அச்சு முறுக்கு

தேதி: May 12, 2008

பரிமாறும் அளவு: சாப்பிடும் அளவை பொருத்து

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மைதா - கால் கிலோ
தேங்காய் கெட்டி பால் - 400 மில்லி
சர்க்கரை - 5 மேசைக்கரண்டி
வெனிலா எசன்ஸ் - ஒரு தேக்கரண்டி
முட்டை - ஒன்று
தண்ணீர் - ஒரு டம்ளர்
உப்பு - ஒரு பின்ச்
கருப்பு எள் - ஒரு மேசைக்கரண்டி
எண்ணெய் - பொரிக்க தேவையான அளவு


 

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் ஒன்றாக கலக்கவும்.
அச்சு முறுக்கு செய்யும் கருவி கொண்டு எண்ணெயை சூடுப்படுத்தி சூடான எண்ணெயில் அச்சை முதலில் விட்டு அப்படியே மாவில் தோய்த்து எண்ணெயில் விட்டு பொரித்தெடுக்கவும்.
இப்படியே எல்லாவற்றையும் பொரித்தெடுக்கவும்.


குழந்தைகளுக்கு அருமையான பண்டம் இது. விடுமுறை காலங்களில் டப்பா நிறைய பொரித்து வையுங்கள். உடனே காலியாகி விடும்
ஓவ்வொரு முறை பொரிக்கும் போதும் சூடான எண்ணெயில் அச்சை முக்கி கொள்ளவும்.

மேலும் சில குறிப்புகள்


Comments

ஜலீலக்கா இதற்கு வனிலா எசென்ஸ் சேர்த்தே ஆகனுமா..இதுவரை எங்கள் வீட்டில் சேர்த்ததில்லை.
எனக்கு உடனே சபப்பிடனும் போல உள்ளது.எனது மறைந்த பாட்டியின் நியாபகம் சில வாரங்களாகவே அதிகரித்து வருகிறது..அதனால் ஏதோ கவலை போலவே உள்ளது.
என் பாட்டி ஈதுக்கு முந்தின நாள் அச்சப்பம்(அச்சுமுருக்கு) 2 பெரிய பேரெலில் செய்து அருகிலுள்ள எல்லா வீடுகளுக்கும் கொண்டு போய் நாங்கள் பேத்திகள் கொடுப்போம்..அதை கடிக்க பல் கூட வேண்டாம் அவ்வளவு சாஃப்டாக க்ரிஸ்பியாக இருக்கும்

தளிக்கா எஸன்ஸ் இல்லை என்றால் விட்டு விடுங்கள் எஸன்ஸ் சேர்ப்பதால் சுவையும் மணமும் கூடுதலாக கிடைக்கும்.

இது எல்லா வயதினரும் விரும்பி சாப்பிடும் பண்டம்.அருமையா சாப்டாக இருக்கும்.
ஜலீலா

Jaleelakamal

வாவ் அச்சி முறுக்குன்னதும் என் ஊர் நியாபகம் வருது ஜலீலாக்கா...ஆனால் எஸன்ஸ் சேர்க மாட்டேன்..உங்கள் முறுக்கு டிப்ரந்தா இருக்கும் போல செய்து பார்கனும்..அச்சு தற்சமயம் இல்லை வாங்கி செய்துட்டு சொல்கிறேன்..
அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

ஜலிலாஅக்கா அஸ்ஸலாமு அலைக்கும், அக்கா அச்சு முருக்கு எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும். ஊரில் இருக்கும்போது சாப்பிடது.உங்கள் குறிப்பு பார்த்தவுடன் ஆசை அதிகமாகி விட்டது. என்னிடம் முருக்கு அச்சு இல்லை. அச்சு இல்லாமல் செய்வதற்கு வேறு ஏதாவது வழி இருக்கிரதா என்ரு சொல்லுங்கல் ஜலிலாக்கா.நன்றி.அச்சு முருக்கு சாப்பிட(உங்கள் பதிலுக்காக) காத்திருக்கிரென்.

அச்சு முருக்கு அச்சு இல்லாமல் செய்ய முடியாது வேறு எப்படி என்று எனக்கு தெரியல, ஊருக்கு போகும் போது வாங்க வந்து செய்யுங்கள்.
ஜலீலா

Jaleelakamal