வியர்கூரு

என் குழந்தைக்கு ( வயது: 6 மாதம்) வியர்கூரு உள்ளது, NYCIL Use பண்ணலாமா.

உபயோகிக்கலாம் என்றே நினைகிறேன்...ஆனால் வியர்க்குரு வராமல் இருக்கும் விதம் தினம் இருவேளை குழந்தையை அதிகம் சோப் தேய்க்காமல் நல்ல தண்ணீர் ஊற்றி குளிக்க வைய்யுங்கள்.பின் தேங்காய் எண்ணையை தடவினால் கூட வியர்க்குருவே வராது
ஒரு நாளைக்கு இருவேளை துணி மாற்றி சுத்தமான பருத்தியாலான துணியை போட்டு விடுங்கள்

தளிகா இப்பதான் வேலை முடிந்தது..அடுத்து வீட்டை பெருக்கனும்...அப்பதான் இவள் குப்பையாக்க சரியா இருக்கும் ஹா ஹா
நைசிலில் நிறைய கெமிக்கல் இருக்கு....
அதை சின்ன குழந்தைகளுக்கு உபயோகிக்க கூடாது...பேபி லோஷன் ரொம்ப நல்லது அடிக்கடி போடவும்...வேட்காதவாறு பிள்ளைகளை பார்த்துக்கனும்...தினம் குளிக்க வைக்கனும்...இதுவே போதுமானதுஅன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி.குழந்தைக்கு Cerelac(Wheat with Apple) கொடுகிறேன் . வேறு என்ன உணவுகள் கொடுக்களாம்.

With Love

ஒரு வேளை மட்டும் செரெலேக் கொடுத்து விட்டு மதியம் இரவு வேறு ஏதாவது கொடுங்கள்.
ராகி கூழ்,ஓட்ஸ்,கோழுமை பால் கூழ், ராகிப் பால் கூழ், தயிர் சாதம் அரைத்தது,பருப்பு சாதம் அரைத்தது,வேக வைத்து அரைத்த கேரட்,ஆப்பில்,பியர்ஸ்,நன்கு பழுத்த வாழைப்பழம் பாலுடன் மசித்தது, சத்து மாவு கூழ், ரவை கூழ், சப்பாத்தியை பாலில் ஊறவைத்து அரைத்தது, இளநீரை பழத்தில் மசித்தது, ஆரஞ் ஜூஸ்,சப்போட்டா ஜூஸ் இன்னும் விதவிதமாக ஊட்டலாம்..அலுக்காமல் சாப்பிடும்.
ஆனால் ஒரு புதிய உணவு கொடுத்து 4 நாட்கள் கழித்து அது ஒத்துக் கொள்கிறதா என்று தெரிந்த பின் அடுத்த புதிய உணவு கொடுக்கவும்

நான் சொல்லவந்ததை அருமையாக தளிகா சொல்லிவிட்டார்கள்...இதெல்லாம் பயம் இல்லாமல் கொடுக்கலாம்...ஆனால் அவ்ர்கள் சொல்வது போல் அடுத்ததை ஆரம்பிக்க கண்டிப்பாக இடைவலி வேண்டும்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா கைல புடிக்க முடீலயே..எனக்கு காலைல வாடா கொடுத்தீங்களே பதிலுக்கு நான் செய்த பாயாசம் வேனாமா மர்ழியா??
தோ =.=~~~~ கெடச்சுதா???சாரிப்பா பாத்திரம் இல்லாததால் ஒழுகிடுச்சு

தளிகா கைக்கு எட்டியதை வாய்க்கு எட்டாமல் பண்ணிட்டீங்களே நியாயமா?பார்த்து அடுத்ததை கவனமா அனுப்புங்க இல்லைனா சைடில் அதிரா ஸ்டிரா வைத்து உறிஞ்சுடுவாங்க ஹா ஹா....உங்கள் மெய்ல் பார்த்தேன் என் மைல் பாக்ஸில் சம் பிராப்லம்பா..ஒன்னும் புரியல சாப்ட்வேர் போடனும் போட்டதும் பார்த்துட்டு ரிப்லே தாரேன்
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி தளிகா,நன்றி மர்ழியா.எனக்கு Delivery பிறகு முடி அதிகமாக உதிர்கிறது,control பன்னுவதற்கு வழி சொல்லுங்கள்.வயிறும் சற்று பெருதுள்ளது.வெட்கமாக உள்ளது.
அதையும் குறைபதற்க்கு any idea plz.

With Love

குழந்தைக்கு nycil powder உபயோகிக்க கூடாது அதற்கு பதில் பயித்தம் பருப்பு, கடலை மாவு, வெட்டி வேர், ரோஜா இதழ், சேர்த்து அரைத்த பொடியை பயன்படுத்தலாம். இது மிகவும் நல்லது. மேலும் குளிக்கும் தண்ணீருடன் வேப்பிலையை கொதிக்க வைத்து ஊற்றலாம். இது வியர்குருவை கட்டுப்படுத்தும்.

முடி உதிர்வத்ற்க்கு அதிகமான காரணம் என்னை பொருத்தவரை கவலைத்தான்...அப்புறம் அதிகமா யோசிப்பது....
சிலறுக்கு பொடுகினாலும் உதிரும்....உங்களுக்கு பொடுகு இருக்கா?
வயிரா ஹா ஹா எனக்கும்தாங்க இருக்கு....அதற்க்கு எக்ஸசைஸ் தான் முழுத்தீர்வு எனக்கு என்கே அதுக்கு டைம் நம்மோட வயருதானே நம்மோடயே இருக்கட்டும்னு விட்டுட்டேன்...அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்