மனோகரியின் பயனுள்ள ஆலோசனைகள்:2.

அன்பு நேயர்களுக்கு வணக்கம்.முதல் பாகத்தில் நிறைய்ய பதிவுகள் சேர்ந்துவிட்டபடியால் இனி இந்த திரட்டில் பேசலாம் இதிலும் வீட்டுக்குறிப்புகள் முதல், மனதை வறுத்தும் பிரச்சனைகள் வரை, எதுவாக இருந்தாலும் என்னிடம் கூறலாம். நிச்சயம் என்னாலான என் அனுபவத்திற்குட்பட்ட ஆலோசனைகளை வழங்குகின்றேன்.நன்றி.

உங்களது பேன் கேக்கை இன்று காலை செய்து பார்த்தேன்....மிகவும் அருமையாக வந்தது..இதுநாள் வரை பில்ஸ்பரியில் ரெடிமிக்ஸ் வாங்க் கொன்டிருந்தேன்..
இன்று அதன் மேல் சர்க்கரையை நல்ல கம்பிப் பாகாக காய்ச்சி அதில் ஏலக்காய் பொடி தூவி பேன் கேக்கின் மேல் பரவலாக தேய்து சாப்பிட்டோம்..அருமையாக இருந்தது..பேன்கேக் செய்ய செய்ய ஆசையாக இருக்கும்படி பஞ்சு போல் ஒட்டாமல் வருகிறது.எனது அன்பான நன்றி உன்களுக்கே.
நீங்கள் நலமா.நீண்ட இடைவேளைக்குப் பிறகு உங்களது மன்றத்திலான பங்களிப்பு மகிழ்ச்சியச்ளிக்கிறது.திரும்ப அமைதியான மனநிலைக்கு வந்து விட்டீர்கள் இல்லையா.உங்களது குடும்பத்தினர் அனைவரும் நலம் தானே

ஹலோ தளீக்ஸ் நீங்க எப்படி இருக்கீங்க? உங்க பதிவைப் பார்த்ததும் உற்சாகமாக இருந்தது இன்றைய முதல் பதிவு உங்களுக்குத் தான். இங்கு நானும் எனது அன்புச் செல்லம் உட்பட அனைவரும் பூரண சுகம் மிக்க நன்றி. உங்க செல்ல குட்டி ராணி எப்படி இருக்காங்க? இந்த வயதில் தான் குழந்தைகள் துரு துரு என்று இருப்பார்கள்,ஆகவே கவனமாக பார்த்துக் கொள்ளவும். பேன் கேக் உங்களுக்கும் பிடித்துவிட்டதா அப்பச்சரி அது அறுசுவையின் சூப்பர் ஹிட் குறிப்பு தான்.நீங்க சொல்வதுப் போல் இப்ப அடிக்கடி அறுசுவையை பார்வையிடுவதோடு மட்டுமல்லாமல் முடிந்தவரையில் பங்களித்தும் வருகின்றேன்,அதற்க்கும் மனநிலைக்கும் சம்பந்தமில்லை என்றே கருதுகின்றேன். அதுபாட்டுக்கிட்டு எதற்காவது டென்ஷன்பட்டுக் கொண்டுதான் இருக்கும்.அதற்காக நமக்கு பிடித்த விசயங்களை ரொம்ப நாளைக்கு தியாகம் செய்ய முடியாதே!!! ஆனாலும் எல்லா விசயத்தையும் ஒரே நேரத்தில் கவனிக்க முடியாமல் போகலாம் தானே!, என்ன தளீக்ஸ் நான் சொல்வது சரியா?மீண்டும் எப்போ பிரேக் எடுப்பேன் என்று யாருக்கு தெரியும் ஆகவே அதுவரையில் இப்போதைக்கு சீயர்ஸ்.

Dear manohari madam,
enakku 14 vayathil payyanum,11 vayathil ponnum irukanga.ayyo iruvarukkum ore sandai,en kanavaro ennai than valarka theriyalai,endru kutram sattuhirar.ippa holiday veru varapohuthu.ungalin aloosanai thevai.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

அன்பு தோழி மனோகரி,
நலமா? டைகர் நலமா?
ரொம்ப நாளாச்சு பேசி. எனக்குத்தான் நேரமே இல்லை.
பான் கேக் நேற்று நானும் செய்தேன். ரொம்ப நன்றாக இருந்தது. அதை ஏன் குறிப்பா கொடுக்காம இப்படி மன்றத்தில் கொடுத்தீங்க? பதிவுகள் அதிகமானா அது எங்கேயோ போய்விடுமே. நல்லதொரு குறிப்பை நிறைய பேர் பார்க்கும் வாய்ப்பு இல்லாமலே போய் விடுமே.
அப்பறம் பள்ளிக்குழந்தைக்கான காலை உணவு. ஒரு ஆறேழு வருடம் முன்பு நான் செய்த வேலைகளை அப்படியே சொல்வது போல் இருந்தது. மதியம் லஞ்சுக்கு கொடுக்கும் உணவும் சாப்பிடாமல் அப்படியே வரும். நானும் அவங்களை எப்படியும் சாப்பிட வைக்கணும்னு கண், மூக்கு, வாய் எல்லாம் வெச்சு அலங்கரிச்சு அனுப்புவேன். அந்த இடம் மட்டும் காலியாகி, மீதி அப்படியே வரும்.
காலை உணவு கேட்கவே வேண்டாம். ஆட்டோ வந்து ஏறப்போகும் போது கூட பிளேட்டோடு பின்னாடியே ஓடுவேன். சில நேரம் சப்பாத்தி ரோல், பிரட் ரோல் கையில் கொடுத்து சாப்பிட சொன்னால், அது அப்படியே ஆட்டோவில் வரும் மற்ற குழந்தைகளுக்கு அன்றைய டிபனாக மாறிடும்.
என் சின்ன பெண்ணை சாப்பிட வைக்க உங்களாலும் முடியாது, இன்றைக்கும் :-))
ரொம்ப நல்ல உபயோகமான பதிவு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஹலோ மை டியர் செல்வி எப்படி இருக்க? நான் நல்லாயிருக்கேன்,அன்புச் செல்லம் இருக்கும் போது எனக்கென்ன குறைச்சல். யாரும் சமைக்கலாமில் கலர் கலரா போட்டோவில் வந்து கலக்குர. உன்னைப் பார்ப்பதா உணவை பார்ப்பதான்னு ஒன்னும் புரியலப்பா,நானும் கொஞ்ச நாள் மன்றத்திலிருந்துவிட்டு பிறகு அங்கு வருகின்றேன். அந்த பேன் கேக் குறிப்புகூட புள்ளீங்க யாரோ கேட்டாங்கன்னு தான் கொடுத்தேன். நானும் கூட்டாஞ்சோறில் கொடுக்கலாம் என்று தான் நினைத்தேன். பிறகு நன்கு விளக்கமாக கற்றுத்தரலாமே என்று தான் வெளிநாட்டு தலைப்பில் மன்றத்தில் கொடுத்தேன்.அதையும் கூட்டாஞ்சோற்றில் தந்துவிடுகின்றேன்.

நீ சொன்னமாதிரி குழந்தை வளர்ப்பில் முக்கியமாக அவர்களுக்கு உணவு கொடுப்பது என்பது வீட்டுக்கு வீடு வாசற்படி என்பது உண்மை தான். எனக்கும் என் குழந்தைகளைச் சாப்பிட வைப்பது போன்ற கஷ்டம் எதுவுமே கிடையாது. இப்ப நினைத்தாலும் அழுகையாய் வருகின்றது, ஒரு ஹோட்டலுக்கு போனால் கூட ஒரு இடத்தில் உட்கார விடமாட்டார்கள், அவர்களுக்கு சாப்பிடுவதில் இஷ்டம் இருந்தால் தானே. அதிலும் குறைந்தது இரண்டு கிளாசையாவது உடைத்துவிட்டு தான் வருவோம். போக போக குறும்புகள் குறைந்தாலும் சாப்பிடுவதில் ஆர்வம் ஏற்ப்படவில்லை அவர்களும் வளர்ந்து பெரியவர்களாகி விட்டார்களேயொழிய , நீ சொல்வதுப் போல் இன்றைக்கும் அதே பிரச்சனை தான். இதில் நமது வீக்னஸ்ஸும் இருக்கின்றது என்பதை ஒத்துக் கொள்ளத்தான் வேணும். உன்னுடைய உளுத்தங்களி ரெசிப்பியை ஒரு நாளைக்கு செய்யலாமென்று இருக்கின்றேன். வெல்லம் சேர்த்தாலே எனக்கு பிடிக்காது, பார்க்கலாம் சர்க்கரையும் தேங்காய்ப் பாலும் சேர்தது எப்படி இருக்கின்றது என்று பின்னூட்டத்தில் தெரிவிக்கின்றேன். ஒகேபா மற்றொரு சந்தர்பத்தில் பேசலாம் பை.

மேலும் சில பதிவுகள்