(தினம் ஒரு சமையல்) .அட்மின்!

தினம் ஒரு சமையலில் குறிப்புகள் இடம் பெற எதாவது கட்டுப் பாடுகள் உள்ளதா? விபரம் தெரிவிக்கவும்.
குலசை.சுல்தான்

திரு. சுல்தான் அவர்களுக்கு,

மன்னிக்கவும். உங்களின் இந்த பதிவை இப்போதுதான் பார்க்கின்றேன்.

தினம் ஒரு சமையல் என்று நீங்கள் குறிப்பிட்டு இருப்பது யாரும் சமைக்கலாம் பகுதியை என்று எண்ணுகின்றேன். அதில் இடம்பெறும் குறிப்புகள் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு நிறைய விதிகள் உள்ளன. "யாரும் சமைக்கலாம் பகுதிக்கு குறிப்புகள் அனுப்புவது எப்படி?" என்ற பதிவில் அவை விளக்கப்பட்டுள்ளன. அதற்கான லிங்க் முகப்பு பக்கத்தில் உள்ளது.

சுருக்கமாக சில முக்கிய விதிகளை இங்கே குறிப்பிடுகின்றேன்.

1. தெளிவான படங்களுடன் குறிப்பினை அனுப்ப வேண்டும். படங்கள் நன்றாக இல்லையெனில் வெளியிட இயலாது.

2. ஒவ்வொரு படங்களையும் விளக்கும் விதமாக குறிப்பு இருக்க வேண்டும். படங்களுக்கு சம்பந்தமே இல்லாமல் குறிப்பு கொடுத்தல் கூடாது.

3. நீங்கள் எடுத்துக்கொண்டுள்ள பொருட்களின் அளவுகள் மிக துல்லியமாக இருத்தல் வேண்டும். அது உப்பு என்றாலும் நீங்கள் எவ்வளவு உப்பு பயன்படுத்துனீர்கள் என்பதை சரியாக குறிப்பிட வேண்டும்.

4. குறிப்புகள் ஏற்கனவே யாரும் சமைக்கலாமில் இடம்பெற்றிருக்க கூடாது.

5. மிக எளிய குறிப்புகளை இப்போது வெளியிட இயலாது. இரண்டு மூன்று ஸ்டெப்ஸில் செய்யும் குறிப்புகள் இப்போது வேண்டாம். செய்வதற்கு சற்று கடினமான குறிப்புகளுக்கு முன்னுரிமை கொடுக்கப்படும். வறுவல், பொரியல் போன்றவை ஏராளமாக ஏற்கனவே இடம்பெற்றுள்ளன. அவற்றை தவிர்க்கலாம்.(நீங்கள் கொடுக்கவிருப்பது ஏற்கனவே உள்ளவற்றில் இருந்து நிறைய மாறுபட்டது என்றால் அனுப்பலாம்.)

6. படங்கள் குறைந்தது 7 இருக்க வேண்டும். அதிகப்பட்சம் 12.

படங்கள் எப்படி எடுக்க வேண்டும் என்பதற்கான டிப்ஸ் மேற்சொன்ன மன்றப்பதிவில் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும் கேள்விகள் இருந்தால் கேட்கவும்.

தினம் ஒரு புதிய உணவு என்று படத்துடன் உள்ளதே.. அதைத்தானே குறிப்பிடுகின்றீர்கள்?! அதுதான் யாரும் சமைக்கலாம் பகுதி. அதைப் பற்றிதான் எனது முந்தைய பதிவில் விளக்கினேன்.

அங்கிள் புதிதாக வரும் குறிப்பு முதல் பக்கத்தில் வரும், பின்னர் அடக்க ஒடுக்கமாக "யாரும் சமைக்கலாம்" பகுதியில் ஒதுங்கிக்கொள்ளும். கவனித்தால் விளங்கும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நீங்கள் இன்னமும் அறுசுவையை முழுமையாக பார்வையிடவில்லை என்று நினைக்கின்றேன். :-)

அந்த பகுதியின் பெயர் யாரும் சமைக்கலாம் என்பது. ஸ்டெப் பை ஸ்டெப் படங்களுடன் இடம்பெறும் குறிப்புகள் மட்டும் அந்த பகுதியில் வெளியாகும். அந்த பகுதியில் தினம் ஒரு புதிய குறிப்பினை படங்களுடன் சேர்த்து வருகின்றோம். இதற்காக ஏராளமான குறிப்புகளை நாங்கள் சேகரித்து வைத்துள்ளோம்.

அதுமட்டுமல்லாமல் அறுசுவை நேயர்கள் சிலரும் அந்த பகுதிக்கு படங்களுடன் குறிப்புகள் அனுப்புகின்றார்கள். அவை நன்றாக இருக்கும்பட்சத்தில் அந்த குறிப்புகளையும் வெளியிடுகின்றோம். அந்த பகுதிக்கு குறிப்புகள் அனுப்புவதற்கான விதிமுறையைத்தான் நான் ஏற்கனவே விளக்கியிருந்தேன்.

நீங்கள் குறிப்புகள் கொடுத்து வருவது கூட்டாஞ்சோறு பகுதிக்கு. அங்கு கொடுக்கப்படும் குறிப்புகளுக்கு படங்கள் இருக்காது. இங்கே யாரும் சமைக்கலாம் பகுதியில் உங்கள் குறிப்பு இடம்பெற வேண்டுமென்றால் நீங்களும் உங்கள் சமையலை படங்கள் எடுத்து அனுப்பலாம். அவை ஏற்றுக்கொள்ளப்படும் விதத்தில் இருந்தால் அவற்றை வெளியிடுவோம்.

கடைசியாக சேர்க்கப்படும் குறிப்பின் படம் முகப்பு பக்கத்தில் இருக்கும். அடுத்த குறிப்பு சேர்க்கப்பட்டவுடன் அந்த குறிப்பின் படம் போய் அடுத்த குறிப்பிற்கான படம் அங்கே வந்துவிடும். அந்த பகுதியில் உள்ள அனைத்து குறிப்புகளும் "யாரும் சமைக்கலாம்" என்று உள்ள பக்கத்தில் பட்டியலிடப்படும். சில நேரங்களில் பல்வேறு காரணங்களால் அடுத்த குறிப்பினை சேர்க்க தாமதம் ஆகிவிடும். அம்மாதிரி நேரங்களில் கடைசியாய் வெளியிட்ட குறிப்பின் படம் அடுத்த குறிப்பு வெளியிடப்படும் வரை முகப்பு பக்கத்தில் இருக்கும்.

இது தவிர்க்க இயலாமல் ஏற்படுவது. மற்றபடி யாருக்கும் எந்த முன்னுரிமையும் கொடுத்து அதிக நாட்கள் முகப்பு பக்கத்தில் வருமாறு செய்வது கிடையாது.

ஏற்கனவே எங்களிடம் ஏராளமான குறிப்புகள் (அடுத்த இரண்டு வருடத்திற்கு வெளியிடும் அளவிற்கு) படங்களுடன் உள்ளன. அவற்றை வரிசையாக வெளியிட்டால் தடங்கலின்றி தினம் ஒரு குறிப்பு வருமாறு வைத்துவிடலாம். ஆனால், அறுசுவை நேயர்கள் பலர் அவர்கள் குறிப்பினை படங்களுடன் அனுப்பி வைப்பதால், அவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து அவற்றை முதலில் வெளியிட வேண்டியுள்ளது. இல்லையென்றால் படங்கள் அனுப்பிய இரண்டாம் நாளே "என்ன எனது குறிப்பை இன்னமும் வெளியிடவில்லை?" என்று மெயில் அனுப்பி விடுகின்றார்கள். :-)

செல்வியக்கா, திருமதி. நர்மதா போன்றவர்கள் நிறைய குறிப்புகள் அனுப்பி இருக்கின்றார்கள். இரண்டு மூன்று மாதங்களாகியும் அவர்களது குறிப்புகளில் நிறைய இன்னமும் வெளியிடப்படாமலே இருக்கின்றது. அந்த பகுதியில் தினமும் இரண்டு குறிப்புகளை வெளியிடலாமா என்பதை பரிசோதித்து வருகின்றோம். சில மாற்றங்களை செய்தபின்பு அதை கொண்டுவருகின்றோம்.

நீங்கள் குறிப்பிட்டுள்ளதை வைத்து பார்க்கும்போது, அறுசுவை குறிப்புகளில் இருந்து ஏதேனும் ஒரு குறிப்பை தேர்வு செய்து அதை முகப்பு பக்கத்தில் வெளியிடுவதாக தாங்கள் எண்ணியுள்ளீர்கள் என்பது தெரிகின்றது. அப்படியல்ல. ஏற்கனவே இடம்பெற்றுள்ள குறிப்புகளை அங்கே தேர்வு செய்து வெளியிடவில்லை. அவை புதிதாக படங்களுடன் சேர்க்கப்படும் குறிப்புகள். இன்றைய தினம் புதிதாய் சேர்க்கப்பட்ட குறிப்பு, இன்றைய ஸ்பெஷலாக முகப்பு பக்கத்தில் வரும். நீங்களும் படங்களுடன் குறிப்புகள் அனுப்பினால் அவையும் அங்கே வெளியாகும். ஒரு நாள் முகப்பில் லிங்க் கொடுக்கப்படும். அதன்பிறகு யாரும் சமைக்கலாம் பகுதியில் பட்டியலிடப்படும்.

உங்களது சந்தேகத்திற்கு விடை கொடுத்துள்ளேனா? :-)

எனக்கும் கொஞ்சம் ஆசை இருந்தது, யாரும் சமைக்கலாம் பகுதிக்கு குறிப்பு அனுப்பலாமே என்று, இப்போ அட்மினின் பதிலைப் பார்த்ததும் என் கண்ணே பட்டுவிடும் போலுள்ளதே... இரு வருடங்களுக்குப் போதுமான குறிப்புகள் உள்ளனவா? என்னிடம் இருந்த கொஞ்ச ஆசையும் போயே விட்டது. எனக்குக் கூட்டாஞ்சோறே போதும். குறிப்புகளை அனுப்பிவிட்டுக் காவலிருக்கப் பொறுமையில்லை.

நான் நினைத்திருந்தேன், புதிய குறிப்புகள் வராத காரணத்தால்தான் " தினம் ஒரு குறிப்பு " மாற்றப்படாமல் சில நாட்கள் இருக்கின்றது என. இப்பதானே எல்லாம் புரியுது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சகோதரி அதிரா அவர்களுக்கு,

உங்கள் குறிப்புகளை இரண்டு வருடங்கள் கழித்துதான் வெளியிடுவோம் என்று நாங்கள் சொல்லவில்லையே :-) நேயர்கள் அனுப்பும் குறிப்பிற்குதான் முன்னுரிமை கொடுக்கின்றோம் என்று குறிப்பிட்டு இருந்தேன்.

உண்மைதான். எங்களிடம் தற்போது 600க்கும் மேற்பட்ட குறிப்புகள் வெளியிடப்படாமல் இருக்கின்றன. தொடர்ந்து சேகரித்தும் வருகின்றோம். அடுத்த மாதங்களில் பிற மாநில குறிப்புகளையும் சேகரிக்கவுள்ளோம். அறுசுவை தளம் மாற்றியமைக்கப்பட்டவுடன் தினமும் ஒன்றுக்கு மேற்பட்ட குறிப்புகள் படங்களுடன் வெளிவரும்.

தற்போது உள்ள பிரச்சனை என்னவெனில், யாரும் சமைக்கலாம் பகுதி குறிப்புகளை நான் மட்டுமே வெளியிட இயலும். என்னால் இணையத்தில் நுழைய முடியாத தினங்களில் ஒரே குறிப்பே பலநாட்கள் வரும்படி ஆகிவிடுகின்றது. முன்பே குறிப்புகள் பலவற்றை சேர்த்து, தினமும் ஒன்று வரிசையாக வரும்படி ப்ரொகிராம் வசதி செய்துள்ளேன். ஆனால் அந்த வசதியை அதிகம் பயன்படுத்துவதில்லை. அதற்கான காரணத்தைதான் குறிப்பிட்டு இருந்தேன். நேயர்கள் அவ்வபோது குறிப்புகள் அனுப்பி வருவதால் அவற்றை முதலில் வெளியிட வேண்டியிருக்கும். அப்போது அந்த ப்ரொகிராமில் உள்ள வரிசையை மாற்றுவதில் சிரமங்கள் இருக்கும்.

உங்களுக்கு எனது ஆலோசனை, வெறும் குறிப்புகள் கொடுப்பதை குறைத்து படங்களுடன் குறிப்புகள் அனுப்ப முயற்சி மேற்கொள்ளுங்கள். நமது தளத்தில் மிக அதிகம் பார்வையிடப்படும் பகுதி யாரும் சமைக்கலாம்தான். அறுசுவையில் உள்ள அனைத்து குறிப்புகளையும் படங்களுடன் வெளியிடும் முயற்சி எடுத்து வருகின்றோம். ஒரு காலத்திற்கு பின்பு, படங்கள் இல்லா குறிப்புகளை பார்வையிடுவோர் எண்ணிக்கை மிகவும் குறைந்துவிடும். வெறும் குறிப்புகளில் இருக்கும் ஏராளமான பிரச்சனைகள் படங்களுடன் வெளியிடும்போது இருக்காது.

அப்படிண்டரீங்க?நானும் படங்களுடன் கொடுக்க முயைற்ச்சிக்கிறேன்...என்ன எனக்கு நீட்டா தட்டில் பொருட்களை அடிக்கி வச்சு படம் புடிக்க பொறுமை இன்னும் வரவில்லை...இனி முயற்சிக்கலாம்.

அன்புடன் சகோதரர் அட்மினுக்கு,
உங்கள் பதிலுக்கு நன்றி. எனக்குப் புரிகிறது, நீங்கள் சொல்வது. படம் அனுப்புவதற்கு அளவுகள் குறிப்பிட்டுள்ளீங்கள். அந்த அளவிற்கு படத்தை மாற்றுவது எனக்குத் தெரியவில்லை. சாதாரண டிஜிரல் கமெராவில் எடுத்து உங்கள் இ. மெயிலுக்கு அப்படியே அனுப்பினால் உங்களால் சேர்க்க முடியுமா? அல்லது அது சிரமமா? . நேரம் கிடைக்கிறபோது எனக்குப் பதில் தந்தால் சந்தோசப்படுவேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சாதாரண டிஜிட்டல் கேமராவில் எடுக்கப்படும் படம் போதுமானது.

படத்தின் அளவு என்பது, Resolution பற்றியது. அதாவது நீங்கள் டிஜிட்டல் கேமராவில் படம் எடுக்கும்போது 640x480 என்ற web resolution (குறைந்த resolution) ல் படம் எடுத்து அனுப்புங்கள். அதிக resolution ல் படம் எடுத்தால் ஒவ்வொரு படத்தின் அளவு, அதாவது file size அதிகமாக இருக்கும்.

உதாரணமாக, நீங்கள் 2 MB resolution ல் எடுத்தால், ஒவ்வொரு படமும் 2 MB file size ல் இருக்கும். பத்து படங்கள் எடுத்தால் 20 MB ஆகிவிடும். படங்கள் எடுப்பதில் பிரச்சனை இருக்காது. ஆனால் அவற்றை எனது மெயில் அட்ரஸ்க்கு அனுப்புவதில் சிரமம் இருக்கும். உங்களுக்கு அத்தனை files ம் அனுப்புவதற்கு நேரம் எடுக்கும். எனக்கு அவற்றை download செய்யவும் நேரம் எடுக்கும்.

அதனால்தான் file size ஐ குறைத்து அனுப்பும்படி வேண்டுகோள் விடுக்கின்றேன். நீங்கள் எந்த resolution ல் வேண்டுமானாலும் படம் எடுங்கள். பிரச்சனை இல்லை. அப்படி எடுத்த படத்தை photo shop போன்ற image editor ல் திறந்து, Save as web page ல் JPEG file ஆக, resolution ஐ குறைத்து save செய்துகொள்ளுங்கள். 2MB file ஐ வெறும் 50, 60 KB file ஆக குறைத்துவிடலாம். இதை அனுப்புவதும் மிக எளிது.

இதை செய்ய இயலவில்லை அல்லது தெரியவில்லை என்றால் நீங்கள் குறிப்பிட்டுள்ளதுபோல் படங்களை அப்படியே எனக்கு மெயில் செய்துவிடுங்கள்.

அன்புடன் அட்மினுக்கு,
நீங்கள் குறிப்பிட்டதுபோல், எடுக்கும் படங்களை மாற்றி அனுப்ப முயற்சிக்கிறேன். மிகவும் நன்றி.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்