வானவில் கீர்

தேதி: March 11, 2008

பரிமாறும் அளவு: நான்கு நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வெள்ளைப்பூசணி-ஒரு துண்டு
வெள்ளரிக்காய்-ஒன்று
இளநீர்க்காய்-ஒன்று
பால்-இரண்டு லிட்டர்
சர்க்கரை-கால் கிலோ
முந்திரி-பத்து
பாதாம்-பத்து
தயிர்-ஒரு கப்
ரவை-இரண்டு மேஜைக்கரண்டி
கசகசா-இரண்டு மேஜைக்கரண்டி
புதினா, கொத்துமல்லி-தலா ஒரு கைப்பிடி
கேரட், பீட்ரூட்- தலா ஒன்று


 

ஒரு லிட்டர் பாலைக் காய்ச்சி தயிர் சேர்த்து திரித்து பனீர் தயாரிக்கவும்.
அதனுடன் ரவை மற்றும் பொடித்த சர்க்கரை சிறிது சேர்த்து பிசையவும்.
கேரட், பீட்ரூட், புதினா, கொத்துமல்லி ஆகியவற்றை தனித்தனியாக அரைத்து சாறு எடுத்து பனீரில் தனித்தனியாக கலந்து சிறு உருண்டைகளாக உருட்டவும்.
COLOURFUL BALLS READY
அரை லிட்டர் பாலை கால் லிட்டராகும் வரை சுண்டவிட்டு அதில் ஐம்பது கிராம் சர்க்கரை கலந்து கிளறவும்.
அதில் உருண்டைகளைப் போட்டு பத்து நிமிடம் வேக விட்டு இறக்கி ஆறவிடவும்.
காய்களைத் துருவி ஆவியில் வேகவைத்து மசிக்கவும்.
பாதாம், முந்திரி, கசகசா ஆகியவற்றை தனித்தனியாக ஊற வைத்து விழுதாக அரைக்கவும்.
மீதியுள்ள சர்க்கரையை சிறிதளவு நீரில் கரைத்து சூடாக்கவும்.
மீதியுள்ள அரை லிட்டர் பாலைக் காய்ச்சி அதில் மசித்த காய்கள், அரைத்த விழுது, சர்க்கரை நீர் ஆகியவற்றை ஒவ்வொன்றாகச் சேர்த்து கிளறவும்.
அடுப்பை அணைத்துவிட்டு உருண்டைகளை சேர்த்து லேசாகக் கிளறவும்.
ஃப்ரிட்ஜில் வைத்து சில்லென பரிமாறவும்.


சர்க்கரையைப் பாகு காய்ச்ச வேண்டாம். நன்றாக கரைந்து சூடானாலே போதும்.

மேலும் சில குறிப்புகள்