Travelling with Baby

நான் இப்பொழுது 7 மாதம் கர்பமாக இருக்கிறேன். குழந்தை பிறந்து மூன்று மாதத்தில் ஜப்பான் செல்ல வேண்டும்.Huaband is working there. நானும் வேலைக்கு செல்கிறேன். குழந்தை ஐ 3 மாதத்தில் கூட்டி கொண்டு போகலாமா என்று கவலை ஆக உள்ளது. என் மாமியாரும் என்னுடன் வருவார்கள். ஆனாலும் குழந்தை உடல் நிலை ஒத்துகொள்ளுமோ என்று தான் பயமாக இருக்கிறது. இந்த அருசுவை ல் நிரய பேர் வெளி நாட்டில் வசிக்கிரீர்கள். Please உங்கள் ஆலோசனைகளை கூறுங்கள்.

தாராளமா கூட்டிட்டு போகலாமே...போகும்பொழுது சில விஷயங்களை கவனத்தில் வைத்தால் சுகமாக போகலாம்...பிறகு வந்து சொல்கிறேன்..இன்று இரவு வரை என்னை வலையிட்டு தேடினாலும் கிடைக்க மாட்டேன்

ஒரு பயமும் இல்லை தராலமாக கூட்டி செல்லலாஅம் என் பிரண்ட் கதீஜா ஜப்பானில் இருந்தவள்தான் அவளிடம் என்ன சந்தேகம்னாலும் கேளுக்ங்க சொல்லுவா..ஆஹா தளிக்கா எங்க போஹப்போறே?

மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஒரு 5 மாதம் வரை கூட குழந்தையுடன் பயனிப்பது சுலபம் ஏன்னா அதுக்கு பசிக்கு ஏதாவது கொடுத்து சரியா தூங்க வச்சுட்டா அது பாட்டுக்கு இருக்கும்.அதுக்கு மேல வளந்த குழந்தைக்கு ஒன்னு நம்மை தூக்கிக் கொண்டு நடக்க சொல்லும் இல்லை அதுக்கும் இதுக்கும் ஃப்லயிட்டில் குதிச்சுட்டு பொரிஞ்சுட்டே இருக்கும்..அதனால் உங்களுக்கு பயமில்லை..இனி சில விஷயங்கள்.
1) முன்னால் சீட்டில் வின்டோ பக்கம் சீட் வாங்குங்கள்..காலை நீட்டி உட்காரவும் குழந்தைக்கு பால் கொடுக்கவும் ..பேக் அது இதுன்னு எதையாவது இடையில் எடுக்க கால் முன்னாலேயே பேகை வைக்கவும் சுலபம்.
தாய்ப்பால் கொடுப்பதாக இருந்தால் அதற்கு சவுகரியமான மறைவான உடை உடுத்துங்கள் இல்லை கைய்யில் ஒரு சின்ன துணியை வைத்தால் மேலே போட்டுக் கொண்டால் எங்கிருந்தாலும் தைரியமாக பால் கொடுக்கலாம்
2) டேக் ஆஃப் அல்லது லேன்டிங் இரண்டுக்கும் காது வலி வரலாம் அப்பொழுது தாய்ப்பாலோ புட்டிப் பாலோ கொடுத்தால் காது வலி வராது...அதனால் ஃப்லயிட் எடுக்கும் முன் குழந்தை பசியுடன் இருக்க பார்த்துக்கவும்..பின் லேன்டிங் அப்பவும் பசியுடன் இருந்து பால் குடித்தால் காது வலி வராது
3)ஃப்லயிட்டில் சில சமயம் குளிரும் சில சமயம் சூடெடுக்கும்..அதனால் இரண்டு வகையான துணிகள் வைய்யுங்க...உடம்பு முழுக்க கவராகும் உடுப்பும் ,பருத்தியாலான உடுப்பும்.
4)தேவையான அளவு வைப்ஸ்,டிஷ்யூஸ்,டயபெர்ஸ்,கொஞ்சம் பாலிதின் டிஸ்போசல் கவேர்ஸ் அதையும் ரெடியாக வைய்யுங்கள்
5)குழந்தைக்கு விருப்பமான குட்டி டாய்ஸ் இருந்தால் பேகில் வைய்யுங்க
6)முக்கியமா நீங்கள் அனியும் ட்ரெஸ் நல்ல பருத்தியாலான சுகமான துணியாக இருந்தால் நல்லஹு..நீங்களே தூக்கி வெக்கனும் இல்லையா கண்டபடி டிசைன்,மணி உள்ள துணி குழந்தைக்கு அசவுகரியம் கொடுக்கும்...ஃப்லயிட்டில் ஏறி குழந்தை தூங்கியதும் கேபின் க்ரூஸிடம் பேசினெட் கேட்டு வாங்குங்கள்..பக்கத்திலேயே படுக்க வைக்கலாம்
7)எதுவாக இருந்தாலும் தயங்காமல் கேபின் க்ரூஸிடம் கேளுங்கள்..என்ன சவுகரியமும் செய்து தருவார்கள்.பால் பாட்டிலை சுடு தண்ணீரில் போட்டு ச்டெரிலைஸ் செய்து கூட தருவார்கள்.
வேறெதுவும் நினைவுக்கு வரவில்லை வந்தால் சொல்லுகிறேன்.
மர்ழியா 20 பேர் சேர்ந்து வெளியே செல்கிறோம்..சிக்கனும் சேலடும் என்னுடைய வேலை.

Hello
யாருக்காவது ஜவ்வரிசியில் பொட்டு செய்து பிள்ளைகளுக்கு விடுவார்களே அது செய்ய தெரியுமா? தெரிந்தால் சொல்லுங்களேன். எப்பொழுது வரும்?

தமிழி

சிறிய அளவில் இருக்கும் ஜவ்வரிசி(பெரிதாக இருக்கும் ஜவ்வரிசி அவ்வளவாக நன்றாக இருக்காது) ஒரு பிடி எடுத்து, அதை வாணலியில் இட்டு கருப்பாகும் வரை வறுத்துக் கொண்டே இருங்கள். நன்றாக கரிய நிறத்தில் ஆனதும், கரண்டியாலேயே அதை தூளாக்குங்கள். நல்ல பவுடரைப் போல ஆகாவிட்டால் வாணலியில் இருந்து எடுத்து ஒரு சிறிய கல்லை வைத்தோ சாப்பாத்திக் கட்டை வைத்தோ பொடியாக்குங்கள். இதில் ஒரு 1/8 கப் தண்ணீர் ஊற்றி அடுப்பில் வைத்தால் குழம்பு போல் அனைத்தும் சேர்த்து சாந்துப் பதத்தில் வரும். இதனை ஒரு கொட்டாங்கச்சியிலோ அல்லது கனமான சில்வர் கிண்ணத்திலோ எடுத்து வைத்துக் கொள்ளுங்கள். தேவையான போது தண்ணீர் தொட்டு குழப்பி ( மேல் புறத்தில் தண்ணீர் தொட்ட விரலால் தடவினால் ஒரு பொட்டு வைக்கும் அளவு வரும்) இட்டுக் கொள்ளுங்கள்.

குழந்தைகளுக்கு ஜவ்வரிசிப் பொட்டு வைத்தால் அது காய்ந்தவுடன் இறுகிவிடும். கழுவும்போது பார்த்து எண்ணெய் தொட்டு ஊறவைத்து கழுவுங்கள். இல்லாவிடில் குழந்தைகளுக்கு வலிக்கும். இதற்கு பதிலாக வசம்பை விளக்கில் சுட்டு எடுத்து வைத்துக் கொண்டால், தேவையானபோது தண்ணீர் விட்டு உரசி பொட்டாக இடலாம். எங்கள் பாட்டி கரிசலாங்கண்ணி மற்றும் விளக்கெண்ணெய் கொண்டும் பொட்டு செய்வார்கள். கரிசலாங்கண்ணி சாறில் ஒரு துணியை ஊற வைத்து, பிறகு அந்த துணி காய்ந்தவுடன் அந்த துணியினை திரியாக்கி நல்லெண்ணெய் அல்லது விளக்கெண்ணெய் ஊற்றி தீபம் ஏற்றுவார்கள். அந்த விளக்கை ஒரு மூடியால் மூடி, பிறகு அந்த மூடியினுள் படிந்திருக்கும் கரியை சேகரித்து தேவையானபோது விளக்கெண்ணெய் சேர்த்து குழைத்து பொட்டாக இடுவார்கள். இதேபோல் மஞ்சளிலும் செய்வார்கள்.

குழந்தைக்கு விமானத்தில் தேவையானது பற்றி கீழ் லின்கில் உள்ளது.
http://www.arusuvai.com/tamil/forum/no/4121

கதீஜா , ஜப்பானில் குழந்தை ஐ வைத்து கொண்டு வேலை க்கு போவது சாத்தியமா. கிரீச் எல்லாம் எப்படி இருக்கும். வாழ்க்கை முறை எப்படி இருக்கும். கொஞ்சம் சொல்லுங்களேன்.

ஹாய் ப்ரியா எப்படி இருக்கிறீர்கள்.அறுசுவையில் உங்கள் சந்திப்பு கிடைத்ததற்க்கு சந்தோஷம். முதலில் தாயாகப்போகும் உங்களுக்கு என்னுடைய வாழ்த்துக்களும், பிராத்தனையும்.ஜப்பானில் குழந்தையை வைத்துக்கொண்டு வேலைக்கு போறது பற்றி எனக்கு தெரியவில்லை அதே போல் க்ரீச் பற்றிய அனுபவமும் எனக்கு இல்லை அதனால நீங்க கேட்ட கேள்விக்கு என்னால் பதில் தர முடியவில்லை. எனக்கு தெரிந்த மற்றவற்றை கூறுகிறேன். அங்க வாழ்க்கை முறை ரெம்பவும் நல்லா இருக்கு. ஆனால் மொழி தான் பிரச்சனை அங்க யாருக்கும் ஆங்கிலம் தெரியாது அவங்க மொழிக்குதான் முக்கியத்துவம் கொடுப்பாங்க. டாக்டர்கிட்ட போறதுக்கு ஒரு நோயை சொல்றதுக்குள்ள உயிர் போய்டும். அதன் பிறகு கொஞ்சம் ஆங்கிலம் தெரிந்த 2 டாக்டர் என் ஹஸ் ஆபீஸ்ல சொல்லி கடைசியா தெரிந்தது . இப்பதான் ஹஸ் ஜாப்பனீஸ் பேசுறதால இனி ப்ராப்ளம் இல்லை. அப்புறம் மற்றபடி எல்லாம் ரெம்பவும் எக்ஸ்பென்ஷிவ்.அப்பார்ட்மெண்ட் தொடங்கி,கிரண்ட் பில்,கேஸ் பில், காய்கறியில் இருந்து கறி,மீன் வரைக்கும்.அப்புறம் நீங்க குழந்தையை கூட்டிட்டு போறதுக்கு அக்டோபர் என்றால் கடைசிக்கு முன்னாடி போறது நல்லது ஏன்னா கடைசில விண்டர் ஆரம்பிக்கும் குழந்தை இந்தியால பிறந்துட்டு உடனே அந்த வெதருக்கு குழந்தை செட் ஆகாது என்று என் பையனை நான் இங்க பெற்றதும் கேட்ட டாக்டர் சொன்னாங்க நாமா கொஞ்சம் குளிர் ஆரம்பிக்க முன்னாடியே போவிட்டால் குழந்தைக்கு கொஞ்சம் கொஞ்சமாக அந்த வெதர் ஒத்துக்கும். அப்புறம் 6 மாசம் குளிர் இருக்கும். வேற என்ன சந்தேகம்னாலும் கேளுங்க எனக்கு தெரிந்ததை சொல்கிறேன். நீங்க எந்த இடத்துல இருக்க போறீங்கன்னு தெரிந்துகலாமா விருப்பம் இருந்தால் சொல்லவும்.

அன்புடன் கதீஜா.

கதீஜா, இன்னும் ஏரியா பேர் தெரியல. உங்கலுக்கு அங்க வந்த உடனே சொல்ரேன். நாம மீட் பண்ணலாம்.

டியர் பிரியா...தாயாக போகும் உங்களுக்கு என் வாழ்த்துக்கள்...தற்சமையம் கதீஜா சிறிது நாளைக்கு அருசுவை பக்கம் வரமாட்டாள்...அவளின் தாத்தா காலாமாகிவிட்டார்கள்..(இன்னலில்லாஹிவைன்னாஇலைஹிராஜிஹூன்)
அவள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்ன்பியதும் உங்களுக்கு பதில் தருவாள்

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்