வாழை பழ ஹல்வா(குழந்தைகளுக்கு)

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு: மூன்று நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ரவை - 100 கிராம்
சர்க்கரை - 100 கிராம்
வாழைப்பழம் - இரண்டு
நெய் (அ) பட்டர் - இரண்டு மேசைக்கரண்டி
பால் - 50 மில்லி
தண்ணீர் - கால் கப்


 

ரவையை ஒரு மேசைக்கரண்டி பட்டரில் நன்கு வறுத்து எடுக்கவும்.
தண்ணீர் மற்றும் பாலில் வாழைப்பழத்தை பொடியாக நறுக்கி போட்டு கொதிக்க விட்டு ரவையும் தூவி கிளறி சர்க்கரை சேர்த்து சுருள கிளறவும். கடைசியில் மீதி நெய் (அ) பட்டரை சேர்த்து கிளறி ஒட்டாமல் ஹல்வா பததிற்கு வரும் போது இறக்கவும்.


இது ஒரு வயது குழந்தை முதல் பெரியவர்கள் வரை சாப்பிடலாம். குழந்தைகளுக்கு ஒரு போஷாக்கான உணவாகும்.
தேவைப்பட்டால் கலர் பொடி சேர்த்து கொள்ளலாம்

மேலும் சில குறிப்புகள்