தேவா மேடம் அட்டன்ஸ் பிளீஸ்

ஹாய் தேவா மேடம் நான் உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆகிட்டுன்னு நினைக்கிறேன்...நல்லா இருக்கின்றீர்களா?தளிக்கா உங்களை இளம் வயதுன்னு சொன்னவுடன் சாக் ஆகிட்டேன்..எவ்லோ அனுபவமா பேசுறீங்க..மாஷாஅல்லாஹ்...கிரேட் போங்க...
அப்புறம் எனக்கு ஒரு மேட்டர் சொல்லனும்...
எனக்கு நோர்மலாக கொஞ்சம் சில்கி ஹேர்தான்...ஆனால் அதை ஸ்டிரைட் பண்ணனும்னு நினைக்குறேன்...மாலுக்கு போனால் பொறாமையக இருக்கு..மற்றவர்களின் ஹேரை பார்க்குறப்ப....ஆனால் பியூட்டி பார்லருக்கு அவங்களாம் போராங்க அது வேற..

வீட்டிலேயே ஹேர் ஸ்டிரை பண்ணுற மிசின் வாங்கி இருக்கேன்..ஆனால் அதை யூஸ் பன்ண பயமா இருக்கு...காரணம் 2 இருக்கு
1.ஸ்டிரைட் பண்ணினால் முடி கொட்டிடும்னு சொல்லுறாங்க
2.என்னிடம் இருப்பது தரமான மிஷினான்னு தெரியல...

ஸ்டிரை பண்ணினால் முடி கொட்டுமா?
கொட்டாதுன்னா எந்த கம்பெனி ஸ்டிரை கொம்ப் வாங்கனும்...
அதை எப்படி யீஸ் பண்ணனும்

நான் அவசரத்தில் கிறுகிட்டு இருக்கேன்..இப்ப கெஸ்ட் வாரபோறாங்க...சோ உங்களுக்கு புரிந்ததான்னு தெரியல பதில் பிளீஸ்

ஹாய் தேவா மேடம் நான் உங்களிடம் பேசி ரொம்ப நாள் ஆகிட்டுன்னு நினைக்கிறேன்...நல்லா இருக்கின்றீர்களா?தளிக்கா உங்களை இளம் வயதுன்னு சொன்னவுடன் சாக் ஆகிட்டேன்..எவ்லோ அனுபவமா பேசுறீங்க..மாஷாஅல்லாஹ்...கிரேட
் போங்க...
அப்புறம் எனக்கு ஒரு மேட்டர் சொல்லனும்...
எனக்கு நோர்மலாக கொஞ்சம் சில்கி ஹேர்தான்...ஆனால் அதை ஸ்டிரைட் பண்ணனும்னு நினைக்குறேன்...மாலுக்கு போனால் பொறாமையக இருக்கு..மற்றவர்களின் ஹேரை பார்க்குறப்ப....ஆனால் பியூட்டி பார்லருக்கு அவங்களாம் போராங்க அது வேற..

வீட்டிலேயே ஹேர் ஸ்டிரை பண்ணுற மிசின் வாங்கி இருக்கேன்..ஆனால் அதை யூஸ் பன்ண பயமா இருக்கு...காரணம் 2 இருக்கு
1.ஸ்டிரைட் பண்ணினால் முடி கொட்டிடும்னு சொல்லுறாங்க
2.என்னிடம் இருப்பது தரமான மிஷினான்னு தெரியல...

ஸ்டிரை பண்ணினால் முடி கொட்டுமா?
கொட்டாதுன்னா எந்த கம்பெனி ஸ்டிரை கொம்ப் வாங்கனும்...
அதை எப்படி யீஸ் பண்ணனும்

நான் அவசரத்தில் கிறுகிட்டு இருக்கேன்..இப்ப கெஸ்ட் வாரபோறாங்க...சோ உங்களுக்கு புரிந்ததான்னு தெரியல பதில் பிளீஸ்

ன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,எப்படி இருக்கீங்க? உங்க பெண் ரொம்ப அழகு. எல்லோருடனும் பேசியே நாளாச்சு. ரொம்ப சோம்பேறி ஆயிட்டேன். ஹேர் ஸ்ட்ரெயிட்னிங் பற்றி ஏற்கனவே எனது ஈசி மேக்கப் பதிவில் கொடுத்திருக்கிறேன். எதற்கும் இங்கே ஒரு முறை அதை Copy & Paste செய்திருக்கிறேன்.

" பர்மனெண்ட் ஸ்ட்ரெயிட்னிங் ஐவிட டெம்பரவரி ஸ்டெயிட்னிங்தான் உகந்தது. இதற்கு கொஞ்சம் பொறுமையும், அதே சமயம் அதனைப் பற்றி நன்கு தெரிந்து செய்வதும் அவசியம். நான் இதற்கென்று இங்கே ஒரு ஹேர் ஸ்டைலிஸ்ட்டிடம் கற்றுக் கொண்டேன். நீங்கள் அருகிலிருக்கும் சலோனில் கேட்டு விளக்கம் பெறலாம். நான் இங்கே என்னால் முடிந்த விளக்கம் தருகிறேன்.

ஸ்ட்ரெயிட்னிங் செய்ய செராமிக் பதித்த ஸ்ட்ரெயிட்னர் நல்லது. அதனை நல்ல பிராண்டாக பார்த்து வாங்கிக் கொள்ளவும். குறைந்த விலையிலென்றால் Remington போன்ற பிராண்டுகளிலும், அதிக விலையில் GHD போன்ற தரமான பிராண்டுகளும் கிடைக்கின்றன. பிறகு ஸ்ட்ரெயிட்னிங் செய்த ஹேருக்கென்று இருக்கும் ஷாம்பூ, கண்டிஷனர், ஸ்ட்ரெயிட்னிங் செய்யும்போது அப்ளை செய்யும் ஹேர் க்ரீம் முதலியவற்றை வாங்கிக் கொள்ளுங்கள். இவை அனைத்தும் ஒரே பாக்கில் பல சலோன்களில் கிடைக்கிறது. நன்கு அறிந்த பிராண்டுகளில் சன்சில்க், ஸ்க்வார்ஸ்கார்ப் போன்றவற்றில் ஒரு பேக்காக கிடைக்கிறது.

தலையை நன்கு ஷாம்பூ போட்டு அலசி காய வைத்து சிக்கெடுத்து வாரிக்கொள்ளவும். அதில் ஸ்ட்ரெயிட்னிங் செய்யும் ஹேரில் உபயோகிக்கும் க்ரீமை லேசாக அப்ளை செய்யவும். எண்ணெய் தடவுவதுபோல் லேசாக தடவவும். முதலில் முடியை இரண்டாக இரட்டை சடைக்கு பிரிப்பதைப் போல பிரித்து ஒரு பக்கத்தை பேண்டால் முடிந்துக் கொள்ளவும். இன்னொரு பக்கத்தில் ஒரு விரல் தடிமன் அளவு செக்ஷனாக பிரித்து ஸ்ட்ரெயிட்னரை வைத்து முடியை (வேரிலிருந்து ஒரு 2 செ.மீ அளவிலிருந்து விட்டு ) அயர்ன் செய்வது போல செய்யவும். மற்ற முடியை ஒர் க்ளிப் வைத்து தலை மேலே க்ளிப் செய்துக் கொள்ளவும். ஸ்ட்ரெயிட்னர் இடுக்கி போல இருப்பதால் முடியை அதனுள் விட்டு அயர்னிங் செய்ய எளிதாக இருக்கும். இப்படியே ஒரு பக்கம் முழுதும் கொஞ்சம் கொஞ்சமாக க்ளிப்பிலிருந்து ஒவ்வொரு செக்ஷனாக எடுத்து ஸ்ட்ரெயிட்னிங் செய்யவும். இப்படியே அடுத்த பக்கத்திற்கும் செய்யவும். பிறகு ஸ்ட்ரெட்னிங் செய்ய உபயோகிக்கும் அதே க்ரீமை லேசாக தடவவும். முடி செட்டாகி விடும். இது தலையில் தண்ணீர் படும்வரை அப்படியே இருக்கும். எனவே குளிக்கும் போது ஷவர் கேப் உபயோகிக்கவும். இப்படி செய்து கொள்வதால் ஒரு வாரம் ஸ்ட்ரெயிட்னிங் அடுத்த வாரம் கர்லி என்று வித்தியாசமான தோற்றத்தில் இருக்கலாம். படத்துடன் விளக்கினால் எளிதாக புரியும். எதற்கும் ஸ்ட்ரெயிட்னிங் பேக்கில் இருக்கும் செய்முறையை கவனமாக படிக்கவும். ஸ்ட்ரெய்னிங் செய்யும்போது வேருக்கு மிக அருகில் செய்யாமல் இருந்தால் முடி கொட்டும் பயமே இருக்காது. முடி வேர்ப் பகுதியில் ஸ்ட்ராங்காக இருப்பதுதான் முக்கியம் (முடி கொட்டும் பிரச்சனை இருப்பவர்கள் தினமும் 5 பேரீச்சை சாப்பிட்டால் நல்ல பலன் இருக்கும்). ஏற்கனவே முடி கொட்டும் பிரச்சனை உள்ளவர்கள் ஸ்ட்ரெயிட்னிங்கை தவிர்ப்பது நலம்.

பர்மெனெண்ட் என்றால் சலோனில் சென்று செய்துக் கொள்ளுங்கள். டெம்பரவரி என்றாலும் முதல் முறை சலோனில் சென்று செய்துக் கொள்ளுங்கள்"

தலைக்கு குளித்த பின்பு, மாயிஸ்ச்சுரைசரை லாக் செய்ய ஹேர் க்ரீம் அல்லது மூஸ் உபயோகித்தால் முடி வறண்டு கொட்டி விடும் என்ற பயம் தேவையில்லை. அதே போல் ஹேட் ஸ்ட்ரெயிட்னிங் செய்த பிறகு Perfect Solution தடவினால் முடி மிகவும் பளப்பளப்பாக இருக்கும். இதில் எதுவும் சந்தேகம் இருந்தால் கேளுங்கள்.

ஹாய் டியர் தேவா...ரொம்ப நன்றி டிடைலாக கொடுத்தமைக்கு...

1.என்னிடம் செராமிக் பதித்ததுதான் இருக்கு..அதன் பெயர் guanming இதை யூஸ் பண்ணலாமா?
2.அப்புறம் நான் வழக்கமாக உபயோகிக்கும் ஷேம்புவை ஸ்ற்றைட்டிங் பண்ணுப்ப யூஸ் பண்ணகூடாதா?
3.நான் கார்னியர் சேம்பு அண்டு கண்டிஷ்னர் யூஸ் பண்ணுறேன்..இதை போடலாமா?எனக்கு சன் சில்க் ஒத்துக்காது...
4.பெர்பக்ட் லோஷன்,ஹேர் கிரீம்(இதெல்லாம் எனக்கு தெரியாது...ந்ல்ல பிராண்ட் சொல்லுங்க..விலை அதிகம்னா பயம் இருக்காது..) இதெல்லாம் அனைத்து பியூட்டி பார்லரிலும் கிடைக்குமா?கொடுப்பாங்களா விலைக்கு?
இல்லை health & glow போன்ற கடைகளில் கிடைக்குமா?
தயவு செய்து பிரி டைம் கிடைக்குறப்ப சொல்லுங்க...(ரொம்ப குழப்புறேனோ?)
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஹாய் மர்ழியா,
எப்படி இருக்கீங்க? இங்கே சில பிரச்சனைகளால் என்னால் உடனடியாக பதில் கொடுக்க முடியவில்லை. மன்னிக்கவும். நீங்கள் கேட்டிருந்த சந்தேகங்களுக்கு இப்போது பதிலளிக்கிறேன். நீங்கள் குறிப்பிட்டிருந்த ஸ்ட்ரெயிட்னர் நல்ல பிராண்ட் தான். பிராண்டுகளை விட அதன் டெம்பரேச்சர் மிகவும் முக்கியம். 200 டிகிரிக்கு மேலே வெப்பம் உள்ள ஸ்ட்ரெயிட்னர் உபயோகித்தால் நல்ல பலன் கிடைக்கும். உபயோகிக்கும் முன் ஒரு 5 நிமிடம் ஸ்ட்ரெயிட்னரை ஆன் செய்து வைத்து விட்டு உபயோகித்தால் அதற்குள் நன்றாக சூடாகியிருக்கும். உபயோகிக்கும் போது நல்ல பலன் கிடைக்கும். நீங்கள் வழக்கமாக உபயோகிக்கும் கார்னியர் ஷாம்புவையே தொடர்ந்து உபயோகிக்கலாம். முடி உலர்ந்தவுடன் மாய்ஸ்சுரைசிங் க்ரீம் உபயோகியுங்கள். நல்ல பிராண்ட் நாட்டுக்கு நாடு வேறுபடும். நான் சொல்லிய அனைத்து பொருட்களும் சலோனில் கிடைக்கும். சாதாரண கடைகளில் கிடைக்காது. System Professional ல் கீழ்க்கண்டவற்றை வாங்கிப் பாருங்கள். Wella, Schworscorf போன்றவற்றிலும் கிடைக்கும். விலை ஆஸ்திரேலியா டாலரில் ஒவ்வொன்றும் 30 டாலருக்கு கிடைக்கும். உங்கள் பணத்தில் கணக்கிட்டுக் கொள்ளுங்கள். ஒரு முறை வாங்கினால் ஒரு வருடத்திலிருந்து 1.5 வருடம் வரை வரும். எனவே அதிக விலை என்று சொல்ல முடியாது.
Revitalising Cream அல்லது Moisturising Cream - இது தலை குளித்து முடி உலர்ந்தவுடன் ஒரு கையளவு எடுத்து தடவ வேண்டும். System Professional Straight away - ஸ்ட்ரெயிட்னிங் செய்யும்போது ஒரு பம்ப் எடுத்து ( ஒரு முறை அமுக்கினால் வரும் க்ரீம் அளவு) தடவுங்கள். System Professional Polish Cream - ஸ்ட்ரெயிட்னிங் செய்தப் பிறகு முடி பளப்பளப்பாக ஷைனிங்காக தெரிய தடவ வேண்டும். இதுவும் ஒரு பம்ப் அளவு போதும். இந்த தகவல்கள் போதும் என்று நினைக்கிறேன். சந்தேகம் இருந்தால் கேளுங்கள். உடனடியாக பதில் கொடுக்காவிட்டால் தப்பாக நினைக்க வேண்டாம். இன்னும் 4 வாரத்திற்கு என்னால் அறுசுவையில் பங்களிக்க முடியாது என்று நினைக்கிறேன்.

தேவா மர்ழியா.... நன்றி...
மர்ழியா.. எதுக்கு உங்களுக்கு நன்றி தெரியுமா... சில நேரம்... மத்த மாணவர்களின் கேள்வியை/பதிலை வைத்தே நாம் சில விஷயங்களை தெரிந்து கொள்ளலாம் அல்லவா.. அதுக்குத்தான்

இவ்வளவு நாளா ஹேர் ஸ்ரெயிட்டன் பண்ண வேண்டும் என்று ஆசை... ஆனா... ஏடாகூடமாக செய்து.. இருக்கும் 4 முடியில் 2 போய்விட்டால்.. என்ற பயம்... இப்போ தான் டெக்னிக் தெரியுது...

செய்து விட்டு சொல்றேன்

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹாய் தேவா உங்கள் பதிலை பர்த்தேன் ரொம்ப நன்றிப்பா...வருத்தம் இல்லை சந்தோஷம்தான் எனக்காக மெனக்கெடுத்தமைக்கு நன்றி...

என்ககு கர்பனைலாம் போகுது பார்கலாம்...முடி பரக்குறாப்ல :-))

அப்ப் முதலில் பியூட்டி பார்லரிலா பண்ண சொல்லுறீங்க?எனக்கு தெரிஞ்ச ஒரு பியூட்டி பார்லர் இருக்கு என் பொண்ணுக்கு ஹெர் கட் பண்ண போவேன் அங்குதான்...எனக்கும் ஒரு முறை என் மனசை மாற்றி முன் பக்கம் கட் பண்ண சம்மதித்தேன் பணமும் வேஸ்ட் இவரிடமும் பேச்சு...முடியை வெட்டியதோட சரி இதுவரை எதுக்காக வெட்டினேனோ அப்படி போட்டது இல்லை..இதெல்லாம் ஹீரோயினுக்குதான் சரின்னு அப்புறமாக புரிந்து கொண்டேன்...எனகெல்லாம் கொண்டைதான் பெஸ்ட்,அதை விட்டால் கிளிப் போட்டு பின்னல்தான் சரின்னு...இருப்பினம் என்ன புரயோஜனம் முடி வேஸ்ட் ஆகிட்டு நல்ல வேலை ஓரளவு வெட்டியது அதுவரை நிம்மதி :-)..திரும்ப அவர்களிடம் போக பயம் எப்ப வாறீங்கன்னு கேட்டு கொடங்சுட்டாங்க..வேற் சலூன் தெரியாது..இனி அவர்களிடம் போனா நான் காலி...எனவே வீட்டிலேயே டிரைபண்ணி பார்கட்டுமா?
இளவீரா ரொம்ப சந்தோஷம் நாம் இருவரும் முயற்சிப்பொம் பின் மீண்டும் சந்திப்போம்..இனிதான் அவர்கள் சொன்ன கிரீம்லாம் வாங்கனும்..ஸ்ற்றைட்னர் மட்டும் என்னிடம் இருக்கு

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் பார்லரில் இங்கே செய்து இருக்கிறேன்.. ஒரு இன்டர்வியுவுக்கு முன்... வேலையும் கிடைத்தது... சேர்ந்து ஒரு 3 வாரத்தில் மறுபடியும்... பழைய குருடி கதை தான்.... ஹேர் ட்ரெயர் வைத்து முயற்சி பண்ணினேன்... முன் பக்கம் ஒரு ஆங்கிளிலும் பின் பக்கம் ஒரு ஆங்கிளிலும் இருந்தது....

மர்லியா... கற்பனை என்றவுடன்... இதை நினைத்துக்கொண்டேன்
அப்புறம் நினச்சிட்டேன்.. நமக்கு துணி தான் அயர்ன் பண்ண வரும் என்று...

இப்பொ தான் மறுபடியும் ட்ரெய் செய்ய போகிறேன்....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

ஹா ஹா எனக்குதான் இப்படி ஆகிட்டுன்னு நினைத்தேன் உங்களுக்குமா ஓகே இருவரும் முயர்ச்சி பண்னி பார்காலாம்....முடித்ததும் உங்கள் அனுபவத்தை மறக்காமல் சொல்லிடும்ங்க..இப்ப மாலுக்கு போக இருக்கேன் அங்குள்ள பார்லரில் டிரை பண்ணனும் தேவா சொன்ன கிரீம்லாம் கிடைக்க்தான்னு?

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நானும் தேவையான் பொருள்களை இந்த வாரம் வாங்குகிறேன்
Enjoy Shopping

ila

Hope is just the part of the equation

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

நான் சொன்ன முறையில் கொஞ்சம் கொஞ்சம் செக்ஷனாக பிரித்து செய்தால் ஈசி. இந்த முறை ஸ்ட்ரெயிட்னிங் தலையில் தண்ணீர் படும் வரைதான் இருக்கும். இங்கே ஆஸ்திரேலியாவில் தினமுமே ஆபிஸ் செல்பவர்கள் முடியை அயர்னிங் செய்து கொள்வார்கள். நாம் ஒழுங்காக தண்ணீர் படாமல் பார்த்துக் கொண்டால் ஒரு வாரம் வரை வரும். அப்படி வேலைக்கு செல்லும் போது மிகவும் பர்பெக்டாக ஸ்ட்ரெயிட்னிங் வேண்டுமென்றால் மேல்புறத்தில் மட்டும் லேசாக ஸ்ட்ரெயிட்னிங் தினமும் செய்துக் கொள்ளலாம். ஆனால் நிச்சயம் நான் பரிந்துரைக்க மாட்டேன். வாரம் ஒரு முறையே போதும்.

மர்ழியா, நீங்களே முயற்சி செய்துப் பாருங்கள். நிச்சயம் எளிதாக வரும். ஹேர் ஸ்டைலைப் பற்றி நான் ஏற்கனவே ஒரு பதிவில் சொல்லி இருக்கிறேன். நம்மால் மெயிண்டெயின் செய்யமுடியும் என்று நிச்சயம் தெரிந்தால் மட்டுமே அந்த ஹேர் ஸ்டைலை தேர்ந்தெடுக்க வேண்டும். ஸ்ட்ரெயிட்னிங் செய்ய நார்மலான 'U" கட் அல்லது நேராக அடியில் ட்ரிம் செய்தால் போதும். 'V' கட் கூட நன்றாக இருக்கும். முன்புறம் ப்ரிஞ்சஸ், லேயர்ஸ் போன்ற கட் மெயிண்டெயின் செய்வது கடினம். ஹேர் டிரயர் இன்னொருவரின் உதவியோடு உபயோகப்படுத்தினல் மட்டுமே செட் செய்வது எளிதாக வரும். நான் சொன்ன அனைத்தும் நிச்சயம் நீங்கள் வசிக்கும் நாடுகளில் கிடைக்கும் என்றுதான் நினைக்கிறேன். ஆல் தி பெஸ்ட்.

மேலும் சில பதிவுகள்