கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் - 3

"கணக்குகள், விடுகதைகளை இங்கே கேட்போம் 2" - வது பாகம் நீளமானதால் இது 3 - வது பாகமாகிவிட்டது. அங்குள்ள பதிவிற்கான பதில்களை இங்கே தொடர்வோம்.

மாலதிக்கா...! நான் இறைவன் அருளால் நல்லாவே இருக்கேன் :) நீங்க நலமா? உடம்பு கொஞ்சம் சரியில்லாத மாதிரி ஒரு பதிவில் பார்த்தேன். எனக்கு தெரிந்த சிலவற்றை உங்களுக்கு நாளை சொல்கிறேன். இப்போது இங்கு டைம் 23:30 ஆகிவிட்டது, அதனாலதான் இப்போ முடியல. ஸாரி..!

ஆமாம் மாலதிக்கா..! அது என்னோடு சேர்ந்து பிறந்த குணம். கணக்கு, விடை தேடுவது என்றால் அவ்வளவு பிடிக்கும்! சிலசமயம் விடை கிடைக்க தாமதமானால், விடையை யோசிப்பதுபோல் கனவில் கூட வரும் :-) விடையே தெரியாமல் போனால், ஏதோ தவறு செய்ததுபோல் உறுத்தும். :) நீங்கள் கேட்டதுபோல், 'படிக்கும்போது கணக்கில் புலியா?' ன்னு தளிகா 2,3 தடவை கேட்டுவிட்டார்கள். என்னைப்பற்றி நானே சொல்வதா..ன்னு யோசித்தே பதில் சொல்லாமல் இருந்துவிட்டேன் :) அப்படிதான்னு வச்சுக்கோங்களேன்......:-) உண்மையாகவே இருப்பதைக்கூட குறைவாகதான் சொல்லணும். ஏனென்றால் நம்மைவிட எத்தனையோ திறமைசாலிகள் இந்த அறுசுவையிலேயே இருப்பார்கள் அல்லவா? :)

நன்றி சுல்தான் ஸார்! அல்ஹம்துலில்லாஹ், நான் நலம். நீங்கள், மெஹர் மேடம், மற்றும் உங்கள் அமீரா நலமா? நேரமாகிவிட்டது. பிறகு பேசுகிறேன்.தூக்கமா வருது..

நான் இப்பதான் நீங்க கொடுத்த பதிலயே பார்த்தேன், வெளியில போய்ட்டேன். சூப்பர் மேடம் உடனே பதில் கொடுத்துடீங்க சூப்பர் மேடம். நான் சும்மா கொஞ்சம் entertaining இருக்கட்டுமேன்னு கொடுத்தேன், ஆனா உடனே நீங்கள் பதில் கொடுத்தது சந்தோஷம்.

இடமிருந்து வலம்:
இது ஒரு ஐந்து எழுத்து வார்த்தை, பஜகோவிந்தத்தை இயற்றியவர்
மேலிருந்து கீழ்:
விசுவின் படத்தின் முதல் பாதி

விளையாடலாம் வாங்க இதை போல உங்களுக்கு தெரிந்தவற்றையும் சொல்லுங்களேன்

இடமிருந்து வலம் சங்கரர்
மேல் இருந்து கீழ் சம்சாரம்
Rajini

ஹே.... சூப்பர், மேடம் இந்த குறுக்கெழுத்து போட்டினா எனக்கு ரொம்ப பிடிக்கும் சரி அதான் நம்ம ப்ரண்ட்ஸ் கூட பகிர்ந்துகலாமேன்னு கொடுத்தேன். நாம இப்பதான் முதல்ல பேசுறோம் எப்படி இருக்கீங்க ரஜினி? இத தொடரலாமா?

இது ஒரு மேஜிக் கணக்கு! :) விருப்பம், ஆர்வம் உள்ளவர்கள் கலந்துக்கொள்ளலாம். நீங்கள் செய்யவேண்டியதெல்லாம் 3 ஸ்டெப்ஸ்:-

ஸ்டெப் 1 : ஒரு பேப்பரில் ஒரு வட்டம் வரைந்து, அதனுள் உங்களுக்கு விருப்பமான ஒரு எண்ணை எழுதுங்கள். இதுதான் இந்த மேஜிக் கணக்கில் முக்கியமான எண்.

ஸ்டெப் 2: அந்த எண்ணின் இடம், வலம், மேல், கீழ் பக்கங்களில் அதாவது, வட்டத்தின் வெளியேயுள்ள 4 பக்கங்களிலும் நீங்கள் நினைக்கும் ஏதாவது 4 எண்களைப் போடவும்.

ஸ்டெப் 3: (a)சுற்றியுள்ள 4 எண்களின் கூட்டுத் தொகையையும், (b)இடமிருந்து வலமாக இருக்கும் 3 எண்களின் கூட்டுத் தொகையையும், (c)மேலிருந்து கீழாக உள்ள 3 எண்களின் கூட்டுத் தொகையையும்
கூட்டுத் தொகை (a) .........
கூட்டுத் தொகை (b) .........
கூட்டுத் தொகை (c) .........என்று நீங்கள் சொல்லவேண்டும்.
இப்போது நீங்கள் வட்டத்திற்குள் முதலில் போட்ட அந்த எண் என்னவென்று நான் உங்களுக்கு சொல்வேன்.:) மற்றவர்களும் சொல்ல முயற்சி செய்யலாம்.

குறிப்பு:- கூட்டுத் தொகைகளை a, b, c என்று சரியாக குறிப்பிடவும். நீங்கள் கூட்டியது சரிதானா என்பதை சரிபார்த்து சொல்லவும். ஓ.கே, கேம் ஸ்டார்ட் நவ்.....! :)

சரி நான் கலந்துக்கறேன்.

a.84
b.61
c.62

உடனே நீங்கள் கலந்துக்கொண்டமைக்கு நன்றி விஜி! ஆனால் உங்களின் கூட்டுத்தொகையில் ஏதோ சிறு தவறு உள்ளது. சரிபார்த்து சொல்லவும். ப்ளீஸ்!

முழுமையான எண்ணை பயன்படுத்தினால் நல்லது. அதாவது இரண்டரை, மூன்றேகால் என்றெல்லாம் வேண்டாம். அப்படி அவ்வாறு பயன்படுத்த நீங்கள் விரும்பினால், முழுமையற்ற எண்கள் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதை குறிப்பிடவும். என்னால் பதில் சொல்ல முடியும் :)

அவசரத்தில் தப்பாக எழுதிவிட்டேன்.

84
60
62

மேலும் சில பதிவுகள்