பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 2

அந்த த்ரெட் ரொம்ப பெரியதாக போனதால் இங்கே புது த்ரெட் ஆரம்பித்து உள்ளேன். ப்ரண்ட்ஸ் இனி இங்கே நம்முடைய பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம். ok lets start. யார் முதலில் ஆரம்பிக்கிறாங்கன்னு பார்ப்போம்.

#4
வளைஞ்சு திரிஞ்சு ஓடும் அது நதியுமல்ல
வழவழப்பா இருக்கும் அது பாம்பும் அல்ல
கிளையெல்லாம் தொங்கும் அது காயும் அல்ல
கிணற்றுக்குள் கிடக்கும் அது கயிறும் அல்ல - அது என்ன?---
பாசி அல்லது பாசிபோல் படரும் கொடி(தாவரம்)

#5
அந்தரத்தில் வீடு கட்டி
அதிலே ஆறு ஜன்னல் வச்சு
கதவு அடைச்சு காத்திருக்கான்
கண் இல்லாத சூனியக்காரன் - அவன் யார்?

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

#4
வளைஞ்சு திரிஞ்சு ஓடும் அது நதியுமல்ல
வழவழப்பா இருக்கும் அது பாம்பும் அல்ல
கிளையெல்லாம் தொங்கும் அது காயும் அல்ல
கிணற்றுக்குள் கிடக்கும் அது கயிறும் அல்ல - அது என்ன?---
பாசி அல்லது பாசிபோல் படரும் கொடி(தாவரம்)

#5
அந்தரத்தில் வீடு கட்டி
அதிலே ஆறு ஜன்னல் வச்சு
கதவு அடைச்சு காத்திருக்கான்
கண் இல்லாத சூனியக்காரன் - அவன் யார்?--
வண்ணத்துப் பூச்சியின் புளு(முட்டை)/ தேன் புளு

எல்லோருக்கும்புத்தாண்டு வாழ்த்துக்கள். நாளை வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா நீங்கள் த்ரட் - 1ல் கேட்டதற்கு முதலில் பதில் சொல்லிவிடுகிறேன். எனக்கு உண்மையிலேயே விடுகதைகளில் விருப்பம் அவ்வளவாக இல்லை. ஏதாவது தமிழ் பற்றிய விவாதங்களாக இருந்தால் சொல்லுங்க. வர்ரேன். நமக்கு பிடித்த திருக்குறளை எல்லோரும் எழுத சொல்லி முன்பொருமுறை கேட்டிருந்தேன். அதிகமாக யாரும் கலந்து கொள்ளவில்லையோ என்று நினைக்கிறேன். இந்த விடுகதை கொண்டாட்டங்களோடு திருக்குறளையும் ஆரம்பிக்கலாமா? அதில் ஏதாவது கேள்வி கேளுங்கள் பதில் தருகிறேன். இந்த விடுகதைகள் ரொம்ப மண்டையை குடைகிறதே!... சரி நானும் யோசித்துப்பார்க்கிறேன்.

மன்னிக்கவும் அதிரா, நீங்கள் கொடுத்துள்ள எந்த விடையுமே விடுகதைக்கு பொருத்தமாக இல்லை. இன்னும் கொஞ்சம் யோசியுங்கள். நீங்கள் நினைத்தால் கண்டுபிடிக்க முடியும் :-)

அப்புறம் நுழம்பு வலை என்றால் உங்கட பாஷையில சிலந்தி வலையோ?! (இருந்தாலும் அது விடை கிடையாது. )

இந்த கரகம் காலில் இருக்கற விடுகதைக்கு விடை சீலிங் பேன்னு நினைக்கிறேன். சரியான்னு சொல்லுங்க. மீதி விடுகதைகளையும் யோசிச்சுட்டு சொல்றேன். என்ன, படிச்சுட்டு இருக்கும்போதே மத்த வேலை வந்ததால சரியா இன்னும் படிக்கல. யாரும் ஆன்சர் சொல்ற வரைக்கும் அடுத்த செட்டை அனுப்பிடாதீங்க. அட்மின், அட்லீஸ்ட் ஒரு நாள் டைம் விடுங்க.

நுளம்பு வலை என்று நான் சொன்னது, இரவில் ஊரில் நுழம்பு கடிகாமல் இருக்க, கட்டிலுக்கு மேலே தொங்கவிடுவார்களே ஒரு வலை, அதைத்தான் சொல்கிறேன்.(mosquito net). இப்போ சரியா சொல்லுங்கள்.

தேவா சொன்னதுபோல் இதற்கெல்லாம் விடை வரட்டும், பின்னர்தான் ஏனையவற்றை சொல்லுங்கள்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மாலதியக்கா, ஆரம்பியுங்க, திருக்குறள் மட்டுமில்லாது அதனுடன் பொன்மொழி அல்லது வேறு ஏதாவது, இணைத்தால் கொஞ்சம் எல்லோருக்கும் ஆர்வம் வரும் என நினக்கிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

ஆஹா கொசு க்கு நுழம்பு ப்பா இப்பத்தான் எனக்கும் புரிந்தது..
கொசுவலை...ஓகே ஓகே..
அதிரா என்ன எல்லாம் சமைத்து அசத்தியாச்சா?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

#4
வளைஞ்சு திரிஞ்சு ஓடும் அது நதியுமல்ல
வழவழப்பா இருக்கும் அது பாம்பும் அல்ல
கிளையெல்லாம் தொங்கும் அது காயும் அல்ல
கிணற்றுக்குள் கிடக்கும் அது கயிறும் அல்ல - அது என்ன?---இப்பத்தான் சடாடென்று தட்டுப்பட்டது, மரத்தில் தொங்கும் என்றதால் குழம்பிப்போனேன், கருவாடு போடுவதுதானே அது. விடை மீன்..... இப்ப சரியா?

மர்ழியா, இன்று எங்களுக்கு தமிழ் வருடப்பிறப்பு, அதனால் வீட்டில் ஒரே அமளியாக இருக்கிறது, கஸ்டப்பட்டு இடையே இங்கு வருகிறேன்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

சத்தியமா எனக்கு யோசிச்சா விடை கிடைக்கும் என்ற நம்பிக்கை கூட வருவதில்லை..நீங்க எப்டிகண்டுபிடிக்கிரீங்க..அப்ப நுழம்பு கடியா? ஆஹா நான் கூட ஏதோ மீன் பேர்னில்ல நெனச்சேன்

மேலும் சில பதிவுகள்