அலர்ஜி (Hives) - உதவுங்களேன் தோழிகளே Please

என் பையனுக்கு முன்று வயது ஆகப்போகிறது. நான் வேலைக்கு செல்வதால் தினமும் pre-school செல்கிறார். கடந்த இரண்டு முன்று நாட்களாக இரவு நேரங்களில் பயங்கரமாக சொரிந்து கொள்கிறார். சொரியும் இடங்களில் கொசு/ எறும்பு கடித்ததைப் போல் தடிக்கிறது. தடிப்பு உள்ளங்கை அகலம் உள்ளது. அந்த இடம் சிறிது சுடாகவும் உள்ளது.ஒரு அரை மணி நேரங்களில் மறைந்து விடுகிறது.
கடந்த மாதம் ஒரு இரண்டு முறை தடித்தது, ஆனால் அது ஒரு மிளகு அளவு, நானும் என் கணவரும் எதோ பூசி கடி என்று விட்டு விட்டோம்(எனெனில் அது ஒரு பத்து நிமிடத்தில் மறைந்து விட்டது).
இம்முறை உள்ளங்கை அளவு, அதுவும் பாதி இராத்திரியில் வருகிறது. குழந்தை தூக்கத்தில் இருந்து எழுந்து சொரிகிறது.
மருத்துவர் அலர்ஜிக்காக இரத்தப் பரிசோதனை செய்துள்ளார். முடிவு வர ஒரு வாரம் ஆகும் என்றார்கள்.
இதைப் பற்றி யாருக்கும் தெரியுமா? புதிதாக ஒரு உணவும் தரவில்லை. தவிர அவனுக்கு ஒரு உணவும் இதுவரை அலர்ஜி ஆனதும் இல்லை.மருத்துவர் உணவு combination அலர்ஜி உண்டு பண்ணும் என்றார்கள். உதாரணத்திற்கு பாலும் முட்டையும் சேர்த்து உண்ணும் போது சிலருக்கு அலர்ஜி வருமாம். தனி தனியே சாப்பிட்டால் வராதாம்.
அன்று குழந்தைக்கு முட்டை, கீரை மற்றும் தயிர் கொடுத்தேன்.
தயவு செய்து இதைப் பற்றி தெரிந்தால் உதவுங்கள்

It's true tht some food combinations can cause allergy... if u feel that the egg,greens & curd might be the culprit, try giving him a small qty of it again just to confirm... Also, allergies can come anytime in out life... for ex: I became allergic to pineapples some 5 yrs ago... before that I've had no known food allergies... Pineapple was one of my fav fruit too... Now I can't take even a single bit of it... So from that experience I would say even the foods we normally take can cause allergy sometimes... so keep an eye on what you feed him...Did u check with the school if he took anything there?... If u r using store bought curd, just see if u changed brand... that might also be a cause... I know a person who's allergic to lowfat milk but can take litres of whole milk!!!... also chk on the laundry detergent you use... they might also cause skin irritation...

பொதுவாக இரவில் கீரை சாப்பிடக்கூடாது என்பார்கள். இருந்தாலும் இரவில் தூங்கும்போதுதான் இந்த அரிப்பு வருகிறது என்று சொல்கிறீர்கள். உங்கள் படுக்கையை நல்ல வெய்யிலில் போட்டு உலர்த்தி எடுங்கள். படுக்கை விரிப்பு, தலையணை உறைகளை சோப்புத்தூளில் ஊற வைத்து சுடுதண்ணீரில் துவைத்து எடுங்க. வீட்டில் வாஷிங்மிஷின் இருக்கிறதுதானே? அதில் ஹாட்வாட்டர் ப்ரொவிஷன் இருக்கும். எனக்கென்னவோ படுக்கையில் ஏதோ பூச்சி இருந்து கடிக்கலாம் என்று தோன்றுகிறது.

Dsen தாங்கள் கூறியதைப் போல் என் குழந்தைக்கு பால் ப்ரன்ட் மாற்றி organic பால் தந்தோம், அதனால் இருக்கலாமோன்னு தோணுது.
மாலதி மேடம், இங்கு US வந்ததில் இருந்து, படுக்கையை வெயிலில் போட முடிவதில்லை, மேலும் இங்கு பொது வாசிங் மெசின் தான். ஒரு அப்பர்ட்மென்ட் பொதுவாக உள்ளது. ஆனால் உங்கள் குறிப்பை படித்த பிறகு, ஒரு பருத்தி புடவையை படுக்கை மேல் விரித்து படுக்க வைக்கலாம் என்று எண்ணி உள்ளேன். தினமும் ஒரு புடவை தானே கையில் அலசி விடலாம். நேற்று இரவு அலர்ஜி வரவில்லை

நந்தினி நீங்க நல்லா யோசிச்சு பாத்தீங்களா, முதல் முறையும், இரண்டாவது முறை வந்தபோது எதையாவது ஒரே சாப்பாடு சாப்பிட்டாரா? முட்டை, பால், சோயா, வேர்கடலை இதெல்லாம் சிலருக்கு அலர்ஜியை உண்டு பண்ணும் என்று சொல்வார்கள். எல்லாம் சரியாகிவிடும், கவலைப்படாதீர்கள்.

இங்கு hypo-allergic mattress pad ( Walmart) கிடைக்கிறது. அதை வாங்கி பாவித்தால் இந்த ப்ரச்சனை இல்லை. It is washable in washing machine. it is bug proof and also water proof. it fits very tight on the bed.Try this. It should help

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

வித்தியா, உணவில் கவனம் தேவை. சிலருக்கு ஒறேஞ் கூட அலர்ஜி என்கிறார்கள். வீட்டில் கார்பெட் ஆக இருந்தால், வெளிநாட்டில் காபெட் அலர்ஜி என்றும் இருக்கிறது. மகனை கார்பெட்டில் விளையாட்டுக்குக்கூட படுக்க விடவேண்டாம். பகலில் கொஞ்ச நேரமாவது ஜன்னல்களைத் திறந்து(அறைக்கு) காற்றுப் பட விடுங்கள். கட்டில் படுக்கைகளை மட்டுமாவது கொமென் மெசினில் தோய்க்காமல் வீட்டுக்குள் தோய்க்கப் பாருங்கள். ஏனெனில் நான் கேள்விப்பட்டேன் இப்படியான கொமென் மெசின்களில் சப்பாத்தெல்லாம் தோய்ப்பார்களாம் அதனாலும் அலர்ஜி வரலாம். வீட்டில் நாங்கள் தோய்த்தாலும் கிளீன் பண்ணித்தானே உடுப்பைப் போடுவோம். இது கஸ்டமாக இருக்கும். மற்றபடி பெரிதாக எதுவும் இருக்காது. யோசிக்க வேண்டாம்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

என்னன்னு சொல்ல நீங்க சொன்ன அனைத்தையும் அன்று கொடுத்திருக்கிறேன். மதியம் அரை டோபு சப்பாத்தி, ஒரு ஸ்பூன் peanut butter(ஸ்கூலுக்கு).
இரவு கீரை சாதம், பாதி முட்டை கொஞ்சம் தயிர் சாதம். எல்லாம் சேர்ந்து reactஆகிவிட்டது.
இனி பார்த்து தருகிறேன்.

மேலும் சில பதிவுகள்