இன்றைய ஸ்பெசல் தேங்காயில் தேவையான அழகு குறிப்புகள் [anjali]

ஹாய் தோழிகளே! naan anjali, இன்றைய ஸ்பெசல் தேங்காயில் தேவையான அழகு குறிப்புகள்.

வழுக்கை தேங்காயை அரைத்து, அதோடு சிறிது இளநீர் கலந்து முகத்துக்கு கீழிருந்து மேல் புறமாக பூசி, காய்ந்ததும் அலம்புங்கள்.
தினமும் இப்படி செய்துவந்தால், மாசு மருவின்றி பளிங்குபோல முகம் மிளிரும்.

வெயிலால் வரும் கருமையை விரட்ட....டிப்ஸ்

தேங்காய் பால் - 2 டீஸ்பூன்
கடலை மாவு - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்தில் போட்டு, காய்ந்த பிறகு அலம்பி விடுங்கள். வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டு வர முகம் பிரகாசமாகும். இந்த ''பேக்''கில் கடலை மாவுக்கு பதிலாக ஒரு டீஸ்பூன் தேன் சேர்த்து புருவத்தில் படாமல் முகம், கழுத்துப் பகுதியில் தேய்த்து பதினைந்து நிமிடங்கள் கழித்து அலம்புவது இன்னொரு ''பளிச்'' சிகிச்சை.

முகத்துக்கு நிறத்தைக் கொடுக்கும் ட்ரீட்மெண்ட்....

கேரட் சாறு - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து முகத்துக்கு போடுங்கள். பத்து நிமிடங்கள் கழித்து அலம்புங்கள். ஒரு நாள் விட்டு ஒரு நாள் இப்படி செய்து வந்தால் அழகு உங்களை அள்ளிக் கொண்டு போகும்.

முகத்தில் எண்ணெய் வடிகிறதா?

முல்தானிமட்டி - டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்

இரண்டையும் கலந்து முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். வாரம் ஒரு முறை இந்த ''பேக்'' போட்டு வாருங்கள். விரைவிலேயே அழகு மாற்றங்கள் பளிச்சிட ஆரம்பிக்கும். அதிகப்படியாக இருக்கும் எண்ணெயை முல்தானிமட்டி ஈர்த்து விட, சருமத்தை தேங்காய் பால் மிருதுவாக்கி விடும்.

முகத்தில் தோன்றும் கரும்புள்ளிகள் நீங்க.....

உருளைக்கிழங்கு ஜூஸ் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 1 டீஸ்பூன்
பயந்த மாவு - 1 டீஸ்பூன்

மூன்றையும் கலந்து பேஸ்ட் ஆக்கி, முகத்துக்கு ''பேக்'' போடுங்கள். காய்ந்ததும் அலம்பி விடுங்கள்.
வாரம் இருமுறை இந்த ''பேக்'' போட்டால் போதும். முகம் பிரகாசமாக ஜொலிக்கத் தொடங்கும்.

''சூப்பரான ஒர் ஹேர் பேக்''.....

ஒரு பிடி பச்சை கறிவேப்பிலையுடன் 2 டீஸ்பூன் தேங்காய் பால் சேர்த்து அரைத்து, தலையில் பேக் போட்டு பச்சை தண்­ரில் அலசுங்கள்.ஒரு நாள் விட்டு ஒருநாள் இந்த பேக் போட்டுப் வாருங்கள். முடி வளர்ச்சி தூண்டப்பட்டு, கருகருவென முடி வளரத் தொடங்கும்.

உடலைக் குளுகுளுப்பாக்க....

ஒரு வழுக்கை தேங்காயுடன் தேங்காய்ப் பால் சேர்த்து விழுதாக அரைத்துக் கொள்ளுங்கள் (தண்­ர் சேர்க்க வேண்டாம்) குளிப்பதற்கு முன் இந்த விழுதை தலை முதல் பாதம் வரை நன்றாக பூசுங்கள். பிறகு தலைக்கு žயக்காய் போட்டு குளியுங்கள்.

வாரம் ஒரு முறை செய்தால் போதும். உடல் ஜில்லென்று இருப்பதுடன், வாசனையும் வனப்பும் ஆளையே அசரடிக்கும்.

''கலக்கல் பேக்'' இது...

உலர்ந்த நெல்லிக்காய் பவுடர் - 1 டீஸ்பூன்
மருதாணி பவுடர் - 1 டீஸ்பூன்
வெந்தய பவுடர் - 1 டீஸ்பூன்
தேங்காய் பால் - 2 டீஸ்பூன்

இவற்றை எல்லாம் தேங்காய் பாலுடன் கலந்து கொள்ளுங்கள். இந்தக் கலவையை தலையில் ''பேக்'' ஆகப் போட்டு ஒரு மணி நேரம் கழித்து அலசுங்கள். வாரம் ஒரு முறை செய்தாலே போதும், கருகரு கூந்தலைப் பெறுவீர்.

தேங்காய் வைத்தியம்...

மருதாணி, கறிவேப்பிலை, வேப்பிலை... இந்த மூன்றையும் சம அளவு எடுத்து, உலர்த்தி, காயவைத்து பவுடராக்குங்கள். இதிலிருந்து 2 டீஸ்பூன் எடுத்து, ஒரு வெள்ளை துணியில் மூட்டையாகக் கட்டுங்கள்.

பிறகு, அரை கப் தேங்காய்ப் பாலை கொதிக்க வைத்து, அதில் இந்த மூட்டையைப் போட்டுவிடுங்கள். பவுடரின் எசென்ஸ் தேங்காய்ப் பாலில் இறங்கி, தைலம் மாதிரி ஆகி விடும். இதைத் தலையில் தடவி மசாஜ் செய்து குளியுங்கள். (žயக்காயோ, ஷாம்புவோ போட வேண்டிய அவசியம் இல்லை). வாரம் ஒரு முறை இந்த வைத்தியம் செய்து வந்தால் பேனும், பொடுகும் பக்கத்திலேயே வராது.

அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள்தோழி.
அப்படியே போய்விடாதீர்கள்! பதில் அனுப்புங்கள்.! தங்கள் பதிலைய் எதிர்பார்த்து காத்திருக்கும் உங்கள்தோழி. anjali.

உங்கள் டிப்ஸ் எல்லாம் சூப்பராக இருக்கிறது ஒரு சந்தேகம் நீங்க நிறைய அழகு குறிப்பு கொடுக்குறதால கேட்க்கிறேன் நீங்க அழகுகலை பற்றி படித்திருக்கிறீர்களா ஏன்னா எல்லா டிப்ஸும் அருமையாக இருக்கிறதாலகேட்டேன். இந்த டிப்ஸை ட்ரை பண்ணி பார்க்க ஆசை ஆனால் பயமாக இருக்கிறது தேங்காய்பாலில் செய்வதால் முகத்தில் எண்ணெய் வடிந்துவிடாதா தயவு செய்து பதில் தரவும்.

அன்புடன் கதீஜா.

ஹாய் கதீஜா ,அன்புடன் அஞ்சலி.கொஞ்சம் அழகுகலை பற்றிய அறிவுண்டு . இயற்கையான பொருள்களை கொண்டு செய்வதால் என்றேக்குமே பயமில்லை.சரியா!
தேங்காய்பாலில் செய்வதால் முகத்தில் எண்ணெய் வடிந்துவிடாது .ட்ரை பண்ணி பார்க்கவும்.ok.bye.

naturebeuaty

anbudanஹாய் அஞ்சலி,

எப்படி இருக்கீங்க? முதல் தடவையாக உங்களுடன் பேசுகிறேன்.குடும்பத்தினர் நலமா? நலமே. தேங்காயில் நீங்கள் கொடுத்துள்ள அழகு குறிப்புகள் அப்பப்பா எவ்வளவு . அனைத்தையும் செய்து பார்க்க முடியாவிட்டாலும் தலைமுடிக்காக நீங்கள்சொன்னதை கண்டிப்பாக செய்து பார்த்துவிட்டு பின்னூட்டம் அனுப்புகிறேன். மிக நன்றி.

என்றும் அன்புடன்,
வித்யாவாசுதேவன்.

anbudan

உங்கள் குறிப்புகளை பார்த்து வருகிறேன். பதில் தான் தர முடியவில்லை. தேங்காய்ப்பாலில் செய்யும் அழகு குறிப்புகள் எல்லாமே அருமையாக உள்ளன. கண்டிப்பாக முயற்சி செய்கிறேன். என்னிடமும் நிறைய அழகு குறிப்புகள் உள்ளன. நேரம் கிடைத்தால் தோழிகளுடன் பகிர்ந்து கொள்கிறேன்.புத்தகத்தில் படித்தது, அம்மா, பாட்டி செய்தது தான். ஒரு காலத்தில் எல்லாம் செய்து கொஞ்சம் அழகாயிருந்தேன். தற்போது எதுவுமே செய்வதில்லை. கருவளையம் மறைய ஏதாவது குறிப்பு சொல்லுங்கள். உருளைக்கிழங்கு, வெள்ளரிக்காய், பச்சைப்பால் வைத்தியம் எல்லாம் செய்துவிட்டேன். தொடர்ந்து செய்ய முடியாததால் பலன் முழுவதுமாக கிடைக்கவில்லை. புதிதாக, எளிதாக ஏதாவது இருந்தால் சொல்லுங்கள். முயற்சிக்கிறேன்.

டியர் அன்னு கருவளையத்துக்கு
முதலில் நல்ல ரெஸ்ட் எடுங்கள்.நல்ல தூங்குங்கள், சும்ம இருக்கும் போது கண்ணை மூடி ரெஸ்ட் கொடுக்கவும்

கடுகு எண்ணை, ஆலிவ் ஆயில், தேங்காய் எண்ணை எல்லாம் ஒரு ஒரு டிராப் எடுத்து அதில் ரோஸ் வாட்டர் கலந்தால் நுரைமதிரி வரும் அதை கண்ணை சுற்றி ஒரே மூமெண்ட்டி ஆள் காட்டி விரல் நடு விரல் அந்த கலவையை தொட்டு வட்ட வடிவமாக தேய்க்கவும்.
ஒரு மாதம் செய்யுங்கள்.
கண்டிப்பா கருவளையம் சரியாகும்.
ஜலீலா

Jaleelakamal

அப்பா தேங்காயில இவ்வளவு டிப்ஸா?!! உங்களை நினைச்சா எவ்வளவு ஆச்சர்யமா இருக்கு கண்டிப்பா ட்ரை பண்ணி நல்ல ரிசல்ட் சொல்லுறேன் ஓகேவா.

ஹாய் vidyavasudevan, naan anjali. நானும் முதல் தடவையாக உங்களுடன் பேசுகிறேன். நலமா? நலம் . உங்கள் பாராட்டுக்கு நன்றி. என்றும் அன்புடன்,
anjali

naturebeuaty

தேங்காய் சம்பந்தமான உங்கள் குறிப்புகளை வாசித்தேன். மிகவும் பயனுள்ள குறிப்புகள். Try பண்ணி பார்த்து சொல்லுரேன்.

Lalitha

எப்படி இருக்கீங்க ஜலீலா? நீங்க என்னிடம் பேசி ரொம்ப நாளாச்சி. மரியாவும் ஆளே காணோம். நீங்க சொன்ன குறிப்பை கண்டிப்பா செய்து பார்க்கிறேன். நான் சில சமையல் குறிப்பு கொடுத்திருக்கேன். நீங்க படிச்சீங்களா? கவிதையும் வந்திருக்கு. புரியலைன்னாலும் அதையாவது சொல்லலாம்ல?

டியர் அன்னு
நீங்க அண்ண பூரணியா?

எனக்கு சரியா தெரியல, உங்க வேர்கடலை தோசை பார்த்து வைத்துள்ளேன், இந்த தடவை மாவு அரைக்கல, கொஞ்ச நாள் ஆகும் , எப்போ செய்கிறேனோ அப்ப பின்னூட்டம் அனுப்புகிறேன்.ஆனால் வருத்த வேர் கடலை வாங்கி வைத்து விட்டேன்.
சாரி அண்ணு கவிதை நான் படித்தது கிடையாது அதை பற்றியும் தெரியாது ஆகையால் என்ன சொல்வது என்று தெரியல,
ஒன்றிரண்டு கவிதைகள் சுருக்கமா உள்ளது என்றால் ஏதாவது சொல்வேன்,
ஜலீலா

Jaleelakamal

மேலும் சில பதிவுகள்