குழந்தைகளின் லஞ்ச் பாக்ஸ்

பள்ளி செல்லும் குழந்தைகளுக்கு மதியம் சாப்பிட என்ன செய்து கொடுப்பது என்ற பொறுப்பு தாய்மார்களுக்கு இருக்கிறது. அந்த கடமையை, பொறுப்பை சரிவர செய்ய இந்த தலைப்பு உதவியாக இருந்தால் மிக்க மகிழ்ச்சி அடைவேன்.

திங்கள்கிழமை--- காய்கறிகள் சேர்த்த அரிசி பருப்பு சாதம், சிப்ஸ், தயிர் சாதம். ஏதாவது ஒரு பழம்.

செவ்வாய்கிழமை-----அதிக காரமில்லாத பொடி தடவிய மினி இட்லி, தயிர் சாதம், உருளைகிழங்கு வருவல்.

புதன்கிழமை------ஊத்தப்பம், வெஜ்டபிள்ஸ் சேர்த்த புலாவ், சாலட், குடிக்க தயிர், பழம்

வியாழக்கிழமை------சப்பாத்தி, தொட்டுக்கொள்ள முளைகட்டிய பாசிப்பயறு டால், அல்லது வெஜ் குருமா. ட்ரை ஃப்ரூட்ஸ், திராட்சை பழம், வெள்ளரிக்காய் சேர்த்த தயிர் சாதம்.

வெள்ளிக்கிழமை------ ப்ரட், பட்டர், ஜாம், சாம்பார் சாதம், ( அல்லது ) லைம் சாதம், காய்கறி சேர்த்த சைடிஷ்,

இதெல்லாம் எப்படி காலையில் செய்வது என்று யோசிக்காதீர்கள் எல்லாமே ரொம்ப ரொம்ப ஈஸியான பதார்த்தங்கள்தான். கொஞ்சம் திட்டமிடுதலும், குழந்தைகளின் மீது அக்கறையும் இருந்தால் போதும். வெகு சுலபமாக செய்துவிடலாம். நான் என் அனுபவத்தில் சொல்கிறேன்.

இன்னும் சொல்லப்போனால் என்னுடைய இரண்டு குழந்தைகளும் வேறு வேறு டேஸ்ட் கொண்டவர்கள் அவர்களுக்கு பிடித்தமானதையும் செய்து என் கணவருக்கு கையில் ஃபுல் மீல்ஸ்-ம் கட்டிக்கொடுத்ததில் இருந்த சந்தோஷம் வேறு எதிலும் இல்லை. இப்போது என் மகள் அதே மாதிரி அவளுடைய குழந்தைக்கும், கணவருக்கும் செய்து கொடுப்பதை கேள்விப்படும் போது அடுத்த தலைமுறையை நல்லவிதமாக உருவாக்கிவிட்டோம் என்ற சந்தோஷத்திற்கும், பெருமைக்கும் முன்னால் பட்ட கஷ்டமெல்லாம் காணாமல் போய்விடுகிறது. ஸோ, வாருங்கள் சகோதரிகளே!...

மனோகரி எப்படி இருக்கிறீர்கள்? உங்களுக்கு ஒரு பதிவு போட்டிருந்தேனே பார்த்தீர்களா? குழந்தைகளின் காலைஉணவு பகுதியில் பதில் எழுதி இருந்தேன். இந்தியாவுக்கும் யு.எஸ்-க்கும் டே- நைட் மாறி வருவதால் நமக்குள் கம்யூனிகேஷன் கேப் வருகிறது. நீங்கள் எனக்கு போடும் பதிவுகள் படிக்காமல் விடுபட்டுபோய்விடுகின்றன. அதனால்தான் அடிக்கடி என் பதிவுகளை பார்த்தீர்களா என்று கேட்கவேண்டி இருக்கிறது. இப்ப லஞ்ச்பாக்ஸ் படித்தீர்களா? நீங்கள் இன்னும் நன்றாக எழுதுவீர்கள். எழுதுங்கள் மனோகரி. மற்ற சகோதரிகளும் எழுதுங்கள்.

சகோதரி அவர்களுக்கு மிக்க நன்றி.

அறுசுவையில் ஏற்கனவே பல சகோதரிகள் இது குறித்து கேள்வி எழுப்பி இருந்தார்கள். பள்ளி செல்லும் குழந்தைகளுக்கான உணவுகள் என்று ஒரு பிரிவு கொண்டு வாருங்கள் என்று எனக்கும் தனி மின்னஞ்சலில் நிறைய வேண்டுகோள்கள் வந்திருக்கின்றன. பிரிவை கொண்டு வருவதற்கு அனுபவசாலிகளின் உதவி தேவை.

அனைவருக்குமான வேண்டுகோள்:

அறுசுவையில் மேலும் சில புதிய பிரிவுகளை கொடுக்கவுள்ளோம். அதன் தலைப்புகளை நான் இங்கே கொடுக்கின்றேன். அனுபவம் நிறைந்தவர்கள் அதற்கான உணவுக் குறிப்புகளை தொகுத்து வழங்குங்கள். அறுசுவையில் இடம்பெற்றுள்ள குறிப்புகளை எடுத்து தொகுத்துத் தரலாம். புதிய குறிப்புகள் உங்களிடம் இருந்தாலும் அதையும் வெளியிடலாம்.

1. மழலைகளுக்கான உணவுகள் (0-3 வயது)
2. பள்ளிக் குழந்தைகளுக்கான உணவுகள்
3. கர்ப்பிணி பெண்களுக்கான உணவுகள்
4. வயோதிகர்களுக்கான உணவுகள்
5. திடீர் விருந்தாளிகளுக்கான உணவுகள்
6. பேச்சுலர்ஸ் எளிமையாய் தயாரிக்கும் உணவுகள்
7. சர்க்கரை நோயாளிகளுக்கான உணவுகள்
8. இதய நோயாளிகளுக்கான உணவுகள்
9. உடல் எடை குறைக்கும் உணவுகள்
10. உடல் எடை கூட்டும் உணவுகள்
11. ஆரோக்கியமான இயற்கை உணவுகள்
12. எண்ணெயில்லா (எண்ணெய் குறைவான) உணவுகள்
13. விரத நாட்கள், விசேஷ நாட்கள் உணவுகள்

இன்னும் நியூட்ரீஷியன் அடிப்படையில் நிறைய பிரிவுகள் சேர்க்கப்படவுள்ளது. மேற்கண்ட தலைப்புகளுக்கு பொருந்தக்கூடிய குறிப்புகளை அறுசுவையில் இருந்தே தேடி எடுத்து, தொகுத்து எங்களுக்கு அனுப்பி வையுங்கள். தேவையெனில் அந்த குறிப்புகளில் மாற்றங்கள் செய்து கொள்ளலாம். குறிப்பின் தலைப்பு, அதன் URL or node no மட்டும் அனுப்பினால் போதுமானது. செய்முறையை எடுத்து அனுப்பவேண்டாம். அறுசுவையில் இல்லாத குறிப்பு என்றால் செய்முறையையும் அனுப்பவும்.

தாழ்மையான வேண்டுகோள். இந்த தலைப்புகளில் சந்தையில் ஏராளமான புத்தகங்கள் நிறைய கிடைக்கின்றன. அவற்றில் உள்ள குறிப்புகளை அப்படியே எடுத்து கொடுத்துவிடாதீர்கள். தேவைப்பட்டால் அவற்றை refer செய்து கொள்ளுங்கள். குறிப்புகள் உங்களது சொந்தக் குறிப்புகளாக இருக்கட்டும்.

லஞ்ச்பாக்ஸ்-ல் சாப்பாடு வைக்கும்போது கொஞ்சம் அலங்கரித்து வைத்தால் குழந்தைகள் விரும்பி சாப்பிடுவர்கள். உதாரணமாக தயிர்சாதம் வைக்கும்போது வட்டமான டிஃபன்பாக்ஸில் சாதத்தை வைத்து (அதாவது முகம் ஷேப்பில் )இரண்டு காய்ந்த திராட்சைகளை கண்களாகவும், வளைவாக நருக்கிய கேரட்டை புருவமாகவும், வெள்ளரிக்காயை மூக்காகவும், உதட்டிற்கு கேரட் துண்டத்தை வைத்து அழகான பொம்மை முகம் போல சாதத்தை அலங்கரித்தால் குழந்தைகளுக்கு பிடிக்கும். இட்லிக்கு நடுவில் ஒரு ஜெம்ஸ் மிட்டாயை பதித்து கொடுக்கலாம். இரண்டு விதமான கலர்களில் ஜாம் வாங்கி வைத்துகொண்டு ப்ரட்டில் மாற்றி மற்றி தடவி கொடுக்கலாம். இன்னும் ஞாபகம் வரும்போது சொல்கிறேன்.

ஹலோ டியர் எப்படி இருக்கீங்க?உங்க பதிவுகள் மற்றும் எனக்கு வந்திருந்த பதிவுகளை நேற்று காலையிலேயே பார்த்தேன், அதன் பிறகு தான் வெளியில் சென்றேன் நேற்று முழுவதும் கொஞ்சம் பிஸியாக இருந்தேன், எனக்கு வரும் பதிவுகளை கட்டாயமாக பார்வையிட்டுவிடுவேன், ஆனால் பதிலளிக்கத்தான் சில சமயங்களில் போதுமான நேரம் அமைவதில்லை. நீங்க சொல்வதுப் போல் நேர வித்தியாசம் இருப்பதால்கூட பதிவுகள் கிடைக்க, பார்வையிடகூட காலதாமதம் ஆகலாம்.உங்க லஞ்ச் பாக்ஸ் மெனுக்கள் மிகவும் நன்றாக உள்ளது,நீங்க கூறியிருப்பதுப் போல் கொஞ்சம் திட்டமிடுதல் இருந்தால் மத்திய உணவைக்கூட சிரமமில்லாமல் குடும்பத்தினருக்கு கொடுக்கலாம் என்பது முற்றிலும் உண்மை. ஆனால் நான் யாருக்கும் லன்ச் கொடுத்தனுப்பிய அனுபவம் எனக்கு இருந்ததில்லை.எனது குழந்தைகள் சிறு வயதில் படித்த பள்ளிக்கூடத்திலேயே அந்த வசதி இருந்ததால் கணவருக்கும் கம்பெனியின் கேன்ட்டீன் லன்ச் தான். அதன் பிறகு பிள்ளைகள் படித்த பள்ளிக்கூடங்களின் அருகிலேயே வீடுஎடுத்துவிடுவதால் லன்ச் கொடுத்துவிடும் சந்தர்ப்பம் அமையவில்லை. மற்றபடி மாலைநேர டிபன் செய்துவைப்பேன் அதைப் பற்றி மற்றொரு பதிவில் எழுதுகின்றேன், தொடர்ந்து இதில் உங்க குறிப்புகளை எழுதுங்க நன்றி.மீண்டும் சந்திப்போம்.

மேலும் சில பதிவுகள்