அவல் கேசரி

தேதி: May 18, 2008

பரிமாறும் அளவு: 2 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

No votes yet

 

அவல் -- 1 கப்
முந்திரி -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)
உலர்ந்த திராட்சை -- 10 என்னம் (நெய்யில் வறுத்தது)
பால் -- 1/2 கப் (காய்ச்சியது)
சிவப்பு கலர் பொடி -- 1 சிட்டிகை
சர்க்கரை -- 3/4 கப்
ஏலக்காய் -- 2 என்னம் (நசுக்கியது)


 

அவலை நெய்யில் வறுக்கவும்.
2 கப் தண்ணீர் (1/2 கப் பால் + 1 1/2 கப் தண்ணீர்) ஊற்றி கொதித்ததும் சிவப்பு கலர் பொடி,ஏலக்காய், அவலை போட்டு நன்கு கிளறவும்.
நன்கு வெந்ததும் முந்திரி, திராட்சை போட்டு சர்க்கரையையும், 1 டீஸ்பூன் நெய்யை சேர்த்து நன்கு கிளறி 2 நிமிடம் அடுப்பில் வைத்து இறக்கவும்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அவல் கேசரி இலகுவான முறை மிகவும் சுவையாக இருந்தது. மிக்க நன்றி.

நன்றி,
"அன்பான சொல் மருந்தாக இருப்பதோடு வாழ்த்தவும் செய்கிறது"