தேதி: March 3, 2008
அறுசுவையில் மஹிஸ்ரீ என்ற பெயரில் சமையல் குறிப்புகள் வழங்கி வரும் திருமதி. ஸ்ரீகீதா மகேந்திரன் அவர்களின் கைத்திறனில் உருவானது இந்த கம்பளி நூல் பொம்மை. அறுசுவை நேயர்கள் செய்து பார்த்திட தெளிவானப் படங்களுடன் செய்முறையை இங்கே எளிதாக விவரிக்கின்றார்.
உள்ளன்(woollen) நூல் - 2 (பிடித்த கலர்)
நூல் - வெள்ளை நிறம்
பஞ்சு - சிறிதளவு
குரோசா ஊசி - 1
சிறிய வட்ட பொட்டு - 2 (கருப்பு கலர்)
நீட்ட பொட்டு - 1
கத்திரி
தேவையான பொருட்களை தயாராக எடுத்துக் கொள்ளவும். இந்த பொம்மை செய்வதற்கு முதலில் பொம்மைக்கு ஸ்கர்ட், சட்டை மற்றும் தொப்பி செய்யவேண்டும்.

ஸ்கர்ட் செய்முறை: இதற்கு 6 சங்கிலியை அடியாக வைத்து ஆரம்பிக்கவும். சங்கிலி பின்னல் எப்படி பின்னுவது என்பதை கீழ்காணும் படங்கள் விளக்குகின்றன.

ஊசி மேல் நூல் போட்டு போட வேண்டும். இப்படி 4 சுற்றுகள் போட வேண்டும்.

2 வது சுற்றில் சங்கிலியை இரட்டையாக போட வேண்டும். 5 வது சுற்றில் ஊசி மேல் நூல் போடாமல் பின்னல் போட்டு முடிக்க வேண்டும்.

சட்டை செய்முறை: சட்டைக்கு 5 சங்கிலியில் ஆரம்பிக்க வேண்டும். 4 சுற்றுகள் ஊசி மேல் நூல் போட்டு பின்னல் போட வேண்டும். அதே போல் இறுதிச் சுற்று ஊசி மேல் நூல் போடாமல் போட்டு முடிக்க வேண்டும். இது செவ்வக வடிவத்தில் இருக்கும்.

சட்டையில் தேவையென்றால் ரோஸ் போன்று தனியாகவும் போட்டு இணைத்துக் கொள்ளலாம்

சட்டையின் 4 முனைகளிலும் சிறிது நூல் விட்டு கட் செய்யவும்.

பொம்மையின் உடல்: உடல் செய்வதற்கு லைட் கலர் நூல் பொருத்தமாக இருக்கும்.10 CM நீளத்திற்கு 11 சுற்றுகள் சுற்றி கட்டி வைத்துக் கொள்ளவும். கைகளுக்கு 8 அல்லது 9 CM நீளத்திற்கு அதேபோல் 5 சுற்றுகள் சுற்றி கட்டி வைத்துக் கொள்ளவும்.

தலை பகுதிக்காக சிறிது பஞ்சு எடுத்து சுற்றி வைத்துள்ள நூலின் ஒரு பக்கத்தில் உருண்டை வடிவத்தில் வைத்து கட்டிக் கொள்ளவும். பின் 4 அல்லது 5 CM நீளத்திற்கு (சட்டையின் நீளத்திற்கு ஏற்றார் போல்) இடைவெளி விட்டு சிறிது பஞ்சு அடைத்து நூலினால் கட்டி கொள்ளவும். கழுத்து பகுதிக்கு சற்று கீழே கைக்கு சுற்றிவத்துள்ள நூலை படத்தில் காட்டியுள்ளவாறு கட்டவும்.

பொம்மையின் தலையில் தொப்பியை இணைக்கவும். (தேவையென்றால் தொப்பியில் ஜடை போன்றும் பின்னிக் கொள்ளலாம்.)

பின்னர் சட்டையையும், ஸ்கர்ட்டையும் இணைக்கவும்

கைகளில் படத்தில் காட்டியுள்ளவாறு கட்டி இரு முனையையும் சமமாக கத்தரித்துக் கொள்ளவும். முகத்தில் கண், மூக்கு, வாய் ஒட்டிக்கொள்ளவும். (மூக்கு வாய்க்கு நீட்ட பொட்டை கட் செய்து கொள்ளவும்).

இப்பொழுது உள்ளன் பொம்மை ரெடி. எப்பொழுதும் ஒவ்வொறு முறை பின்னல் ஆரம்பிக்கும் போதும் சிறிது நூல் விட்டு ஆரம்பிக்க வேண்டும்.

இதை விரும்பிய வண்ண நூல்களை கொண்டு செய்யலாம். பின்னல் கலையில் சிறிது அனுபவம் உள்ளவர்கள் இதை மிக எளிதாக செய்யலாம்.

Comments
ஹாய் மஹிஸ்ரீ
உங்களுடைய இந்த கம்பளி நூல் பொம்மை எனக்கு ரெம்பவும் பிடிச்சிருக்கு நானும் இதை பழகி இருக்கேன் ஆனால் நிறைய வருடங்கள் ஆகுது டச்விட்டு போச்சு ஸ்வெட்டர் எல்லாம் பண்ணி இருக்கேன் இப்ப திரும்ப அதை செய்து பார்த்தால் வந்துடும். மேலும் இது போல உங்களிடம் இருந்து நிறைய கைவேலை பாடுகளை எதிர்பார்க்கிறேன் நன்றி.
அன்புடன் கதீஜா.
Thanks
Hi Katheeja,
Thanks for ur words.Sure I will try to share more with arusuvai friends.
Mrs.Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
ஹாய் கீதா
ரொம்ப நல்லா செய்து இருக்கீங்க. ஈஸியாவும் இருக்கும்னு நினைக்கிறேன். எனக்கும் இதுப்போல கொஞ்சம் உல்லன் வேலைகள் கொஞ்சம் செய்ய தெரியும். நான் இதை செய்து பார்க்கிறேன். இன்னும் நிறைய உங்களது படைப்புகளை அனுப்புங்கள். all the best கீதா.
Thanks
Hi Deepa,
Thanks for ur feedback and wish.
I like to do crafts works like this.I will try to share my thoughts with all arusuvai friens like u.
Srigeetha Mahendran
ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........
soft toys
how to do soft toys.please explain.esp teddy bear
மஹிஸ்ரீ
ஹாய் மஹிஸ்ரீ,
இன்று உங்கள் பிறந்தநாள் என்பதாக அறிந்தேன். நிச்சயமாகத் தெரியவில்லை. இருப்பினும் வாழ்த்துக்கள். :)
அன்புடன் இமா
- இமா க்றிஸ்
ஹலோ செல்லம் Hello Dear
ஹலோ செல்லம்
என் பெயர் binta உள்ளது
உங்கள் சுயவிவர மிகவும் அழகாக ஏனெனில் நான், இன்று உங்கள் சுயவிவரத்தை பார்த்தேன் நீங்கள் தெரிந்து கொள்ள ஆர்வமாக பெற, இங்கே என் மின்னஞ்சல் முகவரி (bintajaafar@yahoo.com) நான் நீங்கள் என் புகைப்படங்கள் அனுப்ப மற்றும் இன்னும் சொல்ல என்று என்னை ஒரு மின்னஞ்சல் அனுப்ப தயவு செய்து உள்ளது என் சுய பற்றி,. தூரம் நினைவில், நிறம், மதம் அல்லது பழங்குடி பிரச்சினையில்லை ஆனால் விஷயங்களில் மிகவும் நேசிக்கிறேன் இல்லை (bintajaafar@yahoo.com) எனக்கு மின் அஞ்சல்.
binta முத்தம்
::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::::
Hello Dear
My name is binta
I saw your profile today and get interested to know you, because you look very nice in your profile, here is my email address (bintajaafar@yahoo.com) please send me an email so that i will send you my photos and tell you more about my self,mail me at(bintajaafar@yahoo.com).Remember distance,color,religion or tribe does not matter but love matters a lot.
kiss binta