கால் வீக்கம்

எனக்கு இது 7 வது மாதம்.இப்ப தான் ஆரம்பிச்சிருக்கு. அதுக்குள்ள கால் வீக்கம் வர ஆரம்பிச்சிருச்சி.மருத்துவர், உப்பு கம்மி பண்ணனும், பார்லி கஞ்சி குடிக்க சொன்னாங்க.சரியா தூக்கமும் வருவதில்லை. உங்களுக்கும் இப்படி இருந்ததா? இதற்க்கு ஏதாவது வீட்டு வைத்தியம் உண்டா?

அன்புடன்
திவ்யா அருண்

திவ்யா இதெல்லாம் வருவது சகஜம்தான்..பயப்பட தேவை இல்லை..நாள் போக போக தூக்கம் வராது இரவில் நடக்க சொல்லும் எழுந்து உட்கார சொல்லும்...பிரசவித்து முடித்து நாள்போனதும் நாம் பண்ணியதை நினைத்து சிரிப்புதான் வரும்..கால் வீக்கமும் அப்படித்தான் டெலிவரிக்கு பின் எல்லாம் சரியாகிடும்..ஆனால் உப்பை கன்ட்ரோல் பண்ணனும்..அது முக்கியம்
ன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

திவ்யா இது ரொம்ப நார்மல் தான் ஆனால் திடீரென ரொம்ப வீங்கினால் உடனே மருத்துவரைக் காணலாம்.
எதுவோ ஒன்னு எதையோஅழுத்தரதால (மறந்துட்டேன்;-( ) காலில் ரத்த ஓட்டம் குறையும்போது இப்படி ஆகும்பாங்க.
உட்காரும்போதெல்லாம் காலை கீழ திங்க விடாம காலை எதுமேலயாவது தூக்கி வெச்சிருங்க..நிறைய தண்ணி குடிங்க...இப்ப ஷூ செருப்பு எல்லாம் பத்தாம போகும்...சுத்தமா ஹீல் இல்லாத ப்லெயின் ஸ்லிப்பேர்ஸ் வாங்கி போடுங்க கொஞ்சம் சுகமா இருக்கும்..உப்பு கண்டிப்பா குறைக்கனும்.
திவ்யா எனக்கு அப்பல்லாம் வீங்கலன்னு ஒரே பெருமையா நடந்தேன் பாத்தா டெலிவெரி முடிஞ்சதும் உடம்பும் முகமும் வீங்கிடுச்சு..அப்ப ஒரு பாட்டி சொல்லி முள்ளு கீரைன்னு ஒரு கீரை செஞ்சு தந்தாங்க..2 நாள் தான் வீக்கம் போச்சு.

பயப்பட தேவையில்லை. எனக்கும் இருந்தது. டெலிவரி முடிஞ்சதும் சரியாயிட்டது. எனக்கு கை,கால் விங்கிருந்தது. உப்பு குறைத்து கொள்ளவும். உறுகாய் கம்மியாக சாப்பிடவும். நிறய்ய தண்ணிர் குடிக்கவும். நடக்கவும்.

ஹாய் திவ்யா, எப்படி இருக்கீங்க? கால் வீக்கத்திற்கு உப்பை குறைப்பது நல்லது. ஆனால் பார்லி கஞ்சி வேண்டாம். என் கைனக்காலஜிஸ்ட் சொன்னது இது. அவரது மகள் வெளிநாட்டில் இருந்த போது, வேறொரு டாக்டர் சொன்னார் என்று தினமும் பார்லி கஞ்சி குடித்து வந்ததில் கர்ப்ப பையில் (பனிக்குடத்தில்) தண்ணீர் குறைந்து அதனால் சிசேரியன் செய்ய நேரிட்டதாம். மிகவும் வருத்தப்பட்டு சொன்னார்கள். ஏனெனில் அவர் தஞ்சாவூரில் மிகவும் பிரபலமான கைனகாலஜசிஸ்ட். தனது மகள் டாக்டராக இருந்தும், தன் பேச்சையும் கேட்காமல் வேறொரு டாக்டரின் பேச்சைக் கேட்டு இப்படி ஆகிவிட்டதே என்று வருத்தப்பட்டு சொன்னார்கள். நான் அப்போது கர்ப்பமாக இருந்ததால் என்னையும் பார்லி கஞ்சி குடிக்க வேண்டாம் என்று சொன்னார்கள். நான் என் அம்மா சொன்னபடி வெந்தயக் கஞ்சி மட்டும் சாப்பிட்டு வந்தேன். அது செய்வது சுலபம். நாம் சாதம் வைக்கும் குக்கரிலேயே மேல் தட்டில் ஒரு பிடி அரிசி, 2ஸ்பூன் வெந்தயம் சேர்த்து, 1/2 கப் தண்ணீர் ஊற்றி வேக வைத்து, பிறகு நன்றாக மசித்து முடிந்தால் ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து சாப்பிடுங்கள். உப்பு ஒரு சிட்டிகை சேர்த்தால் போதும். வாரம் இரு முறை சாப்பிடுங்கள்.

மேலும், தலை குளிக்கும் அன்று 2 ஸ்பூன் மிளகு, ஒரு ஸ்பூன் சீரகத்தை ஒரு வாணலியில் போட்டு கருப்பாக விடுங்கள். பிறகு அதில் ஒரு கப் தண்ணீர் ஊற்றி அது 1/2 கப் ஆகும் வரை கொதிக்க விட்டு ஒரு ஸ்பூன் வெண்ணெய் சேர்த்து குடியுங்கள். இது இடுப்பு வலியை தாங்க சக்தி கொடுப்பதோடு சளி, இருமல் வர விடாமலும் செய்யும் என்று சொல்வார்கள். இதற்கு "கருக்கு" என்று பெயர். தினமும் இரவில் வாக்கிங் போவது நல்லது. டெலிவரி பற்றி இருக்கும் நல்ல புத்தகங்களை படியுங்கள். அதனைப் பற்றிய தெளிந்த அறிவு இருந்தாலே சிசேரியனை தவிர்த்து விடலாம். "Mother and Baby Care" by Elizebeth Fenwick என்ற புத்தகத்தில் அத்தனை விஷயங்களும் தெளிவாக இருக்கிறது. முடிந்தால் வாங்கி படியுங்கள்.

Is this the book u are talking about?...

http://f3c.yahoofs.com/auc/000262117572/prettyoldbooks-img600x450-dscn5671_resize.jpg?auAmqsLBDq0OrmhA

From how many months do we need to take the karukku?... Is it enough if we take it twice a week(ie, when we wash the hair)?... Also, I think you were saying you'll give some tips to avoid C-sec... I'm not sure if it's u or someone else!... If it's you, have you already written abt it?... Please let me know the name of the thread...

Thanks...:)

ஹாய் டிசென், எப்படி இருக்கீங்க? நீங்க அனுப்பின லிங்கில் உள்ள புத்தகம் தான் நான் குறிப்பிட்ட புத்தகம். நான் தான் சிசேரியனைத் தவிர்க்க சில குறிப்புகள் எழுதுவதாக சொன்னேன். சில பகுதிகளை எழுதி அட்மினுக்கு அனுப்பி வைத்தேன். பிறகு அதைப் பற்றி அவரிடம் கேட்க மறந்துவிட்டேன். அதை இன்னும் பதிவு செய்யவில்லை. கருக்கு 7 ஆம் மாதத்திலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டும். வாரம் ஒரு முறை போதும். இரண்டு முறை வேண்டாம். தலை குளிக்கும் அன்று வெந்தயக் கஞ்சி சாப்பிட வேண்டாம். நான் குறிப்பிட்ட புத்தகத்தில், எப்படி டெலிவரியை எதிர்கொள்ள வேண்டும், அதன் ஸ்டேஜஸ் என்று அனைத்தும் தெளிவாக சொல்லப் பட்டிருக்கிறது. அதனைப் படித்து, புரிந்து , ப்ராக்டிஸ் செய்து கொண்டாலே டெலிவரி ஈசியாக இருக்கும். டெலிவரியை புரிந்து எதிர்கொண்டால் நிச்சயம் வலியால் அழ மாட்டார்கள் என்றுதான் சொல்வேன்.

Thanks a lot...:)

Can you please post the notes on how to avoid C-sec that Deva had sent you...

Thanks...

தேவா அவர்கள் அனுப்பியதை தனித் தொடராக வெளியிட திட்டமிட்டு இருந்தோம். அதற்குள் சர்வர் பிரச்சனை மற்ற பிரச்சனைகள் என்று அந்த பகுதியை கொண்டு வருவதில் கால தாமதம் ஏற்பட்டுவிட்டது. புதிய தளத்தில் பெண்கள் ஆரோக்கியம், அழகு குறிப்புகள் இவையெல்லாம் தனிப்பகுதிகளாக இடம்பெறும். அப்போது அவற்றை வெளியிடலாம் என்று நினைத்திருந்தேன். தற்போது உங்களுக்கு தேவையாய் இருப்பதால் அவர் அனுப்பியதை அப்படியே இங்கே கொடுக்கின்றேன்.

தேவா அவர்களின் கட்டுரை

இதனைப் பற்றி எனக்குத் தெரிந்தவற்றை எழுத வேண்டும் என்று ரொம்ப நாளாக எண்ணியிருந்தேன். ஒரு மருத்துவரின் மனைவியாக இருப்பதால் மட்டுமன்றி, இதனைப் பற்றி தெளிவாக அறிந்துக் கொள்ள நான் படித்த புத்தகங்களும், வீடியோக்களும் மற்றும் என் பிரசவ சமயத்தில் நான் வீட்டுப் பெரியவர்களிடம் கேட்டறிந்த விஷயங்களும், நான் நேரில் பார்த்த சில பிரசவங்களும் என் பிரசவத்தின் போது எனக்கு மிகவும் உதவியாக இருந்தது. சொல்லப்போனால் அந்த ஹாஸ்பிடலில் முதல் பிரசவத்தின் போது சிறிதும் வலியால் அழாமல் அமைதியாக அதை எதிர்கொண்டது நான் ஒருத்திதான் என்று ஆச்சரியப்படுவார்கள். எனக்கு பிரசவம் பார்த்ததும் என் கணவர்தான். போன வாரம் என் பையனுக்கு 3 வயது ஆகியது. எனக்குத் தெரிந்தவற்றைதான் நான் எழுதப் போகிறேன். மற்றவர்களின் கருத்தையும் நிச்சயம் அனுப்புங்கள். நான் எதுவும் தவறாக சொல்வதாக நினைத்தாலும் உடனடியாக தெரியப்படுத்துங்கள். இந்த விஷயத்தில் எனக்கு நிறைய அனுபவம் இல்லாவிட்டாலும், ஒன்றுமே தெரியாமல் இருந்த எனக்கு பிரசவ சமயத்தில் இப்படி படித்து,கேட்டு,பார்த்து தெரிந்து கொண்ட விஷயங்களே அதனை தைரியமாக எதிர்நோக்கும் மனநிலையையும், நமது உடல் நிலையில் நடக்கும் மாற்றங்களையும் தெளிவாக புரிய வைத்தது.

இதுவரையிலும் நமது ஊரில் சொல்வது பிள்ளை பிறப்பு என்பது மறு பிறப்பு என்பதுதான். அதுதான் உலகத்திலேயே அதிக வலி தரும் விஷயமாக பொதுவாக சொல்லப் படுகிறது. இதே போல் எல்லா நோய்களுக்கும் கூட சொல்லலாம். கேன்சர் வந்தவனைக் கேட்டால் அவன் அதுதான் உலகின் பெரிய வலி என்பான். அதேபோல் ஹார்ட் அட்டாக்கும். மருத்துவர்கள் ஹார்ட் அட்டாக்கின் வலியை 10 யானைகள் சேர்ந்து நெஞ்சில் மிதிப்பது போன்று இருக்கும் என்று சொல்கிறார்கள். எனவே எதிர்பாராத வலியை விட, எதிர்பார்த்து காத்திருக்கும் வலி அத்தனை அதிர்ச்சியானதாக இருக்காது.

முதன்முதலில் பருவம் எய்தும்போது வரும் வயிற்று வலி நிச்சயம் தாங்க முடியாததாக இருந்திருக்கும். அதுவே பழக்கமாகிவிடும்போது தாங்கிக்கொள்கிறோம். எப்படி? நமது மனதில் அதை எதிர்கொள்ளும் தன்மை வந்துவிடுகிறது. அந்த நேரத்தில் அதிக வலி ஏற்படும் சிலரும் வலியை தாங்கிக் கொள்ள பழகி விடுகிறார்கள். முதல் பிரசவத்தில் அந்த வலியை முன்கூட்டியே தெரிந்துக் கொள்ள வாய்ப்பில்லை. ஆனால் அது நமக்கும் ஏற்படும் ஒரு மாற்றம் என்பதையும், வலியில் அடிப்படையையும் புரிந்துக் கொண்டால் நிச்சயம் பயமின்றி பிரசவத்தை எதிர் கொள்ள முடியும். ஒவ்வொரு பாகமாக இதனைப் பற்றி தொடர்ந்து எழுதுகிறேன்.

மேலும் சில பதிவுகள்