வாருங்கள் தோழிகளே கோடை குதுகளிக்கலாம் அறுசுவையுடன்

ஹாய் ப்ரண்ட்ஸ், என்ன குதுகளிக்கலாம்னு இருக்கேன்னு பாக்குறீங்களா? அது ஒன்றுமில்ல இந்த கோடை ரொம்ப வெப்பத்தை தருகிறது. அதனால இந்த கோடை பருவத்தை எப்படி சம்மாளிப்பது என்று நாம் பேசலாம். உங்கள் அனைவருக்கும் தெரிந்த கோடைக்கு ஏற்ற உணவு குறிப்புகள், கோடையில் அணியும் ஆடைகள், ஆரோக்கியம், அழகு குறிப்புகள் பற்றி பகிர்ந்து கொள்ளலாம். எப்படி எல்லாம் நாம் இந்த கோடை பருவத்தை கடப்பது? இங்கு நிறைய experts இருக்காங்க so நிறைய பயனுள்ள ஆலோசனைகள் கிடைக்கும் என்று நம்புகிறேன்.

நான் கூட மறுபடியும் அறுசுவை டூர் என்று நினைத்தேன்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நிறைய பேர் நல்ல நல்ல கோடை வாசஸ்தலங்களில் போய் வந்திருப்பீர்கள் அதைக் கூட இங்கு பகிர்ந்துக் கொள்ளலாம். கோடைக்கு ஏற்ற இடம் எது எப்படி தேர்ந்தெடுக்க வேண்டும் என்பதை பற்றியும் பகிர்ந்துக் கொள்வோம். அடுத்து நமது குழந்தைகள் வெயிலில் அலையாமல் இருக்க என்ன மாதிரியான பயிற்சிகளில் ஏற்ப்படுத்தலாம். கோடை என்றாலே இந்தியாவை பொறுத்தவரை அவரவர் சொந்த பந்தங்களை போய் பார்த்து வருவது தான் வழக்கம். முக்கியமா பிள்ளைகளுக்கு எப்படா லீவு விடுவாங்க ஊருக்கு போகலாம்னு இருக்கும். ஊருக்கு செல்லும் முன் நாம் பாதுகாப்பாக செய்து விட்டு போக வேண்டியவை.

குழந்தைகளுக்கு:
பருத்தியால் ஆன ஆடைகளை அணியலாம். விளையாடி விட்டு வரும் குழந்தைகளுக்கு செயற்கை பானங்களை கொடுப்பதை விட நுங்கு, இளநீர், தர்பூசணி போன்றவைகளை கொடுக்கலாம். காலை, மாலை இருவேளையும் குளிக்க சொல்லலாம். தண்ணீர் என்றால் குழந்தைகளுக்கு ஜாலி தானே.
பெரியவர்களுக்கு:
non veg உணவுகளை தவிர்க்கலாம். மாலை நேரங்களில் வெளியில் செல்லலாம். நல்ல குளிர்ச்சியான பழங்கள், காய்கறிகளை உணவில் சேர்த்துக் கொள்ளலாம். இரண்டு வேலை குளிக்க முடியவில்லை என்றாலும் towel bath எடுத்துக் கொள்ளலாம்.
பெண்கள அதிக நேரம் கிச்சனில் நின்று செய்யும் வேலைகளை தவிர்த்து சீக்கிரம் செய்யும்படியான உணவுகளை தயாரிக்கலாம். அலுவலகங்களில் வேலை செய்பவர்கள் டீ ப்ரேக்கில் காபி, டீக்கு பதிலாக எலுமிச்சை ஜூஸ், குளுக்கோஸ் போன்றவற்றை அருந்தலாம்.

தெரிந்ததை பகிர்ந்துக் கொண்டேன்.

மேலும் சில பதிவுகள்