கடலை பக்கோடா

தேதி: March 19, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

வறுத்தெடுத்த, தோலெடுத்த கடலை- 1 கப்
கடலை மாவு- 200 கிராம்
அரிசி மாவு- 200 கிராம்
மிளகாய்த்தூள்- 1 மே.க
பெருங்காயப்பொடி- 1 ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
பொடியாக அரிந்த வெங்காயம்- அரை கப்
பொடியாக அரிந்த புதினா இலைகள்- அரை கப்
வெண்னெய்- 2 மேசைக்கரண்டி
தேவையான உப்பு
பொரிப்பதற்குத் தேவையான எண்ணெய்


 

அனைத்துப் பொருள்களையும் ஒன்றாகக் கலக்கவும்.
சிறிது தண்ணீர் தெளித்து பிசையவும்.
சூடான எண்ணெயில் கடலைக் கலவையை சிறிது சிறிதாகப் போட்டு பொன்னிறமாகப் பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

வறுத்த கடலை என்றால் என்ன கடலை? வேர்க்கடலையா?பதில் தெரிவிக்கவும்.
என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

என்றென்றும் அன்புடன்,
ஆசியா உமர்.

வேர்க்கடலையைத்தான் நான் குறிப்பிட்டிருக்கிறேன். தோல் நீக்கப்பட்ட வேர்க்கடலை முத்துக்களை வறுத்து, அவற்றின் மெல்லிய தோலையும் புடைத்து நீக்க வேண்டும்.

மனோ மேம் எப்படி இருக்கிங்க?வீட்டில் அனைவரும் நலமா?உங்க பகோடா நல்ல கிரிஸ்பியா சூப்பரா இருந்தது மேம்.நன்றி உங்களுக்கு!!

அன்புள்ள மேனகா!

என் நலம்- என் குடும்பத்தினர் நலம் விசாரித்ததற்கு மகிழ்ச்சி! நீங்கள் என்றும் உங்கள் குடும்பத்தினருடன் நலமாக இருக்கவே பெரிதும் விரும்புகிறேன்.

வேர்க்கடலை பக்கோடா சுவையாக இருந்ததென உங்களின் அன்பான பின்னூட்டம் எனக்கு மிகவும் மகிழ்ச்சியைத் தந்தது. என் அன்பு நன்றிகள்!!