கோதுமை காரட் கொழுக்கட்டை

தேதி: March 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கோதுமை மாவு- 3 1/2 கப்
கடலை மாவு- 1 கப்
காரட்-2
பேக்கிங் சோடா- கால் ஸ்பூன்
பொடியாக அரிந்த வெந்தயக்கீரை- 1 கப்
மிளகாய்த்தூள்- 1 ஸ்பூன்
வறுத்த எள்- 1 மே.க
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
போதுமான உப்பு
எலுமிச்சை சாறு- அரை ஸ்பூன்
கீழ்க்கண்டவற்றை ஒன்று பாதியாக அரைக்கவும்:
பச்சை மிளகாய்-1, பட்டை-1, சோம்பு-அரை ஸ்பூன், துருவிய இஞ்சி- அரை ஸ்பூன், பூண்டு- 5 இதழ்கள், தேங்காய்த்துருவல்- கால் கப்


 

மாவுகளை சலித்துக் கொள்ளவும்.
காரட்டுகளைத்துருவவும்.
அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலந்து சிறிது தண்ணீர் தெளித்து நன்றாகப் பிசைந்து கொள்ளவும்.
சிறிய உருண்டைகள் உருட்டி அவற்றை 15 நிமிடங்கள் ஆவியில் வேக வைத்து எடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்