Waiting for a baby

அறுசுவை தோழிகளுக்கு ,
வணக்கம்.நான் அறுசுவையில் புதிதாக இணைந்துள்ளேன்.நீங்கள் உதவுவீர்கள் என்ற நம்பிக்கையில் கேட்கிறேன்.எனக்கு திருமணம் முடிந்து ஐந்தாவது ஆண்டு ஆரம்பித்து விட்டது.1979-ல் பிறந்தேன்.குழந்தைக்காக வெயிட் பண்ணிக் கொண்டிருக்கிறேன்.இந்தியாவில் பல டாக்டர்களை சந்தித்தாகி விட்டது,21/2 வருடமாக.யாருமே சரியாக டயக்னைஸ் பண்ணாமல் PCO இருக்கிறது என்று மட்டும் கூறி OVALATION க்காக மாத்திரை மட்டும் கொடுத்தார்கள்.கருத்தரிக்கவில்லை.
கடந்த மூன்று மாதங்களாக வெளிநாட்டில் ட்ரீட்மெண்ட் எடுத்துக் கொண்டிருக்கிறேன்.இங்கு எங்களுக்கு பழைய ரிப்போர்ட் எல்லாம் வேண்டாம் என்று கூறி முதலிருந்து ஆரம்பித்தார்கள்.முதலில் பிளட் டெஸ்ட் எடுத்தார்கள்.அதில் எனக்கு LH ஹார்மோன் 11,4 mlU/ml, FSH ஹார்மோன் 6,3 mlU/ml என்று கூறி PCO இருப்பதாக கூறினார்கள்.மேலும் Sugar Test செய்து விட்டு வாருங்கள்,பின்பு ட்ரீட்மெண்ட் ஆரம்பிக்கலாம் என்று சொன்னார்கள்.சுகர் டெஸ்ட் செய்த போது initial stage of diabetics என்று கூறி,Metformin 500mg tabletஒரு நாளைக்கு இருமுறை எடுக்கச் சொல்லி,home sugar test kit கொடுத்து sugar test செய்யச் சொன்னார்கள்.Metformin 500mg tabletசாப்பிட்ட ஒரு வாரத்தில் test -ல் morning எழும்பும் போது உள்ள bloog sugar அளவுகளை தவிர மற்ற அனைத்தும் நார்மலாக இருக்கிறது என்று கூறி Metformin 500mg tablet (morning 1),Metformin 850mg tablet(night 1)தற்போது எடுக்கச் சொல்லி மூன்று வாரம் கழித்து மறுபடியும் LH ஹார்மோன்,FSH ஹார்மோன் value எடுத்து பார்த்து ovalation tablet கொடுத்து,ultrasonic மூலமாக ovalation date கண்டுபிடிப்போம் என்று கூறி உள்ளார்கள்.
Metformin 500mg (morning 1),Metformin 850mg(night 1)சாப்பிட்டதற்கப்புறம் முன்பு உள்ள upperlip,chin hairgrowth 75% குறைந்துள்ளதாக உணர்கிறேன்(இது எதனால் ஏற்படுகிறது என்று தெரியவில்லை,maybe pco or hormonal imbalance).

எனக்கு கருத்தரிக்க வாய்ப்புள்ளதா?நான் உடற்பயிற்சிகள் செய்ய வேண்டுமா.எந்த விதமான உணவுப்பழக்கங்கள்,நடைமுறைப் பழக்கங்களை மேற்கொள்ள வேண்டும்.Metformin tablet சாப்பிடுவது எதற்காக(இங்கு டாக்டர்களிடம் கேட்க முடியவில்லை).

மேலும் தனிப்பட்ட முறையில் மிகுந்த மனக்குழப்பங்கள்,டிப்ரஸன் வேறு இருக்கிறது.இது தீர்வதற்கு வழியில்லை.இது கூட குழந்தைப் பேற்றை பாதிக்குமா,எந்த விதத்தில்?

தனிமை வேறு ரொம்ப.இவர் காலையில் 9 மணிக்கு அலுவலகம் சென்று விட்டு இரவு 12 மணிக்கு திரும்புகிறார்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமா?இரண்டில் எது Best.உங்கள் அனைவரையும் என் குடும்ப உறுப்பினர்கள் போல் நினைத்து என் மனக் கஷ்டங்களைக் கூறி விட்டேன்.எனக்கு பதில் தந்து உதவுவீர்களா?

With love,
Anupa Twinkle

One of my friend had PCOS and her OBGN suggested to do two things to get pregnant

(1) Taking Metformin 500mg (twice a day)
Metformin is not a pregnancy drug. It is used to treat type II diabetes and insulin resistant issues. But it is very effective to get pregnant in case of PCOS for most of the people.

(2) Reduce her weight (BTW, she was not overweight, she was 5 feet and 110 lbs when doctor asked her to reduce weight).
(a) For that she did exercise (brisk walking about 2 miles every day and did little bit of indoor cyclying)
(b) Doctor also asked her to be in diet program. She suggested to follow 'SOUTH BEACH DIET'- Phase 2 during those period.

In three months with the help of Metformin, diet, and execise she got pregnant. (she came to 100 lbs in 3 months)

You can find lot of imformation about use of metformin in pregnancy in the internet.

I hope this might help you little bit. Let me know if you have questions here. GOOD LUCK.

Sorry for not typing in Tamil.

Regards,
Ishani

அன்புடன்,
இஷானி

Hi Ishani,
Thanks for your immediate and useful reply.I will do as per your advise.Sorry,i don't understand what is meant by type II diabetes and insulin resistant issues.
She suggested to follow 'SOUTH BEACH DIET'- Phase 2 during those period- i don't get you.

Please clearify me.

With love,
Anupa Twinkle

South Beach Diet is healthy diet plan to reduce unwanted weight. There are some controversies for this method. In my opinion you dont need to follow this strictly. But get an idea from that. You can buy the book in amazon.com. Chech these websites

http://www.amazon.com/South-Beach-Diet-Delicious-Doctor-Designed/dp/031231521X/ref=pd_bbs_1?ie=UTF8&s=books&qid=1210187392&sr=8-1

http://secure.agoramedia.com/sbd2/index_sbd.asp?np=1&promo=D3FF6F34-B304-4CBE-9A62-D81A65C344ED&email=

I think type II diabetes is non insulin related diabetes ( I am not 100% sure). Insulin resistant is the condition that our body is not able to use the insulin we produce naturally.

Regards,
Ishani

அன்புடன்,
இஷானி

கவலைப்படவேண்டாம். எங்கள் குடும்ப உறவினர் ஒருவருக்கு PCO இருந்தது. இதற்கு மாத்திரைகளுடன் முக்கியமாக டயட் கொன்றோல் செய்ய வேண்டும். அவர் அப்படி செய்து 2 வருடத்தில், குழந்தை கிடைத்தது. இப்போ 2 வது குழந்தையும் கிடைத்துவிட்டது. எனவே கவலைப் பட வேண்டாம். நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை.

PCO இருப்பதால் ஹோமோன்ஸ் control இல்லாமல் இருக்கும். இதனால் டயபற்றிஸ், அதனுடன் வேறு பிரச்சனைகளும் ஏற்படும். மெற்றோபின் எடுப்பது உடம்பின் சுகரைக் கொன்றோல் பண்ணுவதற்காக. சுகர் கொன்றோலுக்கு வந்தால் உடம்பில் normal function ஏற்படும்.

PCO க்கு மாத்திரைகள் எடுத்தால் மட்டும் போதாது. டயற் கொன்றோல்தான் முக்கியம்.

முக்கியமாக சுகர் கொன்றோல் பண்ணக் கூடிய உணவுகளை உண்ணுங்கள். ஒயில், கொழுப்பு உணவுகளை கைவிடவும், முடிந்தால் மரக்கறிகளையே அதிகம் உண்ணுங்கள். இப்படி செய்தால் ஒருசில மாதத்திலேயே மாற்றம் தெரியும். இனிப்புகளை அறவே தவிர்த்துக் கொள்ளுங்கள்.

PCO இருப்பதால் டிப்பிறசன் ஏற்படலாம். நீங்கள் மேலே கூறியபடி செய்துவர எல்லாமே நோர்மலாகும். ஆனால் உணவில் கட்டுப்பாடாக இருக்க தொடங்கினால் பெரிதாக உடற்பயிற்சி செய்ய வேண்டாம். அதனால் டிப்பிறசன்கூட அதிகமாகலாம். எனவே முடிந்தால் கொஞ்சம் நடவுங்கள். நம்பிக்கையோடு இருங்கள். சந்தோசமாக இருங்கள். சீக்கிரம் குழந்தை கிடைக்கும்.

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

நன்றி,
எண்ணம் அழகானால் எல்லாம் அழகாகும்

Dear Ishani,

Thanks for the reply.Sure,i will get the book and try.What is meant by non insulin related diabetes.Please clearify me when u have time.
PCO-விற்கும் ,Diabetes -க்கும் தொடர்பு உண்டா?PCO இருப்பதினால் தான் Diabetics ஏற்படுகிறதா?PCO Permanent-ஆக தீர ஏதேனும் வழி உள்ளதா?எனக்கு,என் lifetime-ல் திருமணம் ஆன பிறகு உள்ள ஒரு வருடம் வரை பீரியட்ஸ் நார்மலாக தான் இருந்தது.குழந்தைக்கு பிளான் பண்ணும் போது இர்ரெகுலர் ஆகி விட்டது.

நன்றி.

With love,
Anupa Twinkle

அதிரா, அருமையான வார்த்தைகள். மிகவும் அழகாக விளக்கியுள்ளீர்கள். முதலில் நானும் தமிழில் எழுத நினைத்து பின் சிரமத்தால் ஆங்கிலத்திற்கு மாறினேன். ஆலோசனையுடன் ஊக்கமும் சேர்ந்த உங்கள் பதிவு பாராட்டற்குரியது. நன்றி.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

உங்களின் அன்பான பதிலுக்கு நன்றி.நீங்கள் எந்த வகையான டயட்டில் இருக்கிறீங்கள் எனத் தெரியவில்லை எனக் கேட்டுள்ளீர்கள்.எனக்கு எந்த வகையான டயட்டில் இருக்க வேண்டும் என்றே தெரியவில்லை.இந்தியாவில் ட்ரீட்மெண்ட் எடுத்த வரை எனக்கு சுகர் இருக்கிறது என்றே தெரியாது.
டயட்டுக்கு,குறிப்பாக எந்த உணவுகளை நன்கு சாப்பிடலாம்,எந்த உணவுகளை அறவே சாப்பிடக்கூடாது என்று குறிப்பிட்டு கூறுவீர்களா?Pregnent ஆகி விட்டால் Metformin உடனே நிறுத்தி விட வேண்டும் என்று டாக்டர் சொன்னார்.அதை தவிர வேறு ஒன்றுமே எனக்கு புரியவில்லை.Metformin சாப்பிட் ஆரம்பித்தால் உடனே பீரியட்ஸ் ரெகுலர் ஆகி விடுமா?ஏனெனில் எனக்கு ஒரு வாரம் பிந்தியிருக்கிறது.

Thanks again for your timely help.

With love,
Anupa Twinkle

அனுபா, டயட் மற்றும் எடை குறைப்பு சம்பந்தமாக அருசுவை சகோதரிகளே நிறைய விளக்கம் கொடுத்துள்ளனர். முக்கியமாக கார்போஹைட்ரேட், கொழுப்பு அதிகம் உள்ள உணவுகளை குறைக்கவும்.
Pregnant ஆனவுடன் Metformin நிறுத்துவதில் முரண்பட்ட கருத்துக்கள் உள்ளன. சிலர் உடன் நிறுத்திவிடுவர் (Because it is assumed that Meformin has some sideeffects to the unborn baby), சிலர் முதல் மூன்று மாதம் எடுப்பர் மற்றும் சிலர் கடைசிவரை எடுப்பர் (Because some studies show that Metformin reduces the chance of miscarriage for PCOS women).

மனம் தளராமல் நம்பிக்கையுடன் மேற்கூறியவைகளில் உங்கள் சூழ்நிலைக்கு ஒத்துவருவனவற்றை கடைபிடித்து பாருங்கள். யாவும் நலமுடன் நடந்தேற வாழ்த்துக்கள். PCOS எப்படி வருகிறது என்பது புதிராக இருந்தாலும் மன உளைச்சல் ஒரு காரணமாக கருத்தப்படுகிறது. சந்தோசமாக இருங்கள்.

அன்புடன்,
Ishani

அன்புடன்,
இஷானி

நான் எந்த பழங்கள் எல்லாம் நன்கு சாப்பிடலாம்,எந்த பழங்கள் சாப்பிடக் கூடாது என்று சொல்வீர்களா.

அநேக குடும்பப்பிரச்சனைகள்,குழந்தையின்மை போன்றவற்றால் மிகவும் மன உளைச்சலாக உள்ளது.மன அமைதிக்காக yoga class,meditation class போகலாமென்று நினைக்கிறேன்.குழந்தைக்கு முயற்சி செய்யும் போது yoga class,meditation classபோலாமா?இரண்டில் எது Best.பதிலை ஆவலுடன் எதிர்பார்க்கிறேன்.நன்றி.

With love,
Anupa twinkle

அனுபா!...என்ன இது மனசு வருத்தப்பட்டுக்கொண்டு இருக்கீங்க? முதலில் கவலைப்படாமல் இருங்க. இதைப்பற்றியே நினைப்பதை விடுங்க. நீங்க படித்திருக்கிறீர்களா? அப்படி என்றால் முதலில் ஏதாவது வேலைக்கு போங்க. டாக்டர் நீங்க ரெஸ்டில் இருக்கவேண்டும் என்று எதுவும் சொல்லவில்லை அல்லவா? அப்ப இதை மறந்துவிட்டு வேறு எதிலாவது மனதை ஈடுபடுத்துங்க. நம்முடைய மனநிலைக்கும் யூட்ரஸ் ஃபங்ஷனிங்குக்கும் சம்மந்தம் இருக்கிறது. அதனால் முதலில் சந்தோஷமாக இருங்க. எனக்கு தெரிந்து எத்தனையோ பேருக்கு லேட்டாக குழந்தை பிறந்திருக்கிறது. உங்களுக்கும் கண்டிப்பாக பிறக்கும்.
அதிரா சொல்வதுபோல நான் வெஜ் ஐட்டங்களை தவிர்த்துவிட்டு நிறைய பழம் காய்களை எடுத்துக்கொள்ளுங்க. சுகர் இருப்பதால் அதற்கு ஏற்றவாறு உணவு பழக்கத்தை மாற்றிக்கொள்ளுங்க.

மேலும் சில பதிவுகள்