ஆப்பிள் ஹல்வா(குழந்தைகளுக்கு)

தேதி: May 13, 2008

பரிமாறும் அளவு: முன்று குழந்தைகளுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

ஆப்பிள் - இரண்டு
கிஸ்மிஸ் பழம் - கால் கப்
கெட்டியான பால் - ஒரு கப்
தண்ணீர் - கால் கப்
ஏலக்காய் பொடி - கால் தேக்கரண்டி
முந்திரி, பாதம், பிஸ்தா, அக்ரூட் - தலா இரண்டு
சர்க்கரை - மூன்று மேசைக்கரண்டி
சப்ரான் - ஒரு பின்ச்


 

ஆப்பிளை தோலெடுத்து பொடியாக நறுக்கி அதில் கிஸ்மிஸ் பழத்தையும் போட்டு கால் டம்ளர் தண்ணீர் சேர்த்து வேக வைக்கவும்.
பாதம், பிஸ்தா, முந்திரி, அக்ரூட்டை வெந்நீரில் ஊறவைத்து தோலெடுத்து அரைத்து கொள்ள வேண்டும்.
வேக வைத்த ஆப்பிள், கிஸ்மிஸை நன்கு மசித்து பால் சேர்த்து ஏலக்காய், சப்ரானும் சேர்த்து நன்றாக வேகவிட்டு வற்ற விடவும்.
பிறகு சர்க்கரை சேர்த்து கிளறி குழந்தைகளுக்கு கொடுக்கவும்.


இதில் பால், ஆப்பிள், நட்ஸ் எல்லாமே குழந்தைகளுக்கு சத்து தான் வாரம் ஒரு முறை செய்து கொடுக்கலாம். நல்ல போஷாக்கான ஹல்வா
இதை ஒரு வயது குழந்தையிலிருந்து கொடுக்கலாம். ஆறு மாதத்திலிருந்தும் கொடுக்கலாம். ஆனால் வாயில் தட்டாமால் நல்ல மசிந்து இருக்கனும். பல் உள்ள பிள்ளைகள் என்றால் நட்ஸ் வகைகள் இன்னும் கொஞ்சம் நெய்யில் வறுத்தும் சேர்க்கலாம்.

மேலும் சில குறிப்புகள்


Comments

Jaleela Banu try seithen pala thirigirthu

நீ உனக்காக வாழ வேண்டும் .

என்றும் அன்புடன்
சங்கீதா.

குறிப்பு நல்லா இருக்கு கொஞ்சம் ஆறிப்போன பிறகு பால் சேர்த்தா திரிஞ்சு போகாது.

ஜலீலாக்கா முன்னொருமுறை என் பொண்ணுக்கு ஆப்பிலை வேக வைத்து சரி ருசியா இருக்குமே என்று பாலையும் சேர்த்தேன் அப்படியே திரிந்து அசிங்கமாகி அதை களைந்துவிட்டேன்..இதிலும் வெந்த apple சேர்க்கிறோம் பாலில் அப்படி திரியாதா?

தளிக்கா எப்படி திரியும், ஆப்பிள் ஜூஸ் அடிக்கிறோம். குழந்தைகளுக்கு ஆப்பிளை வேகவைத்து ஆறு மாததிலிருந்து கொடுத்தால் ரொம்ப நல்லது கன்னம் நல்ல புஷ்டியாக வரும்.
இது இன்னும் ருசி குழந்தைகளுக்கு செய்து கொடுத்து பாருங்கள்.
ஏன் திரியுது பால், இனிப்பு , டீ , செய்ய தனி சாமான்கல்(கரண்டி, பேன் எல்லாம்) உபயோகப்படுத்தனும்.கிஸ்மிஸ் பழம் இருமை சளிக்கு நல்லது

ஜலீலா

Jaleelakamal

இல்லை ஜலீலாக்கா வேக வைத்த ஆப்பிலுடன் பால் கலந்து சூடுபடுத்தினால் அப்படியே பால் திரிந்து விடுகிறது...அப்ப தைரியமாக செய்யலாம் எஙிறீர்கள் தானே.