குழந்தை பேச என்ன் செய்யணும்?

என் மகனுக்கு 22 மாதம் ஆகின்றது. இன்னும் பேசாமல் இருக்கிறான். 4/5 வார்த்தை மட்டும் சொல்கிறான்(That too rarely). நான் சொல்வதை சரியாக புரிந்து கொள்கிறான். ஏதேனும் வேண்டும் என்றால் கை காட்டுகிறான்.TV பாடல் வந்தால் Hum பண்ணி Dance ஆடுறான். அவனை பேச வைக்க நான் என்ன செய்ய வேண்டும்?.
Please give me your suggestions.
Shyama

சில குழந்தைகள் சீக்கிரம் பேச ஆரம்பித்து விடும். சில குழந்தைகள் லேட்டாக பேச ஆரம்பிக்கும்.
குழந்தையிடம் நிறைய பேச்சுக் கொடுங்கள். இது என்ன, அது என்ன என்று கேளுங்கள்.
கலர்புல் புத்தகங்கள் (விலங்குகள், பறவைகள், பழங்கள், காய்கறிகள், போன்றவை) வாங்கி காண்பியுங்கள். பேச்சுக் கொடுத்துக்கொண்டே இருந்தால் சீக்கிரம் பேச வந்துவிடும்.
கவலையே படாதீர்கள். உங்கள் குழந்தை போதும் பேசுவது என்று சொல்லும் அளவுக்கு பேசுவான்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

குழந்தைகளை பேசவைக்க முதலில் நாம் அவர்களோடு நிறைய பேசவேண்டும். அவர்கள் சந்தோஷமாக இருக்கும்போது வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கவேண்டும். பசியோடு இருக்கும்போதோ அல்லது தூக்கம்வரும் நேரத்திலோ புது வார்த்தைகளை சொல்லிக்கொடுக்கக்கூடாது. வெளியில் எங்காவது அவுட்டிங் கூட்டிசென்றுவிட்டு வரும்வழியில் நன்றாக பேச்சுக்கொடுத்துக்கொண்டே வரவேண்டும். அங்கு பார்த்தவைகளை பற்றி கேள்வி கேட்டு பதில் சொல்லவைக்க வேண்டும். பொதுவாக குழந்தைகள் வெளியில் எங்காவது விளையாட கூட்டிசென்றால் சந்தோஷப்படுவார்கள். அந்த நேரத்தில் பேசச்சொல்லிக்கொடுங்கள். பொதுவாக ஆண்குழந்தைகள் லேட்டாத்தான் பேசுவார்கள் என்று சொல்வார்கள். அது எந்த அளவுக்கு உண்மை என்று தெரியவில்லை. 2 வயது ஆனவுடன் பக்கத்தில் இருக்கும் ' ப்ளே ஸ்கூல் '-ல் சேர்த்துவிடுங்கள். அப்புறம் பாருங்கள் மற்ற குழந்தைகள் பேசுவதை பார்த்து இவர்களும் பேச ஆரம்பித்து விடுவார்கள். நீங்கள் குழந்தையோடு நிறைய பேசவேண்டும் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.

அன்பு ஷ்யாமா,
உங்கள் மனநிலை எனக்கு நன்கு புரிகிறது. ஏனெனில் என் பையன் அப்படித்தான் இருந்தான். நான் தினம் அழுவேன். அப்ப டாக்டரிடம் காட்டியதற்கு அம்மா என்று சொன்னால் கண்டிப்பாக பேசுவான். அதர்கு நீங்கள்தான் முயற்சி எடுக்கணும்னு சொன்னார். இரண்டரை வயதாகியும் பேசவில்லை.
பிரீ கேஜி அனுப்புங்க, அங்க குழந்தைங்க பேசறத பார்த்து பேச ஆரம்பிப்பான் என்றார். அப்பறம் அவன் என்ன செய்துகிட்டு இருந்தாலும் நீங்க அவன் கூட பேசிகிட்டே இருங்கன்னும் சொன்னார். குழந்தையின் நாக்கின் அடிபாகம் கீழ்தாடையோடு அதிகம் ஒட்டிக் கொண்டிருந்தால் பேச்சு லேட்டாக வரும், ரொம்ப கஷ்டமா இருந்தா 5 வயதிற்க்கு மேல் சின்ன சர்ஜரி செய்யணும் என்றார். விடுவேனா நான்?
எப்பப் பார்த்தாலும் பேசிகிட்டே இருப்பேன். அவன் ஜாடையா சொல்ற எதையும் காதில வாங்கிக்கவே மாட்டேன். அவனா வாயை திறந்து சொல்லும் வரை விட மாட்டேன். ரொம்ப நாள் அவனுக்கு ர வராது.
இப்ப சரியாயிட்டான்.
கொஞ்ச நாள் திக்கினான். வீட்டில இருக்கிற எல்லாரும் அதையே திரும்ப சொல்ல சொல்லுவோம். அதுதான் வழி, பேச வைக்க.
சரியாகும், கவலைப்படாதீங்க. முயற்சியுங்கள். பேசிக்கிட்டே இருங்க, அதுதான் முக்கியம். உங்க உதட்டு அசைவை குழந்தை பார்க்கணும். அடுதான் முக்கியம்.
இப்ப டயம் ஆச்சு. மீதி பிறகு.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

ஷ்யாமா, உண்மைதான் நானும் கேள்விப்பட்டேன் பெண்குழந்தைகள்தான் சீக்கிரம் கதைப்பார்கள் என்று. ஆனால் வீட்டில் நிறையப்பேர் இருந்தால் பிள்ளைகள் விரைவில் கதைக்கிறார்கள்.

எனது மூத்தமகன் 1 1/2 வயதிலேயே கதைக்க தொடங்கிவிட்டார். காரணம் எனது பெற்றோர் எம்முடன் இருந்தார்கள் எந்நேரமும் அவனுடன் விழையாடிக் கதை சொல்வார்கள் அதனால் சீக்கிரமே கதைத்தார். ஆனால் 2 வது மகன் 3 வயதில்தான் ஒழுங்காக கதைக்கத் தொடங்கினார். நானும் உங்களைப்போல்தான் ஆட்களைக் கேட்டுக்கொண்டு திரிந்தேன். அதனால் பெரிதாக யோசிக்க வேண்டாம்.

மேலே ஜெ மாமி. மாலா ஆன்ரி கூறியதுபோல் நிறைய நேரம் அவருடன் மினக்கெடவேண்டும். ஆனால் தொந்தரவு செய்யவேண்டாம். நேரம் வர... ஐயோ கொஞ்ச நேரம் சும்மா இருக்கிறியாடா என்று சொல்லுமளவிற்கு கேள்வி கேட்பார்கள். 3 வயதின் பின்னரும் கதைக்கவில்லையாயின் கொஞ்சம் யோசிக்கலாம் ஏன் என்று. அதுவரை நிறைய கதையுங்கள். பொதுவாக அதிகாலையில் தான் குழந்தைகள் நிறைய கதைக்கப்பார்ப்பார்கள். அப்போ அலுப்பு பார்க்காது நீங்களும் சேர்ந்து பாடி கதையுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பு ஷ்யாமா,
மதியம் ஆபீசுக்கு போகும் அவசரத்தில் பதிவு போட்டேன். உங்களுக்கு புரிந்ததோ இல்லையோன்னு சந்தேகம்.
சகோ. மாலதி சொன்னது போல் பிளே ஸ்கூலுக்கு அனுப்புங்க. நாம எவ்வளவு சொல்லிக் கோடுத்தாலும் செய்யாத குழந்தைகள் அவங்களை ஒத்த வயதுடைய குழந்தைகள் செய்யும் போது கண்டிப்பாக செய்வார்கள்.

நாம குழந்தைகிட்ட பேசிக்கிட்டே அவங்களையும் பேச வைக்கணும்.
எந்த வார்த்தை சொல்றாங்களோ அதை திரும்ப திரும்ப சொல்ல வைக்கணும். உதாரணமாக தண்ணின்னு சொல்ல வருதுன்னா, நம்மகிட்ட தண்ணி வேணும்னு ஜாடையில் சொன்னா நாம கவனிக்காத மாதிரி இருந்துகிட்டு, வாயால் சொல்ல வைக்கணும்.

பொதுவாகவே ஆண் குழந்தைங்க லேட்டாத்தான் பேசும். பயப்பட வேண்டாம்.
எங்க பையன் பத்தாவது வரும் போதுதான் சரியா பேசினான்.(திக்காமல்)
குழந்தை பேசும் வரை நீங்க பேசுங்க, பேசுங்க, பேசிக்கிட்டே இருங்க.
அன்புடன்,
செல்வி.

அன்புடன்,
செல்வி.

என் பையனுக்கு 32 மாதம் ஆகிறது. அவரை 26 மாதத்தில் இருந்து pre-schoolக்கு அனுப்புகிறேன். அவர் ஸ்குலுக்கு போன பிறகு தான் பேசுகிறார். இன்னும் என் பக்கத்து வீட்டு தோழியின் குழந்தையிடம் இருந்து நிறைய கத்துக் கொண்டு பேசுகிறார். அவர் வயது குழந்தையோடு விளையாட விடுங்கள்.
ஜெ மாமி. மாலதி மேடம், செல்வி கூறி இருப்பது போல் செய்யுங்கள்.
மாலதி மேடம் கூறி இருப்பது முற்றிலும் உண்மை. என் பையன் எங்களிடம் இருந்து கற்றதை விட அவர் தோழியிடம் இருந்து கற்ற வார்தைகள் தான் அதிகம்

ஷ்யாமா, ஒவ்வொரு குழந்தைக்கும் development ஒவ்வொரு மாதிரி இருக்கும். என் பெண்ணை இப்போது பார்ப்பவர்கள் அவள் 3 வயது வரை ஒரு வார்த்தையும் பேசவில்லை என்று சொன்னால் நம்ப மாட்டார்கள். அவளை வைத்து எனக்கு இதில் நிறைய அனுபவம் உண்டு, அதனால் உங்களுக்கு கண்டிப்பாக ஒரு பதில் போட வேண்டும் என்று இதை எழுதுகிறேன்.

உங்கள் குழந்தைக்கு 22 மாதங்கள் ஆவதால் நீங்கள் இப்போதிலிருந்தே குழந்தையை பேச முயற்சிக்க வேண்டும். இங்கு நிறைய சகோதரிகள் கூறியுள்ள படி முயற்சிக்கவும். நான் கீழே ஒரு லின்க்கை தருகிறேன். அதை பார்வையிடவும். அதில் வயது சார்ட்டும் ஒன்று உள்ளது. அதன்படி உங்கள் குழந்தை பேசுகிறாரா என்று பார்க்கவும்.
http://www.nidcd.nih.gov/health/voice/speechandlanguage.asp#mychild

இங்கு தோழிகள் கூறியபடி ப்ளே ஸ்கூலுக்கு அனுப்பவும். உங்கள் குழந்தை பள்ளி செல்லுமுன் சீக்கிரம் பேசிவிடும் என நம்புகிறேன். ஏனெனில் அங்கு குழந்தையைச் சுற்றி எப்போதும் உற்றார், உறவினர் இருப்பதால், சீக்கிரம் குழந்தை பேசிவிடும், கவலைப் படாதீர்கள்.

குழந்தையின் வாயிலுள்ள தசைகளை வலுவடைய வைக்க குழந்தையை பப்புள்ஸ் விடுவது (blowing bubbles), ஜவ்வு ஜவ்வு என்று மெல்லும் மிட்டாய்களை (chewy chocolates/candy) குடுப்பது, நாக்கை வெளியே துறுத்தி சத்தமிடுவது போன்றவறை அடிக்கடி செய்யவும்.

உங்களுடைய ஃப்ரிட்ஜில் உங்கள் குழந்தை அடிக்கடி உபயோகப்படுத்தும் பொருள்களின் படங்களையோ, ஃபோட்டோவையோ ஒட்டி வைத்து பேசி பழகவும். அந்தந்த சமயத்தில் அந்த படங்களை காட்டி, உதாரணமாக ஆப்பிள் சாப்பிடும்போது படத்தை காட்டி ஆப்பிள் என்று சொல்லி அவரையும் சொல்ல வைக்கவும்.

அவருடைய வயதையொத்த குழந்தைகளோடு அடிக்கடி விளையாட விடவும்.

பொம்மைகள் வாங்கி தரும்போது பேசுவது போன்ற பொம்மைகளை வாங்கி தரவும். சில பொம்மைகள் ரைம்ஸ், a,b,c அதுபோல் ஏதாவது பேசுவதை வாங்கி குடுக்கவும்.

எல்லாவற்றிர்க்கும் மேல் நீங்கள் நிறைய குழந்தையிடம் பேசுங்கள். 22 மாதம்தானே ஆகிறது, இப்போதிலிருந்தே முயற்சி செய்யுங்கள். இப்ப என் பெண் வாயை ஒரு நிமிஷம் மூட மாட்டாள். அது போல் நீங்களும் ஒரு நாள் சொல்வீர்கள்.

ஹலோ வானதி,
உங்களிடம் இது வரை பேசவில்லை என்றாலும் உங்கள் அனைத்து பதிவுகளின் மூலம் நீங்கள் எனக்கு பரிச்சியம் தான்.நலமா?
நீங்கள் தந்த இந்த வெப்சைட் அட்ரஸ் மிகவும் உபயோகமான ஒன்று,இதை எனக்கு தெரிந்த குழந்தை இருப்போர்க்கு அனுப்பியுள்ளேன்.மேலும் நம் மன்றத்தில் உள்ள மூத்த சகோதிரிகள் மற்றும் நீங்கள் கூறியதும் மிக மிக அருமை. மீண்டும் வேறு சந்தர்ப்பத்தில் பேசுவோம்.

இப்பொழுது எல்லோருக்கும் ஒரு உற்சாக தகவல்......இந்த நான் இருக்கேனே எங்கம்மாக்கு தாராளம் டென்ஷன் கொடுத்திருக்கேன்..
சாதாரண நார்மல் குழந்தைகள் செய்யும் எல்லா விஷயங்களிலிருந்து எல்லா விஷயத்தையும் நான் ரொம்ம்ம்ப லேட்டா தான் செஞ்சிருக்கேன்..
குப்புற படுத்ததிலிருந்து,உட்கார்ந்ததிலிருந்து,நடந்ததிலிருந்து,பேசுவதிலிருந்து எல்லாமே ரொம்ம்ம்ம்ப லேட்....குப்புற படுக்கவே 7 மாதம் ஆச்சுன்னா கொஞ்சம் யோசிங்க...அப்ப மிச்சது எப்பன்னு கேக்க வேண்டாம் அவ்வளவு லேட்...ஆனால் நான் இப்ப செய்யாத எதுவும் இல்லை..எல்லோரையும் போல் நல்ல தான் இருக்கேன்(இருக்கேன்ல??)
அதனால் நீங்க யாரும் குழந்தைகளை பற்றி அதிகம் கவலை கொள்ளாதீர்கள்...குழந்தைக்கு எல்லா விஷயங்களையும் கற்றுக் கொடுக்க வேண்டியது அம்மாக்களின் கடமை தான்..ஆனால் குழந்தை தாமதமானால் கண்டிப்பா கவலைப் பட வேண்டாம்..குழந்தையுடன் கழியும் ஒவ்வொரு நிமிடமும் பொன்னான சமயம்..எங்கம்மா சொன்னாங்க என் பொண்ணு பிறந்தப்ப..நீ பிறந்து உன்னை கைய்யில் எடுத்தது தான் நியாபகம் இருக்கு கண் சிமிட்டு திறப்பதற்குள் உனக்கொரு குழந்தை ..அவரது முகத்தில் ஏக்கம்
அதனை வருந்தி வீனாக்க வேண்டாம்...இதையெல்லாம் சொன்னாலும் நாமே சில சமயம் வருத்தப் படுவேன்.
என் சித்தப்பா நடந்தது 3 வயதில்..அது வரை காலைக் கூட கீழே ஊன மாட்டாராம்..இப்ப அவர் நடப்பதை அடுத்த ரூமில் இருந்தால் கூட கண்டுபிடிக்கலாம்...அவ்வளவு Vஎகமாக நடப்பார்..நமக்கு கடக் கடக்ன்னு தரையுள்ள சத்தம் கெட்கும்.
என் கசினுடைய பைய்யன் 1.5 வயதில் எல்லா கலரையும் சொல்வான்..இத்தனைக்கும் அவ விழுந்து விழுந்து சொல்லிக் கொடுப்பது கூட இல்லை...சும்ம எப்பவாவது சொல்வாள் அவன் கப்பென பிடித்துக் கொள்வான்....எனக்கு ஆச்சரியம்...வைலெட்,ப்ரவுன்,மஜென்ட என கஷ்டமான நிறங்களைக் கூட சொல்வான்.
ஆனால் என் பொன்னுக்கு இப்பவும் நிறம் எதுவும் தெரியாது..சொன்னாலும் காதில் போட்டுக்க மாட்டாள்..அதுக்காக அவளுக்கு நிறத்தை கண்டுபிடிக்க தெரியாது என்றில்லை..அதைப் பற்றி தெரிந்து கொள்ள விருப்பமில்லை....நம்மைப் போலவே குழந்தைக்கும் விருப்பு வெறுப்பு இருக்கும்..
நம்ம ஊரில் பிள்ளை ஒரு வாந்தி எடுத்தால் கூட அதுக்கு காரணம் bad parenting என்று நமக்கு பேட்ஜ் குத்தி விடுவார்கள்...அதை எல்லாம் கண்டு கொள்ளாமல் ஜாலியாக குழந்தையுடன் விளையாடுங்கள்((ரொம்ப பேசிட்டேனோ??))

அன்பு Kr நான் நலம். உங்களை எனக்கும் நல்லா தெரியுமே. உங்க பெயர் ஹிபான்னு கூட தெரியும்:-) இனி ஹிபா என்றே நானும் அழைக்கிறேன். எனக்கும் உங்களுடன் பேசியதில் மிகவும் சந்தோஷம். நான் மேலே எழுதியது எல்லாம் Speech Pathologist எனக்கு குடுத்த ஆலோசனைகள்தான்.

மேலும் சில பதிவுகள்