கல்தோசை மற்றும் மிளகு சட்னி

இங்கு ஒரு ரெஸ்ரோரன்டில் கல் தோசை & மூன்று வகையான சட்னி (சிவப்பு, பச்சை & மிளகு சேர்த்த ஒன்று) சாப்பிட்டேன். மிகவும் நன்றாக இருந்தது. கல் தோசைக்கு என்று ஸ்பெஷலான குறிப்பு ஏதும் இருக்கா? அல்லது சாதாரணமான தோசை மாவில் செய்யலாமா? மற்றது, மிளகு போட்டு செய்த அந்த சட்னி மிகவும் நன்றாக இருந்தது. அது எப்பிடி செய்வது என்று தெரியுமா? தெரிந்தவர்கள் சொல்லுங்கள்...நன்றி.
-நர்மதா :)
பி.கு: அறுசுவையில் தேடினேன் கல்தோசை மற்றும் மிளகு சட்னி குறிப்பு கிடைக்கவில்லை. :(

ஹாய் நிலா பெண்ணே!
எனக்கு தெரிஞ்சு கல் தோசைக்குன்னு ஸ்பெஷல் ந்னு சொல்லுறது நான் ஸ்டிக் யூஸ் பண்ணாமல் இரும்பு சட்டியில் சுடனும்..அடுத்து நல்லெண்ணை தடவனும் தனி டேஸ்ட் கொடுக்கும்..மாவு மொது,மொதுன்னு இருக்கனும்..இப்ப்டி வார்த்து சுட்டு பாருங்க...பெரிதா சுற்றாமல் நடுத்தனமா ஊற்றனும்...
ரெஸ்டாண்டை விட சூப்பரா வீட்டு டேஸ்ட் கொடுக்கும்..டிரை பண்ணிட்டு பதில் தாங்க...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஆமா நர்மதா, மர்ழியா சொல்றதுதான் சரின்னு நான் நினைக்கிறேன்.வெந்தயம் சேர்த்து அரைக்க வேண்டும் என்று செல்விக்கா எங்கோ சொல்லி இருந்தாங்க. ஊரில் கிடைக்கும் தோசைக்கல்லுதான் இதற்கு உபயோகிக்க வேண்டும். உங்க கிட்ட அந்த மாதிரி கல்லு இருக்கா. இல்ல இங்க வாங்கனும் என்றால் cast iron pan/griddle தான் சரி வரும் என நினைக்கிறேன்.

அப்புறம் எது கூட மிளகு சேர்த்து அரைத்து இருந்தார்கள் என்று சொன்னால் என்ன சட்னி என்று நான் சொல்ல மாட்டேன்,வேறு யாராவது சொல்வாங்க:-)

ஹலோ மர்ழியா & வானதி,

பதிலுக்கு மிகவும் நன்றி. நான் வெந்தயம் சேர்த்துதான் மா அரைத்து செய்தேன் வானதி. மர்ழியா சொன்னது போல மொது மொது என்றுதான் அரைத்தேன் (தண்ணியாக்காமல்). ஸ்டீல் பானில்தான் நான் தோசை சுடுவது. ஆனாலும் கடையில் வாங்கியது போல அந்த சுவை வரவில்லை. கடைசியாக தளிகாவின் குறிப்பில் உள்ளதுபோல வெங்காய தோசையாக சுட்டு சாப்பிட்டோம். அது நன்றாக இருந்தது. :)

எனது அம்மா உளுந்து:அரிசி = 1:2 or 1:3 என்ற அளவுதான் போடுவா. வழக்கமக நானும் அப்படித்தான் போடுவன். இம்முறைதான் உளுந்து:புழுங்கலரிசி:பச்சரிசி = 1:2:2 என்று போட்டேன். இந்த அளவு சரியா அல்லது வேறு அளவு போட வேணுமா?

மிளகை எதனுடன் சேர்த்து அரைத்தார்கள் என்று தெரியவில்லை. என்னால் கண்டுபிடிக்கவும் முடியவில்லை (may be their secret ing.) வானதி :)
-நர்மதா:)

ஹாய் வின்னி நீங்க சொல்லுறாப்ல வெந்தயம் கண்டிபா சேர்கனும்..அவங்க வார்க்குறதை பற்றி கேட்டாங்கன்னு சொன்னேன்..ஊற போடுறதை சொல்லல.
நிலா பெண்ணே! வார்ப்பதில் இன்னுரு முக்கியம் மாவு ரொம்ப கட்டியாகவோ,தண்ணியாகவோ இருக்காமல் தொசை மாவின் பதத்தில் மாவை கரைத்துக்கனும்...நான் சொன்னது கனமாக இருக்கும் அந்த இரும்பு சட்டி அதையா யூஸ் பண்றீங்க?அதுதான் இதுக்கு ரொம்ப முக்கியம்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

நான் திருச்சி ஸ்ரீரங்கத்தில் இருந்து நல்ல கெட்டியான இரும்பு தோசைக்கல் வாங்கி வந்து யூஸ் பண்ணறேன். நல்ல கனமான பெரிய தோசைக்கல். தோசை மாவிலும் இருக்கிறது சூட்சுமம். 4 பங்கு பச்சரிசிக்கு 1 பங்கு உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம், 1/2 கப் அவல் - இந்த காம்பினேஷன் நல்லா வரும்.
தளிகா சொன்னது போல் நான் ஸ்டிக் என்றால் சிம்மில் வைத்துத் தான் தோசை வார்க்க வேண்டும்.
இரும்புக் கல்லில் தோசை விண்டு போனால் ஒரு பெரிய வெங்காயத்தைக் குறுக்கே நறுக்கி ஒவ்வொரு தோசை வார்க்கும் முன்னும் கல்லில் வைத்த்துத் தேய்த்தால் பட்டுப் பட்டாக தோசை வரும்.
நான் ஸ்டிக் தோசைக்க்கல் வைத்திருக்கிறேன். ஆனால் எங்கள் வீட்டில் சாதா இரும்புக்கல்லுக்குத்தான் எல்லார் ஓட்டும்.

மிளகு எதில் சேர்த்தார்கள். இந்தப் பதிவில் இருந்து எனக்கு புரிந்து கொள்ளமுடியவில்லை. மறுபடியும் சொல்லுங்கள். எனக்குத் தெரிந்த வரை பதில் சொல்கிறேன்.

அன்புடன்
ஜெயந்தி மாமி

ஓஹ் ஜெயந்தி மாமி... 4 பங்கு பச்சரிசிக்கு 1 பங்கு உளுத்தம்பருப்பு, 1 டீஸ்பூன் வெந்தயம், 1/2 கப் அவல் இது எனக்கு புதுசா இருக்கு இட்லிக்கும் இப்படி போடலாமா>?அல்லது தோசைக்கு மட்டுதானா?

நான் இட்லி,தோசைக்கு புழுங்க அரிசிதான் போடுவேன்...இதுகூட நல்லா வரும்..உங்கள் பதில் கிடைத்ததும் அடுத்த முறை டிரை பண்ணனும்..

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மர்ழியா கண்ணு, பச்சரிசி 4 பங்குக்கு 1 பங்கு உளுந்து போட்டு இட்லி செய்தா கிரிக்கெட் பால் தான். பச்சரிசி இட்லிக்கு சரிக்கு சரி, அதாவது 4 பங்கு பச்சரிசிக்கு 4 பங்கு உளுந்து போடணும். பச்சரிசி இட்லி பண்டிகை நாளில் செய்வோம் நாங்க. மத்தபடி புழுங்கல் அரிசி இட்லி தான். தோசைக்குத்தான் பச்சரிசி. தோசைக்கு ஒரு கை துவரம் பருப்பையும் ஊறவைத்து அரைத்தால் ஹோட்டல் தோசை போல் வரும். தோசைக்கு அரிசியை தனியாகவும், மற்ற எல்லாவற்றையும் ஒன்றாகவும் ஊறவைத்து, அரிசியைக் களைந்தும், மற்றவற்றை ஊற வைத்த தண்ணீருடனும் சேர்த்து அரைத்து தோசை வார்க்கவும்.
அன்புடன்
ஜெயந்தி மாமி

In which city and which restaurant did u have? Tell me the name of the restaurant please.

விஜி என்னால் பிரியாணி அரிசி பதிவில் நுழைய முடியல...Tilda iz the bestஅதில் எந்த சந்தேகமும் இல்லை.
எனக்கு நல்ல பூ போல வெள்ளையா வரும்/.பிறகு முறை சொல்கிறேன்

ஹி ஹி அப்படியா!விபரமா சொன்னதுக்கு தேங்ஸ் மாமி ஆமா அது என்ன பண்டிகை நாள் மட்டும் பச்சரிசி?அது புளுங்களை விட டேஸ்டா வருமா?விருந்தாளிகள் வாரப்ப பண்ணத்தான் கேட்கிறேன்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

மேலும் சில பதிவுகள்