"ஹெனா"( Henna)

"ஹெனா"( Henna) முடிக்கு வைக்கும் முறைபற்றி யாராவது கூறுங்களேன்.....
அன்புடன்
அதிரா

எனக்கு தலை முடிக்கு ஹெனா வைக்க விருப்பம். அதனால் ஹெனா பவுடர் வாங்கி ஒரு வருடமாகிவிட்டது இன்னமும் வைக்கவில்லை. காரணம் சரியான முறை தெரியவில்லை. சிலர் தயிர் சேர்த்து 3 மணிநேரம் ஊறவிட்டுப் பின்னர் தலையிலும் 3 மணிநேரம் ஊறவிடச் சொல்கிறார்கள். இதேபோல் முட்டை சேர்க்கவும் சொல்கிறார்கள். எனக்கு தலை குர்ந்தால் தலை இடி வந்துவிடும். இப்படித்தான் செய்யவேண்டுமா?
எவ்வளவு நேரம் ஊறவிடவேண்டும்... என்றெல்லாம் தயவுசெய்து சொல்லுங்கள்.
இது பாவிக்கத் தொடங்கினால் தொடர்ந்து பாவிக்க வேண்டுமா?.....
எனக்கு கடும் ஒறேஞ் கலராக வருவதுதான் விருப்பம். சிலரது முடியைப் பார்க்கிறேன்.. செந் சிவப்பு நிறமாக இருக்கிறது... இது ஏன்.... தயவு செய்து யாராவது சொல்லுங்கள்.
எப்படியான ஹெனாவும் வாங்கி வைக்கலாமா? அல்லது நல்ல முறையில் தயாரிக்கப்படும் ஹெனாவின் பெயர் தெரிந்தால் சொல்லுவீங்களா? என்னிடம் இருப்பதில் நெல்லி இலையும் கலந்திருக்கிறது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நான் பலமுறை வைத்ததுண்டு..ஆனால் இவ்வளவு பயக்கலைப்பா..இப்ப பயமா இருக்கு..எப்படின்னு சரியா கேக்காம தான் வச்சேன்.
ஹென்னா வச்சதும் முடி மினு மினுக்கும் நல்ல சாஃப்டா இருக்கும்.
1/2 கப் ஹென்னாவில், 1 எலுமிச்சை நீர் பிழிந்து 1/4 கப் டீ டிகாஷன் கலந்து பேஸ்ட் போல ஆக்கி 1 மணிநேரம் ஊறிய பிறகு தலைக்கு வைய்யுங்க..அது காஞ்சதும் கழுகுங்க..தலைக்கு போடும் ஹென்னா வெனவே தனியா கிடைக்கும்..சாதா ஹென்ன பொடியும் போடலாம்..ஆனால் தலைக்கு போடுவதில் சிலதில் நெல்லிக்காஇ பொடியும் இருப்பதால் இன்னும் நல்லது..
இதுக்கு இவ்வளவு பயப்பட வேண்டாம்..நல்ல பஞ்சு மிட்டாஇ போல் முடி நரைத்தவங்களுக்கு தான் கடும்சிவப்பு ஆகும்...கறுப்பு முடியில் தேய்த்தால் முடிக்கு நல்லது + ஒரு ஷைனிங் கிடைக்கும்...கூர்ந்து கவனித்தால் மட்டும் இளம் பொன்ன்னிறம் தெரியும்..
இதற்கு இடத்தரத்தில் பாதி முடி நரைத்தவர்களுக்கு இளம்சிவப்பு நிரத்தில் ஆங்காங்கே தெரியும்

நன்றி தளிகா,
இப்போ உங்கள் பதிலால் எனக்கு ஒரு துணிவு வந்துவிட்டது. பிடிக்காவிட்டால் நிறுத்திவிடலாம் என்ற தைரியமும் வந்துள்ளது. அதனால் உங்கள் ஆலோசனைப்படி களம் இறங்கவுள்ளேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மல்லிகா,
உங்கள் கேள்விக்கான பதிலை இங்கே தந்தால் உபயோகமாக இருக்கும் என நினைத்தேன். ஏனெனில் இது தலைமுடி சம்பந்தப்பட்டதுதான். இங்கே ஹெனா பற்றிக் கதைத்தோம்... இன்னும் தெரிந்தவர்கள் நிறையச் சொல்வார்கள். நீங்கள் ஏன் இதை முயற்ச்சிக்கக்கூடாது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஜலீலாக்கா எப்படி இருக்கிறீங்க? எனது தலைப்பிற்கும் பதில் தாருங்கள். ராத்திரி நீங்கள் என் கனவில் வந்தீர்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

வணக்கம் ஆதிரா, நான் காயத்ரி அறுசுவைக்கு புதிதாய் இனைந்துலென் , ஹென்னா பட்றி எனக்கு தெரிந்தது உங்கலுக்கு சொல்கிரேன் ... 1 கேஜி ஹென்னா என்று கேட்டால் கிடைக்கும் . அதில் இரவு ஒரு பாதிறத்தில் 1 ஆழாக்கு போடவும், அதில் 2 ஸ்பூன் காபி பவுடர் போடவும், 1 எலுமிச்சம் பிலியவும், காலை ஹென்னா போடும் முன் 1 முட்டை ஊடைத்து ஊட்றி நன்றாக்க கலக்கி தலையில் போடவும் . 2 மனி நேரம் ஒறி ய பின் குளிக்கவும் . 2 வாரம் 1 முரை ஹென்னா போடால் முடி வளரும் வெல்லை முடி மறையும் , முடி ஸாப்டாக இருக்கும். போட்டு பார்த்து சொல்லவும் (reply seiyavum)நன்றி.

மிக்க நன்றி காயத்ரி கணேஷ்.செய்து பார்க்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்