ஏமாந்தவர்கள் சங்கம்

அந்த பழமொழி....... பகுதியில் நிறைய பதிவுகள் போட்டு அதிகமாகிவிட்டதால் புதிதாக இந்த 'த்ரட்'. தலைப்பு நன்றாக இருக்கிறதா? அட்மினுக்கு 'அர்ச்சனை' செய்வோர் இங்கு செய்யலாம்.

சங்கத்தின் தலைவியாக யாரை தேர்ந்தெடுக்கலாம்? நீங்களே சொல்லுங்கள். எரிகிற தீயில் எண்ணையை ஊற்றிவிட்டேனா?..... மறுபடியும் பழமொழி சொன்னதற்காக என்னை ஒன்னும் செஞ்சிடாதீங்க.

அதிரா தான் சங்கத்தலைவி..அதிரா ஒரே தலைவிரி கோலமாக ரோட்டில் வர்ரவங்க போரவங்களையெல்லாம் கடிச்சு வெக்கிராங்களாம்

எப்படி இருக்கீங்க ரீமாகுட்டி எப்படி இருக்கா.எனக்கு நீங்க சொன்னதை பார்த்தால் சிரிப்புதான் வருது என்ன தளிகா இப்படி நம்ம அதிராவை பத்தி சொல்றீங்க அவங்க நம்ம எல்லாருக்காகவும் தானே பேசுறாங்க.

அன்புடன் கதீஜா.

எப்படி இருக்கீங்க. பாவம் நம்ம அண்ணன் ஏற்கனவே எல்லாரும் அவங்களை போட்டு வாங்கிட்டு இருக்கோம். இப்ப நீங்க வேற அண்ணனை வாங்குறதுக்குன்னு புது த்ரெட் ஓபன் பண்ணி வார்றீங்களே.

அன்புடன் கதீஜா.

இல்ல கதீஜா....எல்லாருக்கும் இருக்குற எரிச்சலில் அந்த பதிவை 'கிளிக்' பண்ணி அப்புறம் அடுத்தடுத்த பேஜ் போய்....... அதுக்கும் சேர்த்துதான் எல்லாருக்கும் ரொம்ப கோபம் வருகிறதோ என்ற ' நல்ல ' எண்ணத்தில்தான் இந்த த்ரட் - ஐ ஓபன் பண்ணினேன். நல்ல பொறுத்தமான தலைப்பாக மனசில் தோன்றியதால் உடனே அதை.........
சரி... தலைவி மற்றும் உறுப்பினர்கள் எல்லாம் சேர்ந்து விடுகதையை டூப் என்று கண்டுபிடித்த எனக்கு ஏதாவது சின்ன அளவில் ஒரு பூமாலை?......ஒரு ..பூச்செண்டு?........ஒரு பூ?........ஒண்ணும் இல்லையா. தலைவி அதிரா வரட்டும் பேசிக்கிறேன்.

ரீமா நல்லா இருக்கா..எனக்கு பக்கத்தில தான் மிரட்டிட்டே தண்ணீல விளையான்டுட்டிருக்கா..இன்சாஃப் எங்கே இனி எப்ப ஊருக்கு?எனக்கு ஊருக்கு போகவே பயமா இருக்கு.
போகும்போது கிடைக்கும் சந்தோஷத்தை விட திரும்ப வரும்பொழுது வரும் கஷ்டம் மட்டும் மனசுக்கு வந்து பயமுருத்துது.
நாம பதில் சொல்லலியே..த்ரெட் போட்ட ஆளு தானே அதிரா..ஆமா கதீஜா எனக்கு பதில் தெரியும் சொல்லட்டான்னு சொன்னியே அது என்ன?

மாலதிக்கா பூச்செண்டு பொருந்தாது..என் சார்பில் ஒரு எலுமிச்சம்பழம்

ஐயையோ எங்கட பாச அண்ணாவை எதிர்க்க புதுத் தலைப்பே போட்டாச்சா..... இனி அவ்வளவுதான்...... எதற்கும் வீடுகளில் இருக்கும் பழைய பொல்லெல்லாம் எடுத்து றெடி ஆகுங்க வாறேன்...

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அதிரா! நீங்க அந்த பகுதியில் ஆயுதங்களோடு ஓடிக்கொண்டிருந்ததை இப்பதான் பார்த்தேன். .சிரிப்பு தாங்கவில்லை. இடைஇடையே இந்த தளிகா வேறு நம்ம சாலமன் பாப்பையா செய்வாரே இந்த பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையையும் ஆட்டிவிடுகிற வேலை.... அந்த மாதிரி அப்பப்ப வந்து உசுப்பி விட்டுட்டு போறாங்க.

தளிகா! உங்களுக்கு ஏப்ரல் 1 ம் தேதி மெயிலை வழக்கம்போல காப்பி பண்ணி பிறகு அனுப்புகிறேன். என்ன ப்ராப்ளம் என்று கண்டுபிடியுங்களேன் ஏதாவது முக்கியமான மெயில் மிஸ்ஸாகி விடபோகிறது.

அன்பான வேண்டுகோள்,
என்ன வேண்டுகோள் என்றதும் எல்லோரும் பயந்திட்டீங்களா? இது நம்ம அட்மினுக்கு, எனக்கு நீண்ட நாளாக இது பற்றி கதைக்க நினைத்து கதைக்கவில்லை. அதாவது "முகப்பில்" இடது பக்கத்தில் வரும் தலைப்பை கிளிப் பண்ணினால் அதே இடத்தில் போய் நிற்கும்படி செய்ய முடியாதா? இது முதல் பகுதியில் தானே போய் நிற்கிறது. இந்த கேள்வி கொஞ்சம் ஓவரா தெரியுதோ?

இருந்தாலும் மாலதியக்கா, இந்தப் பகுதிக்கு நீங்க கொடுத்த தலைப்பை இப்பதான் பார்த்தேன்... கொஞ்சம் கூட நல்லாவே இல்லை.... இனி முகத்தில துணியைப் போட்டுட்டு தான் எல்லோரும் திரியவேணும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

மேலும் சில பதிவுகள்