I am going for work and during office time my baby is with my mother-in-law and we have lunch at their place. After coming back from work எனது 1 yr & 2 months மகளை வைத்துக்கொண்டு dinner சமைப்பது கடினம். so within 1 hour செய்யக்கூடிய dinner ஏதாவது சொல்லுங்களேன் Please
லலிதா உங்க பாடு ரொம்ப கழ்டம்
லலிதா உங்க பாடு ரொம்ப கழ்டம் படிக்கவே கழ்டமாஇருக்கு.
என்ன செய்யனும் என்பதை யோசித்து வைத்தாலே சீக்கிரம் முடிக்கலாம் . நான் கொடுக்கிறேன் உங்களுக்கு நிறைய டிப்ஸ்
ஜலீலா
Jaleelakamal
ஹாய் லலிதா
அவல் உப்புமா
அவல் - 2 கப்
வெங்காயம் - 1
தக்காளி- 1
பச்சை மிளகாய் - 2
மஞ்சள் பொடி,கருவேப்பில்லை,கொத்தமல்லி - சிறிதளவு
உப்பு - தேவையான அளவு
எண்ணை,கடுகு,வரமிளகாய் - தாளிப்பதற்கு
அவலை சிறிது தண்ணீர் தெளித்து உப்பு,மஞ்சள் தூள் சேர்த்து கலந்து வைக்கவும்.
வெங்காயம்,தக்காளி பொடியாக அரிந்து வைக்கவும்.
பின் வாணலியில் எண்ணை ஊற்றி கடுகு,வரமிளகாய், கறிவேப்பிலை தாளித்து வெங்காயம், தக்காளி போடு வதக்கி, ஊற வைத்துள்ள அவலை போட்டு நன்கு கிளறவும்.
கொத்தமல்லி தூவி இறக்கவும். சட்னியுடன் சாப்பிடலாம்.
குழந்தைக்கும் கொடுக்கலாம் நேரத்திற்கு ஏற்றவாறு காய் சேர்த்தும் பண்ணலாம்.
ஈசி சாம்பார்
குக்கரில் பாசிபருப்பு (அ) துவரம் பருப்பு , நறுக்கிய வெங்காயம், தக்காளி, பச்சை மிளகாய் கீறியது,உப்பு,ம.தூள்,பெருங்காயம், சாம்பார் பொடி 1 ஸ்பூன் போட்டு 1 விசில் வைக்கவும்.
இறக்கியதும் தாளித்து,கொத்தமல்லி தூவவும். 5 , 7 நிமிடத்தில் சாம்பார் ரெடி.
மாவு இருந்தால் சாம்பார் வேகும் போதே இட்லி ஊற்றலாம்.
அல்லது இன்னொரு குக்கர் இருந்தால் அரிசி,பாசிபருப்பு, உப்பு போட்டு வெண்பொங்கல் செய்யலாம். இறக்கியதும் மிளகு,சீரகம் போட்டு தாளித்தால் போதும்.
வெண்பொங்கல் ரெடி. நான் அப்படி தான் செய்வேன். 1/2 மணி நேரத்தில் வேலை முடிந்து விடும். குழந்தைக்கும் பருப்பும் கொடுத்த மாதிரி இருக்கும்.
நீங்கள் இன்னொரு குக்கர் வாங்கி கொண்டால் வசதியாக இருக்கும்.
தயிர் சேமியா
---------
சேமியவை கொதிக்கும் தண்ணீரில் போட்டு வெந்தவுடன் வடிக்கட்டவும்.
பின் வாணலியில் கடுகு,உளுத்தம் பருப்பு,வரமிளகாய் போட்டு தாளித்து புளிப்பில்லாத தயிரில் ஊற்றி உப்பு போட்டு கலந்து வைக்கவும்.
பச்சை மிளகாய் பொடியாக நறுக்கி,தேவைப்பட்டால் கேரட்,வெள்ளரி துருவி அனைத்தையும் தயிரில் போட்டு பின் சேமியாவையும் கலந்து கொத்துமல்லி தூவி சாப்பிடலாம்.
தொட்டுக்க ஊறுகாய் நன்றாக இருக்கும்....
Gowri,NJ
Gowri,NJ
எளிதில் சமைக்க கூடியது
மோர்குழம்ப் எளிதில் செய்யகூடியது நிற்ய்ய நேரம் தேவையில்லை. கேபேஜ் பொரியல் எளிதில் செய்ய கூடியது. திடி சேவை என்று கடையில் கிடைக்கிறது அதை 5 நிமிடத்தில் சமைக்கலாம்.
ஜலீலா அக்கா,
கொஞ்ச நாளா computer out of order. அது தான் reply பண்ண முடியல்ல. recepies தாரேன்னு சொன்னீங்க.
Lalitha
Thank you Gowrimeena & Vijitvm
Thanx for both of u for giving me good recepies
Lalitha
லலிதா! இன்ஸ்டன்ட்
மூன்று பர்னர் உள்ள அடுப்பு ஒன்றும், ஒரு ரைஸ் குக்கரும் வாங்கி வைத்துக்கொண்டால் சாதம், குழம்பு, பொரியல், ரசம் (அல்லது வருவல்) எல்லாமே 1 மணி நேரத்தில் செய்துவிடலாமே. ஆனால் கைக்குழந்தை இருக்கிறது என்று சொல்கிறீர்கள். அதனால் குழம்பு வகைகளை தவிர்த்து பருப்பு கடைந்து, கேரட், பீட்ரூட், கோஸ், வகைகளை ஈஸியாக துருவி பொரியல் செய்யலாம். இது வெயில் காலமாக இருப்பதால் பெரும்பாலும் பச்சடி, ரைய்த்தாவாக செய்துவிடுங்கள். வேலையும் மிச்சம் உடம்புக்கும் நல்லது.
ரெடிமிக்ஸ் பொடிகள் நிறைய வாங்கி வைத்துக்கொள்ளுங்கள். எனது குறிப்பில் அரிசி பருப்பு சாதம் உள்ளது செய்யலாம். லீவுநாட்களில் சாம்பார்சாதத்திற்கு போடும் பொடி செய்து ஃப்ரீஸரில் வைத்துக்கொண்டால் ஈஸியாக எல்லா காய்களும் போட்டு சாம்பார்சாதம் செய்து, தயிர் பச்சடி, ஊறுகாய் வைத்துக்கொள்ளலாம்.
தோசை மிளகாய்பொடியும், பழவகைகள், வெள்ளரிக்காய், நட்ஸ் சேர்த்த தயிர் சாதம் செய்யுங்கள்.
லலிதா இஞ்சி பூண்டு
லலிதா
நீங்கள் முதல் ஒரு நாள் முன்பே என்ன செய்யனும் என்பதை தீர்மாணித்து கொள்ளுங்கள்.
தளிகா சொல்வது போல் இஞ்சி பூண்டு தான் மெயின் நாங்கள் ஒரு மாதத்திற்கு அரைத்து வைத்து விடுவோம், மாலதி யாக்காவ் சொல்வது போல் முன்று அல்லது நான்கு பர்னர் அடுப்பு வாங்கி வைத்து கொள்ளுங்கள்.
மாவு நிறைய அரைத்து வைத்து கொள்ளுங்கள்.
இன்னும் சொல்வார்கள்.
ஜலீலா
Jaleelakamal
மோர்குழம்பு, புளி சாதம், பிரைட் ரைஸ்
மோர் குழம்புக்கு இரண்டு வேளைக்கு சேர்த்து அரைத்து கொள்ளுங்கள், பாதியை தூக்கி பிரீஜரில் போட்டு வையுங்கள்.
புளி பேஸ்ட் செய்து வைத்துகொள்ளுங்கள்.
ஈசியா கிளறு கிற சாதம் செய்து கொள்ளுங்கள்.
அதே மதிரி டிபனும் சுடும் அயிட்டம் லீவு நாட்கலில் வைத்து Kஒள்ளுங்கள்.
பொரியலுக்கு காய்கலை உங்க மாமியார் வேலை பார்ப்பார்கள் என்றால் டீவி பர்த்து கொண்டிருக்கும் போது காய் களை கழுவி கையில் கொடுத்து விடுங்கள் அதை பாக்கெட்டில் போட்டு பிரீஜரில் வைத்து கொள்ளுங்கள்.
மோர்குழம்பு,புளி சாதம்,பிரைட் ரைஸ் இதேல்லாம் சீக்கிரம் செய்யலாம்.
முன்று அடுப்பை பத்தும் போது கவனத்தை சிதற விட வேண்டாம்.
அந்த ஒரு மணி நேரம் கட கடன்னு அடுத்து என்ன அடுத்து என்ன என்பது தான் இருக்கனும்
கூடமான வரை ஒரு அடுப்பில் வேலை பார்க்கும் போது மற்றொன்றை பொங்க விட கூடாது. அதை குறைத்து வைத்து கொண்டு செய்யனும்.
ஜலீலா
Jaleelakamal
Thank you all
எல்லாரும் நல்ல நல்ல குறிப்புகள் தந்தீங்க. Thank you all
Lalitha