கர்ப்பிணிகளின் கவனத்திற்க்கு

அன்பு அறுசுவை சகோதரிகளே நமது நேயர் ஜெயஸ்ரீயின் கேள்விக்கு கொடுத்த ஆலோசனை தான் இந்த பதிவு, அவர் அதை வேறொரு தலைப்பில் கேட்டுள்ளதால் அது மற்ற கர்ப்பிணிகளுக்கும் உதவட்டும் என்று இங்கு எழுதியுள்ளேன், வாங்க ஜெயஸ்ரீ நீங்களும் இங்கு வந்து படித்து உங்க கருத்தைச் சொல்லுங்க. மற்ற கர்ப்பிணிகளும் படித்து பயனடைவீர்கள் என்று நம்புகின்றேன்.

பொதுவாகவே பெண்களுக்கு மாதாமாதம் ஏற்படும் மாத விலக்கு காரணமாக அவர்களுக்கு ரத்த சோகை மற்றும் இரும்புச் சத்து குறைபாடு பரவலாக இருக்கும். அது கர்ப்பிணிகளுக்கு சற்று கூடுதலாக இருப்பது இயல்பு, இதை அவர்கள் சாம்பல்,அடுப்புக்கரிப்போன்ற பொருட்களை சாப்பிடுவதிலிருந்தே அதன் அறிகுறியை கண்டுக் கொள்ளமுடியும்.அதற்காக யாரும் பயப்படத் தேவையில்லை.

கர்ப்பிணிகளுக்கு தேவையான இரும்புச் சத்தை உணவின் மூலமாகவே அதிகரிக்கலாம். அவ்வாறு அயர்ன் சம்பந்தப்பட்ட உணவுகளை மட்டும் சாப்பிட்டும் பலனில்லை. அதனோடு சேர்த்து மற்றச் சத்துக்களையும் பேலன்ஸ்ஸாக சாப்பிட வேண்டு.பொதுவாக இந்த நேரத்தில் மருத்துவர் மல்டிவிட்டமின்கள், ஐயர்ன் சப்லிமென்ட்ஸ், என்று அவரவரின் உடல் நிலைக்கு ஏற்ற விகிதத்தில் பரிந்துரைப்பார்.அதனுடன் சேர்த்து நீங்க உட்கொள்ளும் ஆகாரத்திலிருந்தும் அனைத்துவித சத்துக்களையும் சரிவிகிதத்தில் குறைவில்லாமல் பெறமுடியும்.

சைவத்தில் காய்கறி பழங்களுடன் கீரைவகைகளிலிருந்தும் போதிய இரும்புச் சத்தை பெறமுடியும். வெளிநாடுகளில் ஸ்பைனாச் என்ற கீரை வருடம் முழுக்கக் கிடைக்கும், அதை தினமும் சாபிடலாம். மேலும் லெட்டியூஸ் என்ற சாலட்கீரை,வெந்தயக்கீரை, புளிச்சகீரை,முருங்கைக் கீரை,முள்ளங்கி கீரை, மற்றும் புதினா, கொத்தமல்லி, கறிவேப்பிலை போன்று கிடைக்கும் கீரை வகைகளில் தினமும் ஏதாவதொன்றை உங்களுக்கு பிடித்த முறையில் செய்து இவைகளைக் கட்டாயம் சேர்த்துக் கொள்ள வேண்டும்.

மற்றும் காய்கறிகளில் பிடித்த எல்லா காய்கறிகளையும் முக்கியமாக பச்சைநிற குடமிளகாய், முள்ளங்கி, புரொக்கலி, ஆஸ்பரகஸ்,மன்ஷ்ரூம், தக்காளி, பச்சை பட்டாணி போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

பொதுவாக பழங்களில் இருக்கும் வைட்டமின் சீ இரும்புச் சத்தை அதிகரிக்கச்செய்யும், முக்கியமாக ஆரஞ்சு, கிரேப்ஃபுரூட், ஸ்ட்ராபெர்ரி, கொய்யாப்பழம், மாதுளபழம், தர்பூசணி, போன்று கிடைக்கும் பழங்கள் நிறைய்ய சாப்பிடலாம். பாம்பழம்,பப்பாளிபழம் சாப்பிட்டால் தொடந்து ஒரு கப் பாலை குடிக்கவும்,இதனால் அப்பழத்திலுள்ள சூடு தணியும்.

அசைவத்தில் மீன், கோழி, ரெட் மீட், ஈரல், கோழி ஈரல், டர்க்கி கறி, காடை, போன்றவற்றை அடிக்கடி சாப்பிடலாம்.

மேலும் உலர்ந்த திராட்சை, பேரிச்சம்பழம்,உலர்ந்த ஏப்ரிகாட் மற்றும் பாதாம் பருப்பு, பீன்ஸ் வகைகள்,கோதுமைப் பண்டங்கள்,மூக்குக்கடலை,சர்க்கரைக்கு பதில் வெல்லம் போன்ற பொருட்களை பேலன்ஸாக சாப்பிட்டு உடலில் இரும்புச் சத்தைக் கூட்டிக்கொள்ளலாம்.

பொதுவாக சமைக்கும் பாத்திரத்திலிருந்துகூட இரும்புச் சத்தை பெறலாம்.வீட்டில் கைவசம் இரும்பு சட்டி இருந்தால் அதை பயன்படுத்தலாம், இல்லாவிட்டால் வெளிநாடுகளில் பாத்திரங்கள் விற்கும் எல்லா ஸ்டோரிலும் காஸ்ட் அயர்ன் என்ற ஸ்கில்லட் கிடைக்கும். அதை வாங்கி வந்து முக்கியமாக குழம்பு வகைகளை அதில் செய்து சாப்பிட்டுகூட இலவசமாககூட இரும்புச் சத்தைப் பெறலாம்.

தேனீர் காப்பி போன்ற பானங்களை உணவுடன் அருந்த வேண்டாம் ஏனெனில் உணவுடன் சேர்த்து குடித்தால் இவைகள் உணவிலுள்ள இரும்புச்சத்தை கிட்டத்தட்ட ஐம்பது சதவீதம் வரையில் செயலிழக்கச் செய்துவிடும் என்பதால் தனியாக செய்து குடிக்கலாம். அதற்கு பதில் உணவுடன் மோர், பழரசம், குடிக்கலாம், எல்லாவற்றும் மேல் போதுமானவரை தண்ணீர் நிறைய்ய குடிக்கவேண்டும்

கர்பிணிக்களுக்கு உணவு முறை பழக்கத்தைப் பற்றி பொதுவாக என் கருத்து என்னவென்றால் நீங்கள் எதற்கும் பயப்படத் தேவையில்லை. எந்த உணவை உங்களால் ஏற்றுக் கொள்ள முடிகின்றதோ அந்த உணவையே ஒரே முறையாக இல்லாமல் ஒரு நாளைகு பலமுறைகளாக பிரித்து சிறுக சிறுக சாப்பிட்டு பட்டினியாக இல்லாமல் இருந்தாலே போதுமானது என்று தான் கூறுவேன்.

குழந்தைக்கும் சேர்த்து சாப்பிட வேண்டும் என்பதற்காக ஒட்டுமொத்தமாக ஏகப்பட்ட உணவுகளை சாப்பிட்டு உங்களை வருத்திக் கொள்ள வேண்டாம். இதனால் அளவுக்கதிகமான எடைகூடுவதுடன் பிரசவத்தின் போதும் சிக்கல்கள் வர வாய்ப்பாகி விடும்.

ஆகவே நாம் சாதாரணமாக சாப்பிடும் அளவிலிருந்து கூடுதலாக ஒரு நேரத்திற்க்கான அளவை எடுத்தாலே போதும். வயிற்றில் இருக்கும் குழந்தைக்கு ஒரு சிறு அளவு தான் உணவு தேவைப்படுகின்றது. ஆகவே பயப்படாமல் உங்களுக்கு பிடிக்கும் வகையில் முன்பே கூறியதுப் போல் சிறுகச் சிறுக ஆனால் அதை பல முறையாக பிரித்து சாப்பிட்டாலே அஜீரணம், நெஞ்சுகரிப்பு,உடல் சோர்வு போன்ற உபாதைகள் வராமல் உடலை இலகுவாகவும் வைத்துக் கொள்ளலாம்,

இவைகள் எல்லாவற்றையும் விட கர்ப்பிணிகளுக்கு அவங்கவங்க அம்மா சொல்லும் அறிவுரைகள் தான் மிக முக்கியம் ஏனென்றால் அவங்களுக்குத் தான் சரியாக தெரியும் அவங்கவங்க குழந்தைகளின் உடல் கூற்றை பற்றி. ஆகவே கர்பிணிகளின் முதல் டாக்டர் அவங்க அம்மா தான் அவங்க அறிவுரைதான் ஃபஸ்ட் மற்றதெல்லாம் னெக்ஸ்ட் என்று கூறி முடித்துக் கொள்கின்றேன்,நன்றி.

நன்றி மனோஹரி மேடம்,
உங்களுடைய குறிப்பு பார்த்தேன்.
மிக்க நன்றி,எனக்கு ஆரம்பத்திலிருந்தே கடவுளின் அருளால் வாந்தி மயக்கம் மிக மிக குறைவே.மூன்று முறை தான் இருக்கும்.இப்பொழுது தான் தூங்கி எழுந்து உங்கள் குறிப்பை பார்க்கிரேன்,மிக்க மகிழ்ச்சி.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.மேலும் ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நான் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த குலோப் ஜாமுன் மிக்ஸ் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளேன்.அதை வைத்து வேறு ஏதாவது பொரிக்காத உணவு செய்ய முடியுமா?எண்ணையில் நின்று பொறித்தால் மயக்கம் வருவது போல் உள்ளது.எனவே வேறு குறிப்பு இருந்தால் தயவு செய்து கூறவும்
where there is a will,there is a way

where there is a will,there is a way

நன்றி மனோஹரி மேடம்,
உங்களுடைய குறிப்பு பார்த்தேன்.
மிக்க நன்றி,எனக்கு ஆரம்பத்திலிருந்தே கடவுளின் அருளால் வாந்தி மயக்கம் மிக மிக குறைவே.மூன்று முறை தான் இருக்கும்.இப்பொழுது தான் தூங்கி எழுந்து உங்கள் குறிப்பை பார்க்கிரேன்,மிக்க மகிழ்ச்சி.தங்கள் ஆலோசனைக்கு மிக்க நன்றி.மேலும் ஏதாவது சந்தேகம் என்றால் உங்களை தொடர்பு கொள்கிறேன்.நான் இந்தியாவில் இருந்து கொண்டு வந்த குலோப் ஜாமுன் மிக்ஸ் இன்னும் பயன்படுத்தாமல் உள்ளேன்.அதை வைத்து வேறு ஏதாவது பொரிக்காத உணவு செய்ய முடியுமா?எண்ணையில் நின்று பொறித்தால் மயக்கம் வருவது போல் உள்ளது.எனவே வேறு குறிப்பு இருந்தால் தயவு செய்து கூறவும்
where there is a will,there is a way

where there is a will,there is a way

வணக்கம்,

எனக்கு ஒரு சந்தேகம் , தெரிந்தவர்கள் சொல்லுவீர்களா?

எனக்கு 4 வயதில் ஒரு பையன் இருக்கான், நான் மறுபடி இப்ப கர்ப்பமா (ஒரு மாதம்) இருக்கன். எனக்கு அதிகமாக இடுப்பு வலியும் ,அடி வயிறு வலிக்குறமாதிரியும் ,வயிற்றுக்குள்ளயும் ஏதோ ஒரு மாற்றம் தெரியுது... இரண்டு கிழமையா இருக்கு, ஏன் இப்படி ?

முதல் கர்ப்பமான போது (பையனுக்கு) இப்படியான மாற்றங்கள் ...ஒரு மாதம் வரை எனக்கு தெரியவேயில்லை, ஒரு மாதத்திற்கு பிறகு தான் மயக்கம் வாந்தி ந்னு இருந்திச்சு,டேட் தள்ளிப்போனதும் போய் செக்கப் பண்ணி கர்ப்பமாயிருக்கன் என்பதை தெரிஞ்சிக்கிட்டன். , இந்த மாதிரி ஏதும் ஒரு மாதத்திற்குள்ள இடுப்புவலி இருந்ததில்லை ...இரண்டாவது கர்ப்பத்தின் போது இப்படியான மாற்றங்கள் இருக்கு... ஏன் இப்படி? கொஞ்சம் பயமாக இருக்கு!

இதைப்பற்றி எனது நண்பிகளிடம் கேட்டால் அவர்கள் சொல்கின்றார்கள் கர்ப்பப்பை விரிவடையும் போது இந்த மாதிரியான மாற்றங்கள் இருக்கும் என்று! இது உண்மையா? யாருக்காவது இப்படியான மாற்றம் ஏற்பட்டிருக்கா?

Sharmi.. if it is less than 2 months of the first trimester. Please go to your Gynecologist.If you are in US. Please go to emergency and explain them the situation. It is not really normal to happen in the first trimester.

The exapanding happens when the baby grows in the second and third trimesters.

It is better to be on safe side...

Take care
ila

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் சர்மி,
உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்கள். எனக்கும் ஒரு பையன் இருக்கான், இப்ப ஒரு குட்டி பொண்ணும்[6 மாதம் ஆகிறது]. நீங்கள் சொன்னமாதிரி என் முதல் டெலிவரியப்ப ,முதல் மாதத்தில் ரொம்ப ரொம்ப பேக் பெய்ன் இருந்தது. அப்புறம் தான் டாக்டர் கிட்டயே போனேன். ஒரு 3 மாசமா இருக்கிறப்போ வலி போயிடுச்சு. இரண்டாவது குழந்தை உண்டானப்ப எல்லா 10 மாசமும் வலி வந்தது. டாக்டர் அது நார்மல் தான்னு சொன்னார். பயப்படாதீங்க. எல்லாம் நல்லதே நடக்கும்.
Rajini

I am not scaring anyone off.. Actually.. i got the same response from moms when i was pregnant. but it was not the right one.So I always suggest that we ask such questions to qualified medical doctors. If the doctors says it is alright then we can be at peace.

Good luck you both and take care.

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

எப்பிடி இருக்கிர்கள்.

குலாப் ஜாமுன் மிக்ஸ் வைத்து பாதாம் கீரில் மிக்ஸ் பன்னி சாப்பிடலம். ஏதாவது சேமியா,பாயசம்,பால் பாயசம்,கேரட் கீர், போன்றவறிலும் பயன்ப்டுத்தலாம்.நான் நிறய்ய தடவை பால் பாயசத்திலும்,சேமியா பாயசத்திலும். மிக்ஸ் பன்னி சாப்பிட்டு இருக்கேன். ரொம்ப டேஸ்ட்ட ரிச்சா இருக்கும்.

டேக் கேர்

இத்தனை நாட்கள் இளவீரா என்ற பெயரில் நம்முடன் உரையாடியவர் ஒரு பெண்ணா?!! profile ல் கூடுதலாக ஆணா, பெண்ணா என்பதற்கு ஒரு option கொடுக்க வேண்டும் போல் இருக்கின்றது :-) நான் அவர் ஒரு ஆண் என்று நினைத்தே உரையாடிக்கொண்டிருக்கின்றேன்.

சர்மி, ஒவ்வொரு கர்ப்பத்தின்போதும் ஒவ்வொரு மாற்றங்கள் வரலாம்(சிலபேருக்கு). உடல்நிலை மாறுபட்டிருப்பதும் ஒரு காரணமாக இருக்கலாம்.(1வது கர்ப்பத்தின்போது இருந்த உடல்நிலை 2வது கர்ப்பத்தின்போது பெரும்பாலும் யாருக்கும் இருப்பதில்லை(எடை உட்பட)). அதனால் பயப்பட ஏதுமில்லை.ஆனால் முதல் மூன்று மாதம் வரை மிகவும் கவனமாக இருங்கள். வயிற்று நோ,இடுப்புவலி கொஞ்சம் கூடுதலாக இருந்தால் உடனேயே பக்கமாக சரிந்து படுத்துக் கொள்ளுங்கள். நல்ல ஓய்வு தேவை. (சிலர் சொல்வார்கள், 2 வது கர்ப்பத்தின் போது அறிகுறிகள் வித்தியாசமாக இருந்தால் குழந்தை மாறி இருக்கலாம் என்று. அதாவது உங்களுக்கு முதல் மகன் என்கிறீர்கள், இத்தடவை பெண்குழந்தையோ தெரியவில்லை- இது எவ்வளவுதூரம் உண்மை என எனக்குத் தெரியாது, ஆனால் இப்படியும் ஒரு கதை இருக்கிறது என்கிறேன்.). நலமாக பெற்றுக்கொள்ள எனது வாழ்த்துக்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அப்படி செய்யும் போது... ஆண்/பெண்/தெரிவிக்க விரும்ப வில்லை என்ற ட்ரொப் டவுன் சாய்ஸ் கொடுங்கள்

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்