பால் அருந்தும் போது குழந்தை உறங்காமல் இருக்க என்ன செய்வது?

ஹலோ சகோதரிகளே.. எனக்கு மகன் பிறந்து 2 வாரங்களே ஆகிறது.. அவனை பால் அருந்த வைக்கும் போது 5 நிமிடங்களில் உறங்கி விடுகிறான்... இதனால் அவனுக்கு உடல் எடை போதுமான அளவு கூடவில்லை.. டாக்டர் அவனுக்கு தினமும் கொஞ்சம் Formula-வும் கொடுக்க சொல்கிறார்.. எனக்கு போதுமான பால் உற்பத்தி ஆகும் போது என் செல்லத்திற்கு Formula கொடுப்பதில் எனக்கு விறுப்பம் இல்லை... அவன் உறங்காமல் நன்றாக பால் அருந்த என்ன செய்வது என்று யாராவது கூறுங்களேன்.. மிக்க நன்றி..

As you have enough milk, you can use breast pump to express your milk in advance(1/2 hr or so before feeding time) & feed him instead of formula. You can get battery operated breast pumps coz manual ones are bit tiring to use.

வாழ்த்துக்கள் திருமதி ராம்.குழந்தை பிறந்து முதல் 2 மாதத்திற்காவது நமக்கு இந்த விஷயங்களில் டென்ஷன் தான்..
அதற்கு போதுமான எடை கூடவில்லை,உணவு கிடைப்பதில்லை என பெரும்பாலானவர்கள் வருந்துவோம்..ஆனால் அது தேவையில்லாதது என பிறகு நாமே நினைத்து சிரிப்போம்.ஏன்னா நமக்கு கொஞ்சம் பக்குவம் வந்திருக்கும்.
முதல் 2 மாதங்களுக்கு அது சும்மா தூங்கும்.அப்ப கண்ணத்தை லேசா விரலால் தடவினா திரும்ப குடிக்கும்.அப்படியும் சில குழந்தைகள் தூங்கும்.
நீங்க அனேகமா வெளிநாட்டில் இருக்கீங்க போலிருக்கு.ஏன்னா நம்ம நாட்டில் ஃபார்முலா கொடுக்க சொல்லி பெரும்பாலான மருத்துவர்கள் சொல்வதில்லை.
பல குழந்தைகளுக்கும் பிறக்கும்பொழுதிருந்த எடை சில வாரங்களில் குறைந்து பின் கூடத் தொடங்கும்.என் மகள் பிறக்கும்பொழுது 3.250 கிலோ..ஆனால் 2 வாரம் கழித்து போனப்ப 2.750 கிலோ எடை ஆகியிருந்தாள்..நான் ரொம்ப வருந்தினேன்.
ஆனால் 1 மாதம் கழித்து அது மெல்ல மாறி எடை கூடும் டோன்ட் வரி..டிசென் சொன்னது போல் ப்ரெஸ்ட் பம்ப் இருந்தால் வாங்கி பம்ப் பன்னி தாய்ப்பாலே கொடுங்க.

மிக்க நன்றி Dsen and Thalika.. நானும் அதைப்பற்றி தான் யோசித்துக்கொண்டிருந்தேன்.. I will try it..

ஹாய் ராம் வாழ்த்துக்கள்...குழந்தை வெயிட் குறைவது நார்மலே (நம் வயிற்றில் இருக்கும் போது கர்பபை தண்ணீரால் அது புஸ்டியாக காணப்படும் வெளியே வந்ததும் அந்த தண்ணீர் வற்றும் அப்பொழுது வெயிட் குறையும் இது அனைத்து குழந்தைக்கும் பொருந்தும்...கவலை தேவை இல்லை அதற்க்கு பின் வரும் வெயிட் தான் முக்கியம்...

அடுத்து குழந்தை தூங்குவதும் இயர்கைதான் போதுமான பால் குடித்து விட்டால் விட்டு விடுங்கள்..தேவையான பால் கிடைக்கலேனா லேசா காலை சுரண்டுங்கள் திரும்ப பால் குடிக்கும்...

அன்புடன்,
மர்ழியாநூஹு

அன்புடன்,
மர்ழியா நூஹு

தாய் பால் குடிக்கும் போது தூங்கிட்டானா காது பக்கம் லைட்டா ஒரு கை வைத்துதட்டி எழுப்பலாம். நன்றி.மீண்டும் சந்திப்போம்

ramba

மேலும் சில பதிவுகள்