கூடாது..தேவையான அளவு எடுத்து சுடு நீரில் கலந்து அப்புறமா பாலில் ஊற்றுங்க..கொலோப்ஜாமுன் கூட பண்ணலாம்..ரெஸிபி நிறைய இருக்கு வீணாகும்பயம் வேணாம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

சுபா,
நீங்கள் இதுவரை நெஸ்ரமோல்ட், ஹோர்லிக்ஸ் எதுவுமே பாவித்ததில்லையா? நல்ல சாயம் ஒரு கப் எடுங்கள் (கோப்பி/ரீ) அதில் 2 தே.கரண்டி மில்க் பவுடரை போட்டு நன்கு கலக்குங்கள். சூப்பர் ரீ கிடைக்கும். சாயம் நல்ல கொதியாக இருக்க வேண்டும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா சாதா வெண்ணீரில் பால் பவுடர் கலக்கினால் சிலருக்கு ஒத்துகாது வயிற்று பிராப்லம் வரும்..பெட்டர் லைட் சூடு வெண்ணீரில் போட்டு கலக்கி அப்புறமா நன்கு சூடு படுத்தி டீ போட்டுகலாம்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஓ அப்படியும் இருக்கிறதா? ஒகே...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புள்ள நர்மதாவிற்கு,
வெனிலா ஐஸ்க்ரீம் ரொம்ப நல்லா இருந்தது.
என் கணவருக்கு லண்டன்டெய்ரி ஐஸ்க்ரீமை விட வீட்டில் செய்தது நன்றாக பிடிக்குதாம்...

ஆனால் பெண்கள் நாக்கு தான் காட்டி கொடுத்துவிடுமே!!!
எனக்கு ஏதோ ஸ்மெல் அதாவது பால்பவுடரா அல்லது எசன்ஸ் ஸ்மெல்லா என்று தெரியவில்லை....
ஒரு வேளை பால் பவுடரை கொஞ்சம் சுடு நீரில் கரைத்து பின் ப்ரிஜ்ஜில் வைக்க வேண்டுமோ????

டவுட் தான் ..

அடுத்து ஐஸ் செய்யும் போது இதை ட்ரை பண்ணனும் அதற்கு முன் நீங்க கொஞ்சம் டவுட்டை க்ளியர் பண்ணுங்க...ப்ளீஸ்

அன்புள்ள மர்ழியா,
இப்போ தான் உங்க பதிவ பார்த்தேன்...
தனியா பால் பவுடரை கொதிக்கும் தண்ணீரில் கலந்து காபி தூள் போட்டு சாப்பிட நல்லா இருக்குமா???

நான் சிறுமி யாக இருக்கும் போது எங்கேயாவது டூர் போகும் சமயம் வீட்டில் இருந்து ஒரு குக்கையும் அழைத்துக் கொண்டு போவோம்... அப்போ பால் பவுடர் கொண்டு போனதாக நியாபகம். ஆனால் எப்டி காபி போட்டார் என்று நியாபகம் இல்லை... அது தான் எனக்கு பெரிய டவுட்

மற்றபடி நன்றி கேள்விக்கு பதில் தந்ததுக்கு.
அதிரா,
நீங்க கொடுத்த பதிலில் சாயம் என்றால் என்ன???
புரியலை...
உங்க தமிழ் ரொம்ப அழகு...
ஆனால் எங்க மெட்ராச் ஆளுங்களுக்கு தான் புரியவே மாட்டேங்குது... புர்தா..மே...
இது மெட்ராஸ் தமிழ்

(இதை பார்த்துட்டு அதிரா ஓடனும்)

ஆய் சுபா என்னாமே கேட்கஉறீங்க?காபி போடுறது ஒன்னும் மய்யலுமே பரிய மேர்ரை இல்ல நைனா.. அடுப்புல சட்டியை வைத்துக்கோ(சாரிப்பா சுபா மரியாதை போகும்)அப்பாலுமா தேவயாண தண்ணீ ஊத்திக்கோ அப்ப தம்மாந்துண்ண்டு கொதித்ததும் அதை பால் பவுடர்ல கலக்கிக்கோ..அப்பாலே அத சட்டில ஈக்கிற வெண்ணீர்ல கொட்டனும் அவ்லோதான் பிட்டு மேட்டருமே இது..அடுத்து நாம சாதாரணமா போடும் டீயை போல பண்ணிகலாம்..என்னா பூங்சுகினியா>>?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

யார்பா அது எங்க ஊர் பாழைய சரியா பேச தெரியமா பேசுறீங்க.
ஜலீலா

Jaleelakamal

அக்கா,
எனக்கு தெரிஞ்சது இதுதான்..இன்னும் நல்லா பேசனும்னா பக்கத்தில் இருக்கும் குப்பத்துக்குதான் வாடகை வீடு எடுத்து தங்கி படிக்கனும் ஹா ஹா..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,
வாடகை வீடு இல்லை நமளும் ஒரு கொட்டகை போட்டுக்கவேண்டியதுதான்...
காபி/டீ போடுறது மெட்ராஸ்லனா புரிஞ்சி போச்சு....(!) சும்மா...
நிஜமாவே இருந்த டவுட் எல்லாம் போச்சு தேங்க்ஸ்..

ஜலி,
யாராஇருந்தாலும் இந்தியர்கள்னா... மதராஸி இல்லனா மலையாளியா?(கலோகியல் வார்த்தை பறந்து போச்சி)...
எனவே யாரும் யாரையும் பொளந்து கட்டவேண்டியதுதான்..

பால் பொடியால் நீ என்ன தான் செய்யிறன்னு இவர் கேக்கர அளவுக்கு எனக்கு பால் பொடி செலவு .அதில் பாயாசம் செய்யலாம்,ஸ்வீட் செய்யலாம்.டீ போடலாம்.
பால் சேர்த்து செய்யும் எந்த இனிப்புக்கும் பால் பொடி சுவை தரும்..அல்வா சூப்பரா இருக்கும்.என்னுடைய காய்கறி குருமாவில் பால் பொடி சேர்ப்பேன் அது சூப்பரா இருக்கும்..அப்படி பால் பொடியைப் பற்றி சோலிக் கொண்டே போலாம் சுபா.
டீ போட நான் கடைசியில் பொடியை கலக்குவதில்லை...மொதல்லயே பால் பொடியும் water கலந்து சாதாரணமா டீ காச்சுவது போல டீ தூள் போட்டு கொதித்ததும் சர்க்கரை சேர்த்து ஆற்றி குடிக்க வேண்டியது..எனக்கு பால் பொடி காப்பி மட்டும் பிடிக்காது..திரி திரியாக இருக்கும்..காப்பி மேட் போட்டால் தெரியாது சூப்பராக இருக்கும்.
பாக்கிஸ்தானி சேமியாவில் பால் பொடி கலந்து பாயாசம் செய்யுங்க..சொக்கிடுவீங்க
அதே மாதிரி பாகிஸ்தானி கேரட் வருதே..நல்ல ஆர்ஞ்சும் சுவப்பும் கலந்த கலரில்..அந்த கேரட் இனிப்பா இருக்கும்..அதனுடன் பால் பொடி சேர்த்து செய்தால் ஆஹா சூப்பர்
மற்றபடி சின்ன வயசில் நான் அள்ளி அள்ளி சாப்பிடுவேன் இடையிடையே.
பின்ன கேரளாவில் நம்மூர் போல எப்பவும் பால் கிடைக்காது முன்னெல்லாம் அப்ப முன்னெல்லாம் அங்கு பால் பொடி தான்.

என்ன எல்லோரும் ஐஸ்கிறீமுடன் அரட்டையும் அடிக்கிறீங்களா? நர்மதாவிடம் அடிவாங்கப் போகிறோம் என்பது உறுதியாகத் தெரிகிறது. அவரைத்தான் காணவில்லை. என் படத்தையும் இன்னும் காணவில்லை.

சுபா, சாயம் என்றால்.... தேயிலை போட்டு வடித்ததும் அது சாயம் என்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்புடன் அனைவருக்கும்,
முதலில் மன்னிக்கவும். இவ்வளவு பதிவுகள் வந்திருக்கு. நான் கவனிக்கவில்லை. யாரும் சமைக்கலாம் படங்களுடன் இருப்பதால் அட்மினுடைய ஐடியுடன் வரும். எனவே அது எனக்கு சமீபத்திய பதிவுகளில் வரவில்லை. அதனால் நானும் கவனிக்கவில்லை.

அதிகமான சந்தேகங்களுக்கு தளிகா, மர்ழியா பதில் குடுத்து இருக்கிறீங்க. நன்றி. பால் மாவு/பால் பவுடர் என்பது Milk powder தான். இலங்கையில் அங்கர், லக்ஸ்பிறே, நெஸ்பிறே போன்ற பிரான்ட் பெயர்களில் கிடைக்கிறது. இந்தியாவில் என்ன பெயர்களில் கிடைக்கும் என்று தெரியவில்லை. இங்கு இந்தியன் கடையில் "நிடோ" என்ற பிரான்ட் வாங்கிதான் செய்தேன்.

அதிரா, சுபா எனக்கு பால்பவுடர் மணம் வரவில்லை. சில வேளை பாவிக்கும் பிரான்டைப் பொறுத்தும் இருக்கும். கொஞ்சம் கூடுதலாக வனிலா எஸன்ஸ் விட்டு பாருங்கோ. அல்லது பால் மாவின் அளவை குறைத்து மாம்பழக் கூழ் சேர்த்து பருங்கோ. மாம்பழ ஐஸ்கிறீம் கிடைக்கும். நான் அப்படி செய்து பார்த்தேன். அதுவும் நன்றாக இருந்தது. வனிலா எஸன்ஸுக்கு பதிலா பைனாப்பிள் எஸன்ஸும் விட்டு செய்து பார்த்தேன். அதுவும் நன்றாக இருந்தது.

எல்லோரும் சொன்னமாதிரி பால் பவுடரை பாவித்து Milk toffee, குலாப் ஜாமூன், பாயாசம், பொங்கல் போன்றன செய்யலாம். வெளிநாட்டில் வாழ்பவர்கள் சிலர் தேங்காய் பாலிற்கு பதிலாக குழம்பிற்கும் கரைத்து விடுகின்றனர். அல்லது தளிகா சொன்னமாதிரி சும்மாவே அள்ளிச் சாப்பிடலாம் :) நானும் அப்படி செய்கிறனான். இப்பவும். :) சிறிது வறுத்த சிவப்பரிசிமா, சீனி கலந்து சாப்பிட நல்லா இருக்கும்.

பெரும்பாலும் இலங்கையில் தேநீர், கோப்பிக்கு பசுப் பாலை விட பால் பவுடரைத்தான் அதிகம் பாவிப்பார்கள். பால் பவுடரின் தன்மையை பொறுத்து அதனை சுடுநீரிலோ அல்லது தண்ணீரிலோ கரைத்து விட வேண்டும். சில வகை பிரான்ட் பவுடர்கள் மெல்லிய சுடுதண்ணியில் கரைத்தால்தான் கட்டியில்லமல் கரையும். பின்னர் தேநீர்/கோபியில் விடலாம். சிலவற்றை நேரடியக போட்டு நன்கு ஆத்தி விட்டால் போதும்.

இந்தியாவில் தேநீர்/கோப்பி போடும் போது டீதூளை/கோப்பி தூளை பாத்திரத்தில் போட்டு கொதிக்க வைத்து பின் வடிப்பார்கள் என்று நினைக்கிறேன். இலங்கையில் அவ்வாறு செய்வதில்லை. தண்ணீரை நன்கு கொதிக்க வைத்து பின்னர் ஒரு கப்பில் டீ/கோப்பி தூளைப் போட்டு அதனுள் கொதிக்கும் தண்னீரை ஊற்றி 1 நிமிடம் மூடி வைத்து விட்டு பின்னர் வடிப்பார்கள். எந்த முறையில் வடித்தாலும் அதற்கு பாலிற்கு பதில் பால் பவுடரை போட்டு சுவையான தேநீர்/கோப்பி செய்யலாம். :)

வேறு ஏதும் சந்தேகம் (ஐஸ்கிறீம் பற்றி ):) இருந்தால் கேட்கவும். ஐஸ்கிறீம் செய்து பார்த்த அனைவருக்கும் நன்றி.
-நர்மதா :)

சகோதரி அதிரா அவர்கள் இந்த குறிப்பினைப் பார்த்து செய்த ஐஸ்கிரீம் ன் படம்

<img src="files/pictures/ice_cream.jpg" alt="ice_cream" />

அன்புடன் நர்மதா,

நீங்கள் தந்த குறிப்பு மிகவும் உபயோகமாக இருந்தது.
எல்லோரும் விரும்பிச் சாப்பிட்டோம்.
ஆனால் ஒன்று மிருதுவாக இல்லாமல் கொஞ்சம் கிறிஸ்ரல்(ஐஸ் கட்டிகள்) மாதிரி இருந்தது.
ஏன் அப்படி வந்தது என்று சொல்ல முடியுமா?
பிறிஜ்ஜை விட்டு எடுத்ததும் குடித்துக் கொண்டிருக்கும் போதே சில நிமிடங்கல் கரைகிறது.

be happy
அன்புடன்
சுபாஷினி அரவிந்தன்

be happy

அன்பின் சுபாஷினி, தாமதமான பதிலுக்கு மன்னிக்கவும். ஐஸ்கிறீமுக்கு அடிக்கும் போது நன்கு அடித்தால் கிறீமாக வரும். இடையில் எடுத்து மீண்டும் நன்கு அடித்து வைத்தால் கிறீமாக இருக்கும். இதற்கு ஸ்டபிலைசர் சேர்க்கவில்லை. அதனால் அதிக நேரம் வெளியில் வைத்திருந்தால் கரையும். எதற்கும் மறுமுறை செய்வதாக இருந்தால் தரமான ஒரு ஸ்டபிலைசர் சேர்த்து செய்து பாருங்கள். நானும் செய்து பார்த்துவிட்டு சொல்கிறேன். ஸ்டபிலைசர் சேர்த்தால் கிறீமியாகவும் வரும்.

செய்து பார்த்து பின்னூட்டமிட்டமைக்கு நன்றி.
-நர்மதா :)

really very nice...thank you..

hi,

After I take the icecream from freezer its melting suddenly, is an reason for that.

i tried as u said.but i didn't get creamy icecream. i used amulya milkspray as milk powder,nestle milkmaid.procedure was same as u said. what will be the problem.my icecream changed into small icecubes.satbilizer name how to ask in shop, where i can get this?

காயத்ரி,

நான் இதுவரை ஸ்டபிலைஸர் சேர்த்து செய்து பார்க்கவில்லை. சந்தர்ப்பம் அமையவில்லை. ஏதவது எடிபிள் கம்(Xantham gum, guar gum etc.) பாவித்து பாருங்கள். ஜெலட்டின் கூட பாவிக்கலாம் என கேள்விப் பட்டிருக்கிறேன். நான் பாவித்ததில்லை ஜெலட்டின் அசைவம் என்பதால். எவ்வளவு போட வேண்டும் என்பதும் எனக்கு தெரியாது. இந்த ரெசிப்பி எனக்கு ஒரு நண்பர்தான் கூறினார். அவருக்கும் தெரியவில்லை. நான் பல முறை செய்து விட்டேன் நன்றாகவே இருந்தது. மாங்கோ பியூரி, ஸ்ட்ராபெரி, பைனாப்பிள் சங்க்ஸ் & எஸன்ஸ் எல்லாமும் கூட சேர்த்து செய்திருக்கிறேன். நன்றாகவே வந்தது. நான் பாவித்தது NIDO பால் பவுடர் மற்றும் ஈகிள் பிரான்ட் கன்டென்ஸ்ட் மில்க். ஐஸ்கிறீம் கலவையை நன்றாக பொங்க பொங்க அடிக்கவும் வேணும். இதற்கு மேல் எனக்கு விளக்கம் சொல்ல தெரியவில்லை. மன்னிக்கவும் :(
-நர்மதா :)

amulya milk powder and nastle milkmaid use பண்ணும் போது பொங்க பொங்க வரல. மிதம் உள்ள milk maid என்ன செய்வது?

When I prepare any cake using my Oven the top portion of the cakes becomes more crispy and sometimes its very hard. Give me the sugestions to make good cake please

milk is cooked or not

முதலில் 2ஸ்பூன் பால்பவுடர்,வேண்டிய அளவு நெஸ் கஃபே காபி பொடி தேவையான அளவு சர்க்கரைஇவற்றோடு சிறிதளவு பச்சை தண்ணீர் கலந்து பேஸ்ட் போல கலக்கி கொண்டு பின்பு நல்லசூடு தண்ணீர் காபி தேவையான அளவிற்கு ஊற்றிநன்றாக 2 ஆற்று ஆற்றி கப்பில் ஊற்றி குடித்தால் ஆஹா! பிறகு தினமும் 1கப் காஃபி குடிக்கத் தோன்றுகிறதா? இல்லையா?பாருங்கள்.

விசுவாசத்தினாலே எல்லாம் கூடும்

I like for this websites, I learn more kitchan mater in ur sites.so very happy,
Thanks

hai i did not understand what is the condenced milk pa.thats where available pa plz reply

hello mam en name aruna unga receipe vennila ice cream senju parthen akka... ana enaku ice cream texture varala akka..evlo neram vachalum thanni ahvae irundhudhu akka... enkita beater ila kaila than nalla mix panen akka.. athuku solution solunga plsss....