ulunthu kali eppadi seyrathu

ஹாய் மால்ஸ்,
கீழ்காணும் லின்க்-ஐ தொடுக்கவும்.
http://www.arusuvai.com/tamil/node/3886
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Thanks Selvi

உளுத்தங்களி

தேவையானப் பொருட்கள்
குண்டு உளுத்தம் பருப்பு - 1/4 கிலோ
சர்க்கரை - 150 கிராம்,
ஏலக்காய் - 5,
தேங்காய் - 1 மூடி,
நெய் - 4 ஸ்பூன்.

செய்முறை
உளுத்தம்பருப்பை நன்கு சிவக்க வறுக்கவும்.
மெஷினில் நைசாக அரைக்கவும்.
தேங்காயை துருவி 2 டம்ளர் பால் எடுக்கவும்.
தேங்காய் பாலை அடுப்பில் வைத்து, சர்க்கரை சேர்த்து கரைய விடவும்.
சர்க்கரை கரைந்தவுடன் உளுத்தம் மாவை கட்டியில்லாமல் தூவி கிளறவும்.
ஏலக்காயை பொடி செய்து தூவி நெய் ஊற்றி கிளறி அல்வா பதம் போல் வரும் போது இறக்கவும்.

குறிப்பு:
வயதுக்கு வந்த பெண் குழந்தைகளுக்கு தினமும் காலையில் வெறும் வயிற்றில் 1 மாதம் கொடுத்து வந்தால், குழந்தைகளின் இடுப்பும், கர்ப்பப்பையும் பலப்படும்.

Jaleelakamal

ஹலோ mals எப்படி இருக்கீங்க? உங்க பெயரை எப்படி உச்சரிப்பது என்று தெரியவில்லை முதல் தடவையாக நாம் பேசுகின்றோம் என்று நினைக்கின்றேன்.உளுத்தங்களி குறிப்பைக் கேட்டிருந்தீர்கள். இது என் அம்மாவின் குறிப்பு செய்துபார்த்து எப்படி இருந்ததென்று கூறுங்கள்.

முழு உளுந்து ஒரு கோப்பை, வெல்லம் ஒரு கோப்பை, நல்லெண்ணெய் சுமாராக அரைக்கோப்பை தேவைப்படும்,மேலும் தேவைப்பட்டால் களி கிளரும் போது சேர்த்துக் கொள்ளலாம். ஏலக்காய் வேண்டுமானால் கால் தேக்கரண்டி போட்டுக் கொள்ளலாம்.வெல்லம் வாங்கும் போது உப்புவெல்லமாக இருந்தால் நல்லது( அம்மா சொல்வாங்க).ஆனா உப்பு வெல்லத்திற்க்கு நாம் எங்கே போவது நான் சாதாரணமாக கிடைக்கும் வெல்லத்திலேயே செய்திருக்கின்றேன் சுவையில் எந்த மாற்றமும்மில்லை அதே குமட்டல் தான் ஸாரி டியர் சும்மா விளையாட்டுக்கு சொன்னேன்.

முதலில் உளுந்தை சிவக்க வறுத்து கரகரப்பாக பொடித்துக் கொள்ளவும். பின்பு அடி கனமான பாத்திரத்தில் ஒரு கோப்பை நீரைச் சேர்த்து அதில் வெல்லத்தைப் போல் கரைவிடவும். வெல்லம் கரைந்ததும் திப்பிகளை வடிகட்டி விட்டு மீண்டும் அடுப்பில் ஏற்றி சூடாக்கவும். பாகு கொதிக்க ஆரம்பிக்கும் போது பொடித்த உளுத்தம்மாவை சிறிது சிறிதாக போட்டு கிளறவும்.அதன் பிறகு நல்லெண்ணெயை சிறிது சிறிதாக ஊற்றி கிளறிக் கொண்டே இருக்கவும்.மாவு எண்ணெய் முழுவதையும் இழுத்துக் கொண்டவுடன் கையில் ஒட்டாத பதம் வரும் அபோது இறக்கி சூடாகவோ ஆறவைத்தோ பரிமாறவும் சுவையாக நல்ல மணத்துடன் இருக்கும். இதை பெண்கள் வயசுக்கு வந்திருக்கும் காலங்களில் அவர்களின் இடுப்பிற்க்கு நல்லது என்று தொடர்ந்து பத்து நாட்களுக்கு காலங்காத்தாலையில் வெறும் வயிற்றில் கொடுத்து வெறுப்பேற்றுவார்களே, அவ்வளவுச் சீக்கிரத்தில் மறக்கமுடியுமா அதை! மேலும் சகோதரிகள் செல்வியும், ஜலிலாவும் தேங்காப்பால் சேர்த்த சுவைய்யை கொடுத்திருக்காங்க, எல்லாமே நமது பழம்பெருமை வாய்ந்த குறிப்புகள் தான். இருந்தாலும் இவைகள் நீங்க எதிர் பார்த்த குறிப்புகள்தானா என்று கூறவும்.நன்றி.

அன்பு ஜலீலா,
இதில் நீங்கள் கொடுத்துள்ள உளுத்தங்களி குறிப்பு எனது குறிப்பை அப்படியே காப்பி, பேஸ்ட் செய்துள்ளீர்கள். அவ்வாறு செய்யும் போது அது யாருடைய குறிப்பு என்பதை நீங்கள் கட்டாயம் குறிப்பிட வேண்டும். நான் மேலேயே அந்த குறிப்பிற்கான லின்ங்கை கொடுத்தும் உள்ளேன். இனி நீங்கள் யாருடைய குறிப்பை அதுபோல் காப்பி பண்ணினாலும் அதன் கீழேயே அது யாருடைய குறிப்பு என்பதை மறக்காமல் குறிப்பிடுங்கள். அது கூட தேவையில்லை, அதற்கான லிங்கை நீங்கள் குறிப்பிட்டாலே போதும்.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

செல்வி மேடம் நல்ல இருக்கீங்களா.
சாரி உங்க பெயரை குறிப்பிட எண்ணியிருந்தேன் அது விட்டு போயிற்று.அதற்கு பிறகு அதை கவனிக்க வில்லை

காப்பி பண்னும் போது.
ஜலீலா

Jaleelakamal

மனோகரி மேடம்
நல்ல இருக்கிறீகளா
பேசி ரொம்ப நாள் ஆகி விட்டது
இந்த உளுத்தங்களி என்னுடையது கிடையாது.
பதிவு போட்டு விட்டு மறுபடியும் அதில் உள் நுழை என்பது வரவில்லை. பிற்கு என்ன மேசேஜ் என்பதை பார்க்க முடியவில்லை.
இப்ப தான் பார்த்தேன்,
எனக்கும் தெரியும் , நனும் சாப்பிட்டுள்லேன் ஆனால் சரியான அளவு முறை தெரியாததால் நான் அந்த ரெஸிபியை கொடுக்கவில்லை.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்