தயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா? அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந

எனது நண்பி ஒருவர் வெளிநாட்டில்தான் இருக்கிறார், அவருக்கு 7 வயதில் ஒரு பெண் குழந்தை. இப்போ 2 வது குழந்தைக்காக காத்திருக்கிறார்கள். அவவுக்கு குறிப்பிட்ட திகதிக்கு, 2 அல்லது 3 நாட்களின் முன் பீரியட்ஸ் வந்துவிடும்(ஒழுங்காக). இந்தமுறை 10 திகதி வரவேண்டிய முறை இன்று எட்டாம் திகதி, ஆனால் ஒரு கிழமைக்கு முன்னரே அதற்கான அறிகுறிகள் தெரியத் தொடங்கிவிடுமாம். இம்முறை அப்படியில்லையாம், ஆனால் வயிறு மட்டும் இப்போ 3 நாட்களாக ஒவ்வொரு இடமாக மாறி மாறி வலிக்கிறதாம் நோகிறதாம், படுப்பது கூட ஒருபக்கம் மட்டும்தான் படுக்க முடிகிறதாம்.

அவர் ஒரே ரென்சனில் இருக்கிறார். நான் சொன்னேன் ரென்சன் ஆகவேண்டாம் அதனாலும் பீரியட்ஸ் வந்துவிடும் என்று. அதனால் ஒரு நாள் கழிவதே ஒரு வருடம் போலிருக்கிறது என்கிறார். தயவு செய்து யாராவது உங்களுக்கு இப்படியான அறிகுறிகள் இருந்ததா? அல்லது வேறென்ன அறிகுறிகள் குழந்தைக்காக இந்தமாதிரி நாட்களில் இருந்தது என்று சொல்ல முடியுமா? எனக்கெதுவும் நினைவில் வரமாட்டேன் என்கிறது.

தயவு செய்து உங்களுக்கு தெரிந்த பதிலைத் தாருங்கள் நான் என் நண்பியை ஆறுதல் படுத்த.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஹாய் அதிரா,எனக்கு பிரீயட்ஸ்க்கு 10 நாள் இருக்குறப்பவே ஹோம் டெஸ்ட் எடுத்து பார்த்தப்ப பேபின்னு தெரிஞ்சுடுச்சு....அப்புறம் எனக்கு தெரிஞ்சு வயிறு வழி ந்னு யாரும் சொன்னது கிடையாது...பிரீயட்ஸ் ஓர்,இரு நாள் முன்னால் பின்னால் வருவதில் தவறும் இல்லை பெசாம ஒரு நல்ல டாக்டரை அவங்க பார்ப்பதுதான் நல்லது...வைத்துட்டு இருக்க கூடாது...டாக்டர் ஒன்னும் இல்லைனா பெரொப்லம் இல்லை(அல்லாஹ் காப்பாத்துவான் முத்துப்பிள்ளை என்பார்கள் அதுக்கும் வYஇறு வலி வரும்,இதை உங்கள் பிரண் இடம் சொல்ல வேணாம்...பேசாமல் டாக்டரிடம் போனால் திருப்தியாகுமே...அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நன்றி மர்ழியா நான் சொல்லமாட்டேன். அது என்ன முத்துப் பிள்ளை என்றால்? போன மாதங்களில் ஹோம் டெஸ்ட் செய்தாராம் செய்தபின் பீரியட்ஸ் வந்துவிட்டதாம். அதனால் இம்முறை பேசாமல் இருக்கிறார். நான் சொன்னேன், எதற்கும் ஒரு கிழமை போகட்டும் அதுவரை றெஸ்ட் எடுங்கள் என்று.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

டென்ஷன் எதுக்கம்மா நேரா போய் டெஸ்ட் எடுக்கலாம் பின் மருத்துவரைக் காணலாம் சோ சிம்பில்.
கர்ப்ப காலத்தைப் பொறுத்தவரை சும்மா சமாதானத்துக்கு மட்டும் மத்தவங்கள்ட ஆலோசனை கேக்கலாமே ஒழிய மருத்துவரே கூட எதுவாவது ஏடாகூடமா சொன்னா செகன்ட் ஒபீனியன் எடுக்கனும்..
ஏனென்றால் ஒரு ஜீவனின் ப்ரச்சனை இது.
எனது கனவரின் தோழரின் மனைவிக்கு 5 மாதத்தில் ஸ்கேனில் குழந்தைக்கு தலை பெரியது உடல் சிறியது முதுகில் ஒரு கட்டி உள்ளது அதனால் இந்த பிள்ளை ஊனமாஇ பிறக்கலாம் நல்ல யோசித்து முடிவு எடுங்கள் ..பிள்ளையை பிறக்க வைத்து கொன்று விடலாம் என்று சொல்லியிருக்கிரார்கள்..
தோழர் ரொம அழுதார் முதல் பிள்ளை எங்க குடும்பத்தில் இப்படி யாருக்கும் ஆனதில்லை என்று..என் கனவர் இன்னொரு மருத்துவரைப் பாருங்கள் என்று சொல்லவே சென்று வேறொருவரைப் பார்க்க அவர் சென்னையில் போய் ஒரு டெஸ்ட் எடுக்க வேண்டும் 1 வாரம் கழித்து ரெசல்ட்...அவர்கள் அன்று பட்ட பாடு...1 வாரம் காத்திருந்து ரிசல்ட் வந்தபொழுது ப்ரபலமான மருத்துவர் அவர் சென்னையில் குழந்தைக்கு தலை கொஞ்சம் பெரியதாக தோன்றுகிறது மற்றபடி ப்ரச்சனை அவ்வளவாக இல்லை தைரியமாஇ இருங்கள் என்று சொல்லி பிள்ளை பிறந்து பார்த்தால் அழகான ஒரு குறையுமில்லா குழந்தை...இப்பொழுதும் அந்த குழந்தையைக் கண்டால் எனக்கு சங்கடமாகி விடும்..நல்ல குழந்தையை அவசரப் பட்டு கொல்லப் பார்தார்களே என்று..குடும்பத்தினர் நம்புவது பகவான் தான் பிள்ளையின் ஊனத்தை சரிப்படுத்தினார் என்று...எது எப்படியோ நீங்கள் எல்லோரும் இது போன்ற விஷயங்களில் சுயமாக யோசித்து முடிவு எடுங்கள்.

சரிதான் தளிகா, எல்லாம் விதிப்படிதானே நடக்கும். இருந்தாலும் அறிகுறிகள் தெரிந்தால் அவர் நிம்மதியாகத் தூங்குவாரே என்றுதான் இங்கே கேட்டேன். பொறுத்துப் பார்ப்போம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா கர்ப்பமானால் அறிகுறிகள் ஆளுக்காள் மட்டும் இல்லை பிள்ளைக்குப் பிள்ளை கூட வேறுபடுமாம்ம்.
எனக்கு ஒன்னும் தெரியல ஆனால் என் உள்மனசு சொல்லிட்டே இருந்ததுன்னு செக் பன்னினேன்..மட்டுமல்லாமல் எனக்கு சரியா அப்ப நல்ல ஜலதோஷம்(இது கூட அறிகுறியாம்)..பின் அடிவயிற்றில் கொக்கி இட்டு இழுப்பது போல் உணர்வு.அது 3 மாதத்தில் போய் விட்டது.பின்பு ஒரு நாளைக்கு குறைந்தது 50 முறை தும்மல் வரும்..வயிற்றைப் பிடித்துக் கொண்டு தும்முவேன்.

dear athira,
better ask your friend to go for a consultancy,sometimes tubal pregnancy(ectopic pregnancy)will have the same effect.the home test will show positive but the pain would be killing.to be on the safer side,she can see the doctor.

வணக்கம் அதிரா,

நலமா இருக்குறீங்களா ?

உங்கள் நண்பியின் முதல் மகளுக்கு 7 வயது என்று எழுதிருக்குறீங்க ....இரண்டாவது குழந்தைக்கு கூடதல் இடைவெளி விட்டதால் இரண்டாவது குழந்தை தங்குதில்லையே என்று உங்கள் நண்பி போல் ஏங்குகிறவர்கள் நிறையப்பேர். நானும் ஒவ்வொரு மாதத்தையும் பீரியட் வாற அந்த நாளையும் ஒரு வருசம் போல தான் கழித்தனான். எனக்கு இடுப்பு வலி அடிவயிறு வலியும் இருந்திச்சு அதுவும் பீரியட் வார டேட் ல ரொம்ப இருந்திச்சு.

உங்களுடைய நண்பி, எத்திணை மாதங்களாக குழந்தைக்காக காத்திருக்கின்றார் ?

இதை விட வேற அறிகுறிகள் என்று சொல்லனும் எண்டால்.

1) அடிக்கடி சிறுநீர் கழித்தல்
2) வாந்தி வாற போல குமட்டல் ....( அதுவும் காலையில் அப்படி இருக்கும் சாய்ந்தரத்தில் இப்படி இருப்பதில்லை.

இப்படித்தான் எனக்கு இருந்தது, ஆனால் இது ஒவ்வொருத்தருக்கும் ஒவ்வொமாதிரி இருக்கும்.

நானும் குழந்தைக்காக காத்திருக்கும் பொழுது ஒரே யோசனை பீரியட் வந்திட்டு என்றால் ஏதோ நம்மள நாமே சாமதானப் படுத்திட்டு நிம்மதியாயிருக்கலாம். ஆனால் இரண்டு மூண்டு நாள் லேட்டாகும் போது ....கூட யோசனையாக இருக்கும். எனக்கும் பீரியட் 5 நாள் முன்னம் வரும். எப்பவும் கரக்ட்டா 25 வது நாள் வந்திடும். குழந்தைக்கு முயற்ச்சி செய்ததில் முதல் மாதத்தில் ஒரு நாள் பிந்தி வந்திச்சு அதுக்கடுத்த மாசம் 3 நாள் பிந்தி வந்திச்சு அப்படி அப்படி லேட்டாகி வந்து அதுக்கப்புறம் குழந்தை கிடைச்சிருச்சு. உங்கள் நண்பியை கூட யோசிக்க வேண்டாம் என்று சொல்லுங்க.... 3 மாதத்திற்கு மேல் குழந்தைக்கு முயற்சி செய்தும் குழந்தை தங்கலன்னா டாக்டர் கிட்ட போய் செக் பண்ணிட்டு விட்டமின் மாத்திரை வாங்கி போட சொல்லுங்க. நிச்சயம் குழந்தை தங்கும்.

பதில் தந்த எல்லோருக்கும் என் நன்றிகள். சர்மி உங்கள் பதிலை அப்படியே அவருக்குச் சொல்லி விடுகிறேன், அது ஆறுதலாக இருக்குமென்று நம்புகிறேன். பல காரணங்களால் இடைவெள் அதிகமாகிவிட்டது போலும் இப்போ கொஞ்ச காலமாகத்தான் முயற்சிக்கிறார்கள் என நினைக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்