பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 2

அந்த த்ரெட் ரொம்ப பெரியதாக போனதால் இங்கே புது த்ரெட் ஆரம்பித்து உள்ளேன். ப்ரண்ட்ஸ் இனி இங்கே நம்முடைய பழமொழிகள், கணக்குகள், விடுகதைகளை இங்கே பகிர்ந்துக் கொள்வோம். ok lets start. யார் முதலில் ஆரம்பிக்கிறாங்கன்னு பார்ப்போம்.

எப்படி விடை சொல்ல போரீங்க??ஊஹூம் என்னை கொன்னாலும் எனக்கு பதில் வராது.

அட்மினோட விடுகதையெல்லாம் யோசிச்சு பாத்தீங்களா???படிச்சு முடிச்சா ஏதோ ஒரு வினோதமான உருவம் தான் மனசுக்கு வருது.3 கை 5 கால் கிளைன்னு எல்லாமே பயமுருத்துதே

என்ன இது... பொருத்தமா ஒரு விடை கூட இன்னும் வரல.

நான் சொன்ன பிறகு எல்லாரும், இதுதானா, நான் நினைச்சேன். எனக்கு தொண்டை வரைக்கும் வந்துச்சு.. ஆனா சொல்ல.. இப்படி இருக்காதுன்னு நினைச்சேன். எனக்கு தெரியும்.. ஆனா டவுட்டா இருந்துச்சு... நான் பாதி கரெக்டா சொன்னேன்... அப்படி இப்படின்னு டயலாக் எல்லாம் விடக்கூடாது. :-)

இது ஏற்கனவே யாராவது கேட்டு இருக்காங்களான்னு தெரியல...அனைத்தையும் படிச்சு தெரிஞ்சுக்க பொறுமையும் எனக்கு இல்லை..அப்படி இருந்தால் சொல்லிபுடுங்கோ

புதிர் இதோ :
ஒரு முதலாளி அவருக்கு ஒரு பெரிய துணிக்கடை இருக்கு.அந்தகடையை பார்த்துக்க ஒரு வாட்ச் மேனை புதிதாக வேலைக்கு சேர்த்தார்
ஒருநாள் அவ்ர் கம்பெனி விஷயமாக வெளிநாடு போக வேண்டி இருந்தது..
அதற்க்கு ஒருநாள் முன்பு வாட்ச்மேன் முதலாளியிடம் வந்து,
முதலாலி நீங்கள் நாளை வெளிநாடு போவேண்டாம்...நான் ஒரு பயங்கரமான கனவு கண்டேன்..நீங்க போகும் பிலைட் தீ பிடித்து எரியுராப்ல கனவு கண்டேன் என சொன்னார்...பின் முதளாலிக்கும் சின்ன தயக்கம் இவர் இப்படி சொன்னதால் பயணத்தை ரத்து செய்தார்...மறுநாள் பேப்பிலும் பிலைட் எரிந்து சாம்பலானது என செய்தி வந்தது...
இதை பார்த்ததும் ஒரே அதிர்ச்சி முதளாலிக்கு....உடனே வாட்ஷ் மேனை அழைத்து கையில் பணம் கொடுத்து இனி உனக்கு இங்கு வேலை இல்லை என அனுப்பி விட்டார்...
ஏன் இப்படி நடந்து கொண்டார் முதளாலி இதுதான் புதிர் கண்டுபிடிங்கோ..வேலையை முடிச்சுட்டு வந்து பார்கிறேன்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

4 - வது ஆன்ஸர் நாக்கு என்பது சரியாக இருக்கும்போலிருக்கே. தளிகா உங்களுக்கு ஒன்றும் தோன்றவில்லையா? எனக்கும் சுத்தமாக ஒன்றும் ஐடியா இல்லை. இதெல்லாம் இந்த புதிர், கணக்கு போடுவோருக்குத்தான் சரி. இதுக்குத்தான் திருவள்ளுவர் அப்பவே சொன்னார்.

இதனை இதனால் இவன்முடிக்கும் என்றாய்ந்து
அதனை அவன்கண் விடல்

நாம சும்மா வேடிக்கை மட்டும் பார்ப்போமா? இவ்வளவு நேரம் அதைத்தானே செய்துகொண்டிருந்தீர்கள் என்று அஸ்மாவும், அதிராவும் சொல்வது காதில் விழுகிறதா?

விடை என்னன்னு யோசிச்சு எல்லாரும் மண்டை காஞ்சு போயி இருக்கீங்க போல இருக்கு.. இதுக்கு மேலே டைம் கொடுக்க எனக்கு இஷ்டம் இல்லை.. நானே சொல்லிடுறேன்.

ஆனா இங்க இல்ல. சைனீஸ் சமையல் குறிப்புகள் செக்ஷன்ல இருக்கிற ஏதோ ஒரு ரெஸிபிக்கு கீழே விடை சொல்லியிருக்கேன். இங்க சமீபத்திய பதிவுகள்ல தலைப்பே இல்லாம வந்திருக்கு பாருங்க. அந்த பதிவுதான். அது எதுன்னு கண்டுபிடிச்சு அங்க போய் பார்த்துட்டு ....

கனவு காண்ற வாட்ச்மேன் தூங்குமூஞ்சியா இருந்திருபபான். அவனை எப்படி வாட்ச்மேனா போடுறதுன்னு தூக்கிட்டாரோ..

சும்மா.. இப்படி யோசிச்சு பார்த்தேன். திட்டாதீங்க..

அப்ப நான் சொன்ன ஆன்ஸர்தான் கரைக்டா? ( இது எதுவுமே விடுகதை இல்லை போலிருக்கு........சும்மானாச்சும்....) ம்ஹும்.... அதோடு நான் நிறுத்தியிருக்கலாம்.

//இதை கவுண்ட மணி ,செந்தில் ஸ்டைலில் படிங்கோ//

என்ன பாபு தமிபி நலமா? உங்க அம்மா நலமா?

//இதை கவுண்ட மணி ஸ்டைலில் படிங்கோ//

அய்யோ என்ன பா இது இங்க என்ன என்ன வோ பேசிகிறாங்கோ,
விடுகதை யின்றாங்கோ, கதையின்னறாங்க. ஒன்னுமே புரியலப்பா
ஒன்லி சாப்பாட்டு ராமான் கிட்ட போய் இதெல்லாம் கேட்க கூடாது
யெக்கா, அண்ணா, இது உங்களுக்கே நல்ல இருக்கா?

யெஸ்கியுஸ்மி,

இப்ப செந்தில் வரார்:

அண்ணே, அண்ணே பதில் எனக்கு தெரியுண்ணே

கவுண்ட மணி: ஒரு லுக்கு டேய், கரிசட்டி தலையா, பத்தாங்கிளஸ் படிச்ச எனக்கே பதில் தெரியல, நீயெல்ல்லாம் எங்க,

செந்தில்: அண்ணே நான் எட்டாங்கிளாஸ் பாச் அண்ணே

கவுண்டமணி: நான் பத்தங்கிளாஸ் டா.

செந்தில் : நீங்க பத்த்தாங்கிளாஸ் பெயிலு அண்ணே, நான் எட்டங் கிளாஸ் பாஸு அண்ணே.
திருப்பி திருப்பி முன்று தடவை படிங்க,

கவுண்ட மணி : ஆ ஆ ஆ எட்டி ஒரு மிதி செந்திலை.

ஜலீலா

Jaleelakamal

என்ன அக்கா, பயணம் எல்லாம் நல்லபடியா இருந்துச்சா? உங்க பதிவுகள் இல்லாம அறுசுவையே கொஞ்சம் டல்லா இருந்துச்சு. புதிரெல்லாம் தெரியாதுன்னு சொல்லிட்டு, இதுவரைக்கும் வந்த புதிரையெல்லாம் விட ஒரு பெரிய புதிரை போட்டுட்டீங்களே..

உண்மையைச் சொல்லுங்க..

இங்க கவுண்டமணி யாரு.. செந்தில் யாரு..?

மேலும் சில பதிவுகள்