மெஹர் சுல்தான் இதோ உங்களுடன் !!

குலசை சுல்தானின் இல்லத்தரசி மெஹர் சுல்தான் இதோ உங்களுடன் முதன் முதலாக உரையாட வருகிறார்.
அவருக்கு கம்யூட்டர் உபயோகிக்க தெரியாததால் இதுவரை அறுசுவை டாட் காம்மை பார்வை மட்டுமே செய்து வந்தார்கள்.உங்களோடு கலந்துரையாட ரெம்பவும் விருப்பப் படுகிறார்கள். ஆகவே இனி வரும் எண்ணங்களும் கருத்துக்களும் அவர்களுடையது. எழுத்துக்கள் மட்டுமே நான். (இது கூட செய்யலேன்னா எப்படிங்க எனும் முனுமுனுப்பு காதில் விழுகிறது)இனி அவர்கள் பாடு. உங்கள் பாடு.
இதோ தொடர்கிறார்கள்..மெஹர் சுல்தான்....
அன்பு சகோதரிகளே! இறைவனின் சாந்தியும் கருணையும் உங்கள் அனைவர் மீதும் உண்டாகட்டுமாக!
உங்களின் அண்ணன் பணி ஓய்வு பெற்று ரியாத்திலிருந்து சென்னை வந்ததிலிருந்து இன்று வரை கணீனியிலேயே மூழ்கி விட்டார்கள். சமுதாயப் பணியை கணீனி மூலம் செய்து வருகிறார்கள்.கேட்டால்,மறுமைக்காகவும் கொஞ்சம் புண்ணியம் சேரட்டுமே என்கிறார். கடந்த சில நாட்களாக அறுசுவை டட் காமில் தான் பொழுதை கழிக்கிறார்கள். அவ்வப்போது இந்த தளத்தை பற்றியும் இதில் பங்களிபோர் பற்றி யும் ரெம்பவும் பெருமையாக பேசிக் கொண்டிருப்பார். குறிப்பாக ஜலீலா,தளிகா,அதிரா பற்றி பெருமையாக கூறுவார். ஜலீலாவை சகல கலா வல்லி என்பார்.
சமையலில் விருப்பம் உள்ளவர். பிரைட் ரைஸ் முதல் kfc சிக்கன் வரை அனேக அரபியன்,சைனிஸ் குறிப்புகள் அவரிடமிருந்து தான் நான் கற்றுக் கொண்டேன்.
எங்களின் பேத்தி அமிராவின் பிறந்த நாளுக்கு உலகின் பல திக்குகளில் இருக்கும் உங்கள் அனைவரது வாழ்த்துக்களை பார்த்ததும் கண்களில் நீர் சுரந்தது. உங்கள் அனைவருக்கும் என்னுடைய நெஞ்சார்ந்த நன்றி. இப்போது அமிரா அவள் பெற்றோருடன் சார்ஜாவில் இருக்கிறாள்.
இன்று உங்களோடு ஐக்கியமாகிவிட்டதால், நானும் ஒரு சமையல் குறிப்பு தரலாம் என நினைத்து"ஓட்டு மாவு" எனும் குறிப்பை பதிவு செய்கிறேன். ஆனால் நிச்சயம் வெளி நாட்டில் இருந்து கொண்டு இதை செய்வது கடினம். தாயகத்திலோ,இலங்கையிலோ செய்யலாம். குறிப்பினை பாருங்கள்.கருத்தினை கூறுங்கள்.சகோதரிகள் செல்வி, மனோ, நந்தினி, ஜலீலா,தளிகா,அதிரா,விஜி,பர்வின்,ஆஸியா,கதிஜா மற்றும் பெயர் விட்டு போன சகோதரிகள் அனைவர்களுக்கும் மீண்டும் எனது வாழ்த்தினை கூறுகிறேன். இரண்டு தலை முறைகளுக்கு இடையே ஒரு பாலமாக அறுசுவை.காம் விளங்குவது பாராட்டுக்குரியது. தொடருவோம் நம் உறவினை இந்த தளம் மூலமாக.
சகோதரி.மெஹர் சுல்தான்.

ஆகா இப்ப பார்க்க அருசுவை மக்கர் பன்னுதே விரிவாக எழுத முடியவில்லை, அஸ்ஸலாமு அலைக்கும் மெஹர் அக்கா, வருக போனவாரம் தான் ஓட்டு மாவு குறிப்பை பற்றி தான் யோசனை.
இங்கு பிரிந்து வாழ்பவர்களுக்கு அவரவர் மனைவி மார்கள் முதலில் அனுப்பும் பண்டம் இது தான்.
இது ஒரு கப் சாப்பிட்டு ஒரு சுலைமானி இது தான் காலை டிபன் அவர்களுக்கு,
நானும் என் ஹஸ்பண்ட் சவுதியில் இருந்த போது
மைதாமாவு இனிப்பு பிஸ்கேட்,வேர்கடலை,முந்திரி வருத்து அதேல்லாம் கொடுத்தனுப்புவேன்.
ஜலீலா

Jaleelakamal

மெஹர் ஆன்ரி, சுல்தான் - அங்கிள், ஆகவே நீங்க ஆன்ரியேதான். உங்களை அன்புடன் வரவேற்கிறோம். தற்செயலாக இந்தத் தலைப்பு கண்ணில் பட்டதால் பதில் போட முடிகிறது. டைப்பிங் பழகிட்டால் போச்சு. சுல்தான் அங்கிளை பின் பெஞ்சுக்குத் தள்ளிட்டு நீங்க முன்பெஞ்சைப் பிடியுங்க. இனி அறுசுவைதானா? அப்ப அகப்பையை அங்கிளிடம் கொடுங்கள் இனி சமையலை அவர் பார்த்துக்கொள்வார்.... என்ன அங்கிள் நல்ல ஐடியா எல்லாம் கொடுக்கிறேனே என்று கோபமா? வேண்டாமே...... றிலாக்ஸ்.....

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சலாம் சுல்தான் அண்ணா..என் ப்ரவுசருக்கும் உங்க தளத்துக்கும் சண்டை எப்பெல்லாம் அதை பாக்கரேனோ அப்பெல்லாம் ஸ்டக் அப் ஆகும்...உங்களுக்கு பதில் பதிவு போடரதுக்குள்ள உயிரே போய்விடும்..தோ இப்ப வெளிய கிளம்பிட்டேன்..சும்ம வந்து பாத்தா இப்ப பதிவு போட முடியும் ஆனால் நேரம் இல்லை...மெஹர் அவங்களை இனி சொந்தமா அ ஆ இ ஈ ந்னாலும் தானாக டைப் பன்ன சொல்லுங்கள்..1 மாசம் தான் சரிபன்னிடரோம்...பாய் பாய்

அங்கிள் எனக்கு சிறு வயது தொடங்கி ஒரு சந்தேகம், இப்போ உங்கள் மூலம் அதைத் தீர்க்கலாம் என எண்ணுகிறேன். இஸ்லாமியர்கள் ஏன் தண்ணீர் குடிக்கிறபோது நின்று குடிக்க மாட்டார்கள். முடிந்தால் பதில் சொல்லுங்கள். போய்விட்டு பின்னர் வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நானும் உங்கள் வகை தான் எனக்கும் தமிழில் டைப் பன்ன கொஞ்சம் கஷ்டமாக உள்ளது. அதனாலேயே நான் மன்றத்தில் சாட் பன்ன வர தயக்கமாக உள்ளது. சுல்தான் ஸாரை போக விடாதிங்க். அவரையும் அறுசுவையில் உக்கார வையுங்க. அவர் இல்லை என்றால் போர் அடிக்கும். நல்ல அறிவுரைகள் எல்லாம் குடுப்பார்கள். நானும் நெல்லை பக்கதில் தான். திருவணந்தபுரம். வாங்க மேடம் தினமும் சாட் பண்ணலாம்.

எனக்கும் தமிழ் கொஞ்சம் கஷடமாக தான் இருக்கிறது. சுல்தான் ஸார் அறுசுவை க்கு வர சொல்லுங்க ஏன என்றால் அவர் இல்லை என்றால் அறுசுவை ந்ல்லா இருக்காது. நானும் நெல்லை க்கு ப்க்கத்து ஊர் தான். திருவணந்தபுரம்.

அன்பு அண்ணி மெஹர் அவர்களுக்கு,
(தங்கள் கணவர் சகோதரர் என்றால் நீங்கள் அண்ணிதானே:-))

அறுசுவைக்கு தங்கள் வரவு நல்வரவாகுக. கணவரும், மனைவியுமாக சேர்ந்து கலக்கப் போகிறீர்கள்:-))

வந்ததும் என்னையும் அழைத்து வாழ்த்தியதற்கு நன்றி.
தங்களின் முதற் குறிப்பே நன்றாக உள்ளது.
என்னால் அடிக்கடி உங்களுடன் பேச முடியா விட்டாலும், அவ்வப்போது பேசுகிறேன். நன்றி.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

மெஹர் அண்ணி நலமாக இருக்கிறீர்களா. என்னையும் அழைத்ததற்க்கு நன்றி.இனி நீங்களும் அறுசுவை சகோதரிகள் அனைவருடனும் பேசலாம். நீங்கள் எங்கள் யாருடனாவது பேசனும் என்றால் எங்களுக்கு உள்ள பதிவை போட்டு விடுங்கள் நாங்கள் ஆன்லைனில் இருந்தால் உடனே உங்களுக்கு பதில் தருவோம் இல்லை என்றால் நாங்கள் ஆன்லைனில் வரும் சமயம் கண்டிப்பாக பதில் தருவோம்.சுல்தான் அண்ணா நீன்களும் உங்களுடைய கருத்துக்களை இந்த சகோதரிகளுடன் பகிந்துக்கொள்ளுங்கள்.

அன்புடன் கதீஜா.

அன்புள்ள அக்கா அனைவருக்கும் வணக்கம்
எனக்கு ஆந்தரா வெங்காய பஜ்ஜி எப்படி செய்வது சொல்லுங்க please

regards
radika

சுல்தான் அண்ணா, மெஹர் மைனி,
அஸ்ஸலாமு அலைக்கும்,
நெற்று பேசியதோடு இந்த பகுதியில் காலையில் இருந்து உள்ளே நுழைய முடியவில்லை.
இப்பதான் நுழைய முடிந்தது.
நான் சகலா கலா வல்லி எல்லாம் கிடையாது,
உங்களுடைய அனுபவத்திற்கு என்னுடையது ஒன்றுமே இல்லை
எனக்கு தெரிந்ததை அது மற்றவர்களுக்கு பயன் படும் என்றால் உடனே சொல்ல வில்லை என்றால் என் மண்டையே வெடித்து விடும் போல இருக்கும்.

ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்