தொதல் III

தேதி: April 16, 2008

பரிமாறும் அளவு: 25 - 30 துண்டுகள்

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

தேங்காய்ப்பால் - 2 டின்
சிவப்பு அரிசிமா - 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
தண்ணீர் - 1 1/2 டின் (தேங்காய்ப்பால் டின்னால்)
சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி - 400 கிராம் (அல்லது தேவையான இனிப்புக்கு ஏற்ப)
வறுத்த உடைத்த பயறு - ஒரு கைப்பிடி
கஜு (முந்திரி) - 25
பட்டர் - 1 தேக்கரண்டி
வனிலா/ஏலக்காய் - சிறிது


 

கஜுவை பட்டரில் வறுத்து எடுக்கவும்.
கித்துள்/சர்க்கரையை சிறிய துண்டுகளாக நொருக்கவும். பிரவுண் சீனியாயின் அப்படியே போடலாம்.
பின்னர் ஒரு பெரிய பாத்திரத்தில் தேங்காய்ப்பால், சிவப்பு அரிசிமா, தண்ணீர், சர்க்கரை/கித்துள்/பிரவுண் சீனி, பயறு என்பவற்றை ஒன்றாக கலந்து சிறிது அதிகமான தீயில் வைத்து எண்ணெய் பிறக்கும் வரை கிளறவும்.
எண்ணெய் பிறந்து கலவை சட்டியில் ஒட்டாத பதம் வந்ததும், ஏலக்காய்/வனிலா, கஜு சேர்த்து கிளறி ஒரு தட்டில் கொட்டி சமமாக பரவி ஆற விடவும்.
சுவையான தொதல் தயார். ஆறியதும் துண்டுகளாக்கி பரிமாறவும்.


கலவையை அடுப்பில் வைத்து கிளறும் போது கலவை கொதித்து தெறிக்கப் பார்க்கும். எனவே கைக்கு உறை போட்டு அல்லது நீண்ட கைப்பிடி உள்ள கரண்டி/அகப்பையால் கிளறவும்.கலவை நன்கு சுருள 40 - 45 நிமிடங்கள் எடுக்கும் கலவை நன்கு சுருண்டதும் தேங்காய் எண்ணெய் பிறக்கும். அதனை வடித்து எடுத்து விடலாம். உடனே சாப்பிடுவதை விட வைத்து அடுத்த நாள் சாப்பிட மிகவும் சுவையாக இருக்கும். :)

மேலும் சில குறிப்புகள்


Comments

மிகவும் இலகுவான முறை. தொதலுக்கு அரிசி மாவை வறுக்க வேண்டுமா?

அன்புடன்
Geetha

அட்மின், தொதல் குறிப்பு வேறு முறையில் திருமதி. செல்லி அவர்களின் குறிப்புகளில் உள்ளது. இது மிகவும் சுலபமான முறையில் இருந்ததால் இங்கும் கொடுத்துள்ளேன். Duplication பிரச்சனை இருந்தால் கூறவும் அல்லது நீக்கி விடவும்.
-நர்மதா :)

இந்த தொதல் கீழக்கரையில் தான் ரொம்ப பிரபலம்
அப்ப,என்ன நர்மதா இலங்கையிலுமா?
ஜலீலா

Jaleelakamal

அன்புள்ள நர்மதா. நலமா இருக்கிறீங்களா? ரெம்ப நாளைக்கு பின்பு சந்திக்கிறேன். மறந்திருக்கமாட்டீங்க என நினைக்கிறேன். உங்களுக்கும் உங்க குடும்பத்தினருக்கும் எனது புதுவருட வாழ்த்துக்கள். எனது கேள்வி? டின் என்றால் டின்மில்க் டின்னையா குறிப்பிட்டீர்கள். பதில் தருவீர்களா?.நன்றி. அன்புடன் அம்முலு

சகோதரி நர்மதா அவர்களுக்கு,

இரண்டு குறிப்புகளிலும் சில வித்தியாசங்கள் இருப்பதால் பிரச்சனை எதுவும் இல்லை. இதில் தவறும் இல்லை.

இது மிகவும் சுவையான தொதல்தான். ஆனால் ஊரில் வெளியே அடுப்பில் செய்வது தான் சுலபம். இங்கே வீட்டுக்குள் எப்படி செய்வதென்று நினத்தேன். நர்மதா, இதைப் பார்த்ததும் செய்யலாம் என்று தைரியம் வந்துள்ளது.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

அன்பின் ஜலீலா, ஆமாம் இது இலங்கையின் வடக்கு, கிழக்கு மற்றும் தென் கிழக்கு பகுதிகளில் மிகப் பிரபலம். கதிர்காமம் (கேள்விப்பட்டிருபீர்கள் இந்த இடத்தை பற்றி என நினைக்கிறேன்.) செல்பவர்கள் தொதல் வாங்காமல் வருவது குறைவு. அவ்வளவு பிரபலம் :)

அன்பின் அம்முலு, வாழ்த்துக்களுக்கு நன்றி. நாம் நலம். நீங்கள் நலமா? உங்களது குடும்பத்தாருக்கும் எனது வாழ்த்துக்கள். இங்கு டின் என்று குறிப்பிட்டது தேங்காய்ப்பால் டின்னைத்தான். தேங்காய்ப்பால் இங்கு டின்களில் கிடைக்கிறதுதானே. பாலை எடுத்தவுடன் அந்த டின்னால் எல்லா பொருட்களையும் அளக்கவும். :)

அன்பின் அட்மின், நல்லது. நன்றி. :)

அன்பின் அதிரா, ஓம். ஊரில் அம்மா, அம்மம்மாவும் வெளியே அடுப்பு மூட்டித்தான் செய்வினம். அது ஒரு பெரிய process :) ஆனால் இங்குதான் எல்லாம் ரெடிமேடாக கிடைக்கிறதே. எனவே செய்வது சுகம். செய்து பாத்திட்டு சொல்லுங்கோ. :)

நர்மதா:)

ஆஹா வாவ் கீழக்கரையில் பெயர் போன தொதல் இலங்கையுலுமா? என்னால் நம்ப முடியல..அது என்னவோ கஸ்டமான விஷயம்னு நினைத்தேன் வீட்டில் செய்யும் அளவிற்க்கு ஈஸியா?..
குட் நர்மதா...
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

Dear Narmatha is the 'red rice flour 'roasted or raw flour,can you kindly let me know .
.thankyou Indra

yes

ஹாய் நர்மதா சுகமாக இருக்கிறீங்களா? இந்த தொதல்3 மூன்றாவது முறையாக செய்துள்ளேன். அத்தனைக்கும் நல்ல டேஸ்ட்& ஈசி உங்க மூன்று முறை தொதல்களும் செய்துபார்த்துள்ளேன். சூப்பர். நன்றி அன்புடன் அம்முலு.