சுகப்பிரசவம் ஆக 8ஆவது மாதம் முதல் என்ன சாப்பிட வேண்டும்?

அஸ்ஸலாமு அலைக்கும் சகோதரிகளே,

நான் புதிதாகதான் சேர்ந்து உள்ளேன் என்றாலும் இந்த வெப் சைட்டை பல நாட்களாக பார்வையிட்டு உள்ளேன். பல குறிப்புகளை உபயோகித்து பயன் பெற்றும் உள்ளேன். அனைவருக்கும் நன்றி. நான் தற்போது அமெரிக்காவில் வசிக்கிரேன். தனியாக இருப்பதால் அதிக கவனம் எடுத்துக்கொள்ள இயலவில்லை, என் கர்ப்பத்தில். இப்போது 8வது மாதம் ஆரம்பித்து உள்ளது. (due date is April 27) என் கவலை அனைத்தும் சுகப்பிரசவம் ஆவதற்கே. வீட்டில் இருந்தே செய்யக்கூடிய குறிப்புகளை தாருங்கள். கஷாயம் அல்லது சுகப்பிரசவம் ஆக உட்கொள்ளும் எந்த குறிப்பையும் தாருங்கள் ப்ளீஸ். பூண்டு பால் பற்றி வேறு ஒரு வெப் சைட்டில் பார்த்தேன். அதையும் எப்போது உட்கொள்ள வேன்டும், எவ்வளவு நாட்களுக்கு ஒரு முறை எனவும் கூறவும் ப்ளீஸ். அனைவரது பதில்களுக்கும் நன்றி.

புதியதாக தாயாகப்போகும் அன்புச் சகோதரி umm_omar உங்களை அறுசுவை நேயர்கள் அனைவரின் சார்பாக வாழ்த்துக்கள் பல கூறி அன்புடன் வரவேற்க்கின்றேன், உங்கள் வரவு நல்வரவாகுக. எப்படி இருக்கீங்க?பிரசவம் அக இன்னும் ஒரிரு மாதம் தான் இருக்கின்றதல்லவா, கேட்க்கும் போதே சந்தோசமாக உள்ளது. அமெரிக்காவில் தனியாக இருப்பதாக கூறியுள்ளீர்கள், இன்னும் கொஞ்ச நாட்களில் பாருங்கள் நீங்க மற்றவருக்கு ஆறுதல் கூறும் அளவிற்க்கு அறுசுவை உங்களின் தனிமையை போக்கிவிடும். இவ்வளவு பெரிய குடும்பமே உங்களுடன் இருக்கும்போது கவலை எதற்க்கு? தினமும் எங்களுடன் வந்து இதுப்போலவே உங்களுக்கு தோன்றும் சந்தேகங்களை கேளுங்க சரியா.

நீங்கள் இந்த நேரத்தில் அதிலும் எட்டு மாசத்தில் உணவுப் பழக்கங்களை புதியதாக எதுவும் சேர்க்கவோ மாற்றவோ வேண்டாம் என்றே கருதுகின்றேன்.வழக்கம் போல் சேர்க்கும் காய்கறி பழங்கள்,தயிர்,கீரைவகைகள் என்று இவைகளை சற்று அதிகமான எடுத்துக் கொள்ளவும் ஏன்னென்றால் அவைகளில் நார்சத்து அதிகமாக இருப்ப்தால் கர்ப்ப காலத்தில் மலச்சிக்கல் வராமல் சுகப்பிரசவத்திற்க்கு உதவியாக இருக்கும். பப்பாளி பழம் கூட சாப்பிடலாம் (என்று எனது அத்தை கூறுவார்கள், அது கண்ணிலே படக்கூடாது என்று அம்மா கூறுவார்கள், இவர்கள் இருவருக்கும் இடையில் நான் மாட்டிக் கொண்டு பட்ட அன்புத் தொல்லையில் இதுவும் ஒன்று, ஆனால் இருவருக்கும் தெரியாமல் கணவருக்கு மட்டும் தெரிவித்துவிட்டு ஒரு சில துண்டுகளை நான் சாப்பிட்டிருக்கேன்). நீங்க மோர், ஜூஸ், சூப், கஞ்சி, போன்ற நீராகாரம் அதிகம் எடுப்பது நல்லது, இவைகள் உணவிலுள்ள நார்சத்தை எளிதில் ஜீரணமாக்கும், மேலும் உடல் சூட்டைத் தணித்து குளிர்ச்சியாக வைத்துக் கொள்ளும்.மற்றபடி இந்த கஷாயமெல்லாம் வேண்டாம் ஏன்னென்றால் அவைகளை அதைப் பற்றி நன்கு தெரிந்தவர் அல்லது அவர்களின் துணையுடன் தான் கை மருந்துக்களை முக்கியமாக இந்த தருணத்தில் எடுக்க வேண்டும். பிரசவம் என்பது சுகமான விசயம் ஆகவே தேவையில்லாததையெல்லாம் நினைத்து அதை கஷ்டப் படுத்த வேண்டாம் என்றே கூறுவேன்.

மற்றபடி மருத்துவர் பரிந்துரைக்கும் சிறிய உடற்பயிற்ச்சிகளை உங்களால் முடிந்தவரையில் செய்யலாம். தினமும் உங்க கணவரின் துணையுடன் பாதுகாப்பாக கொஞ்ச நேரம் நடக்கலாம். உங்க இருவருக்கும் இந்த நேரத்தில் செக்ஸ்ஸில் நாட்டமிருந்தாலும் தாராளமாக ஈடுபடலாம் குழந்தைக்கு ஒன்றுமாகாது. மருத்துவர் வேறு ஏதாவது காரணங்களுக்காக உங்களிடன் பிரித்தியேகமாக வேண்டாம் என்று கூறினாலொழிய நீங்களாக குழந்தைக்கு ஏதாவது ஆகிவிடும் என்று பயந்து அதை நிறுத்த வேண்டாம். சுகப் பிரசவத்துக்கு இது கூட ஒரு சிறந்த குறிப்பு என்று தான் கூறுவேன். எல்லாவற்றையும் விட சுகப்பிரசவத்திற்க்கு தாயின் மனஅமைதி மிக மிக முக்கியம். ஆகவே நீங்களே கூறியிருப்பதுப் போல் சுகப்பிரசவம் ஆவதற்க்கு எதை பற்றியும் கவலைப்படாம பிரசவ நாளை சந்தோசமுடன் வரவேற்க்க ஆயத்தமாக இருக்கவும் சரியா.

மேற்கூறியுள்ள விசயங்கள் அனைத்தும் என்னுடைய்ய சொந்த கருத்துகளும் அனுபவங்களும்,ஆகவே கவலை வேண்டாம் நீங்க கேட்டிருப்பதுப் போன்றே குறிப்புகளை நம்ம சகோதரிகளிடமிருந்து விரைவில் வரும் ஒகே. எப்போதும் கவலையில்லாமல் சிரிச்சிக்கிட்டிருங்க சந்தோசமாயிருங்க நன்றி மீண்டும் சந்திப்போம்.

அன்பு உம் ஓமர் (சரியா?),
தாயாக போகும் உங்களுக்கு முதலில் என் வாழ்த்துக்கள். தைரியமாக பிரசவத்தை எதிர்நோக்கி மகிழ்ச்சியாக இருங்கள்.

இது 8வது மாதமென்பதால் ரொம்ப கடினமான வேலைகளை செய்யாமல், மிதமாக முடித்துக் கொள்ளுங்கள்.

இந்த நேரத்தில் சுக பிரசவமாதற்காகவும் இடுப்பு எலும்பு வலுவாக இருப்பதற்காகவும் உளுத்தம் பருப்பை உணவில் அதிகம் சேர்த்துக் கொள்ளுங்கள். உளுந்து வடை, உளுத்தங்களி, உளுத்தங்கஞ்சி போன்றவைகளை செய்து சாப்பிடுங்கள்.

வாரத்திற்கு இருமுறை வெந்தயக்களி காலையில் வெறும் வயிற்றில் முதலில் சாப்பிட்டு விட்டு பிறகு (1 மணி நேரம் கழித்து) வழக்கம் போல் நீங்கள் சாப்பிடும் உணவை சாப்பிடுங்கள். வெந்தயக்களி சுகபிரசவத்திற்கு வழி வகுக்கும்.

தினமும் இரவில் படுக்கும் முன் வெந்நீரை இடுப்பு, வயிறு, கால்களுக்கு ஊற்றிக் கொண்டால், நன்கு உறக்கம் வரும்.

வாரம் இருமுறை சீரக கஷாயம் இரவில் படுக்கும் முன் குடிக்கவும். 2 தேக்கரண்டி சீரகத்தை வெறும் வாணலியில் வறுத்து, 2 தம்ளர் தண்ணீர் ஊற்றி, 1 தம்ளராக வற்றும் வரை கொதிக்க விடவும். அதை வடிக்கட்டி, எழுமிச்சையளவு பனைவெல்லம் (கருப்பட்டி) 2 தேக்கரண்டி வெண்ணெய் சேர்த்து ஆற்றிக் குடிக்கவும். அதுவே 9 மாதமான பின் வயிறு, இடுப்பு வலிப்பது போலிருந்தால், சீரகத்திற்கு பதில் சோம்பை வறுத்து, கஷாயம் போட்டு குடிக்கவும்.

கால், கை வீங்குவது போலிருந்தால், பார்லி வாட்டர் போட்டு வைத்துக் கொண்டு, தாகமெடுக்கும் போதெல்லாம் தண்ணீருக்குப் பதிலாக பார்லி வாட்டரில் உப்பும் சர்க்கரையும் சேர்த்துக் குடிக்கவும்.

தினமும் குளிப்பற்கு 1/2 மணி நேரம் முன்பு தேங்காய் எண்ணெயையோ, நல்லெண்ணயையோ வயிறு மற்றும் இடுப்பு பகுதிகளில் நன்கு தடவி, ஊற விட்டு, பின் குளிக்கவும்.

உடலுக்கு உஷ்ணம் கொடுக்கும் எந்த உணவையும் சாப்பிடாதீர்கள், மிகுந்த குளிர்ச்சியான உணவுப்பொருட்களையும் அதிகம் எடுத்துக் கொள்ள வேண்டாம்.

திரும்பி படுக்க நினைத்தால், அப்படியே திரும்பி படுக்காதீர்கள், எழுந்து உட்கார்ந்து, மறுபக்கம் திரும்பி, பின் படுங்கள். இதை செய்வதற்கு மிகவும் கடினமாகத் தானிருக்கும், ஆனால் சுகப்பிரசவத்திற்கு இது மிக மிக மிக மிக முக்கியம். கவனம்.

மேலே அனைத்து உணவு குறிப்புகளுக்கும் செய்முறை என்னுடய குறிப்புகளில் உள்ளன. பார்க்கவும்.

உங்களின் சுகப்பிரசத்திற்கு என் அன்பான வாழ்த்துக்கள்.

மேலும் ஏதேனும் சந்தேகமிருப்பின் கேட்கவும்.

அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

Vanakkam Anbu Ullamkalukku,

Ungal Kurippugal yellam sari aanal kanavarum yeuvaru nadanthukolla vendum enthaa mathari nerathil athaium yaravadhu vivaringalen..

Living the good life: eat right and stay healthy

பதிலளித்த அத்தனை பேருக்கும் நன்றி. என்னுடைய கடவுச்சொல் மறந்து போய்விட்டதால் இத்தனை நாள் பதிலளிக்க முடியாமல் போனது. மன்னிக்கவும். சொன்னதெல்லாம் சிறிது சிறிதாக செய்து கொண்டுள்ளேன். இன்னும் வெந்தய களி செய்து சாப்பிடவில்லை. கிண்டுவதை எண்ணிதான் பயமாக உள்ளது. எங்கே அது பாத்திரத்தில் ஒட்டிக் கொள்ளுமோ என்று.

மேலும், தூங்கும் வேளையில் position மாற விரும்பினால் எழுந்துதான் செய்ய வேண்டும் என என் தாயும், பாட்டியும் கூட கூறினார்கள். ஆனால் என் டாக்டர் அப்படி தேவையில்லை என்கிறார். நானும் சோம்பேறித்தனத்தால் செய்வதில்லை. கட்டாயம் செய்ய வேண்டுமா? இன்னும் அமெரிக்காவில் இப்பொழுது spring season. அதனால் நடப்பதே இயலாமல் உள்ளது. இப்போது 9 மாதம் என்பதால் தினமும் எவ்வளவு நடக்க வேண்டும்? நான் முதல் மாடியில் வசிக்கிறேன். கீழ் வரை படிகளில் நடை பயிலலாமா?

sorry.

அதிகம் கேள்வி கேட்பது போல் தெரிகிறது. எனினும், நீங்களெல்லாம் இதில் senior என்பதால்தான் கேட்கிறேன். சிரமம் பார்க்காமல் பதிலெழுதவும். நன்றி.

http://iniyaislam.wordpress.com

http://iniyaislam.wordpress.com

ஹாய் manohari மெடம்.
என்னை ஞாபகமிருக்கிறதா என்று தெரியவில்லை. குழந்தை உண்டாக எதிர் பார்த்திருப்பவர் உடற்பயிற்சி செய்யலாமா? என்ற கேள்வி கேட்டவர் நான். நல்ல பதிலைத் தந்தவர் நீங்கள். தற்போது umm omar அவர்களுக்கு தந்துள்ள விளக்கத்தைப் பார்த்தேன். இது எனக்கும் பயனுள்ளதாக இருக்குது. ஏனெனில் நானும் இப்போது நிறைமாத கர்ப்பிணி.உங்களின் இந்தப் பயனுள்ள கருத்துக்களுக்கு மிகவும் நன்றி.

அஸ்ஸலாமு அலைக்கும் அன்பு சகோதரிகளே,

நீண்ட நாட்களுக்கு பிறகு மீண்டும் உங்களை சந்திப்பதில் மகிழ்ச்சி. அல்ஹம்துலில்லாஹ். உங்களின் எல்லா ஆலோசனைகளையும் செயல் படுத்த இயலவில்லை. எனினும் என்னால் இயன்ற அளவு முயற்சித்தேன். டாக்டர் குறிப்பிட்ட நாளையும் தாண்டி இரு நாட்களுக்கு பிறகு நலமுடன் முதல் குழந்தை பிறந்தது. அல்ஹம்துலில்லாஹ். ஹாஸ்பிடல் செல்லும் முன் செய்த ஒரே வேலை மூச்சு முட்ட சுக்கு பால் குடித்ததே. புதன் மாலை 7:30 மணி அளவில் அட்மிட் ஆகி வியாழன் (மே 1) அன்று விடியற்காலை 4:30 மணிக்கு குழந்தை பிறந்தது. பிரசவம் மிக எளிதானதாகவும் சுலபமானதாகவும் அமைந்தது. உங்கள் அனைவரின் துஆக்களுக்கும், ஆலோசனைகளுக்கும், வாழ்த்துக்களுக்கும் நன்றி. குழந்தையின் பெயர் ஒமர் முஹம்மது அப்துல்லாஹ். இப்பொழுது என் பெயர் காரணம் புரிந்திருக்கும் என நம்புகின்றேன். :)

உங்கள் அனைவரின் உதவியும் இப்பொழுதும் தேவை. குழந்தையின் நலன் கருதி என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது, என்ன சாப்பிடலாம், என்ன சாப்பிடக் கூடாது என்று லிஸ்ட் தரவும் ப்ளீஸ். நான் தாய்ப்பால் தருவதால், தாய்ப்பால் அதிகம் சுரக்க என்ன சாப்பிடலாம் என்று கூறவும். நான் மிகவும் வீக்காக இருப்பதால் தாய்ப்பால் கொடுக்கும்பொழுது நெஞ்சிலும் பின் முதுகிலும் அதிகம் வலிக்கின்றது. வலி குறையவும், ஆரோக்கியமாக இருக்கவும் வழி கூறவும். உங்கள் அனைவரின் பதிலுக்கும், நல்லெண்ணங்களுக்கும் மீண்டும் ஒரு முறை நன்றி.

http://iniyaislam.wordpress.com

வாழ்த்துக்கள்.
நீங்கள் தினமும் நிறைய காய்கறிகள் சாப்பிடவும்.
தினம்ம் இரவு துங்கும் முன் ஒரு பத்திரதில் 2 தம்பளர் பால் மற்றும் 10 பூண்டு ஊறித்து அதில் போட்டு வெக விட்டு சாப்பிடவும்.
மிளகாய் தூள் பதில் மிளகு உபயோகிக்கவும்.
குழந்தைக்கு பால் கொடுக்கும் போழுது நீங்கள் நிறைய தண்ணீர் குடிக்கவும்.
உங்களுக்கு help செய்ய யாராவது இருக்கங்காள???
நானும் என் குழந்தையை தனியாக தான் பர்த்து கொண்டேன்.குழந்தையை
வளர்பது மிகவும் எளிது 1 வயது வரை.
Don't worry. Take care of the baby. Baby handling is easy. I had done it myself alone without no one for help..u too can do it.. my love for the new born baby
நன்றி.
Geethaachal

ஹாய் umm_omar

உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள்.நீங்கள் நல்லபடியாக குழந்தையை பெற்றெடுத்தது குறித்து மிக்க மகிழ்ச்சி. தாய்ப்பால் அதிகம் சுரக்க 'இயற்கை உணவும் உடல் ஆரோகியமும்' என்பதன் கீழ் வரும் இந்த லின்கை பார்க்கவும்.

http://www.arusuvai.com/tamil/forum/no/8088

இதில் ஏற்கனவே விவாதித்து உள்ளனர். நீங்கள் எது சாப்பிட்டாலும் அது தாய்ப்பாலில் சேரும் என்பதால் பார்த்து சாப்பிடவும். எந்த மருந்து, மாத்திரைகளையும் மருத்துவர் ஆலோசனையின்றி சாப்பிடக் கூடாது. மற்றபடி இன்னும் விளக்கமாக வேறு யாரேனும் கூறுவார்கள்.

உம்ம ஓமர் எப்படி இருக்கீங்க
குழந்தை சுகப்பிரசம் ஆனால் என்ன குழந்தை என்று சொல்லவே இல்லையே///

சரி சுக்கு பால் என்னுடையதா குடித்தீர்கள்.

ஒக் நல்ல சாப்பிடுங்கள் , டயட்டெல்லம் வேண்டாம்,
டெய்லி நிறைய எலும்பு சூப், சிக்கன் சூப், பாயில்ட் எக் சாப்பிடுங்கள், மிளகு, நல்லெண்ணை நிறைய சேர்த்து கொள்ளுங்கள் சமையலில்.

உங்களுக்கு நல்லெண்ணை, மற்று தேங்காய் எண்னை நல்ல சூடுபடுத்தி ஆறியதும் நல்ல இடுப்பு, கால் கலி தேய்த்து வெண்ணீரில் குளிங்க இது வயதானா கால்வலி, இடுப்பு வலி வராம இருக்க.

குழதைக்கு கூட எண்னை மசாஜ் மெண்மையாக செய்து குளிக்கவைய்யுங்கள், எண்னை தேய்க்கும் போது பேப்பரை விரித்து கொள்ளுங்கள்.

குழந்தையை ஒரே தூக்கி தூக்கி வைத்து கொள்ளாமல் கீழே போடுங்க நல்ல கைய கால ஆட்டினா அதே ஒரு உடற்பயிற்சி மாதிரி.

ஒவ்வொரு முறை பால் கொடுக்கும் போதும் ஏதாவது சூடாக (பால், காபி, சூப்,வெண்ணீர்) குடித்து கொள்ளுங்கள்.

ஜலீலா

Jaleelakamal

சலாம் உம்மு உமர் தாயான உங்களுக்கு என் வாழ்த்துக்கள்..
நீங்க ஓமம் போட்ட தண்ணீர் குடிக்கனும் பால் ந்ல்லா சுறக்கும் அப்புறம் பருப்பு வகை களுக்கும் சின்ன மீனுக்கும் ரொம்ப நல்லா சுரக்கும்..வேலை இஉர்க்கு மற்றவை பின்பு :-)

ஜலிலாக்கா ப்யரை வத்துமா கண்டுபிடிக்கல அவங்க ஒமர் முஹம்மது அப்துல்லாஹ் ந்னு சொல்லி இருக்காங்க சோ ஆண் குழந்தை ஓகேவா??

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்