திரை விலகுகிறது

திரை விலகுகிறது

வணக்கங்கோ,என்னா திரைன்னு பாக்குறீங்களா. நம்ம நடுவில இருக்கிற திரைதாங்கோ.
என்னதான் ஜலீலாக்கா,மர்ழியா,தளிகா,கதீஜான்னு கற்பனை பண்ணினாலும்,
செல்வி,மனோகரி,அஸ்மா,சுபா,பாபு,பாப்பி மாதிரி மனசுல முகம் நிக்கல.அதனால இனிமையான எங்கள் குடும்பத்தின் மகிழ்ச்சியான தருணங்களில் சில உங்கள் பார்வைக்கு.
http://s263.photobucket.com/albums/ii134/banugani/

பாத்தீங்களா என் தெகிரியத்தை,இதேபோல உங்க தெகிரியத்தை நானும் பார்க்களாமா?

how are u? just now only came to arusuvai. neenga kodutha topic parthen. ungala paka poromgra arvathula nan antha address koduthu parthen open agala. ennanu theriyala madam. first time unga kuda pesuren.romba santhosam madam. onlinela erukeengala madam

பானு ரொம்ம்ப தைரியம் தான் போடுங்க...இப்ப தான் பார்த்தேன் உங்களை...முன்னயே ரொம்ப பரிஜயமான முகம் போல்...என் பாட்டி வீட்டுக்கு பக்கத்தில் உங்களைப் போல் ஒரு அக்கா இருந்தார்...அதனாலோ என்னவோ:-).
சும்மா கலர் கலரா கல்லக்கரீங்க பானு...நாளைக்கு த்ரெட்டை அழகாய் நீக்கி விடலாம்கர தைரியம் தானே..இருக்கட்டும் இருக்கட்டும்:-)..
எனக்கு தைரியம் இல்லப்பா:-0

எப்படி இருக்கீங்க உங்களுக்கு நல்ல தைரியம் தான் எனக்கு தளிகா போலதான் தைரியம் இல்லைப்பா. உங்க போட்டோ பார்த்தேன் அழகா இருக்கீங்க. ஆமா உங்களுக்கு எது சொந்த ஊர். இப்ப எங்க இருக்கீங்கன்னு தெரிந்துக்கொள்ளலாமா.

அன்புடன் கதீஜா.

நந்தினி,என் போட்டோ பார்க்கமுடியலைன்னு சொல்லி இருந்தீங்க.உங்க நல்ல நேரம் தப்பிச்சுடீங்க.

தளிகா உங்க பதிவை பயந்துக்கிட்டே படிச்சேன்,உங்க பாட்டி மாதிரி இருக்கேன்னு சொல்லிடுவீங்களோன்னு.நல்லவேளை அக்காவோட நிறுத்தீடீங்க.

வ அலைக்கும்ஸலாம் கதீஜா
எனக்காக பொய்யொல்லாம் சொல்லாதிங்க அழகா இருக்கேன்னு.என்னோட பூர்வீகம் மதுரை பக்கத்தில கமுதி,நான் பிற்ந்தது,வளர்ந்தது எல்லாம் கடலூர்,கல்யாணம் பண்ணிகிட்டு வந்ததிலிருந்து இன்று வரை சிங்கார சென்னைதான் என் ஊர்.

ஆனால் கொஞ்சம் முயற்சி பண்ணி தைரியசாலி ஆகுங்கப்பா பிளீஸ்

ஹலோ பானு எப்படி இருக்கீங்க?உங்களுடன் உங்கள் குடும்பத்தினரையும் எங்களுக்கு போட்டோ மூலமாக அறிமுகப் படுத்தியுள்ளீர்கள், உங்கஅனைவரையும் பார்க்க சந்தோசமாக இருந்தது. வீட்ல பூசணிக்காய் இருக்கா? அதான் தெரியுமே எப்போதும் ஸ்டாக் இருக்குமே அதில் ஒன்றை எடுத்து குடுபத்தினருக்கும் உங்களுக்கும் சேர்த்துதாம்ப்பா சுற்றி போடுங்கள். சும்மா ஜோக்கா எழுதினேன், எனக்கு அதிலெல்லாம் நம்பிக்கையில்லை. நீங்க பார்க்க சூப்பரா இருக்கீங்க உங்க சிரிப்பு எனக்கு மிகவும் பிடிக்கின்றது.சென்னை தானே உங்களை நேரில் சந்திக்கும் வாய்ப்பு கிடைக்கும் என்று நம்புகின்றேன், வீட்டில் அனைவரையும் கேட்டதாகச் சொல்லவும். நன்றி.

பானு எனக்கும் தைரியம்

என்னோட ஃபோடோவும் அனுப்பறேன்..நல்ல இல்லைன்னு சொல்லிடக் கூடாது..இதுக்காகவே கஷ்டப்பட்டு பியூடி பார்லருக்கு போய் மேக் அப் பன்னிக்கிட்டு வந்தேன்

http://i119.photobucket.com/albums/o123/thalika/modified_010.jpg

தளிகா:-)

அய்யோ ரூபி ஏன் இப்படி ஒரு போட்டோவ போட்டு எல்லோரையும் பயமுறுத்தறீங்க.உங்க அழகான போட்டோவை பார்த்த எனக்கு மறுபடியும் பார்க்க ஆவலாக வந்தால் ரொம்ப ஏமாற்றம்.இன்னும் என் கண்ணிலேயே நிக்குது உங்க முகம்(சினிமா ஹிரோயின் மாதிரி இருந்தீங்க)
அன்புடன் தீபா

தளிகா , இந்த படுக்கப் போற நேரத்தில இப்படி ஒரு போட்டோ போட்டு தூக்கமே எனக்கு வராம பண்ணிற்றீங்களே.... இது நியாயமா? எவ்வளவு ஆசையா ஓபின் பண்ணினேன் தெரியுமா?

பானு, இன்றுதான் உங்களுடன் கதைக்கிறேன். படம் பார்த்தேன். அழகாக இருக்கிறீங்க...
நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

எனக்கு என்னவோ இந்த போட்டோவுலத்தான் நல்லா இருக்கிற மாதிரி தெரியுது.. :-)

தமிழ் டைப்பிங் சொல்லி தந்தமைக்கு மீண்டும் நன்றி.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

மேலும் சில பதிவுகள்