இந்தியாவில் இருந்து என்ன வாங்கி வரலாம்?!

இந்தியாவில் இருந்து என்ன வாங்கி வரலாம்?!

அன்பு சகோதரிகளுக்கு ...

வணக்கம்!. சமீபத்தில் அறுசுவை-யில் இணைந்த இந்த தோழியின் வேண்டுக்கோள்.

அடுத்த மாதம் கோடை விடுமுறைக்காக தாய்நாடு (சென்னை) போய்வர திட்டமிட்டுள்ளோம். அங்கிருந்து என்ன என்ன பொருட்கள் வாங்கி வரலாம் என்று சொல்லுங்களேன் ப்ளீஸ்.... அப்படியே கடைகள் பெயரையும் , விபரமாக சொன்னால் நன்றாக இருக்கும்.

உதாரணமாக குழந்தைகள் ஆடை, சல்வார் , டாப்ஸ் , புடவை நமக்கு.. பான்ஸி ஜுவல்லரி.. இதெல்லாம் எந்தெந்த கடைகளில் நன்றாக கிடைக்கும் என்று சொல்லுங்களேன்..... எனது நன்றிகள் பல முன்கூட்டியே!

நன்றி!வணக்கம்!!

எனக்கு சென்னை shopping பற்றி ரொம்ப தெரியாது. எங்களுக்கு எல்லாருக்கும் வாங்கி வரதா இருந்தா சொல்லுங்க ஒவ்வொருவரும் லிஸ்ட் அனுப்புகிறோம் (நீங்க எங்க வேனாலும் வாங்கிட்டு வாங்க). மற்றபடி சென்னை shopping பற்றி தெரிந்த சகோதரிகள் பதில் சொல்வர்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

இந்தியா பயணம் மகிழ்சியாகவும், பாதுகாப்பாகவும் அமைய வாழ்த்துக்கள். fashion jewelry பற்றி எனக்கு எதுவும் தெரியாது. அனால், எக்மோர் பாந்தியான் ரோட்டில் whole sale துணிகள் கிடைக்கும். அன்றாட தேவைகளுக்கு, வாங்கி தைய்த்துக் கொள்ளலாம்.

குழந்தைகள் இருந்தால், அவர்களுக்கு தேவையான(சளி/இருமல்) நாட்டு மருந்து(நான் அறுசுவையில் இருந்து தான் அறிந்தேன்) வாங்கி வரலாம். உதரணமாக கட்டி கற்புரம், திப்பிலி, பனங் கற்கண்டு. இதை பற்றி மேலும் விபரத்திற்கு குழந்தைகள் அரோக்கியம், சிறுவர் சிறுமியின் அரோக்கியம் பகுதியில் பாருங்கள்.

அப்புறம் நமக்கு தேவையான அழகுப் பொருட்கள் சந்தனம், முல்தானி மெட்டி, சிகைக்காய், பன்னீர் ரோஜா இதழ்கள், கஸ்தூரி மஞ்சள். தேவாவின் அழகு குறிப்பை ஒரு முறை படிங்கள், நிறைய பொருள்கள் இந்தியாவில் கிடைப்பதை குறித்துக் கொள்ளுங்கள்.

அப்புறம் சில பாத்திரம் பணியார குழி, இரும்பு சட்டி, நல்ல cooker பல்வேறு capacity வாங்கி வரலாம்.

இந்தியா போனால் என்ன வாங்கி வரலாம்.எனக்கு தெரிந்தவரை சொல்லுகிறேன்.நான் முதலில் அம்மாவிடம் சொல்லி சிவக்காய் தான் ரெடி பன்ன சொல்வேன்.ஒரு கிலோ அளவுக்கு கறிவேப்பிலை காய வைத்து எடுத்து வருவென்.எனக்கு கறிவேப்பிலை கிடைப்பது கஷ்டம்.வடகம்,இடியாப்ப மாவு,புட்டு மாவு,ராகி மாவு இதெல்லாம் எடுத்து வரலாம்.மிக்ஸி ஜார் எதும் ரிப்பேர் ஆனால் சரி செய்து எடுத்து வரலாம்.நம்ப ஊர் மிக்ஸி எடுத்து வரலாம்.வித்தியா சொல்லிய்யபடி தோசை கல்,பனியார கல் கொண்டு வரலாம்.நம்ப ஊர்ல தான் ஜீன்ஸ்க்கு நல்ல டிசைன் டிசைனா டாப்ஸ் கிடைக்கும்.புரசைவாக்கம் போனால் ஸ்ரீரிகிருஸ்னா,இண்டியா டெக்ஸ்டைல்ஸ்ல டாப்ஸ் எல்லாம் நல்லா இருக்கு.அங்கேயே பவுண்டேஷன் மேக்கப் அய்டம் எல்லாம் வாங்கலாம் AC கடை என்பதால குழந்தைகலும் வெயில் தாங்க மாட்டார்கள் .அங்கு அவர்களுடன் போவது எனக்கு சுலபமாக இருக்கு.அப்பரம் டிநகர்க்கு என்று ஒரு நாள் போலாம் அங்கு நிறய்ய துணிகடை,நகை கடை எல்லாம் ஒரு ரவுண்டு வரலாம்.போனதும் துணி கடைக்கு போய் துணி தைக்க கொடுத்திட்டு தான் வேற வேலை பார்ப்பேன்.அப்படி செய்தால் அங்கு இருக்கும் போதே எல்லார் வீட்டுக்கும் போகும் போது புதுசா டிசைனா போட்ட மாதிரியும் இருக்கும்.குழந்தகலுக்கும் உடனே ரெடி மேடா வாங்கிடுவேன்.டிநகர் போனாலே போதும் அங்கு நகை கடை கட்டாயம ஒரு விசிட் போகனும் .எல்லோருக்கும் விதவிதமான டேஸ்ட் .உங்க விருப்பப்படி எல்லாம் சந்தோஷமாகா சென்று இனிதாக பயணம் அமைய்ய வாழ்த்துக்கள்.

அன்புடன் பர்வீன்.

ஹாய் வித்யா , பர்வீன்

முதலில் என் கேள்விக்கு பதில் தந்தமைக்காக மிக்க நன்றி!
அப்புறம், உங்கள் வாழ்த்துக்க்ளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!!

நான் கேட்க வந்ததை ரொம்ப சரியாக புரிந்துகொண்டு நச்சுன்னு பாய்ண்ட்ஸ் கொடுத்து இருக்கீர்கள். நானும் அப்படிதான், எல்லா பொடி வகைகளையும் அம்மாவிடம் கேட்டு வாங்கி வந்து விடுவேன். ஆனால் கறிவேப்பிலை செய்தது கிடையாது. இந்த முறை முயற்சிக்கிறேன். நீங்கள் சொன்ன மற்ற குக்கர், மிக்ஸி , பாத்திர பண்டம் எல்லாமும் யோசித்து வைத்து இருக்கிறேன்.

வித்யா, நிச்சயமாக நீங்க சொன்ன இரண்டு திரெட்டையும் பார்க்கிறேன். குழந்தை-களுக்கு தேவையான நாட்டுமருந்து பற்றி எதுவும் எனக்கு ideas இல்லை. நிச்சயம் குறிப்பு பார்க்கிறேன்.

முக்கியமாக எனக்கு கடைகள் பெயர், எங்கு எது நல்லா கிடைக்கும் என்பதுதான் தெரியாது. நீங்க சொன்ன கடைகள் பெயர்களை குறித்து வைத்துக்கொள்கிறேன்.

p.s. குழந்தைகள் educational & fun புத்தகம், CDs எல்லாம் எங்க வாங்கலாம் என்று தெரிந்தால் சொல்லுங்களேன்.

மீண்டும் ஒரு முறை என் நன்றிகள்!!

அன்புடன்
சுஸ்ரீ

வடகம்,வத்தகுழம்பு பொடி.
செம்பு,வெள்ளி பாத்திரங்கள் விழக்க சபினாபவுடர்,
குழந்தைகள் ஆடை,நமக்கு சல்வார் , டாப்ஸ் , புடவை
எடுக்க போத்தீஸ் நல்லாயிருக்கும்.
குழந்தைகள் educational & fun , CDs எல்லாcdகடைகளிலும் கிடைக்கிறது.
பின் துளசி,கீரை,அவரை காய்கறி விதைகள் வாங்குவது நல்லது
இனிதாக பயணம் அமைய்ய வாழ்த்துக்கள்.

naturebeuaty

டியர் அஞ்ஜலி,

உங்கள் பதிலுக்கும், வாழ்த்துக்ளுக்கும் ரொம்ப ரொம்ப நன்றி!!
உண்மையிலேயே யூஸ்புல்-ஆன தகவல்கள் தந்து இருக்கிறீர்கள். மீண்டும் என் நன்றிகள்!. வணக்கம்.

அன்புடன்
சுஸ்ரீ

முறுக்கு அல்லது இடியாப்பக் குழல் போன்றவை எடுத்து வரலாம்.பிறகு கருவேப்பிலை,மல்லி இலை,புதினா போன்றவற்றை காய வைத்து எடுத்து வரலாம்.நீங்கள் வசிக்கும் ஊரில் தேங்காய் கிடைக்காது என்றால்,தேங்காயை சிறு துண்டுகளாக நறுக்கி காயவைத்து எடுத்துக் கொள்ளலாம்.1/2 மணி நேரம் நீரில் ஊறவைத்தால் ஃபிரஷ் போலவே இருக்கும்.அதே போல் இப்போது மாங்காய் சீசன் என்பதால்,ஊறுகாய் மாங்காய் வங்கி பெரிய துண்டங்களாக்கி 1 நாள் உப்பில் ஊஊறவைத்து,காய வைத்து எடுத்துக் கொள்ளலம்.அதே போல் குச்சி கிழங்கு அல்லது கப்பகிழங்கு என்று அழைக்கப்படும் கிழங்கு கிடைத்தால் வாங்கி அரைப் பதமாக வேக வைத்து,சிறு துண்டுகளாக்கி காய வைத்து எடுத்துக் கொள்ளலம்.மெல்லிய துன்டுகளாக இருந்தால் சிப்ச் போல பொறித்தும் சாப்பிடலாம்.வேக வைக்க 3 - 4 மணி நேரம் ஊறவைத்தால் போதும்.பொதுவாக கிளம்புவதற்கு முன் ஊருக்கு போய் என்ன என்ன வாங்க வெண்டும் என்று ஒரு செக் லிஸ்ட் போட்டுக் கொள்ளுங்கள்.பிறகு ஊருக்குப் போன பின் ஒவ்வொறு பொருளாக வாங்கிய பின் டிக் செய்து கொள்ளவும்.இதனால் எந்த பொருளும் விட்டுப் போகாது.

எனக்கு தெரிந்த டிப்ஸை கொடுத்துள்ளேன்,தேவையானவரை பயன்படுத்தி கொள்ளவும்.

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

ஸ்ரீகீதா..........
ஜெய்ஹிந்த்........

டியர் ஸ்ரீகீதா,

கண்டிப்பாக! உங்கள் பதிலுக்கு ரொம்ப நன்றி!! நான்கூட அப்படிதான் டிக்கெட் புக் பண்ணியதும் லிஸ்ட் எழுத ஆரம்பித்துவிடுவேன்! : )

அல்ரெடி நிறைய எழுதிக்கொண்டு இருக்கிறேன்... உங்கள் குறிப்புக்ளையும் சேத்துக்கொள்கிறேன். கிழங்கு idea எல்லாம் எனக்கு புதுசு.... மறுபடியும் ரொம்ப நன்றி!

அன்புடன்
சுஸ்ரீ

யாரெல்லாம் இந்தியா வர்றீங்க கை தூக்குங்க பார்க்கலாம். எல்லாரையும் இந்தியாவிற்கு வருக வருக என வரவேற்கிறேன்.

மேள தாளம் எல்லாம் ரெடியா... ரெடின்னா சொல்லுங்க.. இப்போவே ஜுலைக்கு டிக்கெட் போடுறேன்... எப்படி இருக்கீங்க... உங்களுக்கு இப்போ மார்னிங் சிக்னெஸ் எல்லாம் போய்டுச்சா....

"10 வது முறை விழுந்தவனைப் பூமி முத்தமிட்டுச் சொன்னது - "9 முறை எழுந்தவனல்லவா நீ?"..

மேலும் சில பதிவுகள்