ருமாலி ரொட்டி

தேதி: March 4, 2008

பரிமாறும் அளவு: 4 நபர்களுக்கு.

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

மைதா மாவு - 1/2 கிலோ,
பால் - 1/2 கப் / 100 மிலி,
சமையல் சோடா - 1/4 தேக்கரண்டி,
பேக்கிங் பவுடர் - 2 தேக்கரண்டி,
உப்பு - தேவையான அளவு,
எண்ணெய் - 4 மேசைக்கரண்டி.


 

மைதா, சோடா, பேக்கிங் பவுடர், உப்பு சேர்த்து இருமுறை சலிக்கவும்.
பாலை வெதுவெதுப்பாக்கி மாவில் சேர்த்து மிருதுவாக பிசையவும். போதவில்லை யெனில் இன்னும் கொஞ்சம் பால் சேர்த்துக் கொள்ளலாம்.
கலவையை சிறு சிறு உருண்டைகளாக்கி ஈரத்துணியால் மூடி பிரிஜ்ஜில் 1 மணி நேரம் வைக்கவும்.
பிறகு எடுத்து உருண்டைகளில் குழி செய்து சிறிது எண்ணெய் விட்டு மூடி திரும்ப பிரிஜ்ஜில் வைக்கவும்.(குறைந்தது ஒரு மணி நேரம்)
பெரிய வாணலியை நன்கு அடியில் தேய்து கழுவி விட்டு, அடுப்பில் குப்புற சூடு செய்யவும்.(அடி மேல் பக்கம் இருப்பது போல்)
உருட்டு வைத்த உருண்டைகளை மிக மெல்லியதாக தேய்த்து, வாணலி மேல் போட்டு நன்கு சுட்டதும் எடுத்து நான்காக மடித்து, சூடாக பரிமாறவும்.


இதற்கு பனீர் பட்டர் மசாலா, ஆலு கோபி, பனீர் மட்டர், சிக்கன் கிரேவி நன்றாக இருக்கும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

உங்க ருமாலி ரொட்டியும், சிக்கன் கிரேவியும் செய்தேன். ரொம்ப சூப்பரா இருந்தது. ரொம்ப நன்றி.

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனிஷா,
புதுவரவு இல்ல நீ(ங்க)? நலமா?
பாராட்டுக்கு மிக்க நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

என்னை நீங்க நீ என்றே அழைக்கலாம். உங்க ரெஸிப்பி எல்லாம் ரொம்ப நல்லாயிருக்கு

கைதட்டும் பத்து விரல்களாய் இருப்பதை விட
கண்ணீர் துடைக்கும் ஒற்றை விரலாய் இருப்பது நல்லது!

அன்பு தனிஷா,
அப்படியே கூப்பிடறேன். உன்னுடைய பாராட்டுக்கு நன்றிம்மா.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்விம்மா,
பெரிய வாணலின்னு சொல்லியிருக்கீங்க,அலுமினிய வடசெட்டியை வெச்சு செய்யலாமா?
சேலம் மட்டன் குழம்பு குறிப்பு பக்கத்துல உங்க போட்டோ பார்த்தேன்(சாரி செல்விமா, இத்தனை நாள் கழிச்சு பதில் சொல்றதுக்கு)
viji

ஹாய் விஜிராம்ஸ்,
ஓ, இது தான் கேள்வியா? செய்யலாம். ஆனா, வாணெலி அடி கனமா இருக்கணும். நல்லா எண்ணெய் தடவிக்கணும். அடுப்பை சிம்மில் வைத்தே சுடணும். சூடு தாங்காது. ஹோட்டல்லனா, அதிகம் சாப்பிட முடியாது. வீட்டில் செய்தா திகட்டாம நல்லா சாப்பிடலாம்.
சாரி வேண்டாம், நானும் லேட் தானே!
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

அச்சோ செல்விம்மா,
நேத்து நைட் ருமாலி ரொட்டி செய்தேன், கொஞ்சம் hard-ஆ இருந்தது,உங்க குறிப்புல எண்ணெய் தடவனும்னு வேற போடலிய,எண்ணெய் விடாம சுட்டேன்.இன்னொரு தடவை correct-ஆ செய்து பாக்கறேன் செல்விம்மா.
உடம்பு சரியில்லையா மா உங்களுக்கு,என்ன ஆச்சு? உடம்பை நல்லா பார்த்துக்கோங்க செல்விமா.
அன்புடன் ,
விஜி

ஹாய் விஜிராம்ஸ்,
ஒவ்வொரு தடவையும் தடவ வேண்டியதில்லை. முதல் முறை சட்டியில் ஒட்டாமல் இருக்க தடவினால் போதும். மாவு நல்லா ஊறணும் . உருணடை உள்ளே எண்ணெய் விட்டு ஊற விட்டா, நல்லா சாஃப்ட்டா வருமே. சோடா, பேக்கிங் பவுடர் அளவு சரியா? இன்னோரு முறை தைரியமா முயற்சித்து பார்.
உடம்பு இப்ப பரவாயில்லை. நேற்று தான் ஹாஸ்பிடலில் இருந்து வந்தேன்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.