குழிப் பணியாரம்/கார வகை

தேதி: April 18, 2008

பரிமாறும் அளவு: 5 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

Average: 3 (1 vote)

 

புளித்த இட்லி மாவு - நான்கு கோப்பை
சோடா உப்பு - ஒரு சிட்டிகை
வெங்காயம் நறுக்கியது - அரைக்கோப்பை
பச்சைமிளகாய் நறுக்கியது - இரண்டு
இஞ்சி நறுக்கியது - ஒரு தேக்கரண்டி
கடுகு சீரகம் கலந்தது - ஒரு தேக்கரண்டி
உளுத்தம்பருப்பு - ஒரு தேக்கரண்டி
கொத்தமல்லி நறுக்கியது - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - கால் கோப்பை


 

இட்லிமாவில் ஒரு சிட்டிகை சோடாவைச் சேர்த்து கலந்துவைக்கவும்.
ஒரு சிறிய சட்டியில் இரண்டு தேக்கரண்டி எண்ணெயை காயவைத்து கடுகுசீரகத்தை போட்டு வெடிக்கவிட்டு உளுத்தப்பருப்பைப் போட்டு சிவக்க வறுக்கவும்.
பிறகு வெங்காயம், பச்சைமிளகாய், இஞ்சியைச் சேர்த்து வதக்கவும்.
வெங்காயம் வெந்தவுடன் கலவையை மாவில் கொட்டவும். அதனுடன் கொத்தமல்லியையும் போட்டு நன்கு கலக்கிக் கொள்ளவும்.
பிறகு குழிப்பணியார சட்டியின் குழிகளில் ஒரு தேக்கரண்டி எண்ணெயை ஊற்றவும், எண்ணெய் காய்ந்ததும் மாவு கலவையை குழிகளில் முக்கால் வரையில் ஊற்றி வேகவிடவும்.
கூர்மையான கத்தி அல்லது கம்பியைக் கொண்டு பணியாரத்தை திருப்பிவிட்டு வேகவிடவும்.
இரண்டு புறமும் இளஞ்சிவப்பாக வெந்தவுடன் எடுத்து தேங்காய் சட்னி அல்லது கோழி குருமாவுடன் சூடாக பரிமாறவும்.


இட்லி மாவு கைவசம் இல்லாவிடில் இரண்டு கோப்பை இட்லி அரிசி, அரைக்கோப்பை உளுந்து, ஒரு தேக்கரண்டி வெந்தயம், ஒருதேக்கரண்டி கடலைப்பருப்பு ஆகியவற்றை ஊறவைத்து கெட்டியாக அரைத்து, ஒரு இரவு முழுவதும் அதை ஊறவைத்து ஒரு தேக்கரண்டி உப்பும், ஒரு சிட்டிக்கை சோடாவையும் கலந்து மாவை தயாரித்துக் கொள்ளலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

மனோ மேம், நான் நேற்று பண்ணினேன். ஸுப்ப்ரோஸுப்ப்ர். என் கண்வர் சொன்னார் ரொம்ப நல்லா வந்திருக்கு என்று. எல்லா க்ரெடிடும் மனோ மேடத்துக்கு தான் என்று. நான் சொன்னேன் அவங்கிட்டே நான் என்ன ரெசிப்பி கேட்டாலும் டிக்ஷ்ணரி மாதிரி உடனேயே வந்துடும். நன்றி சொல்ல சொன்னார் உங்க்ளுக்கு.
என் கண்வருக்கு ஸ்விட்ஸ் என்றால் ரொம்ப பிடிக்கும் அவர் என்னிடம் கேட்டுகொனே இருக்கான் அதிரசம் எனக்கு டைம் கிடைக்கும் போது அதிரசம் ரெசிப்பி குடுங்கள், நான் காத்துஇருக்கேன். அவசரம் இல்லை. நன்றி.............

டியர் விஜி இந்த குறிப்பு உங்கள் இருவருக்கும் பிடித்திருந்தது மகிழ்ச்சியே,அதை சுவையாக சமைத்து உங்க கணவரை மகிழ்வித்த உங்களுக்கு எனது பாராட்டுக்கள். அதிரசம் குறிப்பு தானே தருகின்றேன் அதற்காக டிக்ஷனரி மாதிரி என்றெல்லாம்.... கொஞ்சம் ஓவர் தான் பரவாயில்லை அதுகூட கேட்க நல்லாதான் இருக்கின்றது நன்றி.

ஹலோ விஜி மேடம், நீங்க கேட்டிருந்த அதிரசம் குறிப்பை வெல்லம் கொண்டு செய்யும் குறிப்பை, கொடுத்துள்ளேன் டிரை செய்து பாருங்கள். அதில் ஏதாவது டவுட் இருந்தால் தாராளமாக கேட்க்கலாம் நன்றி.

டியர் மனோகரி மேடம் ,
பனியாரம் ரொம்ப சூப்பெர்.நல்ல மொரு மொருவென்று இருந்தது.நேரம் கிடைக்கும்போது இனிப்பு குழிப்பனியாரம் ரெசிபி குடுங்கள்.பிரவுன் சுகர் உபயோகித்து செய்யும் முறை இருந்தால் ஈசியாக இருக்கும்.நன்றி.
அருணா

aruna

டியர் மனோகரி மேடம் ,
பனியாரம் ரொம்ப சூப்பெர்.நல்ல மொரு மொருவென்று இருந்தது.நேரம் கிடைக்கும்போது இனிப்பு குழிப்பனியாரம் ரெசிபி குடுங்கள்.பிரவுன் சுகர் உபயோகித்து செய்யும் முறை இருந்தால் ஈசியாக இருக்கும்.நன்றி.
அருணா

aruna

மனோஹரி அம்மா,
நானும் இதே பணியாரத்தை அடிக்கடி செய்வேன். ஆனால் இஞ்சி, கொத்தமல்லி, ஜீரகம் இவை மூன்றையும் சேர்க்க மாட்டேன். நீங்கள் கூறியவாறு நேற்று செய்து பார்த்தேன். அருமையாக இருந்தது.

நன்றி.

சுபா
நினைக்க மறந்தாலும் மறக்க நினைக்காதீர்!!!