சுரைக்காய் பகோடா

தேதி: May 7, 2008

பரிமாறும் அளவு:

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

கடலைப் பருப்பு- 1 கப்
பச்சரிசி- அரை கப்
துவரம்பருப்பு- 1 ஸ்பூன்
பயத்தம்பருப்பு- 1 ஸ்பூன்
உளுத்டம்பருப்பு- 1 ஸ்பூன்
துருவிய சுரைக்காய்- 2கப்
பொடியாக அரிந்த வெங்காயம்- 1 கப்
நசுக்கிய இஞ்சியும் பச்சைமிளகாயும்- 2 ஸ்பூன்
பொடியாக அரிந்த கொத்தமல்லி- அரை கப்
கறிவேப்பிலை- சிறிது


 

பருப்பு வகைகளையும் அரிசியையும் தனித்தனியே போதுமான நீரில் சில மணி நேரங்கள் ஊறவைக்கவும்.
முதலில் அரிசியை மையாக அரைத்து, பிறகு, பருப்பு வகைகளையும் சுரைக்காய்த்துருவலையும் உப்பு சேர்த்து கொரகொரப்பாக அரைக்கவும்.
மற்ற பொருள்களையும் சேர்த்துக் கலக்கவும்.
சூடான எண்னெயில் சிறிய விள்ளல்களாக எடுத்துப் போட்டு பக்கோடக்களாக பொரித்தெடுக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

ஹாலோ மனோ மேடம்,
நான் சுரைக்காய் பகோடாசெய்து பார்த்தேன்.நன்றாக வந்தது.ஆனல் நான் பச்சரிசிக்கு பதில் அரிசி மாவு கலந்து கொண்டேன்.வடையாகவும் செய்து பார்த்தேன்.மிகவும் டேஸ்ட்டாக உள்ளது.

நன்றி,
கவிதா

kavitha

இந்த சுரைக்காய் பக்கோடாவை வடையாகவும் செய்து பார்த்து அன்பான பின்னூட்டம் தந்ததற்கு என் மகிவான நன்றி!!