yaravathu uthavungalaen

வணக்கம்
எனது பெயர் மதி. நான் மன்றத்தில் புதிதாக சேர்நதுளேன். தற்பொழுது சிங்கப்பூர் புகிட் மேராத் பகுதியில் வசிக்கிறேன். எனக்கு ஆறு மாதத்தில் ஒரு பெண் குழந்தை இருக்கிறாள். என்னது குழந்தைக்கு nappy கட்டுவதால் rash வந்துள்ளது. அதை போக்க வழி தெரிந்தால் சொல்லுங்களேன். மற்றும் குழந்தை மருத்துவர் முகவரியும் சொன்னால் மிகவும் உதவியாக இருக்கும்.

எப்படி இருக்கீங்க குழந்தை எப்படி இருக்கிறாள். உங்கள் குழந்தைக்கு rash வந்துள்ளதாக சொல்லியிருக்கிறீர்கள். அதற்க்கு என்ன மருந்து போட வேண்டும் அப்புறம் டாக்டர் அட்ரஸும் கேட்டு இருக்கிறீர்கள் பதில் தெரிந்த சகோதரிகள் யாராவது உங்களுக்கு உதவுவார்கள். நான் எனக்கு தெரிந்ததை உங்களுக்கு சொல்கிறேன் எனது பையனுக்கு இதுவரை rash வந்ததில்லை ஏன்னா நான் அவனுக்கு சில செய்முறைகளை ஃபாலோ பண்ணிட்டு வந்தேன். அதே முறையை உங்களுக்கு சொல்லுகிறேன். இனி இதை செய்து பார்த்து rash வராமல் பாதுகாக்க உதவும்.

1. நீங்க எத்தனை தடவை குழந்தைக்கு dyper மாத்தினாலும் அடிக்கடி குழ்ந்தைக்கு வார்ம் வாட்டரில் இடுப்பி இருந்து கழுகிவிடவும்.

2. குழந்தை dyper ல் மோஷன் இருந்துவிட்டால் எக்காரணம் கொண்டும் வெட் டிஸ்ஸு வைத்து க்ளீன் செய்யாதீர்கள். இடுப்பில் இருந்து கழுகிவிட்டு அதன் பிறகு நன்கு துடைத்து லோஷன் அல்லது பவுடர் ஏதாவது போட்டு அதன் பிறகு dyper வைக்கவும்.

நமக்கு என்ன வேலைகள் இருந்தாலும் கண்டிப்பாக குழந்தையின் விஷயத்தில் சிரமம் பார்க்க வேண்டாம்.

அதே போல் வெளியில் எங்காவது சென்றுவிட்டு வீட்டுக்கு வர நேரம் ஆனாலும் இடையில் எங்கு வைத்தாவது dyper மாற்றினாலும் வீட்டுக்கு வந்ததும் குழந்தைக்கு இடுப்பு வரை கழுகி துடைத்துவிடவும்.

நீங்கள் வெளியில் டாய்லெட்டில் குழந்தைக்கு dyper மாற்றும் போது கண்டிப்பாக குழந்தைக்கு ஒரு சீட்,அப்புறம் வெட்டிஸ்யூ, வைத்துக்கொள்ளவும். முதலில் வெட் டிஸ்ஸூவால் அந்த இடத்தை க்ளீன் செய்துவிட்டு அதன் பிறகு உங்களுடைய சீட்டை விரித்து அதன் மேல் குழந்தையை படுக்கவைத்து குழந்தையின் dyper கழற்றி வெட் டிஸ்ஸூவால் துடைத்து விட்டு அதன் பிறகு வேறு dyper மாற்றவும்.

இந்த முறைப்படி சுத்தம் செய்து வந்தால் கண்டிப்பாக rash வரவே செய்யாது. நான் நிறைய குழந்தைகளை பார்த்து இருக்கிறேன் rash வந்தால் பாவமாக இருக்கும் அவர்கள் அழுது கொண்டே இருப்பார்கள். திதிரும்ப அவர்களுக்கு dyper போடவும் முடியாது. நான் சொல்ற முறைப்படி செய்து பாருங்கள் இன்பெக்க்ஷன் எதுவும் வராது அப்புறம் நீங்களே என்னிடம் கூறுவீர்கள்.

தேங்காய் எண்ணெய் இருந்தால் அந்த rash இருக்கும் இடத்தில் தடவி விடவும் எரிச்சல் அடங்கும்.

கூடிய விரைவில் டாக்டரிடம் காமித்து குழந்தை குணமாகிவிடுவாள் கவலை வேண்டாம். திரும்பவும் வராமலிருக்கு நான் சொன்ன டிப்ஸை ஃபாலோ பண்ணி பாருங்கள். வேறு எதுவும் சந்தேகம் இருந்தால் கேட்க்கவும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் மதி

என் குழந்தைக்கும் இதெ போல் வரும். டாக்டர்க்கிட்ட போனாலும் சரியாகாது.அப்புரம் ஒரு பிரண்டு சொன்னாங்க எப்ப டயப்பர் மாத்தினாலும் க்ளின் பண்ணிட்டு தேங்காய் எண்னை பொட்டு தேய்க்கவும்.நான் தினமும் இப்படித்தான் செய்வென். இப்பொலுது rashவருவதில்லை.நீங்க try பன்னுங.

எழுத நேரமே இல்ல ஆனால் படிச்சப்ப இருந்து மனசுக்கு கஷ்டமாகவே இருந்தது.
ஏனென்றால் ஒரு முறை என் குழந்தையும் இதே வயசில் ரொம்ம்ப அவதிப்பட்டிருக்கிராள்....இத்தனைக்கும் பிறந்தபொழுது இருந்து ஒவ்வொருமுறையும் டாலெட்டுக்கு கொண்டு போய் கழுவி விடுவேன்...இவ்வளவு சுத்தமாக வைத்திருந்தும் வந்ததே என்று ஒரே கவலையில் இருந்தேன்..பிறகு தான் சில விஷயங்கள் அனுபவத்தில் புரிந்தது..கடைபிடியுங்கள்..கன்டிப்பாக மாறும்.
முதலில் ரேஷெஸ் மாறும் வரை டயபர் கட்டாமல் நல்ல காட்டன் துணி கட்டுங்கள்...முடிந்தவரை அதையும் கட்டாமல் பாருங்கள்..
கதீ சொன்னபடி ஒவ்வொரு முறையும் கழுவுங்கள்..ரேஷெஸ் வரும்பொழுது வெதுவெதுப்பான நீர் கொண்டு கழுவினால் குழந்தைக்கு இதமாக இருக்கும்.
இப்பொழுதைக்கு கழுவிய பின் எதையும் போடவேண்டாம்...பவுடர் க்ரீம் எதையும் தேய்க்காதீர்கள்...செபாமெட் ஹீலிங் க்ரீம் மட்ட்டும் போடலாம்..அல்லது மருத்துவர் பரிந்துரைத்த க்ரீம் போடலாம்.
கழுவியதும் துடைக்காமல் ஒரு சுத்தமான துணி கொண்டு ஒப்பி ஒப்பி எடுத்து ஃபேனுக்கு நேரே காட்டி அந்த இடம் முழுவதும் ட்ரைய்யாக இருக்கும்படி பார்த்துக் கொள்ளுங்கள்.
என் குழந்தைக்கு மாறியது டயபர் ப்ரேன்ட் மாற்றியபின் தான்....அல்ட்ரா தின் சூப்பர் அப்சார்பென்ட் டயபர்களால் ரேஷெஸ் வரும் வாஇப்பு அதிகம்..அதில் உள்ள ஏதோ ஒரு கெமிகல் தான் குழந்தையின் சருமத்தில் இர்ரிடேட் செய்கிறது..அதனால் இப்பொழுது ப்ரேன்ட் மாற்றி அல்ட்ரா தின் அல்லாத அல்லது மற்ற ஏதாவதொரு ப்ரேன்ட் வாங்கி பாருங்கள்..1 வாரம் உபயோகித்தாலே வித்யாசம் தெரியும்..
இப்பொழுதைக்கு ஆரஞ் ஜூஸ் கொடுக்காதீர்கள்..ரேஸ்ப்பெரி ஜூஸ் கொடுங்கள்.
லூஸ் மோஷன் ஆகிரதென்றாலும் டயபர் ரேஷ் வரும்..அப்படி யிருந்தால் முதலில் அதனை மாற்றுங்கள்...இந்த வயதில் பல் முளைக்கலாம்..அதனால் கூட லூஸ் மோஷனும் ரேஷசும் வரலாம்.
ரேஷெஸுக்கு முக்கிய எதிரி குழந்தையின் மோஷனே தான்..முடிந்தவரை போட்டியில் உக்கார வைத்து பாருங்கள்..அல்லது அப்படியே மோஷன் போனால் உடனுக்குடன் மாற்றி கழுகி சுத்தப்படுத்தி விடுங்கள்..இல்லாவிட்டால் ரேஷெஸ் மேலும் அதிகமாகும்.
இம்முறைகளை எல்லாம் பின்பற்றுங்கள்....கவலை வேண்டாம்...மாறிவிடும்..அடுத்தமுறை ரேஷெஸ் வர தொடங்குவதற்குள் இப்படியெல்லாம் செய்து வராமல் தடுத்துக் கொள்ளுங்கள்..

இதைப் படிக்கிறபோது எனக்கும் பதில் எழுதாமல் இருக்க முடியவில்லை. எனது மகனுக்கும் வந்தது. மேலே சகோதரிகள் கூறியுள்ள அத்தனையும் உண்மை அப்படியே பின்பற்றுங்கள். முக்கியமாக தளிகா சொன்னதுபோல் நல்ல கொட்டின் துணி பாவியுங்கள். வெளியில் போகும்போது மட்டும் டயப்பர் கட்டலாம். நித்திரையின்போது எதுவுமே வேண்டாம் மெல்லிய சீற்றால் போத்துவிடுங்கள். சில பிள்ளைகளுக்கு கிரந்திக் குணத்தாலும் வரலாம். நீங்கள் தாய்ப்பால் கொடுப்பீர்கள் என நினைக்கிறேன். அப்படியாயின் உங்கள் உணவில் கவனம் தேவை. சூட்டு உணவுகளை,அலர்ஜி உணவுகளைத் தவிர்த்துக் கொள்ளுங்கள். குழந்தைக்கு சுட்டாறிய நீரை அடிக்கடி குடிக்கக் கொடுங்கள். எமக்கு இது சிரமாக இருந்தாலும் நிட்சயம் இவைகளைப் பின்பற்றத்தான் வேண்டும். சில குழந்தைகளுக்கு சில வகை டயப்பர் ஒத்துக்கொள்வதில்லை அதனால் டயப்பர் பிராண்டை மாற்றுங்கள் தரமானதைப் பார்த்து வாங்குங்கள். மற்றி மாற்றிப் பாவிக்கக் கூடாது. எப்பவுமே ஒரே பிராண்டைத் தொடர்ந்து பாவிக்கவேண்டும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ruby and all friends,
i have added a new forum,in which i need all u`r valuble suggetions.pls reply me.sorry for typing me in english,as aathikah is pulling everything from the table,sorry.

அன்புள்ள மதி

குழந்தைக்கு பவுடர் போடவேண்டாம், ஆலிவ் ஆயில் (அ) தேங்கய் எண்ணை தடவவும்.
டயப்ர் எக்ஸ்பரி டேட் பர்க்கவும்.
இல்லை வேறு பிரேன்ட் வாங்குங்கள் கூடுமவரை காட்டன் துணி வாயி சேலையை கிழிட்து (அ) சுத்தமான வொயிட் லுங்கியை சதுரவடிவமாகா கிழித்து பட்டையா நலு பட்டை மடித்து இடுப்பில் உள்ள கயிறில் சொருகிவிட்டு கட்ட்டன் ஜட்டியை போட்டு விடுங்கள்.
துணியை வெண்னீரில் அலசவும்,ஒரு சொட்டு டேட்டயிலும் போடு அலசுங்கள், அதை காய்ந்தாதும் அயர்ன் பண்ணி போட்டால் கிருமிகள் இருக்காது.
நான் வீட்டில் தான் இருக்கிரேன் ,ஹய் fever fஈவர் சும்ம ஒரு கிளான்ஸ் பார்க்கும் போது இதற்கு பதில் சொல்லாமல் பீஸியை மூடா மனசில்லை (எண்ணை தாண் ) இது என் அனுபவம்.

ஜலீலா

Jaleelakamal

take care akka.

sorry,mathi,for messing up this forum.

Hi Kr,

ரொம்ப ரொம்ப நன்றி. என்னோட கேள்விய படிச்சிட்டு உங்க குழந்தைகே rash வந்தா மாதிரி துடிச்சு போய் ஆலோசனை கொடுத்து இருந்தீங்க. ரொம்ப சந்தோஷமா இருக்கு. உங்க எல்லர்கிடையும் நான் தொடர்ந்து பேசனும். அதுக்கு என்ன செய்யணும்?? இங்க நான் தனியா இருகேன். உங்க நட்பு கிடைச்சா ரொம்ப ஆறுதல இருக்கும்.

mathi

Take care.

mathi

மேலும் சில பதிவுகள்