பாண் (பிரெட்)

தேதி: May 22, 2008

பரிமாறும் அளவு: 2 - 3 நபர்களுக்கு

ஆயத்த நேரம்: 10 நிமிடங்கள்

சமைக்கும் நேரம்: 30 நிமிடங்கள்

மொத்த நேரம்: 40 நிமிடங்கள்

3
Average: 3 (1 vote)

 

மா (All-Purpose Flour) - 3 கப்
ஈஸ்ட் - 3 1/4 தேக்கரண்டி
உப்பு
சீனி - 1 தேக்கரண்டி


 

மாவை அரித்து வைக்கவும்.
மிதமான சுடுதண்ணீ ரில் சீனியை கரைத்து அதனுள் ஈஸ்ட்டைப் போட்டு 5- 8 நிமிடங்கள் விடவும். ஈஸ்ட் நுரைத்து நன்கு பொங்கி வரும்.
பின்னர் மாவினுள் ஈஸ்ட் கரைசல் உப்பு சேர்த்து தண்ணீர் ஊற்றி சப்பாத்தி மாவிற்கு போல சிறிது இளக்கமக நன்கு பிசையவும். ( 10 நிமிடங்கள்)
பின்னர் பிசைந்த மாவை பாண்(பிரெட்) அச்சினுள் போட்டு பரவி விட்டு 1 - 11/2 மணித்தியாலங்கள் மிதமான சூடுள்ள இடத்தில் வைக்கவும். பிரெட் அச்சு இல்லாவிட்டல் சிறிய உருண்டைகளாக்கி கப் கேக் அச்சினுள்ளும் வைக்கலாம்.
அவனை 400 F இல் முற்சூடு செய்யவும்.
அச்சில் வைத்த மா இப்பொழுது நன்கு பொங்கி இருக்கும். இதனை முற்சூடு செய்த அவனில் 20 - 25 நிமிடங்கள் பேக் செய்து எடுக்கவும்.
சூடான சுவையான பாண்(பிரெட்) தயார். இதனை சம்பல், குழம்புடன் அல்லது பட்டர், ஜாமுடன் சாப்பிடலாம்.


மேலும் சில குறிப்புகள்


Comments

அன்பின் அட்மின்,

பாண்(பிரெட்) செய்முறை செல்வி அக்காவும் கொடுத்துள்ளார். நான் கொடுத்திருப்பது அவரின் செய்முறையில் இருந்து சிறிது வேறுபட்டது. இரண்டையும் பார்த்துவிட்டு ஒத்திருப்பதாக கருதினால் தயவு செய்து நீக்கி விடவும். செய்முறை விளக்க படங்களும் அனுப்பியுள்ளேன். அவற்றையும் மாற்றி விடவும். சிரமத்திற்கு மன்னிக்கவும். நன்றி.
-நர்மதா :)